📘 ஏழாம் வகுப்பு – தமிழ் திறன் – 2025
வகுப்புநிலைத் திறன்கள் – 2
திணை, பால், எண், இடம், காலம் 🪶
2.1. தொடரைப் படித்து உரிய சொற்களைத் தேர்ந்தெடுத்து எழுதுக :
நாம், நீங்கள், நாங்கள், நீ, அவர்கள்
- அவர்கள் நூலகம் சென்று வந்தனர்.
- நான் நாள் தோறும் மாலையில் விளையாடுவேன்.
- நாங்கள் மிக மகிழ்ச்சியாகக் கதை கேட்போம்.
- நீ எழுதிய கடிதம் எனக்கு வந்து சேர்ந்தது.
- நீங்கள் எங்கெல்லாம் சென்று வந்தீர்கள்.
2.2. தொடர்களைப் படித்து அட்டவணைக்கேற்ப நிரப்புக :
| வ.எண் | தொடர் | திணை | பால் | எண் | இடம் | காலம் |
|---|---|---|---|---|---|---|
| 1 | ஜோவின், சென்றான் | உயர்திணை | ஆண்பால் | ஒருமை | படர்க்கை | இறந்தகாலம் |
| 2 | நாங்கள், பார்ப்போம் | உயர்திணை | பலர்பால் | பன்மை | தன்மை | எதிர்காலம் |
| 3 | அகிலா, பாடுகிறாள் | உயர்திணை | பெண்பால் | ஒருமை | படர்க்கை | நிகழ்காலம் |
| 4 | நீங்கள், படித்தீர்கள் | உயர்திணை | பலர்பால் | பன்மை | முன்னிலை | இறந்தகாலம் |
| 5 | குதிரைகள், ஓடின | அஃறிணை | பலவின்பால் | பன்மை | படர்க்கை | இறந்தகாலம் |
📄 PDF பதிவிறக்கம் சில நொடிகளில் துவங்கும்...
10
👉 PDF ஐ பதிவிறக்கம் செய்ய
🌿 தமிழ்விதை & கல்விவிதைகள் – உங்கள் கல்விக் களஞ்சியம்! 🌿
