மாதிரி இரண்டாம் இடைப்பருவத் தேர்வு – 2024
7 -ஆம் வகுப்பு தமிழ்
நேரம்
: 1.00 மணி மதிப்பெண்
: 30
I.
அனைத்து வினாக்களுக்கும் விடையளி:- 6×1=6
1. ஒருவர் தம் குழந்தைகளுக்குச்
சேர்த்து வைக்க வேண்டிய செல்வம்______.
அ) வீடு ஆ) கல்வி இ) பொருள் ஈ) அணிகலன்
2. பெண்களுக்கு நிகராகப் பாரதிதாசன்
கூறுவது________
அ) மயில் ஆ) குயில் இ) கிளி ஈ) அன்னம்
3 ’ஏடெடுத்தேன்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
அ) ஏடெடு + தேன் ஆ) ஏட்டு + எடுத்தேன் இ) ஏடு + எடுத்தேன் ஈ) ஏ + டெடுத்தேன்
4. என்று + உரைக்கும் என்பதனைச்
சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ________
அ) என்றுஉரைக்கும் ஆ) என்றிரைக்கும் இ) என்றரைக்கும் ஈ) என்றுரைக்கும்
5. ‘பள்ளித்
தலமனைத்தும் கோயில் செய்குவோம்’ என்று பாடியவர்
அ) திருக்குறளார் ஆ) திருவள்ளுவர் இ) பாரதியார் ஈ) பாரதிதாசன்
6. 'பெருங்கடல்'
என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _
அ) பெரு + கடல் ஆ) பெருமை + கடல் இ) பெரிய + கடல் ஈ) பெருங் + கடல்
II.
ஏவையேனும் ஐந்து வினாக்களுக்கு விடையளி 5×2=10
7.
நூல்களை எவ்வாறு படிக்க வேண்டும்?
8. இயற்சொல்லின்
நான்கு வகைகள் யாவை?
9. கப்பலின்
உறுப்புகள் சிலவற்றின் பெயர்களை எழுதுக.
10.
பதத்தின் வகைகள் யாவை?
11.
கல்வி அறிவு இல்லாதவர்கள் பற்றி வள்ளுவர் கூறுவது யாது?
12. பாரதிதாசன் மனதைக் கவர முயன்ற இயற்கைப்
பொருட்கள் யாவை?
13.
நாவாய் ஓட்டிகளுக்குக் காற்று எவ்வாறு துணைசெய்கிறது?
III.
அடிமாறாமல் எழுதுக 1×4=4
14.
‘ வானம் ஊன்றிய ‘ எனத் தொடங்கும் கலங்கரை விளக்கம் பாடலை அடிமாறாமல் எழுதுக.
IV) ஏதேனும் ஒன்றனுக்கு
மட்டும் விடையளி 1×5=5
15.
அ) பயணங்கள் பலவகை – முன்னுரை – பயணத்தின் தேவை – தரைவழிப் பயணம் – கடல்வழிப் பயணம்
– வான்வழிப் பயணம் - முடிவுரை ( அல்லது )
ஆ) உங்கள் பகுதியில் நூலகம்
ஒன்று அமைத்துத்தர வேண்டி நூலக ஆணையருக்குக் கடிதம் எழுதுக.
V) அனைத்து வினாக்களுக்கும் விடையளி 1×5=5
16.
ஓர் எழுத்துச் சொற்களால் நிரப்புக. அ.
____________ புல்லை மேயும் ஆ. _______ பறக்கும்
17.சரியான சொல்லைக் கொண்டு நிரப்புக.
( நீ, அவர்கள், உன் )
அ)
_______________ பெயர் என்ன? ஆ) _______________ வந்து கொண்டு இருக்கிறார்கள்.
18.
கலைச்சொல்
அறிக:- அ) HARBOUR ஆ) DEGREE
19. பொருத்தமான காலம் அமையுமாறு
திருத்தி எழுதுக.
அ) அமுதன்
நேற்று வீட்டுக்கு வருவான் ஆ). கண்மணி
நாளை பாடம் படித்தாள்
20.
பின்வரும் தொடரில் மூவிடப் பெயர்களைக் காண்க.
இவர் தான் உங்கள் ஆசிரியர்
clickhere to get pdf