ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு அன்பான வணக்கம். கொராணா தொற்று குறைய ஆரம்பித்தது காரணமாக ஒன்றாம் வகுப்பு முதல் பனிரெண்டாம் வகுப்பு வரை 01-02-2022 முதல் நேரடி வகுப்பு நடத்த அரசு அனுமதி அளித்துள்ளது. இது மகிழ்வான செய்தி. இனி பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு மாணவர்கள் தங்களை பொதுத் தேர்வுக்கும், வருகிற திருப்புதல் தேர்வுக்கு தம்மைத் தயார்ப்படுத்திக் கொள்ள வேண்டும். நிச்சயமாக திருப்புதல் தேர்வு மற்றும் பொது தேர்வு மாணவர்களுக்கு நடக்கும். மாணவர்கள் இந்த தேர்வுகளில் நல்ல மதிபெண் பெற்று நல்ல நிலைக்குச் செல்ல வேண்டும். பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வு வினாத்தாள் எப்படி இருக்கும் என்பது தெரியாது? அரசு பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு வினாத்தாளில் எவ்வித மாற்றமும் இருக்காது என அறிவித்துள்ளது. எனவே சென்ற ஆண்டுக்கு முந்தைய ஆண்டு பள்ளிக்கல்வித்துறையால் வெளியிடப்பட்ட பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு வினாத்தாள் வடிவமைப்பு மற்றும் அதில் இடம் பெறும் வினாக்கள் குறித்த புரிதல் மாணவர்கள் தெரிந்து வைத்திருப்பது அவசியமானது. எனவே மாணவர்களே இந்த பத்தாம் வகுப்பு பொது தேர்வு வினாத்தாள் குறைக்கப்பட்டப் பாடத்திட்டத்தின் படி எவ்வாறு அமையும்? எவ்வகையான வினாக்கள் இடம் பெறும் என்பதனைக் குறித்த சிறப்பு இணைய வகுப்பு உங்களுக்காக ஏற்படுத்தப்பட்டுள்ளது. பத்தாம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் இந்த இணைய வகுப்பில் கலந்துக் கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது. மாணவர்கள் இந்த இணைய வகுப்பினை இந்த வலைதளம் மூலம் நேரடியாக காணலாம்.
நன்றி :- தமிழ்ப்பொழில் வலைதளம்
பத்தாம் வகுப்பு
பொதுத் தேர்வு வினாத்தாள் - அமைப்பு
நேரலை