9TH - THREE MARKS - QUESTION AND ANSWER

 

குறுவினாக்கள்

 ஒன்பதாம் வகுப்பு

தமிழ்

சிறுவினாக்கள்

3 மதிப்பெண்

குறைக்கப்பட்ட ஒன்பதாம் வகுப்பு பாடத்திட்டத்திற்கான மூன்று மதிப்பெண் வினாக்கள் இங்கு தொகுத்துக் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் கொடுக்கப்பட்டுள்ள வினாக்களுக்கு மாணவர்கள் அனுதினமும் பயிற்சி எடுத்து வந்தால் நீங்கள் அதிக மதிப்பெண்கள் பெற வாய்ப்பு உண்டு. இந்த வினாக்கள் அனைத்தும் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்திலிருந்து புத்தக வினாக்கள் மட்டுமே இங்கு கொடுக்கப்பட்டுள்ளது மாணவர்கள் இதனை பயிற்சி பெறவும். நாள் ஒன்றுக்கு ஐந்து வினாக்கள் வீதம் பயிற்சி பெற்று வந்தால் நீங்கள் அனைத்து வினாக்களுக்கும் விடையை விரைவில் புரிந்துக் கொண்டு படிக்க இயலும்.

இங்கு வினாக்கள் இயல் வாரியாக தொகுக்காமல் மொத்த வினாக்களின் அடிப்படையில் தொகுத்து வழங்கபட்டுள்ளது. எனவே மாணவர்கள் இதனை வழிகாட்டியாக பயன்படுத்திக் கொண்டாலும் சரி. இங்கு கொடுக்கப்பட்ட விடைகள் மிகவும் எளிமையாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மீத்திற , நடுநிலை, மெல்லக் கற்கும் மாணவர்கள் என அனைத்து தரப்பு மாணவர்களுக்கும் இது மிகுந்த பயன் அளிக்கும்.

மீத்திற மாணவர்கள் சற்று அதிக மதிப்பெண் பெற உங்கள் கையில் உள்ள தமிழ் புத்தகத்தில் மேலும் சில பதில்களை தேர்ந்தெடுத்துக் கொடுக்கவும். அல்லது தங்களின் தமிழாசிரியரிடம் இதற்கு மேலும் சில பதில்களை குறித்துத் தர நீங்கள் கேட்டு குறித்து, படித்து உங்களின் கற்றலை மேம்படுத்தி மதிப்பெண்களை உயர்வாக வைத்துக் கொள்ளவும்.

வினாக்கள் தொகுப்பு

மாணவர்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ள வினாக்கள் அடங்கிய தொகுப்பினை ஒரு தாளில் எழுதிக் கொண்டால் நீங்கள் பயிற்சி பெறுவதற்கு ஏதுவாக இருக்கும். ஒவ்வொரு முறை ஆசிரியர் வைக்கும் போதும் வினாக்கள் எழுத வேண்டிய அவசியம் இருக்காது. மாணவர்கள் இந்த சிறுவினாக்கள் அடங்கிய தொகுப்பினை ஒரு தாளில் எழுதிக் கொள்க. குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் அடிப்படையில் இங்கு வரிசையாக 27 வினாக்கள் தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. இவை யாவும் புத்தகத்தின் பின்புறம் கொடுக்கப்பட்டுள்ள வினாக்கள் மட்டுமே. மேலும் சில உள்ளார்ந்த வினாக்கள் எவையும் இங்கு சேர்க்கப்படவில்லை என்பதனை நினைவில் கொள்க.

குறைக்கப்பட்ட பாடத்திட்டம்

தமிழ்

ஒன்பதாம் வகுப்பு

சிறு வினாக்கள் - வினா வங்கி

1. திராவிட மொழிகளின் பிரிவுகள் யாவை ? அவற்றுள் உங்களுக்குத் தெரிந்த மொழிகளின் சிறப்பியல்புகளை விளக்குக

2. மூன்று என்னும் எண்ணுப்பெயர் பிற திராவிட மொழிகளில் எவ்வாறு இடம்பெற்றுள்ளது?

3. தமிழ்மொழி காலந்தோறும் தன்னை எவ்வாறு புதுப்பித்துக் கொள்கிறது?

4. தன்வினை, பிறவினை - எடுத்துக்காட்டுகளுடன் வேறுபடுத்திக் காட்டுக.

5. ‘புதுக்கோலம் புனைந்து தமிழ் வளர்ப்பாய்’  -- உங்கள் பங்கினைக் குறிப்பிடுக

6. நிலைத்த புகழைப் பெறுவதற்குக் குடப்புலவியனார் கூறும் வழிகள் யாவை?

7. அடுத்த தலைமுறைக்கும்  தண்ணீர் தேவை - அதற்கு நாம் செய்ய வேண்டியவற்றை எழுதுக.

8. வேளாண் உற்பத்தியின் பண்பாட்டு அடையாள நீட்சியை விளக்குக.

9. ஏறுதழுவுதல் திணைநிலை வாழ்வுடன் எவ்விதம் பிணைந்திருந்தது?

10. வியத்தகு அறிவியல் விரவிக் கிடக்கும் நிலையில் அகழாய்வின் தேவை குறித்த உங்களது கருத்துகளைத் தொகுத்துரைக்க.

11. உங்கள் ஊரில் நடைபெறுகின்ற விழா முன்னேற்பாடுகளை இந்திரவிழா

       ஏற்பாடுகளோடு ஒப்பிடுக.

  12. ‘என் சமகாலத் தோழர்களே’ கவிதையில் கவிஞர் விடுக்கும் வேன்டுகோள் யாது?

13. அறிவையும் உயிரினங்களையும் தொல்காப்பியர் எவ்வாறு தொடர்புபடுத்துகிறார்?

14 மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்வதில் செயற்கைக்கோளின் பங்கு யாது?

15. வல்லினம் இட்டும் நீகியும் எழுதுவதன் இன்றியமையாமையை எடுத்துக்காட்டுகளுடன் விளக்குக.

16. சங்ககாலப் பெண்பாற் புலவர்களின் பெயர்களை எழுதுக.

17. . சமைப்பது தாழ்வா? இன்பம்

      சமைக்கின்றார் சமையல் செய்வார்.

அ) இன்பம் சமைப்பவர் யார்?           ஆ) பாவேந்தரின் கூற்றுப்படி சமைப்பது தாழ்வா?

18. இன்றைய பெண்கல்வி என்னும் தலைப்பில் வில்லுப்பாட்டு வடிவில் பாடல் எழுதுக

19. மருத்துவர் முத்துலட்சுமியின் சாதனைகளைக் குறிப்பிடுக.

20. நீலாம்பிகை அம்மையாரது தமிழ்ப்பணியின் சிறப்பைக் குறித்து எழுதுக

21. இராவண காவியத்தில் இடம்பெற்ற இரண்டு உவமைகளை எடுத்துக்காட்டுக.

22. ஆண்டாளின் கனவுக் காட்சிகளை எழுதுக.

23. குறிஞ்சி நிலம் மணப்பதற்கான நிகழ்வுகளைக் குறிப்பிடுக.

24. குறிப்பு வரைக. – டோக்கியோ கேடட்ஸ்.

25. பனியிலும், மலையிலும் எல்லையைக் காக்கும் இந்திய வீரர்களின் பணியைப் பாராட்டி உங்கள் பள்ளிக் கையெழுத்து இதழுக்கு ஒரு துணுக்குச் செய்தி எழுதுக.

26. ஏமாங்கத நாட்டில் எவையெல்லாம் ஆயிரக்கணக்கில் இருப்பதாகத் 

       திருத்தக்கதேவர் பாடியுள்ளார்?

27. சிக்கனம் குறித்த பெரியாரின் கருத்துகளை இன்றைய நடைமுறையோடு தொடர்புபடுத்தி எழுதுக.

வினா - விடைகள்

மாணவர்கள் மேற்கண்ட வினாத்தொகுப்பினை ஒரு தாளில் எழுதிக் கொண்டப்பின் ஒர் ஏட்டில் இந்த வினாக்களுக்கான விடைகளை எழுதிக் கொள்ளவும்.  ஏன் PDF வடிவம் கொடுக்கப்படவில்லை என்றால் பல மாணவர்கள் அதனை நகல் எடுத்துக்கொள்கிறார்கள். இதனால் அவர்களுக்கு எழுதுவும் பழக்கம் முற்றிலும் கைவிட்டு விட்டார்கள். முன்னர் விழாக்காலங்களில் இருந்த வாழ்த்து மடல் செய்தி அனுப்பும் பழக்கம் வழக்கொழிந்து போனதற்கு இன்றைய முகநூல், புலனம், மற்றும் இன்னும் பிற சமூக வலைதளங்கள் தான். இதனால் மாணவர்களுக்கு  எழுதும் பழக்கம் குறைந்து விடுகிறது. நாளடைவில் எழுத்துகளே அடையாளம் தெரியாத வண்ணம் ஆகிவிடுகிறது. இன்று பல மாணவர்கள் எழுத்துப் பிழையுடன் எழுதுவதை ஆசிரியர்கள் பலரும் கூறுவதை நானும் கூறி இருக்கிறேன். இதன் காரணம் சரியான எழுத்துப் பயிற்சி இன்மை என்பதே. சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப் பழக்கம் என்பது போல தினமும் எழுத்துப் பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.  எழுத்துப் பயிற்சி மாணவர்களுக்கு வர வேண்டும் என்ற காரணத்திற்காக தான் PDF வடிவில் இந்த விடைகள் கொடுக்கப்படவில்லை.

வினா - விடைகள்

ஒன்பதாம் வகுப்பு - தமிழ்

சிறுவினா

குறைக்கப்பட்டப் பாடத்திட்டம்


1. திராவிட மொழிகளின் பிரிவுகள் யாவை ? அவற்றுள் உங்களுக்குத் தெரிந்த மொழிகளின் சிறப்பியல்புகளை விளக்குக

·              திராவிட மொழிக்குடும்பம், மொழிகள் பரவிய நில அடிப்படையில் தென் திராவிட மொழிகள், நடுத்திராவிட மொழிகள், வடதிராவிட  மொழிகள் என மூன்றாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

·              என்னுடைய மொழி தமிழ்.

·              தமிழ் மிகவும் தொன்மையானது, இளமையானது, சொல்வளமிக்கது, பொருள் வளமிக்கது, இலக்கண, இலக்கிய வளமிக்கது.

 

2. மூன்று என்னும் எண்ணுப்பெயர் பிற திராவிட மொழிகளில் எவ்வாறு இடம்பெற்றுள்ளது?


·              மூன்று               -  தமிழ்

·              மூணு                - மலையாளம்

·              மூடு                  -  தெலுங்கு

·              மூரு                  -  கன்னடம்

·              மூஜி                  -  துளு

 

3. தமிழ்மொழி காலந்தோறும் தன்னை எவ்வாறு புதுப்பித்துக் கொள்கிறது?

          தமிழ்மொழி மூலத்திராவிட மொழியின் பண்புகள் பலவற்றையும் பேணிப்பாதுகாத்து வருகிறது. அத்துடன் தனித்தன்மை மாறுபடாமல் காலந்தோறும் தன்னைப் புதுப்பித்துக் கொண்டு,  புதிதாக உருவாகும் ஒவ்வொரு சொல்லுக்கும் துறைக்கும் ஏற்பப் புதுச்சொற்களை உருவாக்கிக்கொள்கிறது.


4. தன்வினை, பிறவினை - எடுத்துக்காட்டுகளுடன் வேறுபடுத்திக் காட்டுக.

 

தன்வினை

பிறவினை

எழுவாய் ஒரு வினையைச் செய்வது

எழுவாய் ஒரு வினையைச் செய்ய வைப்பது

சான்று : அவன் திருந்தினான்

சான்று : அவன் திருந்தச் செய்தான்.   

5. ‘புதுக்கோலம் புனைந்து தமிழ் வளர்ப்பாய்’  -- உங்கள் பங்கினைக் குறிப்பிடுக

·        தமிழைப் பிழையின்றிப் பேசவும் எழுதவும் செய்வேன்.

·        முடிந்தவரை பிறமொழிச் சொற்கள் கலவாது பேசுவேன்.

·        புதிய இலக்கியங்கள் படைக்க முயல்வேன்.

·        பிறமொழி நூல்களைத் தமிழில் மொழிபெயர்ப்பேன்.

6. நிலைத்த புகழைப் பெறுவதற்குக் குடப்புலவியனார் கூறும் வழிகள் யாவை ?

            நிலம் குழிந்த இடமெங்கும் நீர்நிலைகளைப் பெருகச் செய்ய வேண்டும். அவ்வாறு செய்பவர் மூவகை இன்பத்தையும் நிலைத்த புகழையும் பெறுவர்.

 

7. அடுத்த தலைமுறைக்கும்  தண்ணீர் தேவை - அதற்கு நாம் செய்ய வேண்டியவற்றை எழுதுக.


·  மரங்களை நட்டு மழைவளம் பெருக்க வேண்டும்

·  மழைநீரைச் சேமிக்க வேண்டும்.

·  தண்ணீரைச் சிக்கனமாகச் செலவு செய்ய வேண்டும்.

·  நீர்நிலைகளைப் பாதுகாக்க வேண்டும்.

8. வேளாண் உற்பத்தியின் பண்பாட்டு அடையாள நீட்சியை விளக்குக.

            ஏறுதழுவுதல் முல்லை நிலத்து மக்களின் அடையாளத்தோடும் மருத நிலத்து வேளாண் குடிகளின் தொழில் உற்பத்தியோடும் பாலை நிலத்து மக்களின் தேவைக்கான போக்குவரத்துத் தொழிலோடும் பிணைந்தது. இதுவே வேளாண் உற்பத்தியின் பண்பாட்டு அடையாளமாக நீட்சி அடைந்தது.  ஏரில் பூட்டி உழவு செய்ய உதவும் காளைகளியப் போற்றி மகிழும் பண்பாட்டு விழாவாக மாட்டுப் பொங்கல் உருவானது.

9. ஏறுதழுவுதல் திணைநிலை வாழ்வுடன் எவ்விதம் பிணைந்திருந்தது?

            ஏறுதழுவுதல் முல்லை நிலத்து மக்களின் அடையாளத்தோடும் மருத நிலத்து வேளாண் குடிகளின் தொழில் உற்பத்தியோடும் பாலை நிலத்து மக்களின் தேவைக்கான போக்குவரத்துத் தொழிலோடும் பிணைந்தது. இதுவே வேளாண் உற்பத்தியின் பண்பாட்டு அடையாளமாக நீட்சி அடைந்தது. இதன் தொடர்ச்சியாக, வேளாண் குடிகளின் வாழ்வோடும் உழைப்போடும் பிணைந்துகிடந்த மாடுகளுடன் அவர்கள் விளையாடி மகிழும் மரபாக உருக்கொண்டதே ஏறு தழுவுதலாகும்.

10. வியத்தகு அறிவியல் விரவிக் கிடக்கும் நிலையில் அகழாய்வின் தேவை குறித்த உங்களது கருத்துகளைத் தொகுத்துரைக்க.

·        இன்றைய உலகம் அறிவியலில் முன்னேறிக் கொண்டிருக்கிறது.

·        ஆயினும் நாம் பழைமையை மறந்துவிடக் கூடாது.

·        முன்னோர்களின் பண்பாட்டையும் நாகரிகத்தையும் அறிந்துகொள்ளவும்.

11 11. உங்கள் ஊரில் நடைபெறுகின்ற விழா முன்னேற்பாடுகளை இந்திரவிழாஏற்பாடுகளோடு ஒப்பிடுக

யானையின் மீது அமர்ந்து விழா பற்றி முரசறைந்து அறிவிப்பர்.

கைப்பிரதிகள், சுவரொட்டிகள், ஒலிப்பெருக்கி ஆகியவை  மூலம் அறிவிப்பர்.

28 நாள்கள் நடைபெறும்

ஒருவாரம் நடைபெறும்.

சமயவாதிகள் வழக்காடுமன்றம் அமைப்பர்

ஒரு சமயத்திற்கு உரியதாகக் கொண்டாடப்படும்.

தெருவெல்லாம் புதுமணல் பரப்புவர்

மணல் மாற்றும் பழக்கம் இல்லை.

ஐம்பெருங்குழு, எண்பேராயம் ஆகியோர் விழாவைத் திட்டமிடுவர்

ஊர்ப்பெரியவர்கள் விழாவைத் திட்டமிடுவர்.

தெருக்கள் முத்து மாலைகளால் ஒப்பனை செய்யப்படும்.

தெருக்கள் மின்விளக்குகளால் ஒப்பனை செய்யப்படும்.


12. ‘என் சமகாலத் தோழர்களே’ கவிதையில் கவிஞர் விடுக்கும் வேன்டுகோள் யாது?


·  அறிவியல் என்ற வாகனத்தில் ஆளும் தமிழை நிறுத்த வேண்டும்.

·  கரிகாலன் தொடங்கி நம் முன்னோருடைய பெருமையையெல்லாம் கணினியில் பதிவேற்ற வேண்டும்.

·  ஏவும் திசையில் அம்பைப் போல இருக்கும் தமிழினத்தை மாற்ற வேண்டும்.

·  ஏவுகணையில் தமிழை எழுதி எல்லாக் கோளுக்கும் அனுப்ப வேண்டும்.


13. அறிவையும் உயிரினங்களையும் தொல்காப்பியர் எவ்வாறு தொடர்புபடுத்துகிறார்?


அறிவுநிலை

அறியும் ஆற்றல்

உரையாசிரியர்களின் எடுத்துக்காட்டு

ஓரறிவு

தொடு உணர்வு

புல், மரம்

ஈரறிவு

தொடு உணர்வு + சுவைத்தல்

சிப்பி, நத்தை

மூவறிவு

தொடு உணர்வு + சுவைத்தல் + நுகர்தல்

கரையான், எறும்பு

நான்கறிவு

தொடு உணர்வு + சுவைத்தல் + நுகர்தல் + காணல்

நண்டு, தும்பி

    ஐந்தறிவு

தொடு உணர்வு + சுவைத்தல் + நுகர்தல் + காணல் + கேட்டல்

பறவை, விலங்கு

ஆறறிவு

தொடு உணர்வு + சுவைத்தல் + நுகர்தல் + காணல்+ கேட்டல் + பகுத்தறிதல்

மனிதன்

 

14. மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்வதில் செயற்கைக்கோளின் பங்கு யாது?

·        இப்போது நாம் திறன்பேசிகளைப் பயன்படுத்துகிறோம்.

·        தானியக்கப் பண இயந்திரம், அட்டை பயன்படுத்தும் இயந்திரம் இதற்கெல்லாம் செயற்கைக்கோள் பயன்படுகிறது.

·        மக்கள் பயன்படுத்தும் அனைத்து இணையச் செயல்களுக்கும் செயற்கைக்கோள் பயன்படுகிறது.

15. வல்லினம் இட்டும் நீகியும் எழுதுவதன் இன்றியமையாமையை எடுத்துக்காட்டுகளுடன் விளக்குக.

·        வல்லினம் இட்டும் நீக்கியும் எழுதுவது சொல்லின் பொருளையே மாற்றிவிடக் கூடும்.

·        சான்று : வேலை கொடுத்தான்          -  பணி கொடுத்தான் என்பது                                                                                 பொருள் 

            வேலைக் கொடுத்தான்        -   வேல் என்கிற ஆயுதத்தைக்                                                                                 கொடுத்தான் என்பது                                                                பொருள்.


 16. சங்ககாலப் பெண்பாற் புலவர்களின் பெயர்களை எழுதுக.

·        ஔவையார், ஒக்கூர் மாசாத்தியார், வெண்ணிக் குயத்தியார், பொன்முடியார், நக்கன்னையார், காக்கைப்பாடினியார், வெள்ளிவீதியார், காவற்பெண்டு, நப்பசலையார் முதலியோர் சங்ககாலப் பெண்பாற்புலவர்களுள் சிலராவர்.

17. சமைப்பது தாழ்வா? இன்பம்

      சமைக்கின்றார் சமையல் செய்வார்.

அ) இன்பம் சமைப்பவர் யார்?     ஆ) பாவேந்தரின் கூற்றுப்படி சமைப்பது தாழ்வா?

·        சமையல் செய்பவர் இன்பம் சமைப்பவர் ஆவார்.

·        பாவேந்தரின் கூற்றுப்படி சமைப்பது தாழ்வன்று.

18. இன்றைய பெண்கல்வி என்னும் தலைப்பில் வில்லுப்பாட்டு வடிவில் பாடல் எழுதுக


          பெண்கல்வி வரலாற்றில் பொற்காலம் என்றாலே

          எக்காலம்?  அது எக்காலம்.?

          அது இக்காலம்! ஆமா இக்காலம்!

          எல்லாத் துறைகளிலும் ஏற்றமாகப் பெண்கள்

          எழுந்துநிற்கும் பொற்காலம் அது எக்காலம்? - அது எக்காலம்?

          கப்பல் துறை முதலாய் கல்வித்துறை வரையில்

          பெண்கள் தலைநிமிர்ந்த இக்காலம்! ஆமா, இக்காலம்!

 

19. மருத்துவர் முத்துலட்சுமியின் சாதனைகளைக் குறிப்பிடுக.


·              இந்தியப் பெண்கள் சங்கத்தின் முதல் தலைவர்.

·              சென்னை மாநகராட்சியின் முதல் துணை மேயர்.

·              சட்ட மேலவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்மணி.

·              தேவதாசிமுறை ஒழிப்புச் சட்டம், இருதார தடைச்சட்டம், பெண்களுக்குச் சொத்துரிமை வழங்கும் சட்டம், குழந்தைத் திருமணத் தடைச்சட்டம் ஆகியவை நிறைவேறக் காரணமாக இருந்தவர்.

·              1930 இல் அவ்விய இல்லம், 1952இல் புற்றுநோய் மருத்துவமனை ஆகியவற்றை நிறுவியவர்.

 

20. நீலாம்பிகை அம்மையாரது தமிழ்ப்பணியின் சிறப்பைக் குறித்து எழுதுக


·              தனித்தமிழ்ப் பற்றுடையவர்.

·              இவரது தனித்தமிழ்க் கட்டுரை, வடசொல்-தமிழ் அகரவரிசை, முப்பெண்மணிகள் வரலாறு, பட்டினத்தார் பாராட்டிய மூவர் ஆகிய நூல்கள் தனித்தமிழில் எழுத விரும்புவோர்க்கு மிகவும் பயனுள்ளதாக விளங்குகின்றன.

 

21. இராவண காவியத்தில் இடம்பெற்ற இரண்டு உவமைகளை எடுத்துக்காட்டுக.


·              முல்லை நில மக்கள் முதிரை, சாமை, குதிரைவாலி, நெல் முதலியவற்றை அறுத்துக் கதிரடித்துக் களத்தில்  மலைபோல் குவித்து வைத்துள்ளனர்.

·              பாலைநிலத்திலுள்ள பாலக்காய் எருதின் கொம்புபோல் இருப்பதாக உவமிக்கிறார்.

 

22. ஆண்டாளின் கனவுக் காட்சிகளை எழுதுக.


·              ஆடும் பெண்கள், கைகளில் விளக்கையும் கலசத்தையும் ஏந்தியவாறு வந்து எதிர்கொண்டு அழைக்கிறார்கள். வடமதுரையை ஆளும் மன்னன் கண்ணன் பாதுகைகளை அணிந்துகொண்டு பூமி அதிர நடந்து வருமாறு கனவு கண்டேன்.

·        மத்தளம் முதலான இசைக்கருவிகள் முழங்குகின்றன. வரிகளையுடைய சங்குகளை நின்று ஊதுகின்றனர்.  மது என்ற அரக்கனை அழித்தவனான கண்ணன் முத்துகளையுடைய மாலைகள் தொங்கவிடப்பட்ட பந்தலின்கீழ், என்னைத் திருமணம் செய்துகொள்ளுமாறு கனவு கண்டேன்.

 

 23. குறிஞ்சி நிலம் மணப்பதற்கான நிகழ்வுகளைக் குறிப்பிடுக.


·        தீயில் இட்ட சந்தனமரக் குச்சிகளின் நறுமணமும்

·        உலையிலிட்ட மலை நெல்லரிசிச் சோற்றின் நறுமணமும்

·        காந்தள் மலரின் ஆழ்ந்த மணமும்  எங்கும் பரவித் தோய்ந்து கிடப்பதால் குறிஞ்சி நிலம் மணக்கிறது.

 

24. குறிப்பு வரைக. – டோக்கியோ கேடட்ஸ்.

·        இந்திய தேசிய இராணுவத்திலிருந்து 45 வீரர்கள் நேதாஜியால் தேர்வு செய்யப்பட்டு, வான்படைத் தாக்குதலுக்கான சிறப்புப் பயிற்சி பெறுவதற்காக, ஜப்பானில் உள்ள இம்பீரியல் மிலிட்டரி அகடமிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அந்த 45 பேர் கொண்ட பயிற்சிப் பிரிவின் பெயர்தான் டோக்கியோ கேடட்ஸ்.

·        அவர்களுக்கு மிகக் கடுமையான பயிற்சிகள் வழங்கப்பட்டன.

25. பனியிலும், மலையிலும் எல்லையைக் காக்கும் இந்திய வீரர்களின் பணியைப் பாராட்டி உங்கள் பள்ளிக் கையெழுத்து இதழுக்கு ஒரு துணுக்குச் செய்தி எழுதுக.

·        நாட்டைக் காப்பதற்காக வாட்டம் இல்லாமல் உழைப்பவர்கள் நம்முடைய இராணுவ வீரர்கள். நாம் நிம்மதியாய் உறங்குவதற்காகத் தங்கள்  உறக்கம் தொலைத்தவர்கள். நம் குடும்பத்தியக் காக்க தங்கள் குடும்பத்தையும் மறந்தவர்கள். எத்தனை வீரர்கள் மண்ணில் புதைந்தனர் நம்மைக் காக்க. அவர்களின் தியாகங்களை நாம் போற்றுவோம்.

26.ஏமாங்கத நாட்டில் எவையெல்லாம் ஆயிரக்கணக்கில் இருப்பதாகத் திருத்தக்கதேவர் பாடியுள்ளார்?

·        உணவு வகைகள் ஆயிரம். அறச்சாலைகள் ஆயிரம்

·        மகளிர் ஒப்பனை செய்துகொள்ள மணிமாடங்கள் ஆயிரம்

·        கம்மியர் ஆயிரம். அதனால் நிகழும் திருமணங்களும் ஆயிரம்

·        தவிர்தலின்றி காவல்செய்யும் பாதுகாவலரும் ஆயிரம்

 

27. சிக்கனம் குறித்த பெரியாரின் கருத்துகளை இன்றைய நடைமுறையோடு தொடர்புபடுத்தி எழுதுக.


·        விழாக்களாலும் சடங்குகளாலும் மூடப்பழக்கம் வலர்வதோடு, வீண்செலவும் ஏற்படுவதால் தேவையற்ற சடங்குகளையும் விழாக்களையும் தவிர்க்க வேண்டும் என்று பெரியார் கூறினார்.

·        இன்றைய சூழலில் திருமண விழாக்களும், பிறந்த நாள்களும் மிகுந்த ஆடம்பரமாகக் கொண்டாடப்படுகின்றன. ப;லர் கடன் வாங்கியும் ஆடம்பரமாக வாழ நினைத்து சிக்கல்களைச் சந்திக்கின்றனர்.

·        இந்நிலையில் பெரியார் கூறியபடி சிக்கனமாக வாழ்வது அவசியமாகிறது.

நீங்கள் 20 விநாடிகள் காத்திருக்கவும் .

காத்திருப்புக்கு நன்றி

Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post