அன்பார்ந்த ஆசிரியப் பெருமக்களுக்கு அன்பான வணக்கம். நமது தமிழ்விதை மற்றும் கல்விவிதைகள் பல்வேறு விதமான கற்றல் வளங்கள் மற்றும் ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளை செய்து வருவது நீங்கள் அறிந்த ஒன்று. தற்போது தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் அனைத்து வகுப்பிலும் மெல்லக் கற்கும் மாணவர்கள் உள்ளனர். கொரானா ஏற்படுத்திய தாக்கம் இன்று வரை தொடர்கிறது. அந்த பாதிப்பிலிருந்து மாணவர்களை மீட்டெடுக்கவும், மாணவர்களை படிக்கத் தெரியாத இயலாத நிலையினை அகற்றவும் பல்வேறு ஆசிரியர்கள் தொடர்ந்து பல்வேறு விதமான செயல்களை செய்து வருகிறார்கள். அவர்களுக்கு எங்களது பாராட்டுகள். இது அரசின் செவிகளுக்கு விழுந்து அதற்கு உதவி இயக்குநர் தலைமையில் அனைத்து பள்ளிகளிலும் மெல்லக் கற்கும் மாணவர்கள் எண்ணிக்கையை பூஜ்யம் ஆக்க வேண்டும் என்பதற்காக தொடர்ந்து கூட்டங்களை நடத்தி அன்றாட செயல்பாடுகளை அறிந்து வருகிறார்கள். சென்ற வாரம் அனைத்து தமிழ்,ஆங்கிலம்,கணிதம் ஆசிரியர்களுக்கு மாவட்ட அளவில் கல்வி அலுவலர்கள் தலைமையில் கூட்டங்கள் நடத்தப்பட்டது. அதில் கூறப்பட்டுள்ள தகவல்கள் அடிப்படையில் வரும் டிசம்பர் மாதத்திற்குள் அனைவரையும் படிக்க எழுத தெரிய வைத்திருக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. அதன் பொருட்டு தற்போது நடைபெறும் முதல் பருவத் தேர்வு மற்றும் காலாண்டுத் தேர்வுக்கு அவர்களின் பாடப்புத்தகங்களிலிருந்து தேர்வு எழுதாமல் அவர்களுக்கு வழங்கப்பட்ட பயிற்சிகளின் அடிப்படையில் வினாத்தாள் உருவாக்கப்பட்டுள்ளது. 6 மற்றும் 7 ஆம் வகுப்பு மாண்வர்களுக்கு 60 மதிப்பெண்கள் என்ற அடிப்படையிலும், 8 மற்றும் 9 வகுப்பு மாணவர்களுக்கு 100 மதிப்பெண்கள் என்ற அடிப்படையிலும் வினாத்தாள் உருவாக்கப்பட்டுள்ளது. வாசித்தல் மற்றும் எழுதுதல் என இரு அம்சங்களும் முக்கியம் என்பதால் வினாத்தாள் வாசிப்பு பயிற்சி மற்றும் எழுத்துப் பயிற்சி என்ற இரு பிரிவுகளில் வினாத்தாள் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த வினாத்தாள் சேலம் மாவட்டம் பள்ளிக் கல்வித்துறை வழங்கிய " நாவில் தமிழ் ; நாளும் தமிழ் " என்ற தமிழ் பயிற்சிக் கட்டகத்தில் வழங்கப்பட்டுள்ள மதிப்பீடு வினாக்களிலிருந்து வினாக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதனைப் பயன்படுத்தி மெல்லக் கற்கும் மாணவர்களுக்கு தேர்வு வைத்து மதிப்பீடு செய்து அடுத்து வரும் இரு மாதங்களுக்கான பயிற்சியினை வழங்க ஏதுவாக இருக்கும். இனி காலாண்டு மற்றும் முதல் பருவத் தேர்வு முடிந்து தமிழ்விதை மற்றும் கல்விவிதைகள் அடுத்த இரு மாதங்களுக்கு செய்ய வேண்டிய பயிற்சிகளை வாராவாரம் வெளியிட முடிவு செய்துள்ளது. இதனைக் கொண்டு மாணவர்களை நன்றாக படிக்க பயிற்சி அளித்து அனைத்து மாணவர்களையும் நன்றாக பயிலக் கூடிய மாணவர்களாக மாற்றுவோம். முடிந்தால் முடியாதது இல்லை.
முயற்சி + பயிற்சி = வெற்றி
____________________________________________________________________________________________________
கற்றல் இனிமை
மாணவர்களுக்கான வினாத்தாள்
காலாண்டுத் தேர்வு - 2023
8 மற்றும் 9 வகுப்பு - வினாத்தாள்
கற்றல் இனிமை
மாணவர்களுக்கான வினாத்தாள்
முதல் பருவத் தேர்வு - 2023
6 மற்றும் 7 வகுப்பு - வினாத்தாள்
click here