9TH-TAMIL-NOTES OF LESSON-25-26 -AARAM THINAI

 

www.tamilvithai.com                                                           www.kalvivithaigal.com

ஆறாம் திணை

மாதம்        :       ஜூன்

இயல்        :        01

வகுப்பு       :       ஒன்பதாம் வகுப்பு    

 பாடம்        :       தமிழ்  

தலைப்பு     :       ஆறாம் திணை

-------------------------------------------------------------------------------------------------------------------

அறிமுகம்           :

Ø உங்களிடம் உள்ள பழைய துணிகள், பாத்திரங்கள் இவற்றை ஏதேனும் அனாதைஇல்லத்திற்கு வழங்கிய பழக்கம் உண்டா? எனக் கேட்டு அறிமுகம் செய்தல்.

கற்பித்தல் துணைக்கருவிகள்   :

Ø  ஒளிப்பட வீழ்த்தி, காணொலிக் காட்சி, வலையொளி பதிவுகள், ஒலிப்பெருக்கி, மடிக்கணினி, கைப்பேசி, எழுத்து அட்டைகள்

நோக்கம்                         :

Ø  புலம்பெயர் தமிழர்களின் வாழ்க்கை அனுபவங்களை அறிந்துகொள்ளுதல்

ஆசிரியர் குறிப்பு           :

(ஆசிரியர் செயல்பாடு )

Ø  புலம் பெயர்தல் பற்றிக்  கூறல்

Ø  புலம் பெயர்பவர்களின் வாழ்க்கைச் சூழலை செய்தித்தாள்

       செய்திகள் கொண்டுக் கூறல்

Ø  உலகம் எங்கும் தமிழர்கள் புலம் பெயர்ந்த நிகழ்வைக் கூறல்

Ø  புலம் பெயர்வதால் தோன்றும் இடர்பாடுகளைக் கூறல்

Ø  அகதிகள் முகாம் பற்றிக் கூறல்

 

கருத்து  வரைபடம்        :                             ஆறாம் திணை

விளக்கம்    :                                    ஆறாம் திணை

·        ஆசிரியர் அ.முத்துலிங்கம் என்பவர் புலம் பெயர்ந்த தமிழர்

·        இலங்கையில் நடந்த நிகழ்வு

·        உயிர் வாழும் திறமை

·        புலம் பெயர்தலில் ஏற்படும் வலிகளும் சிரமங்களும்

·        புலம் பெயர் இலக்கியம்

·        உலக அரங்கில் தமிழ்

·        பனியும் பனிசார்ந்த நிலமும்

காணொலிகள்              :

·         விரைவுத் துலங்கல் குறியீடு காணொலிகள்

·         கல்வித்தொலைக்காட்சி காணொலிகள்

·         வலையொளி காணொலிகள்

மாணவர் செயல்பாடு                 :

Ø புலம் பெயர்தல் , வீடு மாறுதல் வேறுபாட்டை உணர்தல்

Ø புலம் பெயர்வதில் ஏற்படும் வலிகளை உணர்தல்

Ø புலம் பெயர்வதில் உயிர்வாழும் திறமை பற்றி அறிதல்

Ø பனியும் பனி சார்ந்த நிலமும் ஆறாம் திணையாக 

உள்ளதை   அறிதல்

மதிப்பீடு     

LOT :

Ø ஆறாம் திணை என்ற நூலை எழுதியவர் __________

Ø கதையில் எந்த பகுதியில் போர் நடைபெற்றது?

MOT:

Ø புலம் பெயர்வதில் காணும் சிரமங்கள்களைக் குறிப்பிடுக.

Ø அகதிகள் முகாம் என்றால் என்ன?

HOT:.

Ø இயற்கை பேரிடர் நேரும் சமயங்களில் நீங்கள் எவ்வாறு

     மற்றவர்களுக்கு உதவிகரமாக இருப்பீர்கள்?

Ø அகதிகள் முகாமில் உங்களால் செய்ய முடிந்த 

     உதவிகளை   பட்டியலிடுக

குறைதீர் கற்றல்              :

Ø  மெல்லக் கற்கும் மாணவர்களுக்கு எளிய பகுதிகளாக  பிரித்து கற்பித்தல்

Ø  மீத்திற மாணவர்களைக் கொண்டு மெல்லக் கற்கும்

 மாணவர்களுக்கு பாடப்பகுதியினை விளக்குதல்.

கற்றல் விளைவு

        T-929- சிறுகதையின் மையக் கருத்து வாயிலாகச் சமூக மதிப்புகளை

       உணர்ந்து பின்பற்றுதல்

தொடர்பணி

பாடநூலில் உள்ள மதிப்பீட்டு வினாக்களுக்கு எழுதி வரச்செய்தல்.

 

 


Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post