10TH-TAMIL-2ND MID-TERM-2024-25 - QUESTION PAPER- 2

  

மாதிரி இரண்டாம் இடைத் தேர்வு-2 – 2024

10 -ஆம் வகுப்பு                                    தமிழ்                                             இயல் : 7,8,9

நேரம் : 1.30 மணி                                                                                         மதிப்பெண் : 50

அ. அனைத்து வினாக்களுக்கும் விடையளி:-                                                             5×1=5

1. ‘ மாலவன் குன்றம் போனாலென்ன? வேலவன் குன்றமாவது எங்களுக்கு வேண்டும் ‘ – மாலவன் குன்றமும் வேலவன் குன்றமும் குறிப்பவை முறையே –

அ) திருப்பதியும்,திருத்தணியும்                 ஆ) திருத்தணியும்,திருப்பதியும்

இ) திருப்பதியும் திருச்செந்தூரும்  ஈ) திருப்பரங்குன்றமும் பழனியும்

2. சிலப்பதிகாரத்திலும் மணிமேகலையிலும் அமைந்த பாவினம் __

அ) அகவற்பா ஆ) வெண்பா   இ) வஞ்சிப்பா         ஈ) கலிப்பா

3. . வாய்மையே மழைநீராக – இத்தொடரில் வெளிப்படும் அணி ___

) உவமை             ) தற்குறிப்பேற்றம் ) உருவகம் ) தீவகம்

4. சுதந்திர இந்தியாவின் மகத்தான சாதனையும் சவாலுமாக ஜெயகாந்தன் கருதுவது

) அரசின் நலத்திட்டங்களைச் செயல்படுத்துதல்

) பெற்ற சுதந்திரத்தைப் பேணிக் காத்தல்

) அறிவியல் முன்னேற்றம்         ) வெளிநாட்டு முதலீடுகள்

5.  ஊர் பெயரின் மரூஉவைத் தேர்க: - நாகப்பட்டினம்

) நாகை     ) பட்டினம்           ) நாகைப்பட்டினம்           ) நாகுபட்டினம்

ஆ. பாடலைப் படித்து பின்வரும் வினாக்களுக்கு விடையளிக்க:-                                   4×1=4

          மாவே வடுபடுவன

                   மாமலரே கடியவாயின

          காவுகளே கொடிவாயின

                   கள்ளுண்பன வண்டுகளே

          பொய்யுடையன வரைவேயே

                   போர்மலைவன எழுகழனியே

6. இப்பாடல் இடம் பெற்ற மோனைச் சொற்களைத் தேர்ந்தெடுக்க

அ. மாவே – கடியவாயின                        ஆ. காவுகளே – வண்டுகளே

இ. பொய்யுடையன – எழுகழனி               ஈ. மாவே - மாமலரே

7. இப்பாடல் இடம்பெற்ற நூல்

அ. முல்லைப்பாட்டு            ஆ. மெய்க்கீர்த்தி      இ. நீதிவெண்பா         ஈ. தேம்பாவணி

8. இப்பாடலில் இடம் பெற்றுள்ள இயைபுச் சொற்களைத் தேர்க _______

அ. காவுகளே – கள்ளுண்பன                  ஆ. பொய்யுடையன – போர்மலைவன

 இ. மாவுகளே – காவுகளே                        ஈ. வண்டுகளே – எழுகழனியே

9. எழுகழனி  என்பதன் இலக்கணக் குறிப்புத் தருக _____

அ. உவமை            ஆ. வினைத் தொகை         இ. பெயரெச்சம்        ஈ. வினையெச்சம்

. எவையேனும் ஏழு வினாக்களுக்கு விடையளிக்க.                                     7×2=14

10. வறுமையிலும் படிப்பின் மீது நாட்டம் கொண்டவர் ம.பொ.சி என்பதற்குச் சான்று தருக.

11. குறள் வெண்பாவின் இலக்கணம் எழுதி எடுத்துக்காட்டுத் தருக.

12. வஞ்சிப்பாவிற்கு உரிய ஓசை தூங்கல் ஓசை ஆகும். துள்ளல் ஓசை கலிப்பாவுக்கு உரியது. இத்தொடர்களை ஒரே தொடராக இணைத்து எழுதுக.

13. “ காய்மணி யாகு முன்னர்க் காய்ந்தெனக் காய்ந்தேன் “ – உவமை உணர்த்தும் கருத்து யாது?

14. காலக் கழுதை கட்டெறும்பானதும் கவிஞர் செய்வது யாது?

15. தொகைச் சொற்களைப் பிரித்து எழுதி,தமிழ் எண்ணுரு தருக .

          மூவேந்தர்களால் நாற்றிசையும் போற்றி வளர்க்கப்பட்டது முத்தமிழே.

16. பின் வரும் உரையாடலில் உள்ள பேச்சு வழக்கினை எழுத்து வழக்காக மாற்றுக;-

தம்பீ? எங்க நிக்கிறே?”

நீங்க சொன்ன எடத்துலதாண்ணே! எதிர்த்தாப்புல ஒரு டீ ஸ்டால் இருக்குது.”

17. ‘ வாழ்வில் தலைக்கனம்’, ‘தலைக்கனமே வாழ்வு’ என்று நாகூர்ரூமி யாருடைய வாழ்வைக் குறித்துக் கூறுகிறார்?.

18. நான் எழுதுவதற்கு ஒரு தூண்டுதலும் அதற்குரிய காரணமும் உண்டு – இத்தொடரை இரு தொடர்களாக்குக.

19. கலைச்சொல் அறிக:-    அ)  Belief      ஆ) patent

ஈ. மனப்பாடப் பகுதி                                                                                                                1×4=4

20. “ நவமணி வடக்கயில்“ எனத் தொடங்கும் தேம்பாவணி  பாடல்

உ)  ஏதேனும் இரண்டு வினாக்களுக்கு விடையளி:-                                                         2×3=6

21. சங்க இலக்கியங்கள காட்டும் அறங்கள் இன்றைக்கும் தேவையானவையே என்பதற்குச் சில எடுத்துக்காட்டுகள் தருக.

22. வன்கண் குடிகாத்தல் கற்றறிதல் ஆள்வினையோ

டைந்துடன் மாண்ட தமைச்சு – இக்குறளை அலகிட்டு வாய்பாடு தருக.

23 . “ சித்தாளின் மனச்சுமைகள்

செங்கற்கள் அறியாது “  - இடஞ்சுட்டிப் பொருள் எழுதுக..

ஊ)  ஏதேனும் இரண்டு வினாக்களுக்கு விடையளி:-                                                        2×5=10

24. உங்கள் தெருவில் மின்விளக்குகள் பழுதடைந்துள்ளன அதனால் இரவில் சாலையில் நடந்து செல்வோருக்கு ஏற்படும் இடையூறுகளை எழுதி ஆவன செய்யும்படி மின்வாரிய அலுவலருக்கு கடிதம் எழுதுக.

25. ஆசிரியப்பாவின் பொது இலக்கணத்தை எழுதுக.

26. கதவு எண் 66, திருவள்ளுவர் தெரு, திருச்சி என்ற முகவரியில் வசிக்கும் மாணிக்கம் என்பவரின் மகன் அறிவழகன் என்பவர் ஸ்ரீரங்கம் அரசு மேல் நிலைப்பள்ளியில் கணிதப் பாடப்பிரிவில் ஆங்கில வழியில் சேர விரும்புகிறார்.. தேர்வர் தம்மை அறிவழகனாகப் பாவித்து கொடுக்கப்பட்டுள்ள படிவத்தை நிரப்புக.

எ) ஏதேனும் ஒன்றனுக்கு விரிவாக விடையளி                                                                 1×7=7

27. அ)    கருணையனின் தாய் மறைவுக்கு,வீரமாமுனிவர் தம் பூக்கள் போன்ற உவமைகளாலும் உருவக மலர்களாலும் நிகழ்த்திய கவிதாஞ்சலியை விவரிக்க. ( அல்லது )

ஆ) குறிப்புகளைக் கொண்டு ஒரு பக்க அளவில் நாடகம் எழுதுக.

மாணவன்கொக்கைப் போல,கோழியைப் போலஉப்பைப் போலஇருக்க வேண்டும்கொக்கு காத்திருந்து கிடைக்கும் வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளும்குப்பையைக் கிளறினாலும் தனது உணவை மட்டுமே எடுத்துக்கொள்ளும் கோழிகண்ணுக்குத் தெரியாவிட்டாலும் உப்பின் சுவையை உணரமுடியும்ஆசிரியர் விளக்கம்மாணவன் மகிழ்ச்சி.

CLICK HERE TO GET PDF

CLICK HERE


Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post