அன்பார்ந்த ஆசிரியப் பெருமக்களுக்கும் அன்பு மாணவச் செல்வங்களுக்கும் அன்பான வணக்கம். சேலம் மாவட்டட்தில் 25-10-23 முதல் 10, 11, 12 ஆகிய வகுப்புகளுக்கு அக்டோபர் மாதத்தேர்வு நடைபெற்று வருகிறது. நமது தமிழ்விதை மற்றும் கல்விவிதைகள் வலைதளம் சேலம் மாவட்டத்தில் நடைபெறும் பத்தாம் வகுப்புக்கான அக்டோபர் மாதத்தேர்வு வினாத்தாள்கள் மற்றும் விடைக்குறிப்புகளை பதிவேற்றம் செய்துள்ளோம். மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இதனை நன்கு பயன்படுத்திக் கொள்ளவும்.
சேலம் – அக்டோபர் தேர்வு -2023
பத்தாம் வகுப்பு / மொழிப்பாடம் – தமிழ்
உத்தேச விடைக் குறிப்பு
நேரம் : 1.30 மணி மதிப்பெண் : 50
பகுதி – 1
மதிப்பெண்கள் - 10
வினா.எண்
விடைக் குறிப்பு
மதிப்பெண்
1.
ஈ. சிலப்பதிகாரம்
1
2.
அ. கைம்மாறு கருதாமல் அறம் செய்வது
1
3.
இ. வலிமையை நிலைநாட்டல்
1
4.
ஆ.ஆவணம்
1
5.
அ. எம்.எஸ். சுப்புலட்சுமி
1
6.
ஆ. இராமானுசர்
1
7.
ஆ. தள்ளிப்போடுதல்
1
8.
அ. மெய்கீர்த்தி
1
9.
அ. காடுகள்
1
10.
ஆ. வினைதொகை
பகுதி - 2
11.
அ. சொற்பொழிவுகளைக் கேட்பதன் மூலம் இலக்கிய அறிவு பெற்றவர் யார்?
ஆ. சாலை விதிகளில் முதன்மையான விதி எது?
1
1
12.
அரசர்கள் தங்கள் வரலாறும் பெருமையும் காலம் கடந்தும் நிலைத்து நிற்க கல்லிலும் செப்பேட்டிலும் மெய்க்கீர்த்தி எழுதினார்கள்
2
13
அடிஎதுகை: கொள்வோர் – உள்வாய்
இலக்கணக் குறிப்பு: கொள்க,குரைக்க – வியங்கோள் வினைமுற்று
2
14.
· பழைய புத்தகக் கடையில் புத்தகம் வாங்குதல்
· உணவுக்கானப் பணத்தில் புத்தகம் வாங்குதல்
2
15.
Ø அறம் கூறும் மன்றங்கள்
Ø துலாக்கோல் போல் நடுநிலையானது
Ø மதுரையில் மதுரைக்காஞ்சி அவையம்
2
16.
தூங்கலோசை வஞ்சிப்பாவிற்கும்,துள்ளலோசை கலிப்பாவுக்கும் உரியது.
2
17
v வெட்சி – கரந்தை
v வஞ்சி – காஞ்சி
v நொச்சி - உழிஞை
2
18
அ. மயிலை ஆ. நெல்லை
2
பகுதி – 3
19
தூசும் துகிரும் ஆரமும் அகிலும்
மாசுஅறு முத்தும் மணியும் பொன்னும்
அருங்கல வெறுக்கையோடு அளந்துகடை அறியா
வளம்தலை மயங்கிய நனந்தலை மறுகும்;
பால்வகை தெரிந்த பகுதிப் பண்டமொடு
கூலம் குவித்த கூல வீதியும்
4
19
மாற்றம் எனது மானிடத் தத்துவம்;
மாறும் உலகின் மகத்துவம் அறிவேன்!
எவ்வெவை தீமை எவ்வெவை நன்மை
என்ப தறிந்து ஏகுமென் சாலை!
4
பகுதி - 4
20.
இடம்: மாநகரத் தந்தை செங்கல்வராயன் தலைமை – மாநகராட்சி சிறப்புக் கூட்டம்
பொருள் : மொழி வாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது ஆந்திராவின் தலைநகராக சென்னை இருக்க வேண்டும் என்ற நீதிபதி வாஞ்சு தலைமையிலான ஒருநபர் ஆணையத்தை எதிர்த்து முழங்கிய முழக்கம் இது.
விளக்கம் : இதன் பொருட்டு ம.பொ.சி. சென்னையை மீட்க தலைக்கொடுத்தேனும் தலைநகர் காப்போம் என முழங்கினார்
3
21
Ø அகவல் ஓசை பெற்று வரும்.
Ø ஈரசைச்சீர் குறைவாக காய்ச்சீர் மிகுதியாக வரும்
Ø ஆசிரியத்தளை மிகுதியாக வரும்.
Ø வெண்டளை,கலித்தளை விரவி வரும்.
Ø மூன்றடி முதல் எழுதுபவர் மனநிலைக்கு ஏற்ப முடியும்
Ø ஏகாரத்தில் முடிவது சிறப்பு
3
22
· மேல் மண் பதமாகிவிட்டது.
· வெள்ளி முளைத்திடுது
· காளைகளை ஓட்டி விரைந்து செல்
23.
வ.எ
சீர்
அசை
வாய்பாடு
1
வன்/கண்
நேர்-நேர்
தேமா
2
குடி/காத்/தல்
நிரை-நேர்-நேர்
புளிமாங்காய்
3
கற்/றறி/தல்
நேர் – நிரை - நேர்
கூவிளங்காய்
4
ஆள்/வினை/யோ
நேர் – நிரை - நேர்
கூவிளங்காய்
5
டைந்/துடன்
நேர் - நிரை
கூவிளம்
6
மாண்/ட
நேர் - நேர்
தேமா
7
தமைச்/சு
நிரைபு
பிறப்பு
இக்குறள் பிறப்பு என்னும் வாய்பாட்டில் முடிந்துள்ளது.
3
பகுதி - 5
24அ
அ அ அ அ அ,
100,பாரதி தெரு,
சக்தி நகர்,
சேலம் – 636006.
பெறுநர்
மின்வாரிய அலுவலர் அவர்கள்,
மின்வாரிய அலுவலகம்,
, சேலம் – 636001.
ஐயா,
பொருள்: மின்விளக்கு சரி செய்ய வேண்டுதல் – சார்பு
வணக்கம். எங்கள் தெருவில் 100 குடும்பங்கள் உள்ளன. எங்கள் தெருவில் மின்விளக்குகள் பழுதடைந்துள்ளன. இதனால் இரவில் சாலையில் நடந்து செல்வோருக்கு பல்வேறு இடையூறுகள் ஏற்படுகின்றன. எனவே பழுதடைந்த மின்விளக்குகளைச் சரி செய்து கொடுக்க வேண்டுமாய்த் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.
நன்றி.
இடம் : சேலம் இப்படிக்கு,
நாள் : 04-03-2021 தங்கள் உண்மையுள்ள, அ அ அ அ அ.
உறை மேல் முகவரி:
பெறுநர்
மின்வாரிய அலுவலர் அவர்கள்,
மின்வாரிய அலுவலகம்,
, சேலம் – 636001
4
24 ஆ
திரண்ட கருத்து:
கோடையில் இளைப்பாற உதவும் மரமாகவும்,அதன் நிழலாகவும்,கனியாகவும் இருப்பவனே! ஓடையில் ஓடும் சுவைதரும் நீராகவும், மலர்ந்த மணமலராகவும்,மெல்லிய பூங்காற்றாகவும் திகழ்பவனே! விளையாட்டுப் பருவத்தில் என்னை ஆட்கொண்ட இறைவா! பலர் கூடும் பொது இடத்தில் நடனம் ஆடுகின்ற இறைவா! என் பாமாலையை ஏற்று அருள் புரிவாயாக என வள்ளலார் இறைவனை வணங்குகிறார்.
மையக் கருத்து :
எல்லாமுமாகத் திகழும் இறைவனை வாழ்த்தி வணங்குவதே இப்பாடலின் மையக் கருத்து.
சொல் நயம் :
குளிர்தருவே,தருநிழலே,சுகந்த மணமலரே ,மெல்லிய பூங்காற்றே ஆகிய அழகான சொற்கள் பாடலுக்கு நயம் கூட்டுகின்றன.
பொருள் நயம் :
“ சுகந்த மணமலரே. மென் காற்றில் விளைசுகமே, சுகத்தில் உறும் பயனே, ஆடையிலே எனை மணந்த மணவாளா “ ஆகிய சொற்கள் ஆழமான பொருளை உடையன.
சந்த நயம் :
இப்பாடல் பாடுவதற்கு ஏற்ற சந்த நயத்துடன் அமையப் பெற்றுள்ளது.
மோனை நயம் :
முதலெழுத்து ஒன்றி வரத் தொடுப்பது மோனை.
கோடை - கொள்ளும் வகை
மேடையிலே – மென்காற்றிலே
எதுகை நயம் :
முதலெழுத்து அளவொத்து இருக்க இரண்டாம் எழுத்து ஒன்றி வருவது எதுகை.
கோடையிலே - ஓடையிலே
உகந்த - சுகந்த
முரண் நயம் :
முரண்பட்ட சொற்களால் அமைவது முரண் நயம்.
கோடையிலே X குளிர்தருவே
இயையு நயம் :
பாடலில் இறுதி எழுத்தோ. அசையோ, சீரோ, இயைந்து வருவது இயைபு நயம்.
கனியே - மலரே
காற்றே - பயனே
அணிநயம் :
இபாடலில் இறைவனை மரமாகவும், நிழலாகவும்,கனியாகவும், தண்ணீராகவும், மணமலராகவும், பூங்காற்றாகவும்,சுகமாகவும் உருவகம் செய்து பாடியுள்ளமையால், இப்பாடலில் உருவக அணி பயின்று வந்துள்ளது.
பா வகை :
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தப்பா பா வகையைச் சார்ந்துள்ளது.
4
25.அ
அ) இப்பாடல் இடம் பெற்ற நூல் எது?
சிலப்பதிகாரம்
ஆ) எதுகைச் சொற்களை அடிக்கோடிடுக.
பட்டினும் – கட்டு
பகர்வனர் - நகர
இ) காருகர் – பொருள் தருக.
நெய்பவர்
உ) இப்பாடலில் காணப்படும் நறுமணப் பொருள்கள் யாவை?
சந்தனம்,அகில்
4
25.ஆ
சங்க கால இலக்கியத்தில் ஐவகை நிலங்களில் மருதம் பயிரிட ஏற்றது. அங்குதான் செழிப்பான விளைநிலங்கள் உள்ளன. விவசாயியின் உண்மையான உழைப்பின் பலன் தகுந்த சூரிய ஒளி,பருவ மழை மற்றும் மண்வளம் ஆகியவற்றை சார்ந்திருக்கிறது. ஆனாலும் அனைத்திலும் சிறந்ததாக சூரிய ஒளியே தமிழர்களால் தவிர்க்க முடியாத ஒன்றாய் குறிப்பிடப்பட்டுள்ளது.
2
பகுதி – 6
26அ
மருவூர்ப்பாக்க வணிக வீதி
இக்கால வணிக வளாகங்கள்
தானியக் கடைத் தெருக்கள்
தனித்தனி அங்காடிகள்
நேரடி வணிகம்
இடைத் தரகர்கள் அதிகம்
இலாப நோக்கமற்றது
இலாபம் மட்டுமே முக்கியம்
கலப்படம் இல்லாதது
கலப்படம் கலந்துள்ளது
தரம் உண்டு.விலை குறைவு
தரம் குறைவு,விலை அதிகம்
5
26ஆ
Ø வணிக நோக்கமின்றி அறம் செய்ய வேண்டும். அதை விளம்பரப்படுத்தக்கூடாது.
Ø நீர்நிலை பெருக்கி,நிலவளம்கண்டு,உணவுப் பெருக்கம் காணவேண்டும் என்று கூறுவது இன்றைய அரசியல் தலைவர்களுக்குப் பொருந்தும்
Ø வாய்மையோடு இருக்க வேண்டும் என இலக்கியங்கள் வலியுறுத்துகிறது. அதனை மாணவநிலையிலிருந்து பின்பற்ற வேண்டும்.
Ø உதவி செய்தல் குறித்து சங்க இலக்கியங்கள் கூறுகிறது. உதவி செய்தல் என்பது சிறந்த அறமாக பின்பற்றப்பட வேண்டும்.
5
27 அ.
இடம் : பள்ளி, வகுப்பறை
பங்கேற்பாளர்கள் : தமிழாசிரியர்,சகுந்தலாதேவி, பவித்ரா, தாரணி,
சகுந்தலாதேவி : பவித்ரா, தாரணி நமது தமிழ் ஆசிரியர் அன்றைய வகுப்பில்
மாணவர்கள் எப்படி இருக்க வேண்டும் எனக் கூற வந்தார். அதற்குள் மணி அடித்துவிட்டது. இன்று நாம் அவரிடம் முதலில் கேட்டிடுவோம்.
பவித்ரா : ஆம், வந்தவுடன் கேட்கலாம்.
மாணவர்கள் : வணக்கம். ஐயா,
தமிழாசிரியர் : வணக்கம் மாணவர்களே, எல்லோரும் உணவு உண்டீர்களா?
மாணவர்கள் : உண்டோம் ஐயா.
சகுந்தலா தேவி : ஐயா நேற்றைய வகுப்பில் மாணவர்கள் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதனை கூற வந்தீர்கள். அதற்குள் மணி அடித்துவிட்டது. இப்போது கூறுங்கள்.
பவித்ரா, தாரணி: ஆமாம். ஐயா.
தமிழாசிரியர் : ஆம். மூன்று உதாரணங்களுடன் கூறுகிறேன். கேளுங்கள்
மாணவர்கள் : கூறுங்கள் ஐயா.
தமிழாசிர்யர் : 1. மாணவர்கள் கொக்கைப் போல இருக்க வேண்டும். காத்திருந்து கிடைக்கும் வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். பொறுமை அவசியம்.
சகுந்தலா தேவி : ஐயா, இனிமேல் நாங்கள் அவசரப்படமாட்டோம்.
தமிழாசிரியர் : அடுத்து, இரண்டாவது கோழியைப் போல குப்பையைக் கிளறினாலும்.
தனக்கான உணவினை மட்டும் உட்கொள்வது போல சமூகத்தில் கெட்டது
இருந்தாலும், நல்லதை மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும்.
பவித்ரா : ஆமாம் ஐயா, நாங்கள் நல்லதை மட்டுமே எடுத்துக் கொண்டு எங்கள்
பண்பினை வளர்த்துக் கொள்வோம்.
தமிழாசிரியர் : மூன்றாவதாக உப்பைப் போல உணவில் உப்பின் சுவையை நாக்கு உணர்வதை போல , ஒவ்வொருவரின் வெளித்தோற்றத்தைக் காணாது அவரின் குணநலன்களை ஆராய்ந்து உணர்ந்து பழக வேண்டும்.
மாணவர்கள் : ஐயா, அருமை. மிக சரியாக விளக்கினீர்கள். இனி நாங்கள் இவ்வாறே
நடந்து கொள்வோம். நன்றி ஐயா.
4
27 ஆ
அறிக்கை
எம்பள்ளிக் கலையரங்கத்தில் 08-03-2019 அன்று மகளிர் நாள் விழா நடைபெற்றது.
மாணவர் ,ஆசிரியர் கூடுதல்:
கலையரங்கத்தில் மாலை 3.00 மணியளவில் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் அனைவரும் கூடினர்.தமிழ்த்தாய் வாழ்த்து பாடி விழா தொடங்கப்பட்டது.
தலைமையாசிரியர் வரவேற்பு:
தலைமை ஆசிரியர் வந்திருந்த அனைவரையும் தேன் தமிழ் சொற்களால் வரவேற்றார். தலைமை ஆசிரியர் கூறிய இதழாளர் கலையரசி பற்றிய வரவேற்பும்,அறிமுகமும் மிகவும் சிறப்பாக இருந்தது.
இதழாளர் கலையரசியின் சிறப்புரை:
இதழாளர் கலையரசியின் பேச்சு மகளிருக்கு மட்டுமல்ல. அனைவருக்கும் உந்து சக்தியாக அமைந்தது.
Ø மகளிரின் சிறப்புகள்
Ø மகளிருக்கு அரசின் நலத் திட்டங்கள்
Ø சுய உதவிக்குழுக்களின் பங்கு
Ø மகளிர் கல்வி
போன்ற கருத்துகள் தெளிவாகவும்,அருமையாகவும் இருந்தன.
ஆசிரியர்களின் வாழ்த்துரை:
ஆசிரியர் கலையரசியின் உரைக்கு வாழ்த்து தெரிவித்ததோடு நம் பள்ளி மாணவிகளையும் பல்வேறு சாதனைகள் புரிய வேண்டும் என வாழ்த்துரை வழங்கினார்.
மாணவத் தலைவரின் நன்றியுரை:
மாணவத் தலைவர் சிறப்பு விருந்தினருக்கும்,தலைமை ஆசிரியருக்கும்,ஆசிரியர்களுக்கும்,மாணவர்கள் மற்றும் அவர் தம் பெற்றோருக்கும் நன்றி கூறினார். மகளிர் நாளில் உறுதி மொழி எடுக்கப்பட்டு நாட்டுப்பண் பாடி விழா இனிதே நிறைவுற்றது.
4
விடைக்குறிப்பு தயாரிப்பு :
வெ.ராமகிருஷ்ணன், தமிழாசிரியர்,
அரசு உயர்நிலைப்பள்ளி, கோரணம்பட்டி