பத்தாம் வகுப்பு
தமிழ்
புதிய பாடத்திட்டம் - 2025 -26
இயல் - 3
திருக்குறள்
சிறு வினாக்கள்
இளந்தமிழ் வழிகாட்டி
______________________________________________________________________________________________________
சிறு வினா
1) வேலொடு நின்றான் இடுஎன்றது போலும்
கோலொடு நின்றான் இரவு - இக்குறளில் பயின்று
வரும் அணியை விளக்குக.
அணி :
Ø ஒரு பொருளை அதனோடு
தொடர்புடைய மற்றொரு பொருளோடு ஒப்பிடுவது
உவமை அணி.
Ø உவமை, உவமேயம்,உவம உருபு இடம் பெறும்.
உவமை : வேல் போன்ற ஆயுதங்களைக் காட்டி வழிப்பறி
செய்பவன்
உவமேயம் : செங்கோல்
தாங்கி அதிகாரத்தால் வரிவிதிக்கும் மன்னன்.
உவமஉருபு : போலும்
2) ஒழுக்கமுடைமை அதிகாரத்தில் கூறிய கருத்துகளை வள்ளுவர் வழிநின்று விளக்குக.
Ø
ஒழுக்கமே
சிறப்பைத் தருவது.
Ø
ஒழுக்கத்தை
உயிரினும் மேலானதாய் பேணிக் காக்க வேண்டும்.
Ø
ஒழுக்கமாக
வாழ்பவர் மேன்மை அடைவர்.
Ø
ஒழுக்கம்
தவறுபவர் அடையக் கூடாத பழிகளை அடைவர்.
Ø உலகத்தோடு ஒத்து வாழாதவர். பல நூல்களைக் கற்றாராயினும் அறிவு
இல்லாதவராகக் கருதப்படுவார்.
தண்ணீர்
நிறைந்த குளம் தவித்தபடி வெளிநீட்டும் கை கரையில் கைப்பேசி படமெடுத்தபடி நீட்டிய கை என் உயிர் தவிப்பை பற்றி எழுது என்றது சுற்றியுள்ளவர்கள் என் விரும்புவோர் எண்ணிக்கை பற்றி எழுது என்றனர் நான் எழுதுகிறேன் மனிதம் காக்க வேண்டும் என்று… |
|
திருக்குறள் பற்றிய கவிதை
உரை(றை) ஊற்றி ஊற்றிப்
பார்த்தாலும்
புளிக்காத
பால்!
தந்தை தந்த
தாய்ப்பால்
முப்பால்! - அறிவுமதி