ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அனைவருக்கும் வணக்கம். ஜனவரி 19 முதல் பத்தாம் வகுப்பிற்கு முதல் திருப்புதல் தேர்வு நடைபெறும் என பள்ளிக் கல்வித் துறையால் அறிவிக்கப்பட்டுள்ளது. அது பொது தேர்வு போன்று விடைத்தாட்களை திருத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதனால் மாணவர்கள் தங்களை பொதுத் தேர்விற்கு எவ்வாறு தயார்படுத்திக் கொள்வீர்களோ அவ்வாறு தயாராகுங்கள். அதற்கு இந்த வலைதளம் மிகுந்த பயன் அளிக்கும் வகையில் முதல் திருப்புதல் தேர்வுக்குரிய பாடங்களை ஒரு மதிப்பெண் வினாக்களாக மாற்றியமைத்து இணைய வழித் தேர்வு நடத்தப்படுகிறது. மாணவர்கள் இதனை எத்தனை முறை வேண்டுமானாலும் எழுதலாம். எழுதுவதற்கு கட்டுபாடு எதுவும் இல்லை. தங்களின் கற்றலை மேலும் சிறப்பாகவே இந்த வழிமுறை. ஆதலால் ஒரு முறை தான் எழுத வேண்டும் என்ற எண்ணம் கொள்ளலாம். அனைத்து வினாக்களுக்கும் நம்மால் சரியாக விடையளிக்க முடிகிறதா எனப் பார்த்து தம்மை சோதித்துக் கொள்ளலாம். ஒரு முறையில் அனைத்து வினாக்களுக்கும் சரியான விடையளித்த மாணவர்கள் பாராட்டுக்குரியவர்கள். மீண்டும் முயற்சி செய்து அனைத்து வினாக்களுக்கும் சரியான விடையளித்த மாணவர்களின் தன்னம்பிக்கை மற்றும் முயற்சியை பாராட்டியாக வேண்டும். இணைய வழித் தேர்வின் இறுதியில் உங்களின் மதிப்பெண் தெரிய வரும் மற்றும் வினாக்களும், விடைகளும் உங்களுக்கு திரையில் தெரியும் அவற்றை நீங்கள் உ ங்களின் குறிப்பேட்டில் எழுதிக் கொள்ளவும். தேர்வுக்கு இந்த தளத்தை எத்தனை முறை வேண்டுமானாலும் பார்வையிடலாம். அனைத்து முறையும் இலவசம்.
பத்தாம் வகுப்பு
முதல் திருப்புதல் தேர்வு
கணிதப் பாடப் பகுதி
இணையவழித் தேர்வினை எழுத கீழே CLICK HERE என்பதனைச் சொடுக்கவும்