அன்பார்ந்த ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அனைவருக்கும் வணக்கம்.
பத்தாம் வகுப்பு மாணவர்கள் சமூக அறிவியலில் தங்களின் கற்றல் திறனைச் சோதித்து அறிய இங்கு கொடுக்கப்பட்டுள்ள வினா- விடைகள் தொகுப்பினைப் படித்து அதன் பின் வினா - விடையின் கீழ் உள்ள இணையவழித் தேர்வு எழுதி நீங்கள் உங்கள் கற்றலை மேம்படுத்திக் கொள்ளவும். இந்த இணைய வழித் தேர்வினை நீங்கள் எத்தனை முறை வேண்டுமானாலும் தேர்வு எழுதலாம். வரையறை கிடையாது. ஒவ்வொரு வினாவிற்கும் 30 நொடிகள் பதில் அளிக்க கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளமையால் மாணவர்கள் நன்கு சிந்தித்து பதில் அளிக்கவும்.
வரலாறு
அலகு -1
. முதல்
உலகப்போரின் வெடிப்பும்
அதன் பின்விளைவுகளும்
1. முதல் உலகப்போரின் இறுதியில் நிலைகுலைந்து போன மூன்று பெரும்
பேரரசுகள் யாவை?
A ) ஜெர்மனி, ஆஸ்திரிய-ஹங்கேரி, உதுமானியர்
B) ஜெர்மனி, ஆஸ்திரிய- ஹங்கேரி, ரஷ்யா
C ) ஸ்பெயின், போர்ச்சுகல், இத்தாலி
D) ஜெர்மனி, ஆஸ்திரிய-ஹங்கேரி, இத்தாலி
2. பத்தொன்பதாம் நூற்றாண்டு முடிவடையும் தருவாயில் கிழக்கு ஆசியாவில் உதயமான வலிமைவாய்ந்த நாடு எது?
A ) சீனா B ) ஜப்பான்
C ) கொரியா D ) மங்கோலியா
3. “ஏகாதிபத்தியம் முதலாளித்துவத்தின் உச்ச கட்டம்” எனக் கூறியவர் யார்?
A ) லெனின் C
) மார்க்ஸ்
B ) சன் யாட் சென் D ) மா சே துங்
4. மார்ன் போர் எதற்காக நினைவு கூறப்படுகிறது?
A ) ஆகாயப் போர்முறை
B ) பதுங்குக் குழிப்போர்முறை
C ) நீர்மூழ்கிக் கப்பல் போர்முறை
D ) கடற்படைப் போர்முறை
5. பன்னாட்டுச் சங்கத்தின் முதல் பொதுச்செயலாளர் எந்த நாட்டைச் சேர்ந்தவர்?
A ) பிரிட்டன் C
) பிரான்ஸ்
C ) டச்சு D ) அமெரிக்க ஐக்கிய நாடுகள்
6. பின்லாந்தைத் தாக்கியதற்காக
பன்னாட்டுச்சங்கத்திலிருந்து வெளியேற்றப்பட்ட நாடு எது?
A ) ஜெர்மனி B ) ரஷ்யா
C ) இத்தாலி D ) பிரான்ஸ்
6. எந்த ஆண்டில் ஜப்பான் சீனாவுடன் வலுக்கட்டாயமாகப் போரிட்டது.
A ) 1895 B ) 1894
C ) 1885 D ) 1874
7. 1913ஆம் ஆண்டு மே மாதம் கையெழுத்திடப்பட்ட உடன்படிக்கையின்படி அல்பேனியா எனும்
புதியநாடு உருவாக்கப்பட்டது.
A ) இலண்டன் உடன்படிக்கை B
) வெர்செய்ல்ஸ் உடன்படிக்கை
C ) பாரீஸ் உடன்படிக்கை D ) இவற்றில் எதுவுமில்லை
8. எந்த
ஆண்டில் ஜப்பான் இங்கிலாந்துடன் நட்பினை ஒப்பந்தம் செய்து
கொண்டது
A ) 1905 B ) 1902
C ) 1895 D ) 1914
9. சரியான கூற்றைத் தேர்வுசெய்யவும்
.i) துருக்கியப் பேரரசு, பால்கனில் துருக்கியரல்லாத பல இனமக்களைக் கொண்டிருந்தது.
ii) துருக்கி மையநாடுகள் பக்கம் நின்றுபோரிட்டது.
iii) பிரிட்டன் துருக்கியைத் தாக்கிக் கான்ஸ்டாண்டிநோபிளைக் கைப்பற்றியது.
iv) சூயஸ் கால்வாயைத் தாக்க துருக்கி மேற்கொண்ட முயற்சி முறியடிக்கப்பட்டது.
A ) i), ii) ஆகியன சரி B ) i), iii) ஆகியன சரி
C ) iv) சரி D ) i), ii), iv) ஆகியன சரி
10. கூற்று : ஜெர்மனியும் அமெரிக்காவும் மலிவான தொழிற்சாலைப்
பொருள்களை உற்பத்தி செய்து இங்கிலாந்தின் சந்தையைக்
கைப்பற்றின.
காரணம் : இருநாடுகளும் தங்கள் தொழிற்சாலைகளுக்குத் தேவையான
மூலப்பொருள்களை உற்பத்தி செய்தன.
A ) கூற்று, காரணம் ஆகிய இரண்டும் சரி.
B ) கூற்று சரி,
ஆனால் காரணம் கூற்றுக்கான
விளக்கம் அல்ல.
C ) கூற்று, காரணம் ஆகிய இரண்டும் தவறு
D ) காரணம் சரி, ஆனால் கூற்று தவறு.
11. கூற்று: ஆப்பிரிக்காவில்
குடியேற்றங்களை ஏற்படுத்துவதற்காக ஐரோப்பிய நாடுகள் மேற்கொண்ட முதற்கட்ட முயற்சிகள் ரத்தக்களரியான போர்களில் முடிந்தன.
காரணம் : சொந்தநாட்டு மக்களிடமிருந்து கடுமையான எதிர்ப்பு இருந்தது.
A ) காரணம், கூற்று ஆகிய இரண்டும் சரி.
B ) கூற்று சரி, ஆனால் காரணம் கூற்றுக்கான விளக்கம் அல்ல.
C ) கூற்று, காரணம் இரண்டுமே தவறு.
D ) காரணம் சரி ஆனால் கூற்று தவறு
12. பொருத்துக
a. பிரெஸ்ட்-லி்டாவஸ்க் உடன்படிக்கை - 1) வெர்சய்ல்ஸ்
b ஜிங்கோயிசம் - 2) துருக்கி
3. கமால்பாட்சா - 3) ரஷ்யாவும் ஜெர்மனியும்
4. எம்டன் - 4) இங்கிலாந்து
5. கண்ணாடி மாளிகை - 5) சென்னை
a b c d e
A) 2 4 3 1 5
B) 4 3 1 5 2
C) 5 3 1 2 4
D) 3 4 2 5 1
அலகு - 2. இரு உலகப்போர்களுக்கு இடையில் உலகம்
13. இத்தாலி யாருடன் லேட்டரன் உடன்படிக்கையைச் செய்து கொண்டது?
A ) ஜெர்மனி B ) ரஷ்யா
C ) போப் D
) ஸ்பெயின்
14. யாருடைய ஆக்கிரமிப்போ மெக்சிகோ
நாகரிகம் நிலைகுலைந்து போயிற்று?
A ) ஹெர்மன் கோர்ட்ஸ் B ) பிரான்சிஸ்கோ பிசாரோ
C ) தௌசெயின்ட் லாவெர்ட்யூர் D ) முதலாம்
பெட்ரோ
15. பெரு நாட்டை யார் தங்களுடைய பகுதிகளில்
ஒன்றாக ஆக்கிக்கொண்டனர்?
A ) ஆங்கிலேயர் B ) ஸ்பானியர்
C ) ரஷ்யர் D
) பிரெஞ்சுக்காரர்
16. லத்தீன் அமெரிக்காவுடன் 'அண்டை நாட்டுடன் நட்புறவு' எனும் கொள்கையைக் கடைப்பிடித்த அமெரிக்கக் குடியரசுத்தலைவர் யார்?
A ) ரூஸ்வெல்ட் B
) ட்ரூமன்
C ) உட்ரோவில்சன் D) ஐசனோவர்
17. உலகத்தின் எந்தப்பகுதி டாலர் அரசியல்
ஏகாதிபத்தியத்தை விரும்பவில்லை?
A ) ஐரோப்பா B ) லத்தீன் அமெரிக்கா
C ) இந்தியா D ) சீனா
18. i) முதல் உலகப்போரின்போது ஆஸ்திரியாவை தெற்கு முனைப் போரில் தொடர்ந்து
முனைப்புடன் ஈடுபட வைப்பதே
இத்தாலியின் முக்கியக்கடமையாக இருந்தது.
ii) இத்தாலியைக் காட்டிலும் நீண்ட காலங்கழித்தே ஜெர்மனி பாசிசத்தைக்
கைக்கொண்டது.
iii) அமெரிக்காவில் மிகப்பெரும் பங்குச்
சந்தை வீழ்ச்சி 1929ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 24ஆம் நாளில்
எற்பட்டது.
iv) ஆப்பிரிக்க தேசிய காங்கிரசின்
மீதானத்தடை 1966இல் விலக்கிக் கொள்ளப்பட்டது.
அ) i), ii) ஆகியவை சரி
ஆ) iii) சரி
இ) iii), iv) ஆகியவை சரி
ஈ) i), ii), iii) ஆகியவை சரி
19. கூற்று: தற்காப்புப் பொருளாதாரக் கொள்கையை முன்னிறுத்தியப் பொருளாதார
தேசியம் எனும் புதிய அலையால் உலக வணிகம் பாதிக்கப்பட்டது.
காரணம்: அமெரிக்கா, கடன்பட்ட நாடுகளுக்குப் பொருளாதார உதவி செய்ய விருப்ப மில்லாமல் இருந்ததனால் இந்நிலை உண்டானது.
அ) கூற்று, காரணம் இரண்டுமே சரி
ஆ) கூற்று சரி, ஆனால் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமல்ல
இ) கூற்று, காரணம் ஆகிய இரண்டுமே தவறு
ஈ) காரணம் சரி ஆனால் கூற்றுக்குப் பொருந்தவில்லை.
20. கூற்று : 1884-85இல் நடைபெற்ற பெர்லின் காலனிய மாநாடு காலனியாதிக்க சக்திகள் ஆப்பரிக்காவைத் தங்களின்
செல்வாக்கு மண்டலங்களாகப் பிரித்துக் கொள்ளலாம்
எனத் தீர்மானித்தது.
காரணம்: ஆங்கிலேயருக்கும், போயர்களுக்கும் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற போர் இத்தீர்மானத்திற்கு எதிர்ப்பானதாகும்.
அ) கூற்று, காரணம் இரண்டுமே சரி
ஆ) கூற்று சரி ஆனால் காரணம் சரியான விளக்கமல்ல.
இ) கூற்று காரணம் ஆகிய இரண்டுமே தவறு
ஈ) கூற்று தவறு ஆனால் காரணம் கூற்றுடன் பொருந்தவில்லை.
21. பொருத்துக
a . டிரான்ஸ்வால் – 1.ஜெர்மனி
b. டோங்கிங் – 2.ஹிட்லர்
c. ஹின்டன்பர்க் -3. இத்தாலி
d. மூன்றாம் ரெய்க் -4. தங்கம்
e. மாட்டியோட்டி – கொரில்லா நடவடிக்கைகள்
a b c d e
A) 2 4 3 1 5
B) 4 3 1 5 2
C) 3 4 5 1 2
D) 3 4 2 5 1
புவியியல்
1. இந்தியா- அமைவிடம் நிலத்தோற்றம்
மற்றும்வடிகாலமைப்பு
21. இந்தியாவின் வடக்கு தெற்கு பரவல்?
அ) 2500 கி.மீ ஆ) 2933 கி.மீ
இ) 3214 கி.மீ ஈ) 2814 கி.மீ.
22. பீகாரின் துயரம் என்று அழைக்கப்படும்
ஆறு?
அ) நர்மதா ஆ) கோதாவரி
இ) கோசி ஈ) தாமோதர்
23. மூன்று பக்கம் நீரால் சூழப்பட்ட பகுதி என அழைக்கப்படுகிறது?
அ) கடற்கரை ஆ)
தீபகற்பம்
இ) தீவு ஈ) நீர்ச்சந்தி
24. பாக் நீர்சந்தி மற்றும் மன்னார் வளைகுடா…………………. ஐ இந்தியாவிலிருந்து பிரிக்கிறது?
அ) கோவா ஆ) மேற்குவங்காளம்
இ) இலங்கை ஈ)
மாலத்தீவு
25. தென்னிந்தியாவின் மிக உயரமான சிகரம்
அ) ஊட்டி ஆ)
ஆனைமுடி
இ) கொடைக்கானல் ஈ) ஜின்டா
கடா
26. பழைய வண்டல் படிவுகளால் உருவான சமவெளி
அ) பாபர் ஆ) தராய்
இ) பாங்கர் ஈ) காதர்
27. பழவேற்காடு ஏரி………………. ……………….மாநிலங்களுக்கிடையே அமைந்துள்ளது?
அ) மேற்கு வங்காளம் மற்றும் ஒடிசா
ஆ) கர்நாடகா மற்றும் கேரளா
இ) ஒடிசா மற்றும் ஆந்திரப் பிரதேசம்
ஈ) தமிழ்நாடு மற்றும் ஆந்திரப்
பிரதேசம்
2. இந்தியா-
காலநிலை மற்றும் இயற்கைத் தாவரங்கள்
28. மேற்கத்திய இடையூறுகளால் மழைப்பொழிவைப்
பெரும்பகுதி
அ) தமிழ்நாடு ஆ) கேரளா
இ) பஞ்சாப் ஈ) மத்தியப்பிரதேசம்
29. கேரளா மற்றும் கர்நாடக கடற்கரைப்
பகுதிகளில் விளையும் மாங்காய்கள் விரைவில் முதிர்வதற்கு……………….காற்றுகள்உதவுகின்றன?
அ) லூ ஆ) நார்வெஸ்டர்ஸ்
இ) மாஞ்சாரல் ஈ) ஜெட் காற்றோட்டம்
30. ஒரே அளவு மழைபெறும் இடங்களை இணைக்கும்
கோடு…………………....ஆகும்?
அ) சமவெப்ப கோடுகள் ஆ) சமமழைக்கோடுகள்
இ) சமஅழுத்தக்கோடுகள் ஈ) அட்சக்கோடுகள்
31. இந்தியாவின் காலநிலை………………..ஆக பெயரிடப்பட்டுள்ளது?
அ) அயனமண்டல ஈரக் காலநிலை
ஆ) நிலநடுக்கோட்டுக் காலநிலை
இ) அயன மண்டல பருவக்காற்றுக் காலநிலை
ஈ) மிதஅயன மண்டலக்காலநிலை
32. பருவக்காற்று காடுகள் இவ்வாறு
அழைக்கப்படுகின்றன?
அ) அயன மண்டல பசுமை மாறாக் காடுகள்
ஆ) இலையுதிர்க் காடுகள்
இ) மாங்குரோவ் காடுகள்
ஈ) மலைக்காடுகள்
33. சேஷாசலம் உயிர்கோளபெட்டகம் அமைந்துள்ள
மாநிலம்
அ) தமிழ்நாடு ஆ) ஆந்திரப் பிரதேசம்
இ) மத்தியப் பிரதேசம் ஈ) கர்நாடகா
34. யுனெஸ்கோவின் (UNESCO) உயிர்க்கோளப் பாதுகாப்பு பெட்டகத்தின் ஒரு அங்கமாக இல்லாதது……………...
அ) நீலகிரி ஆ) அகத்தியமலை
இ) பெரிய நிக்கோபார் ஈ) கட்ச்
35. பொருத்துக
a. சாங்போ --- 1.கங்கை ஆற்றின் துணை ஆறு
b. யமுனை --- 2.இந்தியாவின் உயர்ந்த சிகரம்
c. புதிய வண்டல் படிவுகள் --- 3.பிரம்மபுத்திரா
d. காட்வின்
ஆஸ்டின் (K2) ---
4.தென் கிழக்கு கடற்கரைச் சமவெளி
e. சோழமண்டலக் கடற்கரை -- -5.காதர்
a b c d e
A) 2 4 3 1 5
B) 4 3 1 5 2
C) 3 1 5 2 4
D) 3 4 2 1 5
குடிமையியல்
1.இந்திய அரசியலமைப்பு
36. கீழ்காணும் வரிசையில் முகவுரை 'பற்றிய சரியான தொடர் எது?
அ) குடியரசு, ஜனநாயக, சமயச்சார்பற்ற, சமதர்ம, இறையாண்மை
ஆ) இறையாண்மை , சமதர்ம, சமயச் சார்பற்ற, குடியரசு ஜனநாயக
இ) இறையாண்மை , குடியரசு, சமயச்சார்பற்ற, சமதர்ம, ஜனநாயக
ஈ) இறையாண்மை , சமதர்ம, சமயச்
சார்பற்ற, ஜனநாயக, குடியரசு
37. இந்திய அரசியலமைப்பின் முகவுரை
எத்தனை முறை திருத்தப்பட்டது?
அ) ஒருமுறை ஆ) இருமுறை
இ) மூன்று முறை ஈ) எப்பொழுதும் இல்லை
38.ஒரு வெளிநாட்டவர் கீழ்க்காணும்
எதன் மூலம் இந்திய குடியுரிமை பெற முடியும்?
அ) வம்சாவழி ஆ) பதிவு
இ) இயல்புரிமை ஈ)
மேற்கண்ட அனைத்தும்
39. மாறுபட்ட ஒன்றைக் கண்டுபிடி?
அ) சமத்துவ உரிமை ஆ) சுரண்டலுக்கெதிரானஉரிமை
இ) சொத்துரிமை ஈ) கல்விமற்றும்கலாச்சார உரிமை
40.கீழ்க்காண்பவற்றில் ஒன்று
அடிப்படை உரிமையைப் பயன்படுத்துவதற்கு உதாரணம் இல்லை ?
அ) கர்நாடகாவிலிருந்து கேரளா பண்ணைகளில் வேலையாட்கள் பணி
செய்தல்
ஆ) கிறித்தவ சமயக் குழு, தொடர்ச்சியாக பள்ளிகளை அமைத்தல்
இ) ஆண், பெண்
இருபாலரும் அரசுப் பணிகளுக்கு சம ஊதியம் பெறுதல்
ஈ) பெற்றோர்களின் பூர்வீக சொத்துகள்
அவர்களது பிள்ளைகளுக்குச் செல்லுதல்
41. பின்வருவனவற்றுள் எந்த உரிமை Dr.B.R. அம்பேத்கர் அவர்களால் "இந்திய அரசியலமைப்பின் இதயம்
மற்றும் ஆன்மா" என விவரிக்கப்பட்டது?
அ) சமய உரிமை காணும் உரிமை
ஆ) சமத்துவ உரிமை
இ) அரசியலமைப்புக்கு உட்பட்ட தீர்வு
ஈ) சொத்துரிமை
42. அடிப்படை உரிமைகள் எவ்வாறு
நிறுத்திவைக்கப்பட முடியும்?
அ) உச்சநீதிமன்றம் விரும்பினால்
ஆ) பிரதம மந்திரியின் ஆணையினால்
இ) தேசிய அவசரநிலையின்போது குடியரசுத் தலைவரின் ஆணையினால்
ஈ) மேற்கண்ட அனைத்தும்
43. நமது அடிப்படை கடமைகளை…………..இடமிருந்து பெற்றோம்?
அ) அமெரிக்க அரசியலமைப்பு ஆ) கனடாஅரசியலமைப்பு
இ) ரஷ்ய அரசியலமைப்பு ஈ) ஐரிஸ் அரசியலமைப்பு
44. எந்த பிரிவின் கீழ் நிதிநிலை அவசர
நிலையை அறிவிக்க முடியும்?
அ) சட்டப்பிரிவு 352. ஆ) சட்ட பிரிவு 356.
இ) சட்டப்பிரிவு 360. ஈ) சட்டப்பிரிவு 368
45. எந்த குழுக்கள் / கமிஷன்கள் மத்திய
- மாநில உறவுகள் பற்றி பரிந்துரை செய்தன ?
1.சர்க்காரியா குழு 2. ராஜமன்னார் குழு 3. வெங்கடாசலையாகுழு
கீழே கொடுக்கப் பட்டுள்ள குறியீடுகளிலிருந்துசரியான விடையைத்
தேர்ந்தெடு:
அ) 1,2 &3 ஆ) 1& 2. இ) 1& 3. ஈ) 2&3
46. முதன் முதலில்
அரசியலமைப்பு எனும் கொள்கை …………….ல் தோன்றியது.
அ) ஜெர்மனி ஆ) அமெரிக்கா ஐக்கிய நாடுகளில்
இ) ரஷ்யா ஈ) பிரான்ஸ்
47.அரசியல்நிர்ணய சபையின் தற்காலிக தலைவராக………..
தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அ) Dr.B.R அம்பேத்கர் ஆ) சச்சிதானந்த சின்கா
இ) Dr.இராஜேந்திரபிரசாத் ஈ) கிருஷ்ணமாச்சாரி
48. இந்திய அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்ட நாள் மற்றும் ஆண்டு
அ) டிசம்பர் 9, 1949 ஆ) டிசம்பர் 9
,1947
இ) நவம்பர் 26 ,1949 ஈ) நவம்பர் 26 1947
49. ……………பேராணைகள் சட்டப்பிரிவு 32-ல்குறிப்பிடப்படுகின்றன
அ)
5 ஆ) 6
இ) 10 ஈ) 4
50.இந்திய குடிமக்களுக்கு அடிப்படை
கடமைகள் பிரிவின் கீழ் வழங்கப்பட்டுள்ளன.
அ)
51A ஆ) 32A
இ) 50A ஈ) 45
பொருளியல்
1.மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும்
அதன் வளர்ச்சி
ஓர் அறிமுகம்
51.GDP...........யின் சமம் ?
அ) பண வீக்கத்திற்கான சரிசெய்யப்பட்டNNP
ஆ)
பணவீக்கத்திற்காக. சரிசெய்யப்பட்ட. GDP
இ) GDP மற்றும் வெளிநாட்டில் ஈட்டப்பட்ட நிகர சொத்து வருமானம்
ஈ) NNP மற்றும்
வெளிநாட்டில் ஈட்டப்பட்ட நிகர சொத்து வருமானம்
52.நாட்டு வருமானம் அளவிடுவது?
அ) பணத்தின் மொத்த மதிப்பு
ஆ)உற்பத்தியாளர் பண்டத்தின் மொத்த மதிப்பு
இ)நுகர்வுபண்டத்தின்மொத்த மதிப்பு
ஈ) பண்டங்கள் மற்றும் பணிகளின் மொத்த
மதிப்பு
53.முதன்மை துறை இதனை உள்ளடக்கியது?
அ)வேளாண்மை ஆ)
தானியங்கிகள்
இ) வர்த்தகம் ஈ)
வங்கி
54. …………..முறையில் ஒவ்வொரு இடைநிலை
பண்டத்தின் மதிப்பை கூட்டும்போது, இறுதி பண்டத்தின் மதிப்பை
கணக்கிடலாம்.
அ)செலவு முறை ஆ)மதிப்பு கூட்டு முறை
இ)வருமானமுறை ஈ) நாட்டு வருமானம்
56. GDP யில் எந்த துறை மூலம் அதிகமான
வேலைவாய்ப்பு ஏற்படுகிறது?
அ) வேளாண் துறை ஆ) தொழில் துறை
இ) பணிகள் துறை ஈ) மேற்கண்ட எதுவுமில்லை
57.பணிகள் துறையில் நடப்பு விலையில் மொத்த மதிப்பு கூடுதல் 2018-19ல் லட்சம்கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது?
அ) 91.06 ஆ) 92.26
இ) 80.07 ஈ) 98.29.
58. வேளாண் பண்டங்களின் உற்பத்தியில் இந்தியா……………….அதிகமாக உற்பத்தியாளர் ஆகும்?
அ) 1வது ஆ) 3. வது
இ) 4 வது ஈ) 2 வது
59. இந்தியாவில் பிறப்பின் போது
எதிர்பார்க்கப்பட்ட ஆயுட்காலம்…………..ஆண்டுகள் ஆகும்?
அ) 65 ஆ) 60
இ) 70 ஈ) 55
60. கீழ்க்கண்டவற்றுள் எது வர்த்தக கொள்கை?
அ) நீர்ப்பாசனகொள்கை
ஆ)இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கொள்கை
இ)நிலச் சீர்திருத்தக் கொள்கை
ஈ)கூலிக் கொள்கை
61.இந்திய பொருளாதாரம் என்பது?
அ) வளர்ந்து வரும் பொருளாதாரம்
ஆ) தோன்றும் பொருளாதாரம்
இ) இணை பொருளாதாரம்
ஈ)அனைத்தும் சரி
62. இந்தியாவில் ………….துறை முதன்மை துறையாகும்.
அ) வேளாண் ஆ) தொழில்
இ) சேவை ஈ) இவற்றில் எதுவுமில்லை
63. ………..மக்களின் வாழ்க்கைத் தரத்தை உணர்த்தும் ஒரு கருவியாகும்.
அ) தலாவருமானம் ஆ) தனிநபர் வருமானம்
இ) நாட்டு வருமானம் ஈ) இவற்றில் எதுவுமில்லை
64. இரண்டாம் துறையை வேறுவிதமான துறை என
அழைக்கலாம்.
அ) வேளாண் ஆ) தொழில்
இ) சேவை ஈ) இவற்றில்
எதுவுமில்லை
65.பொருத்துக
a. மின்சாரம் / எரிவாயு மற்றும் நீர்
--- 1.நாட்டு வருமானம்
/மக்கள்தொகை
b. விலைக் கொள்கை --- 2.மொத்த உள் நாட்டு உற்பத்தி
c. GST. --- 3.தொழில்துறை
d. தலா வருமானம் --- 4.வேளாண்மை
e. C + I + G +
(X-M) --- 5.பண்டம் மற்றும் பணிகள்
மீதானவரி
a b c d e
A) 2 4 3 1 5
B) 4 3 1 5 2
C) 3 4 5 1 2
D) 3 4 2 1 5
கீழுள்ள பொதுத்தமிழ் இலக்கண & இலக்கிய பயிற்சி வினாக்களை ONLINE தேர்வாக எழுதி பயிற்சி பெறுக.