காணொளி - பணித்தாள் - இணைய வழித் தேர்வு - PDF FORMAT
நாள் : 10 - 01- 2022
வகுப்பு : ஏழாம் வகுப்பு
பாடம் : தமிழ்
பாடத்தலைப்பு : பருவம் -3 - இயல் - 1 - வயலும் வாழ்வும்
அ.சரியான விடைத் தேர்வு செய்க.
1. பசிதீர்க்கும் தொழில் ________________
அ. நெசவு ஆ.
உழவுத்தொழில்
இ. தொழில் நுட்பத் தொழில் ஈ. ஆசிரியத் தொழில்
2 உழவுத்தொழிலின் செயல்பாடுகளில் ஒன்று
வேறுபட்டுள்ளது
அ. நிலத்தை தேர்வு செய்தல் ஆ. நாற்று நடுதல் இ. நீர்
பாய்ச்சுதல் ஈ. நூல் நூற்றல்
3. நாட்டுப்புற இலக்கியம்
எவ்வாறு வழங்கப்படுகிறது?
அ. சங்க இலக்கியம் ஆ. வாயில் இலக்கியம்
இ. வாய்மொழி இலக்கியம்
ஈ. செந்தமிழ் இலக்கியம்
4. நாட்டுப்புறங்களில்
இருக்கும் மக்கள் தங்கள் உழைப்பு களைப்புத் தெரியாமல் இருக்க பாடும் பாடல்கள் ______
அ. தாலாட்டு ஆ. ஒப்பாரி
இ. கவிதை ஈ. நாட்டுப்புறப்
பாடல்கள்
5. மலையருவி என்னும்
பெயரில் நாட்டுப்புறப் பாடல்களைத் தொகுத்தவர்------------.
அ. வேதநாயகம்
ஆ. கி.வ.ஜகந்நாதன்
இ.
அரங்கநாதன் ஈ. சுவாமி நாதன்
6. உழவர் சேற்று வயலில் __________ நடுவர்.
அ)
செடி ஆ) பயிர் இ) மரம் ஈ) நாற்று
7 வயலில்
விளைந்து முற்றிய நெற்பயிர்களை __________
செய்வர்.
அ)
அறுவடை ஆ) உழவு இ) நடவு ஈ) விற்பனை
8. ‘தேர்ந்தெடுத்து’
என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _____.
அ)
தேர் + எடுத்து ஆ) தேர்ந்து + தெடுத்து இ)
தேர்ந்தது + அடுத்து ஈ) தேர்ந்து +
எடுத்து
9. ‘ஓடை + எல்லாம்’
என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ______.
அ) ஓடைஎல்லாம் ஆ) ஓடையெல்லாம் இ) ஓட்டையெல்லாம் ஈ) ஓடெல்லாம்
10 . உழவர்கள் எப்போது நண்டு பிடித்தனர்
?
அ. நிலத்தை தேர்வு செய்யும்
போது
ஆ. நாற்று நடும் போது இ. நீர் பாய்ச்சும் போது ஈ. நாற்று பறிக்கும்
போது
11.
குழி என்பதன் பொருள் யாது?
அ) முற்றிய நெல் ஆ)
நில அளவை பெயர் இ) நீட்டல் அளவை பெயர் ஈ) புடவை
12 சாண் என்பதன் பொருள் யாது?
அ) முற்றிய நெல் ஆ)
நில அளவை பெயர் இ) நீட்டல் அளவை பெயர் ஈ) புடவை
13. மணி என்பதன் பொருள் யாது?
அ) முற்றிய நெல் ஆ)
நில அளவை பெயர் இ) நீட்டல் அளவை பெயர் ஈ) புடவை
14
. சீலை என்பதன் பொருள் யாது?
அ) முற்றிய நெல் ஆ)
நில அளவை பெயர் இ) நீட்டல் அளவை பெயர் ஈ) புடவை
15.
கழலுதல் என்பதன் பொருள் யாது?
அ) முற்றிய நெல் ஆ)
நில அளவை பெயர் இ) உதிர்தல் ஈ) புடவை
இணைய வழித் தேர்வு