10TH - SCIENCE - 1ST REVISION EXAM - QUIZ


அறிவியல்

                   இயற்பியல்      

1.இயக்க விதிகள்

1. சரியான விடையைத் தேர்ந்தெடு.

1. கீழ்க்கண்டவற்றுள் நிலைமம் எதனைச் சார்ந்தது

அ) பொருளின் எடை                      ஆ) கோளின் ஈர்ப்பு முடுக்கம்

இ) பொருளின் நிறை                   ஈ) அ மற்றும் ஆ

 

2. கீழ்கண்டவற்றின் நியூட்டனின் மூன்றாம் விதி எங்கு பயன்படுகிறது.

அ) ஓய்வுநிலையிலுள்ள பொருளில்

ஆ) இயக்க நிலையிலுள்ள பொருளில்

இ) அ மற்றும் ஆ

ஈ) சமநிறையுள்ள பொருட்களில் மட்டும்

 

3. உந்த மதிப்பை அச்சிலும் காலத்தினை அச்சிலும் கொண்டு ஒரு வரைபடம் வரையப்படுகிறது. இவ்வரைபட சாய்வின் மதிப்பு

அ) கணத்தாக்குவிசை            ஆ) முடுக்கம்

இ) விசை                                       ஈ) விசை மாற்றவீதம்

 

4. ஒரு கிலோகிராம் எடை என்பது …………….. ற்கு

சமமாகும்.

அ) 9.8 டைன்                                ஆ) 9.8 x 104 N

இ) 98 x 104 டைன்                      ஈ) 980 டைன்

 

5. புவியில் நிறை கொண்ட பொருள் ஒன்று புவியின்

ஆரத்தில் பாதி அளவு ஆரம் கொண்ட கோள் ஒன்றிற்கு எடுத்துச் செல்லப்படுகிறது. அங்கு அதன் நிறை மதிப்பு.

அ) 4M                                               ஆ) 2M

இ) M/4                                              ஈ) M

 

6. ராக்கெட் ஏவுதலில் ………………விதி/கள் பயன்படுத்தப்படுகிறது.

அ) நியூட்டனின் மூன்றாம் விதி

ஆ) நியூட்டனின் பொது ஈர்ப்பியல் விதி

இ) நேர் கோட்டு உந்த மாறாக் கோட்பாடு

ஈ) அ மற்றும் இ

 

 

II. கோடிட்ட இடங்களை நிரப்பு.

7. இடப்பெயர்ச்சி நிகழ்வதற்கு……………..தேவை.

அ) கணத்தாக்குவிசை            ஆ) முடுக்கம்

இ) விசை                                       ஈ) விசை மாற்றவீதம்

 

8. நகர்ந்து கொண்டு உள்ள ஊர்தியில் தீடீர்

தடை ஏற்பட்டால்பயணியர் முன்நோக்கி சாய்கின்றனர். இந்நிகழ்வு

…………….. மூலம் விளக்கப்படுகிறது

அ) நியூட்டனின் மூன்றாம் விதி

ஆ) நியூட்டனின் பொது ஈர்ப்பியல் விதி

இ) நேர் கோட்டு உந்த மாறாக் கோட்பாடு

ஈ) இயக்கத்தில் நிலைமம்

 

9. 100 கிகி நிறையுடைய மனிதனின் எடை புவிப்பரப்பில்………..

அளவாக இருக்கும்.

. அ) 480N                            ஆ) 900N

  இ) 940N                              ஈ) 980N

 


10. பொருத்துக.

                   பகுதி ||                                               பகுதி ||

a) நியூட்டனின் முதல் விதி          - 1. பறவை பறத்தலில்

                                                                      பயன்படுகிறது

b) நியூட்டனின் இரண்டாம் விதி - 2.பொருட்களின் சமநிலை  

c) நியூட்டனின் மூன்றாம் விதி     -   3. ராக்கெட் ஏவுதலில்

                                   பயன்படுகிறது

d)  நேர் கோட்டு உந்த

      அழிவின்மை விதி                        - 4. விசையின் விதி

 

            a    b    c    d

  A)     2    4    3    1

  B)     4    3    1    2

  C)     2   4    1     3

  D)     3    4   2     1


11. பின்வருவனவற்றுள் எது சரியான தெரிவோ அதனைத் தெரிவு செய்க.

 கூற்று 'g' ன் மதிப்பு புவிப்பரப்பில் இருந்து உயர செல்லவும் புவிப்பரப்பிற்கு கீழே செல்லவும் குறையும்.

காரணம்: 'g'  மதிப்பானது புவிப்பரப்பில் பொருளின் நிறையினைச் சார்ந்து அமைகிறது.

அ) கூற்றும் காரணமும் சரியாக பொருந்துகிறது. மேலும் காரணம் கூற்றை சரியாக விளக்குகிறது.

ஆ) கூற்றும் காரணமும் சரிஆனால் காரணம் கூற்றினைச் சரியாக விளக்கவில்லை.

இ) கூற்று சரியானது ஆனால் காரணம் தவறு

ஈ) கூற்று தவறானது. எனினும் காரணம் சரி.

 

 

                                   2.ஒளியியல்

 சரியான விடையைத் தேர்ந்தெடு.

12. A,B,C,D என்ற நான்கு பொருள்களின் ஒளிவிலகல் எண்கள் முறையே 1.31, 1.43, 1.33,2.4 எனில்இவற்றில் ஒளியின் திசைவேகம் பெருமமாக உள்ள பொருள் எது?

 அ) A                                                      ஆ) B                        

 இ)                                                       ஈ) D

 

13. பொருளின் அளவிற்கு சமமானதலைகீழான மெய்ப்பிம்பம் கிடைக்க பொருள் வைக்கப்பட வேண்டிய தொலைவு

அ)                                                   ஆ) ஈறிலாத் தொலைவு

இ) 2f                                                    ஈ) க்கும் 2f க்கும் இடையில்

 

14. மின் விளக்கு ஒன்று குவிலென்சு ஒன்றின் முதன்மைக் குவியத்தில் வைக்கப்பட்டுள்ளது. மின் விளக்கு ஒளியூட்டப்படும் போதுகுவி லென்சானது

அ) விரிக்கும் கற்றைகளை உருவாக்கும்

ஆ) குவிக்கும் கற்றைகளை உருவாக்கும்

இ) இணைக் கற்றைகளை உருவாக்கும்

ஈ) நிறக் கற்றைகளை உருவாக்கும்.

 

15. ஒரு குவி லென்சானதுமிகச்சிறிய மெய்பிம்பத்தை முதன்மைக் குவியத்தில் உருவாக்கினால்பொருள் வைக்கப்பட்டு இடம்

அ) முதன்மைக் குவியம்                    ஆ) ஈறிலாத் தொலைவு

இ) 2f                                                             ஈ) க்கும் 2fக்கும் இடையில்

 

16. கிட்டப்பார்வை குறைபாடு உடைய கண்ணில்பொருளின் பிம்பமானது……… தோற்றுவிக்கப்படுகிறது.

அ) விழித் திரைக்குப் பின்புறம்       ஆ) விழித்திரையின் மீது

இ) விழித் திரைக்கு முன்பாக         ஈ) குருட்டுத் தானத்தில்

 

17. விழி ஏற்பமைவுத் திறன் குறைபாட்டைச் சரி செய்ய உதவுவது

அ) குவி லென்சு                                         ஆ) குழி லென்சு

இ) குவி ஆடி                                             ஈ) இரு குவிய லென்சு

 

18. சொல் அகராதியில் உள்ள சிறிய எழுத்துகளைப் படிப்பதற்கு உகந்த லென்சு எது?

அ) செ.மீ குவிய தூரம் கொண்ட குவிலென்சு

ஆ) செமீ குவிய தூரம் கொண்ட குழி லென்சு

இ) 10 செ.மீ குவிய தூரம் கொண்ட குவி லென்சு

ஈ) 10 செ.மீ குவிய தூரம் கொண்ட குழி லென்சு

 

கோடிட்ட இடங்களை நிரப்பு.

19.ஒளி செல்லும் பாதை…………… என்று அழைக்கப்படுகிறது.

 அ) ஒளிக்கதிர்                                         ஆ) ஒளிப்பயணம்

இ) ஒளிப்பாதை                                      ஈ) இவற்றில் எதுவுமில்லை

 

20. ஒரு ஒளிபுகும் ஊடகத்தின் ஒளி விலகல் எண்

எப்போதும் ஒன்றை விட……………

அ) அதிகமாக இருக்கும்                       ஆ) குறைவாக இருக்கும்        

இ) மாற்றமில்லை                                    ஈ) இவற்றில் எதுவுமில்லை

 

21. ………….கண்ணிற்குள் நுழையும் ஒளியின் அளவைக் கட்டுப்படுத்துகிறது.

அ) கார்னியா                                               ஆ) பார்வை நரம்பு

 ஐரிஸ்                                                     ஈ) இவற்றில் எதுவுமில்லை

 

22. பொருத்துக.

a. ரெட்டினா                        1. கண்ணில் ஒளிக்கதிர் செல்லும் பாதை

b. கண் பாவை                  2. சேய்மைப் புள்ளி விழியை நோக்கி நகர்தல்

c. சிலியரித் தசைகள்       3.அண்மைப்புள்ளி விழியை விட்டு விலகிச்

                                                   செல்லுதல்

d. கிட்டப்பார்வை               4.விழித்திரை

e. தூரப் பார்வை               5. விழி ஏற்பமைவுத்திறன்

             a    b    c     d    e

      A)  2    4    3     1    5

      B)  4    3    1     2    5

      C)  4     1   5     2    3

  D)  3    4   2     5    1

 

23. பின்வரும் வினாக்களில் கூற்றும் அதனையடுத்து காரணமும் கொடுக்கப்பட்டுள்ளன. பின்வருவனவற்றுள் எது சரியான தெரிவோ அதனைத் தெரிவு செய்க.

கூற்று : விழி லென்சின் குவிக்கும் திறன் அதிகரிப்பதால்கிட்டப்பார்வை என்னும் பார்வைக் குறைபாடு தோன்றுகிறது.

காரணம்: குழிலென்சைப் பயன்படுத்தி கிட்டப்பார்வைக் குறைப்பாட்டைச் சரிசெய்யலாம்

அ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. மேலும்காரணம் கூற்றுக்குச் சரியான விளக்கம்

ஆ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி.

ஆனால்காரணம் கூற்றுக்குச் சரியான விளக்கமன்று.

இ) கூற்று சரியானது. ஆனால் காரணம் சரியன்று.

ஈ) கூற்று தவறானது. ஆனால்காரணம் சரியானது.

 

 

                      7. அணுக்களும் மூலக்கூறுகளும்

24. சரியான விடையைத் தேர்ந்தெடு. 1. கீழ்கண்டவற்றுள் எது குறைந்த நிறையைக் கொண்டது

அ. 6.023 X 1023ஹீலியம் அணுக்கள்            ஆ. ஹீலியம் அணு

இ. கி ஹீலியம்                                                  ஈ. மோல் ஹீலியம் அணு..

 

25. கீழ்கண்டவற்றுள் எது மூவணு மூலக்கூறு?

அ. குளுக்கோஸ்                                                 ஆ. ஹீலியம்

இ. கார்பன் டை ஆக்சைடு                       ஈ. ஹைட்ரஜன்

 

26. 1 மோல் நைட்ரஜன் அணுவின் நிறை

அ. 28 amu                                                                ஆ. 14 amu

இ. 28 கி                                                              ஈ. 14 கி

 

27. 1 amu என்பது

அ. C -12 ன் அணுநிறை                                   

ஆ. ஹைட்ரஜனின் அணுநிறை

இ. ஒரு C-12 ன் அணுநிறையில் 1/12 பங்கின் நிறை

ஈ. O - 16ன் அணு நிறை.

 

28. 20Ca40 தனிமத்தின் உட்கருவில்

அ. 20 புரோட்டான் 40 நியூட்ரான்

ஆ. 20 புரோட்டான் 20 நியூட்ரான்

இ. 20 புரோட்டான் 40 எலக்ட்ரான்

ஈ. 20 புரோட்டான் 20 எலக்ட்ரான்

 

29. ஆக்சிஜனின் கிராம் மூலக்கூறு நிறை

அ. 16 கி.                                              ஆ. 18 கி.    

இ. 32 கி.                                           ஈ. 17 கி.

 

II. கோடிட்ட இடங்களை நிரப்பு.

30. இரு வேறு தனிமங்களின் அணுக்கள்………. நிறை எண்ணையும்

………அணு எண்ணையும் கொண்டிருந்தால் அவை ஐசோபார்கள் எனப்படும்.

அ. ஒரே , ஒரே                                ஆ. மாறுபட்ட , ஒரே  

இ. ஒரே , மாறுபட்ட                  ஈ. இவற்றில் எதுவுமில்லை

 

31. ஒரே ……………. எண்ணிக்கையை பெற்றுள்ள வெவ்வேறு தனிமங்களின் அணுக்கள் ஐசோடோன்கள் எனப்படும்.

 அ. புரோட்டான்                             ஆ.எலக்ட்ரான்

இ. நியூட்ரான்                              ஈ. இவற்றில் எதுவுமில்லை

 

32. ஒரு தனிமத்தின் அணுக்களை மற்றொரு தனிமத்தின் அணுக்களாக

………….முறையில் மாற்றலாம்.

அ.அணு எண் குறைப்பு                                     ஆ. அணு நிறை குறைப்பு

இ. செயற்கை மாற்றுத் தனிமங்கள்         ஈ. இவற்றில் எதுவுமில்லை

 

33. புரோட்டான்கள் மற்றும் நியூட்ரான்களின் கூடுதல் அந்த அணுவின்………… எனப்படும்.

அ. அணு எண்                             ஆ. அணு எடை

இ. நிறை எண்                         ஈ. இவற்றில் எதுவுமில்லை


35. ஒப்பு அணுநிறை என்பது………….. எனவும் அழைக்கப்படுகிறது.

அ. அணு எண்                             ஆ.  திட்டஅணு எடை

இ. நிறை எண்                           ஈ. இவற்றில் எதுவுமில்லை

 

 

36. ஒரு மூலக்கூறானது ஒரே தனிமத்தின் அணுக்களால் உருவாக்கப்பட்டால் அவை……………….எனப்படும்.

 அ. வேறுபட்ட அணு மூலக்கூறு              ஆ. சேர்மம்

இ. ஒத்த அணு மூலக்கூறு                            ஈ. இவற்றில் எதுவுமில்லை

 

37. ஒரு மூலக்கூறில் உள்ள அணுக்களின் எண்ணிக்கையே

அம்மூலக்கூறின் ……………………..ஆகும்.

அ. அணு எண்                                         ஆ.  திட்டஅணு எடை

இ. அணுக்கட்டு எண்                            ஈ. இவற்றில் எதுவுமில்லை

 

38. பாஸ்பரஸின் அணுக்கட்டு எண் =……………………….

அ. 4                                                 ஆ. 5

இ. 3                                                    ஈ. 6

 

39. பின்வருவனவற்றுள் எது சரியான தெரிவோ அதனைத் தெரிவு செய்க.

கூற்று     A  :அலுமினியத்தின் ஒப்பு அணுநிறை 27.

காரணம் R  ஒரு அலுமினியம் அணுவின் நிறையானது 1/12 பங்கு கார்பன்-12-ன் நிறையைவிட 27 மடங்கு அதிகம்

அ. மற்றும் சரி R, A ஐ விளக்குகிறது.

ஆ. சரி தவறு.

இ. தவறு சரி ஈ. மற்றும் சரி R, A க்கான் சரியான

விளக்கம் அல்ல.

  ஈ. தவறு சரி

 

 

                  2. தாவர உள்ளமைப்பியல்  மற்றும்

                             தாவர செயலியல்

1. சரியான விடையைத் தேர்ந்தெடு.

40. காஸ்பேரியன் பட்டைகள் வேரின் பகுதியில் காணப்படுகிறது.

அ. புறணி                                                  ஆ. பித்

இ. பெரிசைக்கிள்                                  ஈ. அகத்தோல்

41. உள்நோக்கிய சைலம் என்பது எதன் சிறப்புப் பண்பாகும்?

அ. வேர்                                                      ஆ. தண்டு

இ. இலைகள்                                            ஈ. மலர்கள்

 

42. சைலமும் புளோயமும் ஒரே ஆரத்தில் அருகருகே அமைந்து காணப்படுவது எனப்படும்.

அ. ஆரப்போக்கு அமைப்பு                 

ஆ. சைலம் சூழ் வாஸ்குலார் கற்றை

இ. ஒன்றிணைந்தவை

ஈ. இவற்றில் எதுவுமில்லை

 

43. காற்றில்லா சுவாசத்தின் மூலம் உருவாவது

அ. கார்போஹைட்ரேட்                     ஆ. எத்தில் ஆல்கஹால்

இ. அசிட்டைல் கோ.ஏ                          ஈ. பைருவேட்

 

44. கிரப் சுழற்சி இங்கு நடைபெறுகிறது

அ. பசுங்க ணிகம்                                  

ஆ. மைட்டோகாண்ட்ரியாவின் உட்கூழ்ம மேட்ரிக்ஸ்

இ. புறத்தோல் துளை

ஈ. மைட்டோ காண்ட்ரியாவின் உட்புறச்சவ்வு

 

45. ஒளிச்சேர்க்கையின் போது எந்த நிலையில் ஆக்ஸிஜன் உற்பத்தியாகிறது?

அ. ATP யானது ADP யாக மாறும் போது

ஆ. CO2 நிலை நிறுத்தப்படும் போது

இ. நீர்மூலக்கூறுகள் பிளக்கப்படும் போது

ஈ. இவை அனைத்திலும்.

 

 

கோடிட்ட இடங்களை நிரப்பு.

46. வேரில் புறணியின் உட்புற அடுக்கு……………..ஆகும்.

அ. வேர்தூவி                                 ஆ. எபிபிளமா மற்றும் அகத்தோல்

இ. பெரிசைக்கிள்                       ஈ. பைருவேட்

 

47. சைலமும் புளோயமும் வெவ்வேறு ஆரங்களில் காணப்படும் வாகுலார் கற்றை …………………அமைவாகும்.

அ. ஆரப்போக்கு அமைப்பு                 

ஆ. சைலம் சூழ் வாஸ்குலார் கற்றை

இ. ஒன்றிணைந்த வாஸ்குலார் கற்றை

ஈ. இவற்றில் எதுவுமில்லை

 

48. கிளைக்காலிஸிஸ் நடைபெறும் இடம்………………..

அ. மைட்டோகாண்ட்ரியா           ஆ. சைட்டோபிளாசம்

இ. உட்கரு                                             ஈ. பைருவேட்

 

49. ஒளிச்சேர்க்கையின் போது வெளிப்படும் ஆக்ஸிஜன்……… லிருந்து கிடைக்கிறது.

அ. HO மற்றும் CO2                               ஆ. HO மற்றும் N        

இ. கனிமம்                                                  ஈ. இவற்றில் எதுவுமில்லை

 

50.பொருத்துக.

aபுளோயம் சூழ் வாஸ்குலார் கற்றை   1.டிரசீனா

b. கேம்பியம்                                                   -   2.உணவு கடத்துதல்

c.சைலம் சூழ் வாஸ்குலார் கற்றை       -  3.பெரணிகள்

d. சைலம்                                                           - 4.இரண்டாம் நிலை வளர்ச்சி

e. புளோயம்                                                     -  5. நீரைக் கடத்துதல்

 

       a    b    c     d   e

  A) 2    4    3    1   5

  B) 4    3    1    5   2

  C) 3    4   1     5   2

  D) 3    4    5    2   1


ஆங்கில வழி - Click Here

 

 

 

 

 

  

Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post