ஏழாம் வகுப்பு – தமிழ் திறன் – 2025
வகுப்புநிலைத் திறன்கள் – மதிப்பீடு
நானே செய்வேன் – 2
சரியான விடையைத் தேர்ந்தெடுக்க. (10 × 1 = 10)
- தொடரை இணைப்பதற்குப் பயன்படும் இணைப்பு சொல் எது?
முகிலனுக்கு நீச்சல் தெரியும். ___________ போட்டியில் கலந்து கொண்டான்
அ) ஆயினும் ஆ) ஆனாலும் இ) அதனால் ஈ) ஏனெனில் - பின் வரும் தொடருடன் தொடர்புடைய கருத்தைத் தெரிவு செய்க.
“ஆலும் வேலும் பல்லுக்குறுதி”
அ) தூய்மை ஆ) வலிமை இ) நட்பு ஈ) ஒழுக்கம் - உரைப்பகுதியிலுள்ள சொல் தொகுப்பைக் கண்டறிக.
விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற கபிலனை நண்பர்களும் உறவினர்களும் பாராட்டினர். பரிசுப் பொருட்கள் வழங்கி மகிழ்வித்தனர். கபிலன் அவர்களுக்கு நன்றி கூறினான்.
அ) போட்டி, வெற்றி, வண்ணம், பல்லாங்குழி
ஆ) நன்றி, நகுலன், நண்பர், மகிழ்ச்சி
இ) நண்பர், உறவினர், பாராட்டு, மகிழ்வித்தல்
ஈ) விளையாட்டு, வெற்றி, முயற்சி, ஓவியம் - சரியான நிறுத்தக்குறிகள் உள்ள தொடரைக் கண்டறிக.
அ) அம்மா, “கபிலா! ஏன் அங்கேயே நிற்கிறாய்? உள்ளே வா!” என்றார்.
ஆ) அம்மா! கபிலா? ஏன் ‘அங்கேயே நிற்கிறாய்’ உள்ளே வா என்றார்.
இ) அம்மா! கபிலா! ஏன்? “அங்கேயே நிற்கிறாய்“ உள்ளே வா! என்றார்.
ஈ) அம்மா! கபிலா, ஏன் அங்கேயே நிற்கிறாய்? உள்ளே வா? என்றார். - “தண்ணீர் தேவை” கட்டுரைத் தலைப்பிற்கான பழமொழியினைத் தெரிவு செய்க.
அ) ஆறில்லா ஊருக்கு அழகு பாழ்
ஆ) சிறு துளி பெருவெள்ளம்
இ) ஆற்றில் போட்டாலும் அளந்து போடு
ஈ) காற்றுள்ள போதே தூற்றிக் கொள் - யாழினியும் குழலினியும் பேச்சுப் போட்டியில் பெயர் கொடுத்துள்ளனர். அதற்காகப் பல நூல்களைத் தேடியெடுத்துக் கருத்துகளைத் தொகுக்க வேண்டும். இருவரும் செல்ல வேண்டிய இடம் எது?
அ) பூங்கா ஆ) நூலகம் இ) கடற்கரை ஈ) மைதானம் - பெயரில் கல் இருக்கும்; உணவில் கல் இருக்காது; இது நான்கெழுத்து சொல்:
அ) வெண்பொங்கல் ஆ) செங்கல் இ) சர்க்கரைப் பொங்கல் ஈ) பொங்கல் - அண்ணனும் அப்பவும் காலையில் வெகுதூரம் நடைப்பயிற்சி சென்றனர்.
“வெகுதூரம்” சொல் உணர்த்தும் பொருள்:
அ) நீண்ட கயிறு ஆ) நீண்ட தூரம் இ) நீண்ட நேரம் ஈ) நீண்ட பயணம் - மீன்கள் தப்பிக்க வேண்டிய வழி:
ஈ) பாசி படர்ந்த புதரில் மறைந்து செல்லுதல் - குறும்பனோடு விலங்குகள் சென்றதற்குக் காரணம்:
இ) உணவு கிடைத்தல்
விடைகள் அட்டவணை
| எண் | வினா | சரியான விடை |
|---|---|---|
| 1 | இணைப்பு சொல் | இ) அதனால் |
| 2 | ஆலும் வேலும் பல்லுக்குறுதி | ஆ) வலிமை |
| 3 | உரைப்பகுதி சொல் தொகுப்பு | இ) நண்பர், உறவினர், பாராட்டு, மகிழ்வித்தல் |
| 4 | சரியான நிறுத்தக்குறி | அ) அம்மா, “கபிலா! ஏன் அங்கேயே நிற்கிறாய்? உள்ளே வா!” என்றார். |
| 5 | தண்ணீர் தேவை – பழமொழி | ஆ) சிறு துளி பெருவெள்ளம் |
| 6 | யாழினி – குழலினி செல்லும் இடம் | ஆ) நூலகம் |
| 7 | பெயரில் கல் இருக்கும் | இ) சர்க்கரைப் பொங்கல் |
| 8 | வெகுதூரம் – பொருள் | ஆ) நீண்ட தூரம் |
| 9 | மீன்கள் தப்பிக்க வேண்டிய வழி | ஈ) பாசி படர்ந்த புதரில் மறைந்து செல்லுதல் |
| 10 | குறும்பனோடு விலங்குகள் சென்றதற்குக் காரணம் | இ) உணவு கிடைத்தல் |
