இளந்தமிழ்
உயர் மதிப்பெண் வழிகாட்டி 2026 - 2027
வணக்கம்...........
அன்பார்ந்த ஆசிரியப் பெருமக்களுக்கும் அன்பு மாணவச் செல்வங்களுக்கும் அன்பான வணக்கம். இளந்தமிழ் சிறப்பு வழிகாட்டியானது தமிழ்விதை மற்றும் கல்விவிதைகள் வலைதளங்கள் தயாரித்து வழங்கியது.
2026-2027 ஆம் கல்வி ஆண்டிற்கான புதிய பாடப்புத்தகத்தின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டது. இந்த வழிகாட்டியில் இணைய கற்றலுக்குத் தேவையான விரைவுத் துலங்கல் குறியீடுகளும் வழங்கப்பட்டுள்ளது.
இந்த வழிகாட்டி சராசரி மற்றும் மீத்திற மாணவர்களுக்கு அதிக மதிப்பெண்களைப் பெற்றுத் தரும் என உறுதியாக கூறுகிறோம். மீத்திற மாணவர்களுக்கு நெடுவினாக்கள் மற்றும் பொதுக்கட்டுரைகள் இறுதியாக வழங்கப்பட்டுள்ளது.
இளந்தமிழ் வழிகாட்டி தமிழ்ப் பாடப்புத்தகத்தில் உள்ள மதிப்பீடு வினாக்கள் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் நன்றாக பயிற்சி பெற்று இந்த ஆண்டு பத்தாம் வகுப்பில் அதிகபட்ச மதிப்பெண் பெற்று மேல்நிலை வகுப்பினைத் தொடர வேண்டுமாய் அன்புடன் வாழ்த்துகிறோம்.
“சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப் பழக்கம்” என்ற வாக்கிற்கு இணங்க நீங்கள் நாள் தோறும் படித்தால் நிச்சயம் உங்களால் சாதிக்க இயலும்.
உங்களால் முடியாது என்றால் வேறு எவராலும் முடியாது. எனவே பயிற்சியும் முயற்சியும் ஒரு சேர இணைந்தால் வெற்றி என்பது மகுடமாய் வரும்.
இவண்,
தமிழ்விதை மற்றும் கல்விவிதைகள்
8072426391
8667426866
