8TH - 10-01-2022 -KALVI TV - ANI ILAKKANAM - VIDEO AND WORKSHEET

  https://tamilrk-seed.blogspot.com

காணொளி - பணித்தாள் - இணைய வழித் தேர்வு - PDF FORMAT

ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அனைவருக்கும் வணக்கம். கல்வித் தொலைக்காட்சியில் ஒளிபரப்படும் பாடங்கள் இந்த தளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறது. அதோடு அல்லாமல் அந்த பாடத்திற்குரிய ஒரு மதிப்பெண் வினாக்கள் மாணவர்கள் பயிற்சி பெறுவதற்கு வழங்கப்பட்டுள்ளது. காணொலியில் பாடங்களை கற்றபின் வினாக்களுக்கு விடையளிக்க ஏதுவாக இணைய வழித் தேர்வு வழங்கப்பட்டுள்ளது. மாணவர்கள் அந்த இணையவழித் தேர்வினை எழுதி அதன் மதிப்பெண்ணை உங்களின் தமிழாசிரியர்க்கு பகிரும் படி கேட்டுக் கொள்கிறோம். இணைய வசதி இல்லாத மாணவர்கள் இந்த வினாக்களின் PDF வடிவத்தை பதிவிறக்கம் செய்து அதனை நிறைவு செய்து தங்கள் ஆசிரியர்களிடம் சமர்ப்பிக்கவும். இணைய வழித் தேர்வின் கீழ்த் தோன்றும் DOWNLOAD என்பதனை அழுத்தினால் இணையவழித் தேர்வின் வினாக்கள் நீங்கள் PDF கோப்பாக பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம். ஆசிரியர்கள் இந்த இணைய இணைப்பை தங்கள் வகுப்பு மாணவர்களுக்கு பகிரும் படி அன்புடன் வேண்டுகிறோம்.

நன்றி, வணக்கம்

கல்வித் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட பாடங்கள்

நாள்                           10- 01- 2022  & 24-01-2022           

வகுப்பு                    எட்டாம் வகுப்பு

பாடம்                    :     தமிழ்

பாடத்தலைப்பு :       இயல் - 9  - அணி இலக்கணம்

காணொளி

பணித்தாள்

அ.சரியான விடைத் தேர்வு செய்க.

1. உவமையை மட்டும் கூறி, அதன் மூலம் கூறவந்த கருத்தை உணரவைப்பது------- அணி எனப்படும்.

அ. வேற்றுமை அணி        ஆ. உவமை அணி          இ. பிறிது மொழிதல் அணி      ஈ. உருவக அணி

 2  அணி என்பதற்கு _____________ பொருள்

அ. செல்வம்                     ஆ. அழகு                       இ. கல்வி                                   ஈ. தொழில்

3. கடலோடா  கால்வல் நெடுந்தேர் கடலோடும் நாவாயும் ஓடா நிலத்து  - இக்குறட்பாவில் வரும் அணி

அ. வேற்றுமை அணி        ஆ. உவமை அணி          இ. பிறிது மொழிதல் அணி      ஈ. உருவக அணி

4. தேனும் வெள்ளைச்சர்க்கரை யும் இனிப்புச்சுவை உடையவை. அவற்றுள், தேன் உடலுக்கு நன்மை செய்யும்; வெள்ளைச் சர்க்கரை உடலுக்குத் தீங்கு செய்யும் – இதன் மூலம் பெறப்படும் அணி

அ. வேற்றுமை அணி        ஆ. உவமை அணி          இ. பிறிது மொழிதல் அணி      ஈ. உருவக அணி 

5. தீயினால் சுட்ட புண் உள்ளாறும் ஆறாதே நாவினால் சுட்ட வடு. இக்குறட்பாவில் பயின்று வரும் அணி

அ. தீவக அணி        ஆ. வேற்றுமை அணி               இ. பிறிது மொழிதல் அணி      ஈ. உருவக அணி  

6.  இரண்டு பொருள்களுக்கு இடையே உள்ள ஒற்றுமையை க் கூறி, பிறகு அவற்றுள் ஒன்றை வேறுபடுத்திக் காட்டுவது _______அணி எனப்படும்.

அ. தீவக அணி        ஆ. வேற்றுமை அணி               இ. பிறிது மொழிதல் அணி      ஈ. உருவக அணி  

7 சிலேடை என்பது _____________.

அ) ஆழ்ந்த விளக்கம் உடையது        ஆ) இரு பொருள்பட கூறுவது          இ) அகராதியைப் பயன்படுத்துவது                           ஈ) சொற்களஞ்சியம் பெருக்குவது

 8. இரட்டுற மொழிதல் அணி இவ்வாறும் வழங்கப்படுகிறது _____.

அ. தீவக அணி        ஆ. வேற்றுமை அணி               இ. பிறிது மொழிதல் அணி      ஈ. சிலேடை அணி

9. ஒரு சொல் இரு பொருள் பெற வைப்பது-------------

 அ. அகராதி           ஆ. சிலேடை                           இ. சொற்களஞ்சியம்                ஈ. உவமை

 10 . பிறிதுமொழிதல்அணியில்_____ மட்டும் இடம்பெறும்.

அ) உவமை         ஆ) உவமேயம்                 இ) தொடை                      ஈ) சந்தம்

11. இரண்டு பொருள்களுக்கு இடையே உள்ள ஒற்றுமையையும் வேற்றுமையையும் கூறுவது _____ அணி.

அ) ஒற்றுமை       ஆ) வேற்றுமை                 இ) சிலேடை                     ஈ) இரட்டுற மொழிதல்

12 . ஒரே செய்யுளை இருபொருள்படும்படி பாடுவது __________ அணி.

அ) பிறிதுமொழிதல் ஆ) இரட்டுறமொழிதல்     இ) இயல்பு நவிற்சி             ஈ) உயர்வு நவிற்சி

13 காலில் காயத்திற்குக் கட்டுப்போட்டிருந்த இளைஞன் ஒருவன் பேருந்தில் ஏறினான்.எந்த ஊருக்குப் பயணச்சீட்டு வேண்டும்?” என்று நடத்துநர் கேட்டார். அதேநேரம் அருகிலிருந்தவர், ”உன் காலில் எதனால் காயம் ஏற்பட்டது?” என்று கேட்டார். அவன், “செங்கல்பட்டு” என்று கூறினான். அவன் கூறியது இருவரின் வினாக்களுக்கும் பொருத்தமான விடையாக அமைந்தது – மேற்கண்ட கூற்றில் இரு பொருள் தரக்கூடிய சொல் எது?

அ)  பயணச்சீட்டு      ஆ)  காயம்              இ)  செங்கல்பட்டு                                    ஈ) நேரம்

14 தேனும் வெள்ளைச்சர்க்கரையும் இனிப்புச்சுவை உடையவை. அவற்றுள், தேன் உடலுக்கு நன்மை செய்யும்; வெள்ளைச் சர்க்கரை உடலுக்குத் தீங்கு செய்யும் – இரு கூற்றுகளிலும் ஒற்றுமைப்படுத்தும் சொல் எது?

அ) தேன்                 ஆ)  சர்க்கரை                        இ) தீங்கு                                ஈ) இனிப்பு

15. தேனும் வெள்ளைச்சர்க்கரையும் இனிப்புச்சுவை உடையவை. அவற்றுள், தேன் உடலுக்கு நன்மை செய்யும்; வெள்ளைச் சர்க்கரை உடலுக்குத் தீங்கு செய்யும் – இரு கூற்றுகளிலும் வேறுபடுத்தும் சொல் எது?

அ) தேன்                 ஆ)  சர்க்கரை                        இ) தீங்கு                                ஈ) இனிப்பு 


இணைய வழித் தேர்வு



Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post