பத்தாம் வகுப்பு
தமிழ்
புதிய பாடத்திட்டம் - 2025 -26
இயல் - 3
திருக்குறள்
கூடுதல் வினாக்கள்
இளந்தமிழ் வழிகாட்டி
______________________________________________________________________________________________________
கூடுதல் திருக்குறள் அணி வினாக்கள்
1. நச்சப் படாதவன் செல்வம் நடுஊருள்
நச்சு மரம்பழுத் தற்று – இக்குறளில்
பயின்று வரும் அணியை விளக்குக.
விளக்கம் :
Ø ஒரு பொருளை அதனோடு தொடர்புடைய மற்றொரு பொருளோடு ஒப்பிட்டுக்
கூறுவது உவமை அணி.
Ø உவமை, உவமேயம், உவம உருபு ஆகியன இடம் பெறும்.
Ø உவமை உருபு வெளிப்படையாக வரும்.
அணி பொருத்தம் :
Ø உவமை : வேல் போன்ற ஆயுதங்களைக் காட்டி வழிப்பறி
செய்பவன்
Ø உவமேயம் : செங்கோல்
தாங்கி அதிகாரத்தால் வரிவிதிக்கும் மன்னன்.
Ø உவமஉருபு : போலும்
2. பண்என்னாம் பாடற் கியைபின்றேல் கண்என்னாம்
கண்ணோட்டம் இல்லாத
கண் – இக்குறளில் பயின்று வரும் அணியை விளக்குக.
Ø ஒரு பொருளை அதனோடு தொடர்புடைய மற்றொரு பொருளோடு ஒப்பிட்டுக்
கூறும்போது உவமை, உவமேயம் ஆகியன இடம் பெறும்.
Ø
உவம உருபு மறைந்து
வருவது எடுத்துக்காட்டு உவமை அணி
அணி பொருத்தம் :
Ø உவமை : பாடலோடு பொருந்தாத இசை
Ø உவமேயம் : இரக்கம் இல்லாத
கண்
Ø
திருக்குறள் – நூல் வெளி
திருவள்ளுவர் சிறப்பு :
Ø பெருநாவலர், முதற்பாவலர், பொய்யில் புலவர், செந்நா போதர்
முதலிய சிறப்புப் பெயர்கள் பெற்றவர்.
Ø காலம் : இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டவர்.
திருக்குறள் :
Ø திருக்குறள் உலகின் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
Ø அறம், பொருள், இன்பம் என்னும் முப்பால் பகுப்புக் கொண்டது.
Ø அறத்துப்பால் – 38 அதிகாரங்கள்,
v நான்கு இயல்கள் : பாயிரவியல், இல்லறவியல், துறவறவியல், ஊழியல்
Ø பொருட்பால் -
70 அதிகாரங்கள்
v மூன்று இயல்கள் : அரசியல், அமைச்சியல், ஒழிபியல்
Ø இன்பத்துப் பால் – 25 அதிகாரங்கள்
v
இரண்டு இயல்கள் : களவியல், கற்பியல், ஒழிபியல்
Ø 133 அதிகாரங்கள் , 1330 குறட்பாக்கள் கொண்டது.