9TH-TAMIL-NOTES OF LESSON - UNIT 6 - SEYTHI

 

www.tamilvithai.com                                                www.kalvivithaigal.com

மாதம்             :      நவம்பர்

வாரம்              :        இரண்டாம் வாரம்

வகுப்பு            :      ஒன்பதாம் வகுப்பு    

 பாடம்             :      தமிழ்  - இயல் - 6

தலைப்பு          :      செய்தி


அறிமுகம்           :

Ø  உங்களுக்கு பிடித்த இசைக் கருவிகள் எது? ஏன்?

கற்பித்தல் துணைக்கருவிகள்   :

Ø  ஒளிப்பட வீழ்த்தி, காணொலிக் காட்சி, வலையொளி பதிவுகள், ஒலிப்பெருக்கி, மடிக்கணினி, கைப்பேசி, எழுத்து அட்டைகள்

நோக்கம்                         :

Ø  சிறுகதை அமைப்பில் தமிழர் இசைக்கலையின் சிறப்பை உணர்தல்

ஆசிரியர் குறிப்பு           :

(ஆசிரியர் செயல்பாடு )

Ø  பாடப்பொருளை ஆர்வமூட்டல்

Ø  மாணவர்கள் பிழையின்றி வாசித்தல்

Ø  இசைப் பற்றிய கதையினை கூறல்

Ø  இசைக்கு நாடு,மொழி,இனம் அவசியம் இல்லை என்பதனை உணர்த்துதல்

Ø  சிறு கதையினை பத்தி வாரியாகப் பிரித்து வாசித்தல்

கருத்து  வரைபடம்        :          செய்தி

விளக்கம்    :                            செய்தி

Ø  தி,ஜானகிராமன் அவர்களின் சிறுகதை

Ø  நாகசுர வித்துவான் இசைக்கு  பிலிப் போல்ஸ்கா என்பவர் தன்னிலை மறந்து ஆடியவர்.

Ø  சாமா ராகம் பாடினார்

Ø  சாந்தமுலேகா என்னும் கீர்த்தனை பிலிப் போல்ஸ்காவை மயங்க வைத்தது

காணொலிகள்              :

·         விரைவுத் துலங்கல் குறியீடு காணொலிகள்

·         கல்வித்தொலைக்காட்சி காணொலிகள்

·         வலையொளி காணொலிகள்

மாணவர் செயல்பாடு                 :

Ø  சிறு கதைப் பற்றி அறிதல்

Ø  செய்தி என்னும் கதை வாயிலாக இசையைப் பற்றி உணர்தல்

Ø  ஆலாபனை, கீர்த்தனைகளை பற்றி அறிதல்

மதிப்பீடு              :

LOT :

Ø  செய்தி என்னும் கதையில் வரும் இசைக் கருவி எது?

Ø  இசைக்கருவிகளில் காற்றுக்கருவிகள் எவையெவை?

MOT:

Ø பிலிப் போல்ஸ்கா மயங்கிய இசை எது?

Ø இசைக்கு நாடு, இனம்,மொழி பேதம் இல்லை என்னும் கருத்துக் குறித்து உன்னுடைய கருத்தினைக் கூறுக.

HOT:.

Ø  உலகில் அமைதியை நிலவச் செய்வதில் இசைக்கு நிகர் வேறெதுவும் இல்லை – இத்தொடர் குறித்து கூறுக

Ø  பாடப்பகுதியில் உனக்குப் பிடித்த செய்யுளை இனிய இராகத்தில் பாடுக.

கற்றல் விளைவுகள்                  :

செய்தி

T929 சிறுகதையின் மையக்கருத்து வாயிலாகச் சமூக மதிப்புகளை உணர்ந்து பின்பற்றுதல்.

தொடர் பணி         :

Ø  புத்தக மதிப்பீட்டு வினாக்களுக்கு விடை எழுதி வருமாறுக் கூறல்

________________________________________

நன்றி, வணக்கம் – தமிழ்விதை

Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post