அனைவருக்கும் வணக்கம். பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு 26-03-2024 அன்று தொடங்கவிருக்கிறது. மாணவர்கள் தேர்வுக்கு முழுவீச்சில் தயாராக வேண்டும். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் நீங்கள் பெறும் மதிப்பெண் உங்கள் வாழ்க்கையை நிர்ணயம் செய்யும். ஆகவே மாணவர்களே நீங்கள் இந்த ஒரு மாதம் மட்டும் படிப்பில் முழு ஈடுபாட்டுடன் செயல்பட்டால் வெற்றி நிச்சயம். இந்த ஒரு மாதத்தில் எப்படி படிக்க வேண்டும்? எந்தெந்த வினாக்களுக்கு எத்தனை நாள்கள் படிக்க வேண்டும் என்பதனை நமது கல்விவிதைகள் வலையொளிப் பக்கத்தில் தினசரி செயல்பாடுகள் (DAY PLAN 2024 ) காணொளி பதிவிட்டுள்ளோம். அதனைக் கண்டு தேர்வுக்கு தயாராகுமாறு அன்போடு வேண்டுகிறோம்.
DAY PLAN VIDEO
அதே போன்று உங்களுக்கு தரப்படும் 3.15 மணி நேரத்தில் முதல் 15 நிமிடங்கள் வினாத்தாள் படிக்க 10 நிமிடங்கள், விடைத்தாள் சரிபார்த்து கையொப்பமிட 5 நிமிடங்கள் மீதம் உள்ள 3 மணி நேரத்தில் அதாவது 180 நிமிடங்களில் நீங்கள் எந்தெந்த வினாக்களுக்கு எவ்வளவு நேரம் ஒதுக்குவது என்பதனை அறிந்து அனைத்து வினாக்களுக்கும் விடைகளை எழுதிவிட வேண்டும். நீங்கள் எழுத வேண்டிய வினாக்கள் 38. அனைத்து வினாக்களையும் எழுதிட நேர நிர்வாகம் அவசியம். ஆகவே கீழ் உள்ள காணொளியில் ஒவ்வொரு வினாவிற்கும் எவ்வளவு நேரம் ஒதுக்கி தேர்வினை வெற்றிகரமாக முடிக்க வேண்டும் என்பதனையும் விளக்கி உள்ளோம்.
PUBLIC EXAM - TIME MANAGEMENT
மாணவர்களே! இந்த ஆண்டு தேர்வு எழுதக் கூடிய அனைவரும் தமிழ் பாடத்தில் குறைவில்லாமல் தேர்ச்சி பெற வேண்டும் என்பதே எங்களின் நோக்கம். அதற்காக உங்களுக்கு ஒவ்வொரு தேர்வு நெருங்கும் போதும் நாங்கள் அதற்கு உறுதுணையாக மாதிரி வினாத்தாளினை பதிவிட்டு வருகிறோம். நீங்களும் அதனைப் பயன்படுத்தி நன்றாக இருந்தது என்ற தகவல்களை பதிவிடுகிறீர்கள். அதுவே எங்களின் ஊக்கமாகும். ஒவ்வொரு தேர்வுக்கும் மூன்று மாதிரி வினாத்தாள்களை அனுப்பியுள்ளோம். அரசு பொதுத் தேர்வுக்கு தமிழ்விதை மற்றும் கல்விவிதைதள் வலைதளமானது
ஆறு மாதிரி வினாத்தாளினை வழங்க உள்ளோம். அதனை நீங்கள் பயன்படுத்தி வரக்கூடிய 2023 - 24 அரசு பொதுத் தேர்வில் தமிழ் பாடத்தில் நல்ல மதிப்பெண் பெற்று உயர் படிப்புக்கு செல்ல வேண்டுமாய் அன்போடு வாழ்த்துகிறோம். 2023 -24 ஆம் கல்வி ஆண்டு அரசு பொதுத் தேர்வு 6 மாதிரி வினாத்தாளினை பதிவிறக்கம் செய்ய கீழ் உள்ள நீல நிற இணைப்பினை சொடுக்கவும்,
Tags:
CLASS10