10TH-TAMIL-MODEL PUBLIC EXAM AND HALF YEARLY QUESTION-2-2025

 


பத்தாம் வகுப்பு

மாதிரி அரையாண்டு மற்றும் பொதுத் தேர்வு-2- 2025

 மொழிப்பாடம் – தமிழ்

நேரம் : 15 நிமிடம் + 3.00 மணி                                                                         மதிப்பெண் : 100

அறிவுரைகள் :

1) அனைத்து வினாக்களும் சரியாகப் பதிவாகி உள்ளனவா என்பதனைச் சரிபார்த்துக் கொள்ளவும். அச்சுப்பதிவில் குறையிருப்பின் அறைக்  கண்காணிப்பாளரிடம்  உடனடியாகத் தெரிவிக்கவும்.

2) நீலம் அல்லது கருப்பு மையினை மட்டுமே எழுதுவதற்கும்,அடிக்கோடிடுவதற்கும்    

பயன்படுத்தவும்.

குறிப்பு : I ) இவ்வினாத்தாள் ஐந்து பகுதிகளைக் கொண்டது.

              ii) விடைகள் தெளிவாகவும் குறித்த அளவினதாகவும் சொந்த நடையிலும் அமைதல்

                வேண்டும்.

பகுதி – I ( மதிப்பெண்கள் : 15 )             

           i) அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்

ii) கொடுக்கப்பட்ட நான்கு விடைகளில் சரியான விடையினைத் தேர்ந்தெடுத்துக்

   குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதவும்.

அ) சரியான விடையைத் தேர்வு செய்க.                                                                            15×1=15

1. எந்தமிழ்நா  என்பதைப் பிரித்தால் இவ்வாறு வரும் _________

) எந் + தமிழ் + நா                    ) எந்த + தமிழ் + நா 

) எம் + தமிழ் + நா                    ) எந்தம் + தமிழ் + நா

2. மேன்மை தரும் அறம் என்பது ______________________

அ) கைம்மாறு கருதாமல் அறம் செய்வது                 

ஆ) மறுபிறப்பில் பயன் பெறலாம் என்ற நோக்கில் அறம் செய்வது

இ) புகழ் கருதி அறம் செய்வது                       

ஈ) பதிலுதவி பெறுவதற்காக அறம் செய்வது

3. உவப்பின் காரணமாக அஃறிணையை உயர்திணையாகக் கொள்வது

அ) இட வழுவமைதி                   ஆ) பால் வழுவமைதி

இ) திணை வழுவமைதி             ஈ) கால வழுவமைதி

 4. ஆள்வினையும் ஆன்ற அறிவு மெனவிரண்டின்

    நீள்வினையால் நீளும் குடி - இக்குறளில் பயின்று வந்துள்ள எதுகை நயத்தைத் தேர்க

அ) ஆள்வினை – ஆன்ற           ஆ) ஆள்வினை - நீள்வினை

இ) அறிவு - நீளும்                     ஈ) ஆன்ற - குடி

5. காலில் அணியும் அணிகலனைக் குறிப்பது --------

அ) சுட்டி      ஆ) கிண்கிணி        இ) குழை     ஈ) சூழி                     

6. ‘ வண்டொடு புக்க மணவாய்த் தென்றல் ‘ – என்ற அடிகள் இடம் பெற்ற நூல்

அ) புறநானூறு  ஆ) நற்றிணை       இ) சிலப்பதிகாரம்   ஈ) குறுந்தொகை

7. காட்டு விலங்குகளைச் _______தடை செய்யப்பட்டுள்ளது. செய்த தவறுகளைச் ___________திருத்த உதவுகிறது.

          அ) சுட்டல், சுடுதல்           ஆ) தொடுத்தல், தொடுதல்         

இ) நடித்தல், நடிப்பு           ஈ)  புதையல், புதைத்தல்

8. தமிழினத்தை ஒன்றுபடுத்தும் இலக்கியமாக ம.பொ.சி. கருதியது

அ) திருக்குறள்   ஆ) புறநானூறு           இ) கம்பராமாயணம்           ஈ) சிலப்பதிகாரம்

9. வடித்த கஞ்சியில் சேலையை அலசினேன்  - தடித்த தொடரின் வகையைத் தேர்க

அ) வினையெச்சத் தொடர்                   ஆ) பெயரெச்சத் தொடர்  

இ) இடைச்சொல் தொடர்                     ஈ) வேற்றுமைத் தொடர்

10. ‘ நாம் ஏன் தமிழ் காக்க வேண்டும்? ‘ என்ற நூலின் ஆசிரியர்

அ) மா.நன்னன்                         ஆ) துரை.மாணிக்கம்   

இ) முனைவர்.சேதுமணியன்       ஈ) உதய சங்கர்

11. சித்திரை, வைகாசி மாதங்களை ____________ காலம் என்பர்.

அ) முதுவேனில்        ஆ) பின்பனி       இ) முன்பனி           ஈ) இளவேனில்

பாடலைப் படித்து வினாக்களுக்கு(12,13,14,15) விடையளிக்க:-

அல்லதை என் தமரால் என் பகைஞரால் கள்வரால் அரிய கானத்து

எல்லை விலங்கு ஆதிகளால் இடையூறு இன் தமிழ்நாட்டில் எய்திற்றாலோ

தொல்லை மறையவர் ஒழுக்கம் குன்றினரோ தவம் தருமம் சுருங்கிற்றாலோ

இல்லறனும் துறவறனும் பிழைத்தனவோ யான் அறியேன் எந்தாய் ! எந்தாய் !

12.இப்பாடலில் இடம் பெற்றுள்ள ‘ தமர் ‘ என்ற சொல்லின் பொருள்

அ. நண்பர்    ஆ. இறைவன்        இ. மன்னன்    ஈ. உறவினர்

13. பாடலில் இடம் பெற்றுள்ள எதுகைச் சொற்களைத் தேர்க

அ. அல்லதை - அரிய                ஆ, எல்லை – எய்திற்றாலோ

 இ. தொல்லை - இல்லறனும்       ஈ. அறியேன் - தருமம்

14. இப்பாடலை  இயற்றியவர்

அ.நப்பூதனார்          ஆ. குமரகுருபரர்    இ. பரஞ்சோதி முனிவர்     ஈ.கம்பர்

15. இப்பாடல் இடம் பெற்ற நூல்  ___

அ. கம்பராமாயணம்                     ஆ. திருவிளையாடற் புராணம்

இ. பரிபாடல்                                ஈ. சிலப்பதிகாரம்

பகுதி – II ( மதிப்பெண்கள் : 18 ) பிரிவு – 1

எவையேனும் நான்கு வினாக்களுக்கு மட்டும் குறுகிய விடையளிக்க.              4×2=8

(21 ஆவது வினாவிற்கு கட்டாயமாக விடையளிக்க வேண்டும்.)

16. விடைக்கேற்ற வினா அமைக்க.

அ.  மொழி ஞாயிறு என அழைக்கப்படுபவர் தேவநேயப் பாவாணர்.

ஆ.’ நாடகக்கலையை மீட்டெடுப்பதே தமது குறிக்கோள் ‘ என்றவர் நா.முத்துசாமி

17.  மென்மையான மேகங்கள், துணிச்சலும் கருணையும் கொண்டு வானில் செய்யும் நிகழ்வுகளை எழுதுக.

18. இவ்வுலகம் நமக்கு உரிமை உடையதாக வேண்டுமென்றால் நாம் செய்ய வேண்டியதை எழுதுக

19. மொழிபெயர்ப்பின் பயன் குறித்து எழுதுக.

20. குறிப்பு வரைக :- அவையம்

21.  இன்மை – எனத் தொடங்கும் குறளை எழுதுக.

பிரிவு – 2

எவையேனும் ஐந்து வினாக்களுக்கு மட்டும் விடையளிக்கவும்.                                       5×2=10

22. கல்வியும் செல்வமும் பெற்ற பெண்கள், விருந்தும் ஈகையும் செய்வதாகக் கம்பர் குறிப்பிட்டுள்ளார். அடிக்கோடிட்ட சொற்களை உம்மைத்தொகையாக மாற்றி எழுதுக.

23. மரபுத் தொடருக்கான பொருளறிந்து தொடரில் அமைத்து எழுதுக.

          அ) மனக்கோட்டை      ஆ) ஆறப்போடுதல்

24. பகுபத உறுப்பிலக்கணம் தருக : தணிந்தது

25. புறத்திணைகளில் எதிரெதிர் திணைகளை அட்டவணைப்படுத்துக.

26. கீழ்க்காணும் தொடர்களில் வழுவமைதி வகைகளை இனங்கண்டு எழுதுக.

அ ) அமைச்சர் நாளை விழாவிற்கு வருகிறார்.

ஆ) சிறிய வயதில் இந்த மரத்தில் தான் ஊஞ்சல் கட்டி விளையாடுவோம்.

27. படிப்போம்; பயன்படுத்துவோம்!

          அ) House warming             ஆ) Monarchy

குறிப்பு :- செவி மாற்றுத் திறனாளர்களுக்கான மாற்று வினா

தொடரைப் படித்து விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக ( சோறு, கற்றல், கரு,பூவில், எழுத்து )

          அ) விதைக்கு தேவை எரு எனில், கதைக்குத் தேவை _____

          ஆ) கல் சிலை ஆகுமெனில், நெல் ______ ஆகும்.

28. குறள் வெண்பாவின் இலக்கணத்தை எழுதி எடுத்துக்காட்டுத் தருக.

பகுதி – III ( மதிப்பெண்கள் -18 )

பிரிவு – I

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க:-                                    2×3=6

29. தமிழன்னையை வாழ்த்துவதற்கான காரணங்களாகப் பாவலரேறு சுட்டுவன யாவை?

30. உரைப் பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடை தருக.

         இளம் வயதிலேயே சமூக விடுதலைக்காகப் போராடியவர்; வழக்கறிஞர், நாகர் கோவில் நகர் மன்றத் தலைவராகவும், சட்ட மன்ற உறுப்பினராகவும் நாடாளுமன்ற உறுப்பினராகவும் பணியாற்றியவர். குமரி மாவட்டப் போராட்டத்தை முன்னெடுத்துச் சென்றவர்; இதனால் மார்ஷ்ல் நேசமணி என்று அழைக்கப்பட்டார். 1956 நவம்பர் 1ஆம் நாள் கன்னியாகுமரி தமிழ்நாட்டுடன் இணைந்து, தமிழகத்தின் தென் எல்லையாக மாறியது.

          அ) கன்னியாகுமரி தமிழ்நாட்டுடன் எப்போது இணைந்தது?

          ஆ) குமரி மாவட்டப் போராட்டத்தை முன்னெடுத்துச் சென்றவர் யார்?

          இ) நேசமணி அவர்கள் ஆற்றிய பணிகள் யாவை?

31. தமிழ்மொழிக்குக் கலைஞர் செய்த சிறப்புகளுள் நீங்கள் அறிந்துகொண்ட இரண்டினை எழுதுக.

பிரிவு – II

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் சுருக்கமாக விடையளிக்கவும்.                     2×3=6

              ( 34 ஆவது வினாவிற்கு கட்டாயம் விடையளிக்க வேண்டும்.)

32. உயிர்கள் உருவாகி வளர ஏற்ற சூழல் பூமியில் எவை எவையெனப் பரிபாடல் அறிந்தவற்றைக் குறிப்பிடுக.

33. வள்ளுவம்,சிறந்த அமைச்சருக்குக் கூறிய இலக்கணங்கள் நமக்கும் பொருந்துவதைக் குறள் வழி விளக்குக.    

34. அ) “ விருந்தினனாக “ எனத் தொடங்கும்  காசிக்காண்டம் பாடலை  எழுதுக. (அல்லது )

      ஆ) “நவமணி ” எனத் தொடங்கும் தேம்பாவணி பாடலை எழுதுக.

பிரிவு -III

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு விடையளிக்க:-                                                  2×3=6

35. மார்கழித் திங்கள் அதிகாலை நேரத்தில் மக்கள் நடைப்பயிற்சி மேற்கொண்டனர். சிலர் மதிவண்டியில் சென்றனர். சாலை ஓரத்தில் இருந்த வீட்டின் மதிலை ஒட்டிச் செங்காந்தள் மலர்கள் பூத்துக் குலுங்கியபடி இருந்தன. அவற்றைப் பார்த்தபடியே வீடு சென்றேன்.

 பத்தியைப் படித்துத் தொகைநிலைத் தொடர்களைக் கண்டறிந்து எழுதுக.

36. தேவர் அனையர் கயவர் அவரும்தாம்

   மேவன செய்தொழுக லான் – இக்குறளில் வஞ்சப் புகழ்ச்சி அணி இடம்பெற்றுள்ளதை விளக்குக

37. “அறனீனும் இன்பமும் ஈனும் திறனறிந்து

        தீதின்றி வந்த பொருள்“    - இக்குறளை அலகிட்டு வாய்பாடு தருக.

                                                        பகுதி -IV ( மதிப்பெண்கள் : 25)

அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்க.                                                                5×5=25

38. அ)  இறைவன்,புலவர் இடைக்காடன் குரலுக்குச் செவிசாய்த்த நிகழ்வை நயத்துடன் எழுதுக     ( அல்லது )

ஆ) கருணையனின் தாய் மறைவுக்கு,வீரமாமுனிவர் தம் பூக்கள் போன்ற உவமைகளாலும் உருவக மலர்களாலும் நிகழ்த்திய கவிதாஞ்சலியை விவரிக்க.

39. அ) பள்ளித்திடலில் கிடைத்த பணப்பையை உரியவரிடம் ஒப்படைத்ததையும் அதற்குப் பாராட்டுப் பெற்றதையும் பற்றி வெளியூரில் இருக்கும் உறவினர் ஒருவருக்குக் கடிதம் எழுதுக. ( அல்லது )

ஆ. உங்கள் கிராமத்திற்கு நூலக வசதி வேண்டி பொது நூலகத்துறை இயக்குநர் அவர்களுக்குக் கடிதம் எழுதுக.

40. அ) காட்சியைக் கண்டு கவினுற எழுதுக

41. மதுரை மாட்டம், மாட்டுத் தாவணி நகர், தேரடி வீதி, எண் 2/504 இல் வசிக்கும் ரமேஸின் மகள் நந்தினி என்பவர் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 470 மதிப்பெண்கள் பெற்று அங்குள்ள அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மேல்நிலை முதலாம் ஆண்டு கணிதப்பிரிவு ஆங்கில வழியில் சேர விரும்புகிறார். தேர்வர் தம்மை நந்தினியாக பாவித்து உரிய படிவத்தை நிரப்புக.

42. அ)  மொழிபெயர்க்க.

1. Education is what remains after one has forgotten what one has learned in school – Albert Einstein

2. Tomorrow is often the busiest day of the week – Spanish proverb

3. It is during our darkest moments that we must focus to see the light – Aristotle

4. Success is not final, failure is not fatal. It is the courage to continue that counts – Winston Churchill

5. Language is the road map of a culture. Is tells you where its people come from and where they are going – Rita Mae Brown   ( அல்லது )

ஆ) பள்ளியிலும், வீட்டிலும் நீ நடந்து கொள்ளும் விதம் குறித்து பட்டியலிடுக.

குறிப்பு : செவிமாற்றுத் திறனாளர்களுக்கான மாற்று வினா

 உரைப் பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடை தருக.

தமிழர்கள் உணவு பரிமாறும் முறையை நன்கு அறிந்திருந்தனர். உண்பவரின் இடப்பக்கம் வாழை இலையின் குறுகலான பகுதியும் வலப்பக்கம் இலையின் விரிந்த பகுதியும் வர வேண்டும். ஏனென்றால், வலது கையால் உணவு உண்ணும் பழக்கமுடையவர்கள் நாம். இலையில் இடது ஓரத்தில் உப்பு, ஊறுகாய், இனிப்பு முதலான அளவில் சிறிய உணவு வகைகளையும் வலது ஓரத்தில் காய்கறி, கீரை, கூட்டு முதலான அளவில் பெரிய உணவு வகைகளையும் நடுவில் சோறும் வைத்து எடுத்துண்ண வசதியாகப் பரிமாறுவார்கள். உண்பவர் மனமறிந்து, அவர்கள் விரும்பிச் சாப்பிடும் உணவு வகைகளைப் பரிவுடன் பரிமாறுவர்.

( I ) உண்பவரின் இடப்பக்கம் வாழையின் எப்பகுதி வர வேண்டும்?

( ii ) உண்பவரின் வலப்பக்கம் வைக்கப்பட வேண்டிய உணவு வகைகள் யாவை?

( iii ) வாழையிலை யின் இடது ஓரத்தில் இடம் பெறும் உணவுகள் யாவை??

( iv ) உணவு பரிமாறும் முறையை அறிந்தவர்கள் யார்?

( v )  உரைப்பத்திக்குப் பொருத்தமான தலைப்பு தருக..

                                                        பகுதி -V ( மதிப்பெண்கள் : 24)

அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்க.                                                                 3×8=24

43.அ) காற்று மாசுபாட்டைத் தடுக்கும் வழிமுறைகளை விவரித்து எழுதுக.    (அல்லது)

 

 

 

ஆ) நிகழ்வுகளைத் தொகுத்து அறிக்கை எழுதுக.


மகளிர் நாள் விழா

இடம்பள்ளிக் கலையரங்கம்                                                      நாள் -08.03.2019

கலையரங்கத்தில் ஆசிரியர்கள்,மாணவர்கள் கூடுதல்தலைமையாசிரியரின் வரவேற்பு

இதழாளர் கலையரசியின் சிறப்புரைஆசிரியர்களின் வாழ்த்துரைமாணவத் தலைவரின்

நன்றியுரை.

44.அ) புயலிலே ஒரு தோணி – கதையில் இடம்பெற்றுள்ள வருணனைகளும் அடுக்குத் தொடர்களும் ஒலிக்குறிப்புச் சொற்களும் புயலில், தோணி படும்பாட்டை எவ்வாறு விவரிக்கின்றன.    (அல்லது)

ஆ) உங்கள் ஊரில் கடின உழைப்பாளர் – சிறப்பு மிக்கவர் – போற்றத்தக்கவர் என்ற நிலையில் நீங்கள் கருதுகின்ற பெண்கள் குறித்து எழுதுக

 

45.அ) குமரிக் கடல் முனையையும் வேங்கட மலைமுகட்டையும் எல்லையாகக் கொண்ட தென்னவர் திருநாட்டிற்குப் புகழ் தேடித் தந்த பெருமை, தகைசால் தமிழன்னையைச் சாரும். எழில் சேர் கன்னியாய் என்றும் திகழும் அவ்வன்னைக்கு, பிள்ளைத் தமிழ் பேசி, சதகம் சமைத்து, பரணி பாடி, கலம்பகம் கண்டு, உலா வந்து, அந்தாதி கூறி, கோவை யாத்து, அணியாகப் பூட்டி, அழகூட்டி அகம் மிக மகிழ்ந்தனர் செந்நாப் புலவர்கள்.

இக்கருத்தைக் கருவாகக் கொண்டு “ சான்றோர் வளர்த்த தமிழ் “ என்னும் தலைப்பில் கட்டுரை எழுதுக.  (அல்லது)

ஆ)  கீழ்க்காணும் குறிப்பைப் பயன்படுத்திக் கட்டுரை எழுதி தலைப்பு தருக

 முன்னுரை – சுற்றுச்சூழல் முக்கியத்துவம் – மாசுபாடுகள்  – விளைவுகள்  – விழிப்புணர்வுகள்  – நம் கடமை - முடிவுரை.

 


 KINDLY WAIT FOR 10 SECONDS

CLICK TO START BUTTON AFTER DOWNLOAD QUESTION PAPER



PDF Timer Download — Tamil

PDF Timer Download

00:10
தமிழ்விதை மற்றும் கல்விவிதைகளைத் தொடர்ந்து பயன்படுத்தியமைக்கு நன்றி

Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post