TTSE-TET-2-10TH-TAMIL-2025-UNIT-02-KEYTTKIRATHA EN KURAL-PAGE24,25

 

தமிழ்மொழி இலக்கியத் திறனறித் தேர்வு - 2025

தமிழ்மொழி இலக்கியத் திறனறித் தேர்வு — 2025

இயல் – 2 : கேட்கிறதா என் குரல் (பக்கம்:24-25)

வகுப்பு: 10 — மொத்த மதிப்பெண்: 21
1. பொருத்துக.
அ) மூச்சு - 1) நிலம்
ஆ) தாகம் - 2) கதிரவன்
இ) உறைவிடம் - 3) காற்று
ஈ) ஒளி - 4) நீர்
2. உலகம் ஐம்பெரும் பூதங்களால் ஆனது எனக் கூறுபவர்_______
3. மூச்சுப்பயிற்சியே உடலைப் பாதுகாத்து வாழ்நாளை நீட்டிக்கும் எனக் கூறுபவர் _________
4. திருமந்திரத்தை இயற்றியவர் __________
5. வாயு வழக்கம் அறிந்து செறிந்தடங்களில் ஆயுள் பெருக்கம் உண்டாம் – என காற்றினைச் சிறப்பிக்கும் நூல்____
6. கிழக்கிலிருந்து வீசும் காற்று _________
7. வறண்ட நிலப்பகுதியிலிருந்து வீசும் காற்று _________
8. கூற்று 1 : பல தடைகளைத் தாண்டி வருவதால் வேகம் குறைந்து வீசுவதால் காற்று இதமாக உள்ளது.
கூற்று 2 : இதமாக வீசும் காற்று ஊதைக் காற்று என அழைக்கப்படுகிறது.
9. கடல் பகுதிக்கு மேலுள்ள மழை மேகங்களைச் சுமந்து வீசும் காற்றின் தன்மை
10. வண்டொடு புக்க மணவாய்த் தென்றல் இவ்வடிகள் இடம் பெற்ற நூல்___
11. பத்மகிரிநாதர் தென்றல் விடுதூது என்னும் நூலின் இலக்கிய வகை ______________
12. நந்தமிழும் தண்பொருநை நன்னதியும் சேர் பொருப்பிற் செந்தமிழின் பின்னுதித்த தென்றலே – இவ்வடிகள் இடம் பெற்ற நூல்____________
13. நதியில் விளையாடிக் கொடியில் தலைசீவி நடந்த இளந்தென்றலே – இக்கவிதையை இயற்றியவர்
14. நளிஇரு முந்நீர் நாவாய் ஓட்டி – இவ்வடிகளில் கடலைக் குறிக்கக்கூடிய சொல்லைத் தேர்க.
15. வளிதொழில் ஆண்ட உரவோன் மருக! – இவ்வடிகளில் காற்றைக் குறிக்கும் சொல்
16. கரிகால் பெருவளத்தானைப் புகழ்ந்து பாடிய பெண்பாற் புலவர்______
17. கதிரவனின் வெப்பத்தால் சூடாகி அடர்த்தி குறைந்து மேலே செல்லும் காற்று அங்கு ஏற்பட்ட வெற்றிடத்தை எவ்வாறாக நிரப்புகிறது?
18. சூன் முதல் செப்டம்பர் வரை வீசும் காற்று
19. வடகிழக்கு பருவக் காற்று வீசும் காலம்
20. இந்தியாவின் முதுகெலும்பு .
21. இந்தியாவிற்கு தேவையான மழை அளவில் எழுபது விழுக்காடு மழையைக் கொடுக்கும் காற்று

Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post