10TH-TAMIL-MODEL PUBLIC EXAM AND HALF YEARLY QUESTION-3-2025

 


பத்தாம் வகுப்பு


மாதிரி அரையாண்டு மற்றும் பொதுத் தேர்வு-3- 2025


 மொழிப்பாடம் – தமிழ்

நேரம் : 15 நிமிடம் + 3.00 மணி                                                                         மதிப்பெண் : 100

அறிவுரைகள் :

1) அனைத்து வினாக்களும் சரியாகப் பதிவாகி உள்ளனவா என்பதனைச் சரிபார்த்துக் கொள்ளவும். அச்சுப்பதிவில் குறையிருப்பின் அறைக்  கண்காணிப்பாளரிடம்  உடனடியாகத் தெரிவிக்கவும்.

2) நீலம் அல்லது கருப்பு மையினை மட்டுமே எழுதுவதற்கும்,அடிக்கோடிடுவதற்கும்    

பயன்படுத்தவும்.

குறிப்பு : I ) இவ்வினாத்தாள் ஐந்து பகுதிகளைக் கொண்டது.

              ii) விடைகள் தெளிவாகவும் குறித்த அளவினதாகவும் சொந்த நடையிலும் அமைதல்

                வேண்டும்.

பகுதி – I ( மதிப்பெண்கள் : 15 )             

           i) அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்

ii) கொடுக்கப்பட்ட நான்கு விடைகளில் சரியான விடையினைத் தேர்ந்தெடுத்துக்

   குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதவும்.

அ) சரியான விடையைத் தேர்வு செய்க.                                                                            15×1=15

1. காசிக்காண்டம் என்பது ______

) காசி நகரத்தின் வரலாற்றைப் பாடும் நூல்) காசி நகரத்தைக் குறிக்கும் மறுபெயர்

) காசி நகரத்தின் பெருமையைப் பாடும் நூல் ) காசி நகரத்திற்கு வழிப்படுத்தும் நூல்

2. “ மையோமர கதமோமறி கடலோ மழைமுகிலோ “ இப்பாடல் அடியில் குறிப்பிடப்படாத நிறத்தைக் கண்டறிக.

அ) கருமை    ஆ) பச்சை          இ) பழுப்பு               ஈ) நீலம்

3. ‘ மாலவன் குன்றம் போனாலென்ன? வேலவன் குன்றமாவது எங்களுக்கு வேண்டும் ‘ – மாலவன் குன்றமும் வேலவன் குன்றமும் குறிப்பவை முறையே –

அ) திருப்பதியும்,திருத்தணியும்              ஆ) திருத்தணியும்,திருப்பதியும்

இ) திருப்பதியும் திருச்செந்தூரும்         ஈ) திருப்பரங்குன்றமும் பழனியும்

 4. காமம் வெகுளி மயக்கம் இவைமூன்றன்

    நாமம் கெடக்கெடும் நோய் - இக்குறளில் “ வெகுளி “ என்பதன் பொருள்_____

அ) ஆசை              ஆ) சினம்              இ) அறியாமை       ஈ) பெயர்

5. கேட்டவர் மகிழப் பாடிய பாடல் இதுதொடரில் இடம் பெற்றுள்ள  தொழிற்பெயரும், வினையாலணையும் பெயரும் முறையே __________

) பாடிய;கேட்டவர்                    ) பாடல்;பாடிய    

) கேட்டவர்;பாடிய                    ) பாடல்;கேட்டவர்

6. படர்க்கைப் பெயரைக் குறிப்பது எது?

அ) யாம்                  ஆ) நீவிர்               இ) அவர்      ஈ) நாம்

7. ‘ சிலம்புச் செல்வர் ‘ என்று போற்றப்படுபவர்________

          அ) இளங்கோவடிகள்       ஆ) பெருஞ்சித்திரனார்   

இ) ம.பொ.சிவஞானம்       ஈ)  சரபையர்

8. கானடை என்பதைப் பிரித்தால் வரும் பொருந்தாதத் தொடர் எது?

அ) கான் அடை – காட்டைச் சேர்         ஆ) கான்  உடை – காட்டின் உடை          

இ) கான் நடை – காட்டுக்கு நடத்தல்    ஈ) கால் நடை – காலால் நடத்தல்

9. பரிபாடல் அடியில் விசும்பில் இசையில் ஆகிய சொற்கள் குறிப்பவை எவை?

அ) வானத்தையும் பாட்டையும்    ஆ) வான்வெளியில் , பேரொலியில்

இ) வானத்தில், பூமியையும்         ஈ) வானத்தையும் பேரொலியையும்

10. தொடரைப் படித்து விடையைத் தேர்ந்தெடுக்க.

    கல்சிலை ஆகுமெனில், நெல் ____________ ஆகும்.

அ) சோறு     ஆ) கற்றல்    இ) எழுத்து           ஈ) கரு

11. பூக்கையைக் குவித்துப் பூவே புரிவோடு காக்க என்று ___,___ வேண்டினார்.

) கருணையன் எலிசபெத்துக்காக     ) எலிசபெத் தமக்காக  

) கருணையன் பூக்களுக்காக          ) எலிசபெத் பூமிக்காக

பாடலைப் படித்து வினாக்களுக்கு(12,13,14,15) விடையளிக்க:-

செந்தீச் சுடரிய ஊழியும்; பனியொடு

தண்பெயல் தலைஇய ஊழியும்; அவையிற்று

உள்முறை வெள்ளம் மூழ்கி ஆர்தருபு

மீண்டும் பீடு உயர்பு ஈண்டி, அவற்றிற்கும்

உள்ளீடு ஆகிய இருநிலத்து ஊழியும்

1) இப்பாடலில் இடம் பெற்றுள்ள ‘ தண்பெயல்‘ என்ற சொல்லின் பொருள்

அ. கோடை            ஆ. பூமி        இ. குளிர்ந்த மழை           ஈ. வானம்

2). செந்தீ  - இலக்கணக் குறிப்புத் தருக

அ. பண்புத் தொகை          , வினைத் தொகை    

இ. உவமைத் தொகை      ஈ. உம்மைத் தொகை

3). இப்பாடலை  இயற்றியவர்

அ.நப்பூதனார்          ஆ. குமரகுருபரர்   இ. அதிவீர ராம பாண்டியர் ஈ கீரந்தையார்

4). இப்பாடல் இடம் பெற்ற நூல்  ___

அ. கம்பராமாயணம்    ஆ. முல்லைப்பாட்டு         இ. பரிபாடல்         ஈ. சிலப்பதிகாரம்

பகுதி – II ( மதிப்பெண்கள் : 18 ) பிரிவு – 1

எவையேனும் நான்கு வினாக்களுக்கு மட்டும் குறுகிய விடையளிக்க.              4×2=8

(21 ஆவது வினாவிற்கு கட்டாயமாக விடையளிக்க வேண்டும்.)

16. விடைக்கேற்ற வினா அமைக்க.

அ.  96 வகை சிற்றிலக்கியங்களில் ஒன்று பிள்ளைத்தமிழ்.

ஆ.’ கவியரங்குகளே தமக்கு இளைப்பாறும் இன்னிழல் சோலைகளாயின!” என்பார் கலைஞர்.

17.  வறுமையின் காரணமாக உதவி கேட்டு வருபவரின் தன்மானத்தை எள்ளி நகையாடுவது குறித்துக் குறளின் கருத்து என்ன?

18. கொள்வோர் கொள்க; குரைப்போர் குரைக்க

    உள்வாய் வார்த்தை உடம்பு தொடாது – பாடல் அடிகளில் உள்ள மோனை, எதுகைச் சொற்களைக் கண்டறிந்து எழுதுக

19. சங்க காலத்தில் அரசனின் கடமையாகச் சொல்லப்பட்டன எவை?

20. விருந்தோம்பல் குறித்து நற்றிணை கூறுவது யாது?

21.  தரும் – என முடியும் குறளை எழுதுக.

பிரிவு – 2

எவையேனும் ஐந்து வினாக்களுக்கு மட்டும் விடையளிக்கவும்.                                       5×2=10

22. தொழிற்பெயர்க்கும் வினையாலணையும் பெயருக்கும் இடையே வேறுபாடு இரண்டினைக் கூறுக

23. வருகின்ற கோடை விடுமுறையில் காற்றாலை மின் உற்பத்தியை நேரில் காண்பதற்கு ஆரல்வாய் மொழிக்குச் செல்கிறேன் – இத்தொடர் கால வழுவமைதிக்கு எடுத்துக்காட்டாக அமைவது எவ்வாறு?

24. பகுபத உறுப்பிலக்கணம் தருக : கொண்ட

25. தொடரை அடைப்புக்குறிக்குள் குறிப்பிட்டுள்ளவாறு மாற்றுக.

          காற்று மாசுபாட்டைக் குறைக்க குப்பை மேலாண்மையை மேற்கொண்டு பொதுப்போக்குவரத்துக்கு முன்னுரிமை தந்து மின்னாற்றலால் இயங்கும் ஊர்திகளைப் பயன்படுத்த வேண்டும். ( தனிச்சொற்றொடராக மாற்றுக )

26. இரு சொற்களையும் ஒரே தொடரில் அமைத்து எழுதுக.

அ) சிலை – சீலை            ஆ) விடு - வீடு

27. அகராதியில் கண்டு பொருள் எழுதுக.

          அ) கட்புள்              ஆ) செவ்வை

குறிப்பு :- செவி மாற்றுத் திறனாளர்களுக்கான மாற்று வினா

தொடரில் விடுபட்ட வண்ணங்களை உங்களின் எண்ணங்களால் நிரப்புக.

          அ) ________ மனம் உள்ளவரை அப்பாவி என்கிறோம்.

          ஆ) வெயில் அலையாதே; உடல் __________

28. கீழ்வரும் தொடர்களில் பொருந்தாத முதல், கருபொருளைத் திருத்தி எழுதுக.

உழவர்கள் மலையில் உழுதனர்

முல்லைப் பூச் செடியைப் பார்த்தவாறே பரதவர் கடலுக்குச் சென்றனர்.

பகுதி – III ( மதிப்பெண்கள் -18 )

பிரிவு – I

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க:-                                    2×3=6

29. ‘ தனித்து உண்ணாமை ‘ என்பது தமிழரின் விருந்தோம்பல் பண்பின் அடிப்படையாக அமைந்தது. இப்பண்பு இக்காலத்தில் அடைந்துள்ள மாற்றங்களைப் பட்டியலிடுக.

30. உரைப் பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடை தருக.

         கொடையின் சிறப்பால் வள்ளல் எழுவர் போற்றப்படுவது, பழந்தமிழர் கொடை மாட்சியைப் புலப்படுத்துகிறது. எழுவரின் கொடைப் பெருமை சிறுபாணாற்றுப்படையிலும் பெருஞ்சித்திரனார் பாடலிலும் பதிவு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. ஆற்றுப்படை இலக்கியங்கள், கொடை இலக்கியங்களாகவே உள்ளன. பதிற்றுப்பத்து சேர அரசர்களின் கொடைப் பதிவாகவே உள்ளது. புறநானூற்றின் கொடைப்பதிவும் குறிப்பிடத்தக்கது.

          அ) கொடை இலக்கியங்களாக உள்ள இலக்கியங்கள் எவை?

          ஆ) சேர அரசர்களின் கொடைப் பதிவுகளைக் கூறும் நூல் எது?

          இ) எழுவரின் கொடைப் பெருமையைக் கூறும் நூல்கள் யாவை?

31. உயிராக நான், பல பெயர்களில் நான், நான்கு திசைகளிலும் நான், இலக்கியத்தில் நான், முந்நீர் நாவாய் ஓட்டியாக நான்….. முதலிய தலைப்புகளில் காற்று தன்னைப் பற்றி பேசுகிறது.இவ்வாறு ‘ நீர் ‘ தன்னைப் பற்றிப் பேசினால்….. உங்களுடைய கற்பனையில் தலைப்புகளை எழுதுக.

பிரிவு – II

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் சுருக்கமாக விடையளிக்கவும்.                     2×3=6

              ( 34 ஆவது வினாவிற்கு கட்டாயம் விடையளிக்க வேண்டும்.)

32. மன்னன் இடைக்காடனார் என்ற புலவனுக்குச் சிறப்புச் செய்தது ஏன்? விளக்கம் தருக.

33. சேர, சோழ, பாண்டிய நாட்டு வளங்களை முத்தொள்ளாயிரம் வழி விளக்குக.

34. அ) “ மாற்றம்  “ எனத் தொடங்கும்  காலக்கணிதம் பாடலை  எழுதுக. (அல்லது )

      ஆ) “ தண்டலை ” எனத் தொடங்கும் கம்பராமாயணம் பாடலை எழுதுக.

பிரிவு -III

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு விடையளிக்க:-                                                  2×3=6

35.கீழ்க்காணும் பத்தியில் உள்ள தொடர் வகைகளை எடுத்து எழுதுக.
          மாடியிலிருந்து இறங்கினார் முகமது. அவர் பாடகர். பாடல்களைப் பாடுவதும் கேட்பதும் அவருக்குப் பொழுதுபோக்கு. அவரது அறையில் கேட்ட பாடல்களையும் கேட்காத பாடல்களையும் கொண்ட குறுந்தகடுகளை அடுக்கு அடுக்காக வைத்திருப்பார்.

36. ஆசிரியப்பாவின் பொது இலக்கணத்தை எழுதுக.

37. ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்

      தாழா துஞற்று பவர்  - இக்குறளை அலகிட்டு வாய்பாடு தருக.

                                                        பகுதி -IV ( மதிப்பெண்கள் : 25)

அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்க.                                                                5×5=25

38. அ) முயற்சியின் முக்கியத்துவத்தை “ ஆள்வினை உடைமை “ என்னும் அதிகாரம் வழியே வள்ளுவர் கூறியுள்ள கருத்துகளைத் தொகுத்து எழுதுக.        ( அல்லது )

ஆ) சந்தக் கவிதையில் சிறக்கும் கம்பன் என்ற தலைப்பில் இலக்கிய உரை எழுதுக.

   அன்பும் பண்பும் குணச்சித்திரமும் கொண்ட தலைவர் அவர்களே! தேர்ந்தெடுத்த பூக்களைப் போன்று வரிசை தொடுத்து அமர்ந்திருக்கும் ஆன்றோர்களே! அறிஞர் பெருமக்களே! வணக்கம், இயற்கை கொலு வீற்றிருக்கும் காட்சியைப் பெரிய கலைநிகழ்வே நடப்பதான தோற்றமாகக் கம்பன் காட்டும் கவி….. தண்டலை மயில்கள் ஆட…....  இவ்வுரையைத் தொடர்க.

39. அ) “ பள்ளியைத் தூய்மை வைத்திருத்தல் “ குறித்த செயல் திட்ட வரைவு ஒன்றை உருவாக்கி தலைமையாசிரியர் ஒப்புதல் பெற வேண்டி அனுமதிக் கடிதம் எழுதுக.( அல்லது )

ஆ. மாவட்ட அளவில் நடைபெற்ற “ மரம் இயற்கையின் வரம் “ எனும் தலைப்பிலான கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற்று முதல் பரிசு பெற்ற தோழனை வாழ்த்தி மடல் எழுதுக.

40. அ) காட்சியைக் கண்டு கவினுற எழுதுக

41. நாமக்கல் மாட்டம், ஆஞ்சிநேய நகர், எண் 2/504 இல் வசிக்கும் இராமன் - சரண்யாவின் மகன் தேவன் என்பவர் எம்.சி.ஏ. முடித்து, தமிழ் மற்றும் ஆங்கில தட்டச்சில் மேல்நிலை முடித்து அங்குள்ள தனியார் மென்ப்பொருள் கம்பெனியில் மேலாளர் பணிக்கு விண்ணப்பிக்கிறார். தேர்வர் தம்மை தேவனாகப் பாவித்து உரிய படிவத்தை நிரப்புக.

42. அ)  நயம் பாராட்டுக.

         கவிதையில் உள்ள திரண்ட கருத்து, பொருள் நயம், சொல் நயம், சந்த நயம், தொடை நயம், அணி நயம் ஆகியவை இடம்பெற வேண்டும்.

கத்துகடல் சூழ்நாகைக் காத்தான்தன் சத்திரத்தில்

          அத்தமிக்கும் போது அரிசிவரும் – குத்தி

           உலையிலிட ஊரடங்கும் ஓர்அகப்பை அன்னம்

          இலையிலிட வெள்ளி எழும் “              - காளமேகப் புலவர்   ( அல்லது )

ஆ) மாணவ நிலையில் நாம் பின்பற்ற வேணடிய அறங்களும் அதனால் ஏற்படும் நன்மைகளும் குறித்து எழுதுக.

குறிப்பு : செவிமாற்றுத் திறனாளர்களுக்கான மாற்று வினா

 உரைப் பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடை தருக.

ராகுல் சாங்கிருத்யாயன் 1942ஆம் ஆண்டு ஹஜிராபாக் மத்திய சிறையிலிருந்த போது ‘ வால்காவிலிருந்து கங்கை வரை ‘ என்ற நூலை இந்தி மொழியில் எழுதினார். 1949 ஆம் ஆண்டு இந்நூலை கண.முத்தையா என்பவர் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டார். இன்று வரையில் ‘ வால்காவிலிருந்து கங்கை வரை ‘ ஒவ்வொரு தமிழரும் விரும்பிப் படிக்கும் நூலாக இருக்கிறது. இதுவரையில் பல பதிப்புகள் வெளி வந்திருக்கின்றன.

1949 – கண.முத்தையா மொழிபெயர்ப்பு, 2016 – டாக்டர்.என்.ஸ்ரீதர் மொழிபெயர்ப்பு

2016 – முத்து மீனாட்சி மொழிபெயர்ப்பு, 2018-யூமா வாசுகி மொழிபெயர்ப்பு

( I ) ராகுல் சாங்கிருத்யாயன் நூல் எது?

( ii ) எந்த ஆண்டு ‘ வால்காவிலிருந்து கங்கை வரை’ என்ற நூல் எழுதப்பட்டது?

( iii ) வால்காவிலிருந்து கங்கை வரை என்ற நூலை கண.முத்தையா எந்த ஆண்டு தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டார்?

( iv ) வால்காவிலிருந்து கங்கை வரை என்ற நூலை இதுவரை மொழிபெயர்ப்பு செய்தவர்கள் யாவர்?

( v )  உரைப்பத்திக்குப் பொருத்தமான தலைப்பு தருக..

                                                        பகுதி -V ( மதிப்பெண்கள் : 24)

அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்க.                                                                 3×8=24

43.அ) போராட்டக் கலைஞர் – பேச்சுக் கலைஞர் – நாடகக் கலைஞர் – திரைக் கலைஞர் – இயற்றமிழ்க் கலைஞர் ஆகிய தலைப்புகளைக் கொண்டு கட்டுரை எழுதுக.  (அல்லது)

ஆ) சங்ககாலத் தமிழரின் விருந்தோம்பல் பண்பைச் சான்றுகளுடன் விளக்குக.

44.அ) பிரும்மம் “ கதை உணர்த்தும் பிற உயிர்களைத் தம் உயிர்போல் நேசிக்கும் பண்பினை விவரிக்க. (அல்லது)

ஆ) எம்.எஸ்.சுப்புலட்சுமி, பால சரஸ்வதி, ராஜம் கிருஷ்ணன், கிருஷ்ணம்மாள் ஜெகநாதன், சின்னப்பிள்ளை ஆகியோர் சமூகத்திற்கு ஆற்றிய பணிகள் குறித்து எழுதுக.

45.அ) தமிழின் இலக்கிய வளம் – கல்வி மொழி – பிறமொழிகளில் உள்ள இலக்கிய வளங்கள் – அறிவியல் கருத்துகள் – பிறதுறைக் கருத்துகள் – தமிழுக்குச் செழுமை –

          மேற்கண்ட குறிப்புகளைக் கொண்டு ‘ செம்மொழித் தமிழுக்கு வளம் சேர்க்கும் மொழிபெயர்ப்புக் கலை ‘ என்ற தலைப்பில் வார இதழ் ஒன்றுக்கு நடுப்பக்கக் கட்டுரை எழுதுக.       (அல்லது)

ஆ)  கீழ்க்காணும் குறிப்பைப் பயன்படுத்திக் கட்டுரை எழுதி தலைப்பு தருக

 முன்னுரை – மழைநீர் – தேவை மற்றும் முக்கியத்துவம்  – சேமிப்பு முறைகள்  – விழிப்புணர்வு  – நம் கடமை - முடிவுரை.

 KINDLY WAIT FOR 10 SECONDS

CLICK TO START BUTTON AFTER DOWNLOAD QUESTION PAPER


 


PDF Timer Download — Tamil

PDF Timer Download

00:10
தமிழ்விதை மற்றும் கல்விவிதைகளைத் தொடர்ந்து பயன்படுத்தியமைக்கு நன்றி

Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post