மாதிரி காலாண்டுத் தேர்வு – 2025
வினாத்தாள் - 2
மொழிப்பாடம் – தமிழ்
நேரம் : 15 நிமிடம் + 3.00 மணி மதிப்பெண் : 100
பகுதி – I ( மதிப்பெண்கள் : 15 )
அ) சரியான விடையைத் தேர்வு செய்க. 15×1=15
1. கீழ்க்காண்பனவற்றுள் எந்த இலக்கியம் பிறமொழிப் படைப்பினைத் தழுவித் தமிழில் படைக்கப்பட்டது?
அ) திருக்குறள் ஆ) கம்பராமாயணம் இ) கலித்தொகை ஈ) சிலப்பதிகாரம்
2. எறும்புந்தன் கையால் எண்சாண் – எண்ணுப்பெயரைக் கண்டு உரிய தமிழெண்ணை தேர்க
அ) ரு ஆ) எ இ) உ ஈ) அ
3. பொருந்தும் விடை வரிசையைத் தேர்க.
அ. சிலம்பு, கிண்கிணி - 1. காதில் அணிவன
ஆ அரைஞாண் - 2. நெற்றியில் அணிவது
இ. சுட்டி - 3. காலில் அணிவன
ஈ. குழை - 4. இடையில் அணிவது
அ) 4 3 2 1 ஆ) 3 4 2 1 இ) 2 4 3 1 ஈ) 1 4 2 3
4. குறளில் விடுபட்ட இடத்தில் வரக்கூடிய உரிய சீர்களை தேர்க
பெயக்கண்டும் நஞ்சுண் டமைவர் _________
__________ வேண்டு பவர்.
அ) விரும்பத்தக்க, மதிப்பு ஆ) நயத்தக்க, மரியாதை
இ) நயத்தக்க, நாகரிகம் ஈ) உலகு, உரிமை
5. மேகசந்தேசம் என்ற காவியத்தைப் படைத்தவர்_________
அ) கம்பர் ஆ) காளிதாசர் இ) பாவாணர் ஈ) பெருஞ்சித்திரனார்
6. நன்மொழி என்பது _________
அ) பண்புத்தொகை ஆ) உவமைத் தொகை
இ) அன்மொழித்தொகை ஈ) உம்மைத்தொகை
7. காய்ந்த இலையும்,காய்ந்த தோகையும் நிலத்துக்கு நல்ல உரங்கள். இத்தொடரில் அடிக்கோடிட்ட பகுதி குறிப்பிடுவது ____
அ) இலையும்,சருகும் ஆ) தோகையும் சண்டும்
இ) தாளும் ஓலையும் ஈ) சருகும் சண்டும்
8. பழமொழியை நிறைவு செய்க. உப்பில்லா _______
அ) பண்டம் குப்பையிலே ஆ) மூன்று நாள்
இ) சோற்றுக்கு ஒரு சோறு பதம் ஈ) மிஞ்சினால் அமுதமும் நஞ்சு
9. தடித்த சொல்லின் தொகைநிலைத் தொடரைத் தேர்க
திறன்பேசியின் தொடுதிரையில் படித்துக் கொண்டிருந்தார்
அ) உவமைத் தொகை ஆ) வினைத்தொகை
இ) பண்புத்தொகை ஈ) உம்மைத் தொகை
10. சாகும்போதும் தமிழ்படித்துச் சாகவேண்டும் என்று கூறியவர்……
அ)பாரதியார் ஆ)ஜி.யு.போப் இ) க.சச்சிதானந்தன் ஈ)பாவலரேறு
11. அறிஞருக்கு நூல், அறிஞரது நூல் ஆகிய சொற்றொடர்களில் பொருளை வேறுபடுத்தக் காரணமாக அமைந்தது.
அ) வேற்றுமை உருபு ஆ) எழுவாய் இ) உவம உருபு ஈ) உரிச்சொல்
பாடலைப் படித்து வினாக்களுக்கு(12,13,14,15) விடையளிக்க:-
“ செந்தமிழே! உள்ளுயிரே செப்பரிய நின் பெருமை
எந்தமிழ்நா எவ்வாறு எடுத்தே உரை விரிக்கும்?
முத்தைத் தனிப்புகழும் முகிழ்த்த இலக்கியமும்
விந்தை நெடுநிலைப்பும் வேறார் புகழுரையும் “
1) ‘ எந்தமிழ்நா’ என்பதைப் பிரித்தால் இவ்வாறு வரும்:
அ) எந் + தமிழ் + நா ஆ) எந்த + தமிழ் + நா
இ) எம் + தமிழ் + நா ஈ) எந்தம் + தமிழ் + நா
2) ‘ செந்தமிழ் ‘ என்பது:
அ) பண்புத்தொகை ஆ) வினைத்தொகை
இ) உவமைத்தொகை ஈ) உம்மைத்தொகை
3). ‘ உள்ளுயிரே’ என்று கவிஞர் யாரை அழைக்கிறார்?
அ) தம் தாயை ஆ) தமிழ் மொழியை
இ) தாய் நாட்டை ஈ) தம் குழந்தையை
4) “ வேறார் புகழுரையும் “ – இத்தொடரில் ‘ வேறார் ‘ என்பது.
அ) தமிழர் ஆ) சான்றோர் இ) வேற்று மொழியினர் ஈ) புலவர்
பகுதி – II ( மதிப்பெண்கள் : 18 ) பிரிவு – 1
எவையேனும் நான்கு வினாக்களுக்கு மட்டும் குறுகிய விடையளிக்க. 4×2=8
(21 ஆவது வினாவிற்கு கட்டாயமாக விடையளிக்க வேண்டும்.)
16. விடைக்கேற்ற வினா அமைக்க.
அ. மொழிப்பெயர்ப்பின் மூலம் இலக்கியத் திறனாய்வுக் கொள்கைகளைப் பெற்றிருக்கிறோம்.
ஆ. பரஞ்சோதி முனிவர் திருமறைக்காட்டில் பிறந்தவர்.
17. தமிழர்கள், வீசுகின்ற திசையைக் கொண்டு காற்றுக்கு எவ்வாறு பெயர் சூட்டியுள்ளனர்?
18. செல்வம் பெருகுவதும் வறுமை வந்து சேர்வதும் எதனால் என வள்ளுவர் உரைக்கின்றார்?
19. மன்னும் சிலம்பே!மணிமே கலைவடிவே!
முன்னும் நினைவால் முடிதாழ வாழ்த்துவமே! – இவ்வடிகளில் இடம் பெற்றுள்ள காப்ப்பியங்களின் பெயர்களை எழுதுக.
20. சிறுபாணாற்றுப்படை நிலத்திற்கேற்ற விருந்தை எவ்வாறு எடுத்துரைக்கிறது?
21. முயற்சி – எனத் தொடகும் குறளை எழுதுக.
பிரிவு – 2
எவையேனும் ஐந்து வினாக்களுக்கு மட்டும் விடையளிக்கவும். 5×2=10
22. கல்வியும் செல்வமும் பெற்ற பெண்கள், விருந்தும் ஈகையும் செய்வதாகக் கம்பர் குறிப்பிட்டுள்ளார். அடிக்கோடிட்ட சொற்களை உம்மைத்தொகையாக மாற்றி எழுதுக.
23. கொடுக்கப்பட்டுள்ள இரு சொற்களையும் ஒரேத் தொடரில் அமைக்க.
அ) விதி – வீதி ஆ) மடு - மாடு
24. பகுபத உறுப்பிலக்கணம் தருக : பதிந்து
25. அகராதியில் காண்க:- அ) அடிச்சுவடு ஆ) அகன்சுடர்
26. “ சீசர் எப்போதும் என் சொல்பேச்சைக் கேட்பான். புதியவர்களைப் பார்த்துக் கத்துவானே தவிர கடிக்க மாட்டான்” என்று இளமாறன் தன்னுடைய வளர்ப்பு நாயைப் பற்றிப் பெருமையாகக் கூறினான். – இதில் உள்ள திணை வழுக்களைத் திருத்தி எழுது
27. வினை அடியை விகுதிகளுடன் இணைத்து தொழிற்பெயர்களை உருவாக்குக.
அ. காண் ஆ. சிரி
குறிப்பு :- செவி மாற்றுத் திறனாளர்களுக்கான மாற்று வினா
தனிமொழி, தொடர்மொழி ஆகியவற்றைக் கொண்டு உரையாடலைத் தொடர்க.
அண்ணன் : எங்கே செல்கிறாய்? ( தொடர்மொழி )
தம்பி : ______ ( தனிமொழி )
அண்ணன் : _______ _______ வாங்குகிறாய்? ( தொடர்மொழி )
தம்பி : ________ ________ ( தொடர்மொழி )
28. வழு, வழாநிலை பற்றி குறிப்பிடுக
பகுதி – III ( மதிப்பெண்கள் -18 )
பிரிவு – I
எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க:- 2×3=6
30. உரைப்பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடையளி.
அ. ஜெர்மனியில் ஓர் ஆண்டில் எத்தனை நூல்கள் வரை மொழி பெயர்க்கப்படுகின்றன?
ஆ. தமிழ் நூல்கள் எந்த மொழியில் அதிக அளவில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது?
இ. மொழிபெயர்ப்பின் பயன் என்ன?
பிரிவு – II
எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் சுருக்கமாக விடையளிக்கவும். 2×3=6
( 34 ஆவது வினாவிற்கு கட்டாயம் விடையளிக்க வேண்டும்.)
32. வைத்தியநாதபுரி முருகன் குழந்தையாக அணிந்திருக்கும் அணிகலன்களுடன் செங்கீரை ஆடிய நயத்தை எழுதுக.
33. மன்னன் இடைக்காடனார் என்ற புலவனுக்குச் சிறப்புச் செய்தது ஏன்? விளக்கம் தருக.
34. அ) “ மாற்றம் “ எனத் தொடங்கி ‘ சாலை ‘ என முடியும் வரை உள்ள காலக் கணிதம் அடிமாறாமல் எழுதுக (அல்லது )
ஆ) “விருந்தினனாக” எனத் தொடங்கும் காசிக்காண்டம் பாடலை எழுதுக.
பிரிவு -III
எவையேனும் இரண்டு வினாக்களுக்கு விடையளிக்க:- 2×3=6
35. ‘ அறிந்தது,அறியாதது, புரிந்தது,புரியாதது, தெரிந்தது, தெரியாதது,பிறந்தது,பிறவாதது ‘ இவை எல்லாம் அனைத்தையும் யாம் அறிவோம்.
இக்கூற்றில் வண்ண எழுத்துகளில் உள்ள வினைமுற்றுகளைத் தொழிற்பெயர்களாக மாற்றி எழுதுக.
36. வேலோடு நின்றான் இடுஎன்றது போலும்
கோலோடு நின்றான் இரவு - இக்குறளில் பயின்று வரும் அணியை விளக்குக.
37. கீழ்க்காணும் பத்தியில் உள்ள தொடர் வகைகளை எடுத்து எழுதுக.
மாடியிலிருந்து இறங்கினார் முகமது. அவர் பாடகர். பாடல்களைப் பாடுவதும் கேட்பதும் அவருக்குப் பொழுதுபோக்கு. அவரது அறையில் கேட்ட பாடல்களையும் கேட்காத பாடல்களையும் கொண்ட குறுந்தகடுகளை அடுக்கு அடுக்காக வைத்திருப்பார்.
பகுதி -IV ( மதிப்பெண்கள் : 25)
அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்க. 5×5=25
38. அ) மலர்ந்தும் மலராத பாதிமலர் போல
வளரும் விழி வண்ணமே – வந்து
விடிந்தும் விடியாத காலைப் பொழுதாக
விளைந்த கலை அன்னமே
நதியில் விளையாடி கொடியில் தலைசீவி
நடந்த இளந்தென்றலே – வளர்
பொதிகை மலைதோன்றி மதுரை நகர் கண்டு
பொலிந்த தமிழ் மன்றமே
- கவிஞர் கண்ணதாசன் இப்பாடலில் தவழும் காற்றையும் கவிதை நயத்தையும் பாராட்டி உரை செய்க. ( அல்லது )
ஆ) ஒழுக்கமுடைமை அதிகாரத்தில் கூறிய கருத்துகளை வள்ளுவர் வழி நின்று விளக்குக.
39. உணவு விடுதியொன்றில் வழங்கப்பட்ட உணவு தரமற்றதாகவும், விலை கூடுதலாகவும் இருந்தது குறித்து உரிய சான்றுகளுடன் உணவுப் பாதுகாப்பு ஆணையருக்குக் கடிதம் எழுதுக ( அல்லது )
ஆ. மாநில அளவில் நடைபெற்ற ‘ கலைத்திருவிழா ‘ போட்டியில் பங்கேற்று ‘ கலையரசன் ‘ பட்டம் பெற்ற தோழனை வாழ்த்தி மடல் எழுதுக.
40. படம் உணர்த்தும் கருத்தை கவினுற எழுதுக.
41. எண்-6,பாரதியார் தெரு, நீலகிரி மாவட்டத்தில் வசிக்கும் தமிழரசுவின் மகள் பூங்கொடி, கணினிப் பயிற்றுநர் பணி வேண்டி தன் விவரப் பட்டியல் நிரப்புகிறார். தேர்வர் தன்னை பூங்கொடியாக பாவித்து பணிவாய்ப்பு வேண்டி தன் விவரப் பட்டியல் நிரப்புக.
42. அ) பள்ளியிலும், வீட்டிலும் நீ நடந்து கொள்ளும் விதம் குறித்து பட்டியலிடுக.(அல்லது)
ஆ) கொடுக்கப்பட்டுள்ள பாடலைப் படித்து நயம் பாராட்டுக.
( கவிதையில் திரண்ட கருத்து, பொருள் நயம், சொல் நயம், சந்த நயம், தொடை நயம், அணி நயம் ஆகியவை இடம் பெற வேண்டும் )
“ கத்துகடல் சூழ்நாகைக் காத்தான்தன் சத்திரத்தில்
அத்தமிக்கும் போது அரிசிவரும் – குத்தி
உலையிலிட ஊரடங்கும் ஓர்அகப்பை அன்னம்
இலையிலிட வெள்ளி எழும் “ - காளமேகப் புலவர்
குறிப்பு : செவி மாற்றுத் திறனாளர்களுக்கான மாற்று வினா
உரைப் பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடை தருக.
தமிழ்நாடு எத்துணைப் பொருள் வளமுடையதென்பது அதன் விளைபொருள் வகைகளை நோக்கினாலே விளங்கும். பிற நாடுகளிலுள்ள கூலங்களெல்லாம் சிலவாகவும் சில வகைப்பட்டனவாகவும் இருக்கின்றன. எடுத்துக்காட்டாக கோதுமையை எடுத்துக் கொள்ளின் அதில் சம்பாக் கோதுமை, குண்டுக் கோதுமை, வாற்கோதுமை முதலிய சில வகைகளேயுண்டு. ஆனால் தமிழ்நாட்டில் நெல்லிலோ. செந்நெல், வெண்ணெல், கார்நெல் என்றும், பல வகைகள் இருப்பதுடன் அவற்றுள் சம்பாவில் மட்டும் ஆவிரம்பூச்சம்பா, ஆனைக்கொம்பன் சம்பா, குண்டுச் சம்பா, குதிரை வாலிச் சம்பா, சிறுமணிச் சம்பா, சீரகச் சம்பா முதலிய அறுபது உள்வகைகள் உள்ளன.
அ) தமிழ்நாடு பொருள் வளமுடையது என்பது எதனால் விளங்கும்?
ஆ) கோதுமையின் வகைகளைக் குறிப்பிடுக.
இ) தமிழ்நாட்டின் நெல்லின் வகைகளை எழுதுக.
ஈ) சம்பாவின் வகைகளை எழுதுக
உ) உரைப்பத்திக்கு ஏற்ற தலைப்பு தருக.
பகுதி – v ( மதிப்பெண்கள் : 24 )
அனைத்து வினாக்களுக்கும் விரிவாக விடையளிக்க. 3×8=24
43. அ) நாட்டுவளமும் சொல்வளமும் தொடர்புடையது என்பதை பாவாணர் வழிநின்று விளக்குக. ( அல்லது )
ஆ) உங்கள் இல்லத்துக்கு வந்த உறவினருக்கு நீங்கள் செய்த விருந்தோம்பலை அழகுற விவரித்து எழுதுக
44. அ அன்னமய்யா என்னும் பெயருக்கும் அவரின் செயலுக்கும் உள்ள பொருத்தப்பாட்டினைக் கோபல்லபுரத்து மக்கள் கதைப்பகுதி கொண்டு விவரிக்க.(அல்லது)
45. குறிப்புகளைக் கொண்டு காற்று மாசுபாடு என்னும் தலைப்பில் கட்டுரை எழுதுக.
அ) முன்னுரை – காற்று மாசுபாடு – காரணங்கள் – விளைவுகள் – பாதிப்புகள் – தடுக்கும் வழிமுறைகள் – நம் கடமை – முடிவுரை ( அல்லது )
ஆ) குறிப்புகளைப் பயன்படுத்தி மதிப்புரை எழுதுக.
பள்ளி ஆண்டுவிழா மலருக்காக நீங்கள் நூலகத்தில் படித்த கதை/கட்டுரை/சிறுகதை/கவிதை நூலுக்கான மதிப்புரை எழுதுக
குறிப்பு – நூலின் தலைப்பு – நூலின் மையப்பொருள் – மொழிநடை- வெளிப்படுத்தும் கருத்து - நூலின் நயம் – நூல் கட்டமைப்பு - சிறப்புக்கூறு – நூல் ஆசிரியர்.
KINDLY WAIT FOR 10 SECONDS