SLM-10TH-TAMIL-1ST MID TERM - ANSWER KEY-25-26

 

 சேலம் – முதல் இடைத் தேர்வு  -2025

பத்தாம் வகுப்பு / மொழிப்பாடம் – தமிழ்

உத்தேச விடைக் குறிப்பு

நேரம் :  1.30 மணி                                                                              மதிப்பெண் : 50

பகுதி – 1

மதிப்பெண்கள் - 7

 

வினா.எண்

விடைக் குறிப்பு

மதிப்பெண்

1.

ஈ) சருகும் சண்டும்

1

 

2.

இ) விண்மீன்

1

 

3.

இ) வடலி

1

 

4.

இ) தெற்கு

1

 

5.

ஆ) மணிப்பெயர் வகை

1

 

6.

ஆ) எழுவாய்த் தொடர்

1

 

7.

ஈ) வானத்தையும் பேரொலியையும்

1

 

பகுதி – 2

 

8

v  விடைக்கேற்ற வினா பொருத்தமாக இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்.

2

 

9

கூலம், பயறு, கடலை, விதை, காழ், முத்து, கொட்டை, தேங்காய், முதிரை ( ஏதேனும் நான்கு )

2

 

10.

v  மரம் வளர்ப்போம்; காற்றின் பயன் அறிவோம்

v  மரம் நடுவோம்; காற்றை பெறுவோம்

2

 

11.

v  ஒரு தாற்றில் பல சீப்பு வாழைப்பழங்கள் உள்ளன.          - சரி

v  ஒரு சீப்பில் பல தாறு வாழைப்பழங்கள் உள்ளன. - தவறு

v  ஒரு சீப்பில் பல வாழைப்பழங்கள் உள்ளன.                            - சரி

காரணம்:

v  தாறு என்பது வாழைக்குலை

v  சீப்பு என்பது வரிசையான பழங்கள்

2

 

12

பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்.

( மெல்லக் கற்போர் : கொடு என்பதற்கு கோடு என எழுதினான்)

2

 

13

அ) ஒப்பெழுத்து           ஆ) கடற்காற்று

2

 

14.

மேகங்களின் துணிச்சல் : முதுகைக் கொடுத்து சூரியனை மறைக்கிறது.

மேகங்களின் கருணை  : தாகங்கள் தீர்க்கிறது.

2

 

15

அ) ஊட்டமிகு உணவு உண்டவர்  நீண்ட வாழ்நாள் பெற்றார்.

ஆ) நேற்று என்னைச் சந்தித்தவர் என் நண்பர்

2

 

16

பொருத்தமாக விடைஎழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்.

2

 

17

கட்டுரையைப் படித்த மாணவன்

2

 

இ) அனைத்து வினாக்களுக்கும் விடையளி ( 3*3=9 )

 

18

மழை

மாரி, துளி, திவலை, தூவல், ஆலி, சோனை, புயல், தூரல், சாரல், அடை

கடல்

அரலை, அரி, அழுவம், ஆழி, உரவு நீர், பரவை, சமுத்திரம், புணரி, பெளவம், வலயம்

யானை

களிறு,வேழம், களபம், மாதங்கம், அரசுவா, பெருமா, கரி, கும்பி

3

 

வண்ணமிட்ட சொற்கள்

தொகாநிலைத் தொடர்கள்

பாடிக் காட்டினார்

வினையெச்சத் தொடர்

கேட்டுப் பாடினர்

வினையெச்சத் தொடர்

கேட்ட பாடல்

பெயரெச்சத் தொடர்

சிறுவினாக்களைக் கேட்டார்

இரண்டாம் வேற்றுமை தொகா நிலைத் தொடர்

எழுதுபவருக்குப் பரிசு

நான்காம் வேற்றுமை தொகா நிலைத் தொடர்

3

 

19அ

காட்சிக்கு பொருத்தமான கவிதை எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

3

 

திரண்ட கருத்து :

தமிழ் தேனைவிட இனிமையானது. தென்னாடு பொருள் கொள்கிறது. உடலில் ஒளிவிடும் உயர் மொழி. உணர்வுக்கு உணர்வாய் விளங்குவது.வானத்தை விட உயர்ந்த வண்டமிழ் மொழியே. கண்களாக விளங்கும் மொழி.தானாகவே சிறப்புற்று விளங்குவது. இனியும் தழைத்தோங்குவது.

பொருள் நயம் :

தமிழ்மொழியின் சிறப்புகளை மிகவும்  உயர்வாகக் கூறியுள்ளார். இரு கண்களாக

விளங்குகிறது என உயர்வுபடக் கூறியுள்ளார்.

சொல் நயம் :

        தேன், ஊன், வான் ஆகியவற்றை விட தமிழ்மொழி சிறப்பு வாய்ந்தது என பொருள்

நயம் உள்ளபடி கவிதையின் ஆசிரியர் எழுதியுள்ளார்.

சந்த நயம் :

        இந்த கவிதை இனிய சந்த நயத்தில் பாடும் படி அகவலோசையில் அமைந்துள்ளது.

மோனை நயம் :

தேனினும் – தென்னாடு     னினும் – ணர்வினும் ( சீர் மோனை )

எதுகை நயம் :

தேனினும்னினும்      வானினும்தானி ( அடி எதுகை )

இயைபு நயம் :       

மொழியே மொழியே

அணி நயம் :

தமிழை மிக உயர்வாக கூறியுள்ளதால் உயர்வு நவிற்சி அணி வந்துள்ளது.

( ஏதேனும் திரண்ட கருத்துடன் மூன்று நயங்கள் )

3

 

20

அ) அன்னை மொழியே! அழகார்ந்த செந்தமிழே!                    

முன்னைக்கும் முன்னை முகிழ்த்த நறுங்கனியே!

கன்னிக் குமரிக் கடல்கொண்ட நாட்டிடையில்             

மன்னி அரசிருந்த மண்ணுலகப் பேரரசே!

 


மாற்றம் எனது மானிடத் தத்துவம்;

மாறும் உலகின் மகத்துவம் அறிவேன்!

எவ்வெவை தீமை எவ்வெவை நன்மை

என்ப தறிந்து ஏகுமென் சாலை!

3

 

எவையேனும் இரண்டனுக்கு விடையளி ( 2*4=8 )

 

21

v பருபொருள்கள் சிதறும்படி பெருவெடிப்பு நிகழ்ந்தது.

v நெருப்பு பந்து போல புவி உருவாகியது.

v பூமி குளிரும்படி தொடர்ந்து மழை பொழிந்தது.

v தொடர் மழையால் பூமி வெள்ளத்தில் மூழ்கியது.

v பின் உயிர்கள் உருவாகி வளர்வதற்கு ஏற்ற சூழல் உருவானது

4

 

22

v  தேவையான உணவுப்பொருட்களைப் பாதுகாப்பான இடத்தில் வைத்துக்கொள்வேன்.

v  குடிநீரைச் சேமித்து வைத்துக்கொள்வேன்.

v  உணவைச் சிக்கனமாக பயன்படுத்துவேன்.

v  நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துவேன்.

v  வானொலியில் தரும் தகவல்களைக் கேட்டு, அதன்படி நடப்பேன்.

4

 

23

நாள், இடம்

அனுப்புதல்

பெறுதல்

விளித்தல்.பொருள்

கடிதச் செய்தி

இப்படிக்கு

உறைமேல் முகவரி

4

 

படிவம் நிரப்புக    ( 1*4=4 )

 

24.

·         கொடுக்கப்பட்ட விவரங்களை உரிய படிவத்தில் சரியாக நிரப்பி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

4

 

விரிவாக விடையளி  ( 1*6=6 )

 

25.

முன்னுரை

குடும்ப உறுப்பினர் ஆலோசனை

முருங்கைச் செடி

வளரும் முருங்கை

முருங்கையின் உறவு

பறவைகளின் இல்லம்

வீழ்ந்த முருங்கை

முடிவுரை

இது போன்று குறிப்புச்சட்டம் இட்டு விரிவான விடை எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்.

6

 

26.

குறிப்புச்சட்டகம்

முன்னுரை

தமிழின் தொன்மை

சான்றோர்களின் தமிழ்ப்பணி

தமிழின் சிறப்பு

முடிவுரை

இது போன்று குறிப்புச்சட்டம் இட்டு விரிவான விடை எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்.

6

 

விடைக்குறிப்பு தயாரிப்பு :

வெ.ராமகிருஷ்ணன்,       தமிழாசிரியர், அரசு உயர்நிலைப்பள்ளி,  வளைய செட்டிப்பட்டி www.tamilvithai.com                                                                        www.kalvivithaigal.com

CLICK HERE

Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post