எட்டா வகுப்பு - தமிழ்
புதிய பாடத்திட்டம் - 2025-26
இயல் - 8
கட்டுரை
கட்டுரை
எழுதுக.
உழைப்பே
உயர்வு.
முன்னுரை |
உழைப்பின்
பயன் |
உழைப்பின்
சிறப்பு |
உழைப்பால்
உயர்ந்தவர்கள் |
முடிவுரை |
முன்னுரை:
ஒருவரை வாழ்வில் உயர்த்துவது அவரது உழைப்பு தான். உழைப்பு
தன்னையும் தன் நாட்டையும் உயர்த்தும். உழைப்பின் சிறப்பினைக்
காண்போம்.
உழைப்பின்
பயன்:
நாம் செய்யும் ஒவ்வொரு செயலையும் மிகுந்த ஈடுபாட்டுடன் செய்தால்
மட்டுமே வாழ்வில் முன்னேற முடியும். இறைவனால் முடியாத காரியம் கூட
உழைப்பாலும் முயற்சியாலும் செய்ய முடியும் என்கிறது திருக்குறள்.
உழைப்பால் உடலும்
உள்ளமும் வலுப்பெறுகிறது.
உழைப்பின்
சிறப்பு:
உழைப்பே உயர்வு தரும் என்பது பழமொழி. உழைப்பால் வரும் பொருளே
என்றும் நிலைத்து நிற்கும். விலங்குகளும் பறவைகளும் தமக்குத்
தேவையான உணவைத் தாமே உழைத்து தேடிப் பெற்றுக் கொள்கின்றன.
உழைப்பில்லாமல் வரும் செல்வத்தை விட்டுவிட்டு உண்மையான
உழைப்பால் வரும் செல்வத்தை நாம் அனுபவிக்க வேண்டும்
உழைப்பால்
உயர்ந்தவர்கள்:
தாமஸ் ஆல்வா எடிசன், ஐன்ஸ்டின், ஜி.டி. நாயுடு, டாக்டர் அப்துல் கலாம்
ஆகிய எண்ணற்ற அறிஞர்கள் தம்முடைய கடின உழைப்பால் வாழ்வில்
முன்னேறி இருக்கிறார்கள் என்பதை அவர்களின் வாழ்க்கை வரலாறு நமக்கு
உணர்த்துகிறது.
முடிவுரை:
உழைப்பின் உயர்வினை உணர்ந்து, நாம் அனைவரும் நல்வழியில் கடின
உழைப்பு செய்து வாழ்வில் முன்னேற வேண்டும்.