10TH-TAMIL-CHENNAI - 3RD REV-ANSWER KEY - PDF

 

மூன்றாம் திருப்புதல் தேர்வு-2024 மார்ச் , சென்னை மாவட்டம்

10.ஆம் வகுப்பு தமிழ்-விடைக்குறிப்புகள்

                                                                பகுதி-1                                                     15X1=15

வினா எண்

விடைக்குறிப்புகள்

மதிப்பெண்

1.      

ஈ.கரகாட்டத்தின் வேறு பெயர்கள் யாவை?

1

2.     

ஆ. இன்மையிலும் விருந்து

1

3.     

ஆ. அருமை, முயற்சி

1

4.     

இ. உருவகம்

1

5.     

ஈ. கும்பகோணம் – குடந்தை

1

6.     

இ. அன்மொழித்தொகை

1

7.     

இ. பொருநராற்றுபடை

1

8.     

அ. இரக்கம்

1

9.     

இ. காடு,வாட

1

10.   

இ.குறிஞ்சி,மருதம்,நெய்தல் நிலங்கள்

1

11.    

இ. குழந்தையே வா

1

12.  

அ. வீரமாமுனிவர்

1

13.  

ஆ. தேம்பாவணி

1

14.  

இ. பூக்கையை - சேக்கையை

1

15.  

ஆ. படுக்கை

1

 

 

 

பகுதி-2

                                                             பிரிவு-1                                                4X2=8

எவையேனும் நான்கு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க

16

.ஆ வினாக்களுக்குப் பொருந்திய விடை எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்குக.

2

17

ஏளனம் செய்யாமல் பொருள் கொடுப்பவரைக் காணும் போது உள்ளத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.

2

18

·         பாசவர்வெற்றிலை விற்போர்

·         வாசவர்நறுமணப் பொருள் விற்போர்

·         பல்நிண வினைஞர்இறைச்சிகளை விற்பவர்

·         உமணர்உப்பு விற்பவர்

2

19

ஒல்லியான தண்டுகளே மென்மையான பெரிய மலர்களைத் தாங்குகின்றன. அதுபோல, மென்மையான அன்பே பெரிய உலகத்தைத் தாங்குகின்றது.

2

20

·         தம்பி அழாதே! உனக்கு அப்பா பொம்மைகள் வாங்கி வருவார்

·         உனக்கு நிறைய திண்பண்டங்கள் வாங்கி வருவார்

2

21

செயற்கை அறிந்தக் கடைத்தும் உலகத்

  தியற்கை அறிந்து செயல்

2

 

 

                                                               பிரிவு-2                                                    5X2=10

எவையேனும் ஐந்து வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க

22

அ. சிலப்பதிகார காப்பியச் சுவைக்கு ஈடு  உண்டா?

ஆ. சனிக்கிழமை பள்ளிக்கு விடுமுறை நாள் அல்லவா?

2

23

மயங்கிய – மயங்கு + இ(ன்)+ய்+அ

மயங்கு – பகுதி, இ(ன்) – எதிர்மறை புணர்ந்து கெட்டது. ய் – உடம்படுமெய், அ- பெயரெச்ச விகுதி

2

24

. பசும், மஞ்சள்   . கருக்க இ. வெள்ளந்தி

2

25

அ. அமுதமும் நஞ்சு       ஆ. ஒரு சோறு பதம்

2

26

கொடுப்பதூஉம் துய்ப்பதூஉம்    -      இன்னிசை அளபெடை

2

27

பாடப்படும் ஆண்மகனின் ஒழுகலாறுகளைக் கூறுவது பாடாண்திணை.

2

28

அ. ஒப்பெழுத்து

ஆ. மனித நேயம்

2

 

செவி மாற்றுத் திறனாளர்களுக்கான மாற்று வினா

தேனிலே ஊறிய செந்தமிழின்சுவை

தேறும் சிலப்பதி காமதை

 ஊனிலே எம்முயிர் உள்ளளவும்நிதம்

ஓதி யுர்ந்தின் புறுவோமே

 கவிமணி தேசிக விநாயகனார்

 

 

 

பகுதி-3  (மதிப்பெண்கள்:18)

                                                                பிரிவு-1                                                         2X3=6

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க

29

    சோலைக் காற்று :                 மின் விசிறிக் காற்றே ! நலமா?

மின் விசிறிக் காற்று :      நான். நலம். உனது  இருப்பிடம் எங்கே?

சோலைக்காற்று :           அருவி,பூஞ்சோலை,மரங்கள். உனது இருப்பிடம் எங்கே?

மின் காற்று :                   அறைகளின் சுவர்களின் இடையில். எனது இருப்பிடம்

சோலைக்காற்று :           என்னில் வரும் தென்றல் காற்றை அனைவரும் விரும்புவர்.

மின்  காற்று :                  விரும்பியவர்கள் மின் தூண்டுதல் மூலம் என்னைப்

                                       பெறுவர். எண்ணிக்கையின் அடிப்படையில் வேகம்

                                      கொள்வேன்

சோலைக் காற்று :           இலக்கியங்களில் நான் உலா வருவேன். அனைவரும்

                                      விரும்பும் விதமாக இருப்பேன்.

மின் காற்று :                நான் இல்லாமல் அலுவலகம் இல்லை. மின்சாரம் இல்லையெனில் நான் இல்லை.  என்னை விரும்பும் நேரங்களில் இயக்கிக் கொள்ளலாம்.

3

30

Ø  வணிக நோக்கமின்றி அறம் செய்ய வேண்டும். அதை விளம்பரப்படுத்தக்கூடாது.

Ø  நீர்நிலை பெருக்கி,நிலவளம்கண்டு,உணவுப் பெருக்கம் காணவேண்டும் என்று கூறுவது இன்றைய அரசியல் தலைவர்களுக்குப் பொருந்தும்

3

31

அ. உழைப்பாளிகள்

. மகிழ்ச்சி எனும் கனி கொடுத்துக் கவலையைப் போக்குகின்றன.

. வாழ்க்கையைக் காட்டும் கண்ணாடி, பண்பாட்டின் கூறு

3

 

                                                                                   பிரிவு-2                                                               2X3=6

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க

32

·                     அவன் திருவடிகளில் அணிந்த பொன்னாலாகிய கிண்கிணிகளோடு சிலம்புகளும் சேர்ந்து ஆடுகின்றன .

·                     இடையில் அரைஞாண் மணியோடு ஒளி வீசுகின்ற அரைவடங்கள் ஆடுகின்றன

·                     நெற்றியில் சுட்டிப் பதிந்தாடுகின்றன.

·                     காதுகளில் குண்டலமும்,குழையும் அசைந்தாடுகின்றன

3

33

மருத்துவர் கத்தியால் அறுத்துச் சுட்டாலும் அது நன்மைக்கே என நோயாளி மருத்துவரை நேசிப்பார். அதுபோல நீங்காத துன்பத்தை எனக்குத் தந்தாலும் உன் அருளையே எதிர்பார்த்து வாழ்கிறேன்.

3

34

.

    சிறுதாம்பு தொடுத்த பசலைக் கன்றின்

உறுதுயர் அலமரல் நோக்கி, ஆய்மகள்

நடுங்கு சுவல் அசைத்த கையள், “ கைய

கொடுங்கோற் கோவலர் பின்நின்று உய்த்தர

இன்னே வருகுவர்,தாயார்” என்போள்

நன்னர் நன்மொழி கேட்டனம்                                 - நப்பூதனார்

.

 

மாற்றம் எனது மானிடத் தத்துவம்;

மாறும் உலகின் மகத்துவம் அறிவேன்!

எவ்வெவை தீமை எவ்வெவை நன்மை

என்ப தறிந்து ஏகுமென் சாலை!

தலைவர் மாறுவர்; தர்பார் மாறும்;

தத்துவம் மட்டுமே அட்சய பாத்திரம்!

3

                                                                                          பிரிவு-3                                                          2X3=6

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க.

35

அறிதல்

அறியாமை

புரிதல்

புரியாமை

தெரிதல்

தெரியாமை

பிறத்தல்

பிறவாமை

3

36

அணி: நிரல் நிறை அணி. சொல்லையும் பொருளையும் வரிசையாக நிறுத்திப் பொருள் கொள்வது.

.கா: அன்புக்கு அறன், பண்புக்குப் பயன்

3

37

சீர்

அசை

வாய்பாடு

கரு-மம்

நிரை+நேர்

புளிமா

சிதை-யா-மல்

நிரை+நேர்+நேர்

புளிமாங்காய்

கண்+ணோ+ட

நிரை+நேர்+நேர்

புளிமாங்காய்

வல்-லார்க்

நேர்+நேர்

தேமா

குரி-மை

நிரை+நேர்

புளிமா

உடைத்-திவ்

நிரை+நேர்

புளிமா

உலகு

நிரைபு

பிறப்பு

3

 

                                               பகுதி-4                                                             5X5=25

அனைத்து வினாக்களுக்கும் விடையளி

38

)

சுந்தரனார் வாழ்த்து

பெருஞ்சித்திரனார் வாழ்த்து

கடலெனும் ஆடை உடுத்திய நிலமகளுக்கு முகம் பாரத கண்டம்

மண்ணுலகப் பேரரசி

நெற்றியில் மணம் வீசூம் திலகமாக தமிழ்நாடு

சங்க இலக்கியங்கள் அணிகலன்கள்

எல்லா திசைகளில் உன் புகழ்

தும்பி போல உன்னை சுவைத்து உன் பெருமையை எங்கும் முழங்குகின்றோம்

 

(அல்லது)

)

v  ஒரு பொருளாக மதிக்கத் தகாதவரையும் மதிப்புடையவராகச் செய்வது செல்வம்.அஃது அல்லாமல் உலகில் சிறந்த பொருள் வேறு இல்லை.

v  முறையறிந்து தீமையற்ற வழியில் சேர்த்த பொருள் ஒருவருக்கு அறத்தையும் தரும்;இன்பத்தையும் தரும்.

v  மற்றவர்களிடம் இரக்கமும் அன்பும் இல்லாமல் ஈட்டும் பொருளை ஏற்றுக் கொள்ளாமல் நீக்கிவிட வேண்டும்.

v  தன் கைப்பொருளைக் கொண்டு ஒருவர் ஒரு செயலைச் செய்வது, மலைமேல் பாதுகாப்பாக நின்று கொண்டு யானைப்போரைக் காண்பது போன்றது.

v  ஒருவர் பொருளை ஈட்ட வேண்டும்; அவருடைய பகைவரை வெல்லும் கூர்மையான ஆயுதம் அதைவிட வேறு இல்லை.

5

39

)

புகார் விண்ணப்பம்

அனுப்புநர்

                   அ அ அ அ அ,

                   100,பாரதி தெரு,

                   சக்தி நகர்,

                   சேலம் – 636006.

பெறுநர்

          உணவு பாதுகாப்பு ஆணையர் அவர்கள்,

          உணவு பாதுகாப்பு ஆணையம்,

          சேலம் – 636001

ஐயா,

பொருள்: காலவதியான உணவுப் பொருள் விற்பனை செய்த அங்காடி மீது நடவடிக்கைசார்பு

      வணக்கம். நான் நேற்று சேலத்தில் அன்பு அங்காடியில் துரித உணவு ஒன்றை வாங்கினேன். அது கெட்டுப் போனதாகவும் மேலும் அது குறிப்பிட்ட நாளைத் தாண்டிய  காலவதியான உணவுப் பொட்டலமாகவும் இருந்தது.இத்துடன் அந்த உணவிற்கான விலை இரசீது நகல் மற்றும் உணவு பொட்டலம் இணைத்துள்ளேன். தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு பணிவுடன் வேண்டுகிறேன்.

நன்றி.

 

இணைப்பு:                                                                                                                    

1. விலை இரசீதுநகல்                                                                                                            

2. உணவுப் பொட்டலம்

தங்கள் உண்மையுள்ள,

                                                                                                                                                                             அ அ அ

இடம் : சேலம்        

நாள் : 04-03-2021

உறை மேல் முகவரி:

 

 

பெறுநர்

          உணவு பாதுகாப்பு ஆணையர் அவர்கள்,

உணவு பாதுகாப்பு ஆணையம்,

            சேலம் – 636001

 

 
 

 

 

 

 


)

வாழ்த்து மடல்

சேலம்,

03-03-2021.

அன்புள்ள நண்பனுக்கு,

          நான் நலம். நீ அங்கு நலமா? என அறிய ஆவல்.உங்கள் பகுதியில் மழை வெள்ளத்தால் சாலைகளில் வீழ்ந்து கிடந்த மரங்கள், மின் கம்பங்கள் போன்றவற்றை அகற்றும் பணியில் அரசுடன் இணைந்து பணியாற்றி, மாவட்ட ஆட்சியரிடம் பாராட்டும், பரிசும் பெற்றதை அறிந்தேன். நீ இன்னும் பல அறச் செயல்களை செய்து பரிசுகள் பெற வாழ்த்துகிறேன்.

இப்படிக்கு,

உன் அன்பு நண்பன்,

அ அ அ அ அ அ அ .

உறைமேல் முகவரி;

          பெறுதல்

                   திரு.இரா.இளங்கோ,

                   100,பாரதி தெரு,

                   சேலம்.

 

5

40

காட்சிக்குப் பொருந்திய வரிகளை எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்குக.

5

41

படிவங்களில் அனைத்து படிநிலைகளும்  நிரப்பி இருப்பின் மதிப்பெண் வழங்குக.

5

42

)

1. புறம் பேசாதிருத்தல்

1. தேவையற்றச் சண்டைகள் நீங்கும்

2. பழிவாங்கும் எண்ணத்தை கைவிடல்

2. மன அமைதிப் பெறலாம்.

3. உண்மை பேசுதல்

3. நம் வாழ்வை உயர்த்தும், அச்சமின்றி வாழலாம்

4. உதவி செய்தல்

4. மன மகிழ்ச்சி கிடைக்கும்

5. அன்பாய் இருத்தல்

5. அனைவரும் நண்பராகிவிடுவர்

 

)

        சங்க கால இலக்கியத்தில் ஐவகை நிலங்களில் மருதம் பயிரிட ஏற்றது. அங்குதான் செழிப்பான விளைநிலங்கள் உள்ளன. விவசாயியின் உண்மையான உழைப்பின் பலன் தகுந்த சூரிய ஒளி,பருவ மழை மற்றும் மண்வளம் ஆகியவற்றை சார்ந்திருக்கிறது. ஆனாலும் அனைத்திலும் சிறந்ததாக சூரிய ஒளியே தமிழர்களால் தவிர்க்க முடியாத ஒன்றாய் குறிப்பிடப்பட்டுள்ளது.                

5

 

[i]செவி மாற்றுத்திறனாளர்களுக்கான மாற்று வினா

அ. புல மக்கள்

ஆ. தாள், இலை,தோகை, ஓலை

இ. உயர்ந்த பகுத்தறிவுடையவர்

ஈ. இலை

உ. தமிழ்ச் சொல்வளம்

 

 

பகுதி-5                                                             3X8=24

எல்லா வினாக்களுக்கும் விடையளிக்க:

43

 )  

·             காலமாற்றத்தால் வீட்டின் முன்புறம் திண்ணை வைத்து யாரும் வீடு கட்டுவதில்லை. காரணம் சமூக விரோதிகள், சமூகத்திற்குத் தீங்கு விளைவிப்போர் இரவில் தங்கும் இடமாக மாறி வருவதால் இவை காணப்படுவதில்லை.

·         திருவிழாக்காலங்களில் தங்களுடைய உறவினர்களை அழைத்து விருந்து படைப்பதே இன்றைய விருந்தோம்பலாக மாறியுள்ளது.

·         முன் பின் அறிமுகம் இல்லாதவர்களை இன்றைய சூழலில் யாரும் வீட்டில் அனுமதிப்பதில்லை.

(அல்லது)

)

வாசிப்போம்                                                                                             நேசிப்போம்

இதழ் வெளியீடு

இதழ்           :         ஜெயகாந்தன் நினைவுச் சிறப்பிதழ்

எழுத்தாளர்  :         ஜெயகாந்தன் ( சிறுகதை மன்னன் )

இனி வாராவாரம் ஆரவாரம். வாரந்தோறும் ஜெயகாந்தன் அவர்களின் கதைகள் நமது இதழின் நடுப்பக்கத்தில் வெளிவரும்.

இப்போது பரபரப்பான விற்பனையில்.....

இது தமிழ்விதை வார இதழ் வெளியீடு.

உங்கள் பிரதிக்கு முந்துங்கள்…..

நன்றி

 

8

44

.

குறிப்புச்சட்டம்

முன்னுரை

மேரி

அவமானம்

புதிய நம்பிக்கை

கல்வி

உதவிக்கரம்

மேல்படிப்பு

முடிவுரை

முன்னுரை :

        மேரியிடமிருந்து பறிக்கப்பட்ட புத்தகம், அச்சிறுமியின் வாழ்க்கையில் கல்விச் சுடரை ஏற்றிய கதையைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

மேரி :

·         சாம்பாட்ஸி இணையருக்கு மகளாகப் பிறந்தவள் மேரி.

·         பருத்திக்காட்டில் வேலை செய்து தங்கள் குடும்பத்தை நடத்துகிறார்கள்.

அவமானம் :

·         மேரி பாட்ஸியுடன் பென்வில்ஸன் வீட்டிற்கு செல்கிறார்கள்.

·         மேரி அந்த வீட்டின் அலமாரியிலிருந்த புத்தகத்தை எடுக்கிறாள்.

·         பென்வில்ஸன் இளையமகள் அவளிடமிருந்து புத்தகத்தை பிடிங்கினாள்.

·         உனக்குப் படிக்கத் தெரியாது எனக் கூறினாள்.

·         மேரி மனம் துவண்டாள்.

புதிய நம்பிக்கை

·         மேரிக்குப் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் உண்டானது.

·         ஒரு நாள் மிஸ் வில்ஸன் என்பவர்உன் போன்ற குழந்தைகள் படிக்க வேண்டும். நீ சீக்கிரமாக மேயெஸ் வில்லிக்கு வர வேன்டும்.

·         மேரிக்குப் புதிய நம்பிக்கை பிறந்தது.

கல்வி

·         மேரி ஐந்து மைல்கள் நடந்து சென்று கல்வி கற்றாள்.

·         சில வருடங்கள் கழித்து மேரிக்கு பட்டமளிப்பு விழா நடந்தது.

·         அதில் இந்தப் பட்டம் பெறும் மாணவர் எழுதவும் படிக்கவும் கூடியவர் “ என எழுதப்பட்டிருந்தது.

உதவிக்கரம்

·         மிஸ்வில்சன் மூலம் மேரிக்கு மீண்டும் ஒரு நல்ல செய்தி

·         அவளின் மேல்படிப்பு செலவுக்காக மேற்குப் பகுதியில் வாழ்கின்ற வெள்ளைக்கார பெண் மணி பணம் அனுப்பி இருக்கிறார்.

·         அவள் மேல் படிப்புக்காக டவுனுக்குச் செல்கிறாள்.

மேல்படிப்பு

·         மேரியை மேல்படிப்பு படிப்பதற்காக வழியனுப்ப இரயில் நிலையத்தில் அவளது கிராமமே திரண்டு வந்தது.

·         மிஸ் வில்ஸனும் இரயில் நிலையத்திற்கு வந்தார்.

முடிவுரை

        எப்படிப்பட்ட நிலையிலும் கல்வி நம்மை உயர்த்தும் என்பதற்கு மேரியின் வாழ்க்கையை நாம் உதாரணமாகக் கொள்ளலாம். மேரியிடமிருந்து பறிக்கப்பட்டப் புத்தகம் அவள் வாழ்க்கையில் கல்விச் சுடரை ஏற்றியது என்பதனை இக்கட்டுரை வழியாகக் கண்டோம். (அல்லது)

.

குறிப்புச்சட்டம்

முன்னுரை

பேரண்டம்

கருந்துளைகள்

தலைவிதி

திரும்புதல்

முடிவுரை

முன்னுரை :

          அறிவியலாளர் ஸ்டீபன் ஹாக்கிங் என்பவருடன் விண்வெளிப் பயணம் மூலம் கிடைத்த கருத்தையும், அனுபவத்தையும் இக்கட்டுரை வாயிலாகக் காணலாம்.

பேரண்டம் :

        இப்பேரண்டம் பெருவெடிப்பினால் உருவானது என்பதற்கானச் சான்றுகளைக் கணிதவியல் அடிப்படையில் எங்களுக்கு விளக்கினார்.

கருந்துளைகள்:

        ஞாயிறு ஒரு விண்மீன். ஒரு விண்மீன் ஆயுள் கால முடிவில் உள்நோக்கிய ஈர்ப்பு விசை கூடுகிறது. அதனால் விண்மீன் சுருங்கத் தொடங்குகிறது. இதனால் அதன் ஈர்ப்பாற்றல் உயர்ந்து கொண்டே செல்கிறது என விளக்கினார்.

கருந்துளைகள்:

        விண்மீனின் ஈர்ப்பெல்லைக்குள் செல்கிற எதுவும், ஒளி கூடத் தப்ப முடியாது. இவ்வாறு உள்ளே சென்ற யாவையும் வெளிவர முடியாததால் இதனை கருந்துளை என்பதனை ஹாக்கின் விளக்கினார்.

தலைவிதி :

        தலைவிதி ஒன்று இல்லை. தலைவிதி தான் நம்மை தீர்மானிக்கிறது என்றால் சாலையைக் கடக்கும் போது ஏன் இருபுறமும் பார்த்துக் கடக்கிறீர்கள்? எனக் கேட்டு எங்களைச் சிந்திக்க வைத்தார்.

திரும்புதல் :

        ஹாக்கின் அவர்களுடன் விண்வெளிப் பயணம் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. பல்வேறு விதமான நிகழ்வுகளைக் கண்டும் அவற்றை அறிந்தும் பூமியை வந்தடைந்தோம்.

முடிவுரை :

        ஹாக்கின் விண்வெளிப் பயணம் விண்வெளியைப் பற்றி அறிந்துகொள்ள ஒரு அரிய வாய்ப்பாக எங்களுக்கு அமைந்தது.

8

45

.

தலைப்பு: தமிழகத் தவப்புதல்வர்

முன்னுரை:

வாழ்ந்தவர் கோடி! மறைந்தவர் கோடி!

           மக்கள் மனதில் நிலையாய் நிற்பவர் யாரோ?”

     படிப்பால் உயர்ந்தோர், உழைப்பால் சிறந்தோர் எனப் பாரில் பலர் உருவாகிச் சிறப்பு பெறுகின்றனர். படிக்காத மேதை என்றும்,கல்விக்கண்திறந்தவர் என்றும் போற்றப்பட்ட, தமிழ்நாட்டில் தோன்றிய தவப்புதல்வர் பற்றிக் காண்போமா?

பிறப்பும் இளமையும்:

விருதுப்பட்டிக்கு இவரை விட பெரிய விருது தேவையா?”

     விருதுப்பட்டி என்றழைக்கப்பட்ட விருதுநகரில் குமாரசாமி -சிவகாமி அம்மான் தம்பதியரின் குமாரனாக 15 -7-1903 இல் காமராசர் பிறந்தார். 1908இல் திண்ணைப் பள்ளிக்கூடத்திலும் ஏனாதி நாயனார் வித்தியாசாலையிலும் கல்வி பயின்றார். இவர் 1914 ஆம் ஆண்டு ஆறாம் வகுப்பு படிக்கையில் படிப்பை நிறுத்திக் கொண்டாலும் தினசரி செய்திகளைப் படித்து உலக நிகழ்வுகளை உள்ளத்தில் ஆழமாகப் பதிய வைத்துக் கொண்டார்.

நாட்டுப்பற்றும் மொழிப்பற்றும்:

      சுதந்திரப்போராட்டக் கூட்டங்களில் கலந்துகொண்டு தலைவர்களின் சொற்பொழிவுகளை தவறாமல் கேட்பார் .1919 இல் தமது பதினாறாம் வயதில் காந்தியடிகள் அழைப்பை ஏற்று,ரௌலட் சட்டத்தை எதிர்த்து காங்கிரஸ்கட்சியின், முழுநேர ஊழியராக 1920ல் ஒத்துழையாமை இயக்கப் போராட்டத்திலும் 1923 இல் மதுரையில் கள்ளுக்கடை மறியலில் ஈடுபட்டார். மொழிவாரி மாநிலங்கள் பிரித்தபோது, பெரும் பங்காற்றினார். நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் பல முறை சிறை சென்றார்.

தூய்மையும் எளிமையும்:

எளிமையின் இலக்கணம்இவர்

  மனதில் கொண்டது பெருங்குணம்

     பள்ளி விழா ஒன்றில் கலந்து கொண்ட காமராசர்,"இவ்விழாவிற்கு ஏன் இத்தனை அலங்காரத் தோரணங்கள்? இந்த பையன் தலைக்கு எண்ணெய் தேய்க்கல. இந்த பொண்ணு கிழிந்த ஆடை போட்டு இருக்கே.இவர்களுக்கு உதவலாமே" என்று ஆதங்கப்பட்டார். தமக்கென்று அணிந்திருக்கும் உடைகளைத் தவிர ஒரு சதுர அடிநிலத்தைக் கூட வாங்கிவைத்திருக்காத உத்தமராக,எளிமையானவராக  திகழ்ந்தவர் காமராஜர்,

மக்கள் பணியே மகத்தான பணி:

     1954 இல்முதல்வராகப் பொறுப்பேற்று, ஒவ்வொரு கிராமத்திலும் கல்விக்கூடங்கள் அமைத்து, மதிய உணவுத் திட்டமும் கொண்டு வந்தார். நாட்டில் பல தொழிற்சாலைகளை உருவாக்கினார். ஒவ்வொரு நாளும் சுமார் 18 மணி நேரம் உழைத்தார்.காலை மாலை இரவெனினும் மக்களைச் சந்திப்பார். காலையில் விழித்து எழுந்ததும் தமிழ், ஆங்கிலப் பத்திரிகைகளைப் படிப்பார்.

முடிவுரை:

இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்

                                           இவன்போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்

      'கல்விக் கண் திறந்த காமராசர் 'எனப் போற்றப்பட்டவர். தான் பதவியேற்கும்போது "ஏழைகளின் துயர் தீர்க்கவே இந்த பதவியை நான் ஏற்கிறேன் .மக்களின் துயரத்தை தீர்க்க முடியாத நிலை ஏற்பட்டால் பதவியைத் தூக்கி எறிவேன்" எனக்கூறிய ஒப்பற்ற தலைவர் இவரே.

(அல்லது)

)

முன்னுரை:

உள்ளம் கொள்ளை போனதே

மக்கள் நிறைந்த பொடுட்காட்சியில்

    குடும்பத்தினருடன் வெளியில் செல்வது யாருக்கு தான் பிடிக்காது? அப்போது கிடைக்கும் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை எனலாம். அவ்வகையில் கடந்த மாதம் எனது குடும்பத்தினருடன் அரசு பொருட்காட்சிக்குச் சென்றிருந்தேன். அப்போது எனக்குக் கிடைத்த அனுபவங்களை இங்கு கட்டுரையாகத் தந்திருக்கிறேன்.

அறிவிப்பு:

     மகிழுந்தை வெளியில் நிறுத்தி விட்டு, நுழைவுச் சீட்டைப் பெற்றுக்கொண்டு, உள்ளே சென்றோம். நுழைவாயிலின் வழியாக நுழைந்தஉடன்,அங்கே எந்தெந்த அரங்குகள் எங்கெங்கே அமைக்கப்பட்டுள்ளன? துறைசார்ந்த அரங்குகளின் திசை உள்ளிட்ட அனைத்தும் ஒலிபெருக்கிமூலம் தெளிவாக அறிவிக்கப்பட்டுக் கொண்டே இருந்தன.

அமைப்பு:

அழகு நிறைந்த பொருட்காட்சி

அதன் அரங்குகளே அதற்கு சாட்சி

      பொருட்காட்சியின் தொடக்கத்தில் நிகழ்ந்து கொண்டிருந்த அறிவிப்பைக் கேட்டு விட்டு, அனைவரும் உள்நுழைந்தோம்.அங்கே ஓரிடத்தில் பொருட்காட்சியின் அமைப்பு குறித்த வரைபடம் தெளிவாக வரையப்பட்டிருந்தது. அந்த வரைபடம் பொருட்காட்சி அமைப்பை மக்களுக்கு எளிதில் விளக்குவதாக அமைந்திருந்தது. மேலும் பொருட்காட்சியின் அமைப்பு கூட்ட நெரிசலை சமாளிக்கும் வண்ணம் அமைக்கப்பட்டிருந்தது.

சிறு அங்காடிகள்:

மெல்ல மெல்ல இருண்டதே!

பளிச்சிடும் விளக்குகள் பகல்போல் காட்டுதே!”

     பொருட்காட்சியில் விளையாட்டு பொருள்கள், தின்பண்டங்கள், வீட்டு உபயோகப் பொருட்கள், அழகு சாதனங்கள், சமையல் கலன்கள், நெகிழிப் பொருட்கள், குழந்தைகளுக்கான பொம்மைகள், உணவுப்பொருட்கள் மற்றும் பலவகையான பொருட்களை விற்கும் சிறுசிறு அங்காடிகள் அமைக்கப்பட்டிருந்தன. அது குழந்தைகள் முதல் பெரியோர் வரை அனைவரையும் கவரும் விதமாக இருந்தது.

நிகழ்த்தப்பட்ட கலைகள்:

            சுற்றியது இராட்டினங்கள் மட்டுமல்ல

            அதனோடு சேர்ந்து எங்கள் மனங்களும்தான்

      பொருட்காட்சியின் உள்ளே இருந்த பொழுதுபோக்கு அம்சங்களில் குறிப்பிடத்தக்கது நிகழ்கலை ஆகும். அங்கே மயில் ஆட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம், கும்மியாட்டம் உள்ளிட்ட பலவகை ஆட்டங்கள் அங்கு வந்த மக்களை மகிழ்விக்கும் வகையில் நிகழ்த்தப்பட்டன. எங்களுக்கு அது புதுவித அனுபவமாக இருந்தது. அதோடு மட்டுமல்லாமல் சிறுவர்களின் மனம் கவரும் வகையில் பல விளையாட்டு அரங்குகளும் அமைக்கப்பட்டிருந்தன.

பேச்சரங்கம்:

        இலக்கிய விரும்பிகளுக்கு விருந்தளிக்கும் வகையில், பொருட்காட்சியில் பேச்சரங்கம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் தொலைக்காட்சிகளில் பேசக்கூடிய புகழ்பெற்ற பேச்சாளர்கள் பங்கேற்று பேசிக்கொண்டிருந்தனர். பொருட்காட்சிக்கு வந்த மக்களில் பலர் மெய்மறந்து பேச்சாளர்களின் பேச்சை கேட்டுக் கொண்டு நின்றனர். நாலும் என் குடும்பத்தினரும் கூட பேச்சி அரங்கத்தில் அமர்ந்து பேச்சைக் கேட்டு விட்டு வந்தோம்.

அரசின் நலத்திட்டங்கள்:

      பொருட்காட்சிக்கு முத்தாய்ப்பாக அரசின் நலத்திட்டங்களை விளக்கும் துறைவாரியான அரங்குகள் காண்போரை வியப்பில் ஆழ்த்தின.அந்த அரங்குகளில் அந்தந்த துறைசார்ந்த வஊழியர்கள் அவர்களது பணிகளையும், மக்களுக்காக அவர்கள் ஆற்றும் சேவைகளையும் விளக்கும் வகையில் அந்த அரங்குகளை அமைத்து இருந்தனர்.

முடிவுரை:

         இறுதியாக எனக்குத் தேவையான சில பொருட்களை அங்காடிகளில் வாங்கிக் கொண்டு, வெளியில் வர முயற்சித்தோம்.கூட்ட நெரிசல் மிக அதிகமாக இருந்ததால், வெளியில் வருவதற்கு நீண்ட நேரம் ஆனது. ஒருவழியாக வெளியில் வந்து, மகிழுந்தில் ஏறி வீட்டிற்குச் சென்றோம். எனது வாழ்வில் மறக்கமுடியாத மிகச்சிறந்த அனுபவமாக இந்நிகழ்வு அமைந்தது.

8


CLICK HERE TO GET PDF

CLICK HERE

Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post