அன்பார்ந்த ஆசிரியப் பெருமக்களுக்கும், அன்பு மாணவச் செல்வங்களுக்கும் அன்பான வணக்கம். பத்தாம் வகுப்பு பயிலும் மாணவர்கள் அனைவரும் இந்த ஆண்டு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்பதே தமிழ்விதையின் நோக்கம். அதற்கு தேவையான அனைத்து வளங்களையும் நமது வலைதளத்தில் பதிவிட்டு வருகிறோம். வருட ஆரம்பம் முதலே மெல்லக் கற்போர் மற்றும் சராசரி மாணவர்களை மனதில் வைத்து பல்வேறு கற்றல் வளங்களை தயார்ப்படுத்தி தமிழ்விதை வலைதளம் உங்களுக்கு வழங்கவிருக்கிறது. அதன் தொடர்ச்சியாக ஒவ்வொரு வாரமும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு வாரத் தேர்வு வினாத்தாளினை தயாரித்து வழங்கிவருகிறோம். அந்த வகையில் ஒவ்வொரு இயலுக்கும் தேவையான அலகுத் தேர்வு வினாக்கள் தயாரித்து உங்களுக்கு வழங்க முனைந்துள்ளோம். அந்த அலகுத் தேர்வு வினாத்தாள் 50 மதிப்பெண் கொண்ட வினாத்தாளாக வடிவமைக்கப்பட்டுள்ளது. கீழ்க்கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் ஒவ்வொரு இயலுக்கும் உரிய அலகுத் தேர்வு வினாக்களை நீங்கள் பதிவிறக்கம் செய்துக் கொண்டு அந்த இயல் பாடங்களை நடத்தி முடித்தப் பின் இந்த அலகுத் தேர்வு வினாக்களை தேர்வு வைக்கலாம். மேலும் இந்த வினாத்தாள் அரசு பொதுத் தேர்வு அடிப்படையாகக் கொண்டு 50 மதிப்பெண் கொண்ட வினாத்தாளாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் இதனைப் பயன்படுத்திக் கொண்டு மாணவர்களின் கற்றலில் மிகச் சிறந்த பங்காற்ற தமிழ்விதையின் வாழ்த்துகளை தெவித்துக் கொள்கிறோம். மேலும் உங்களின் மேலான படைப்புகள் எந்த பாடமாக இருந்தாலும் அதனை நமது வலைதளத்தில் பதிவிட்டு அனைத்து பாடங்களிலும் மாணவர்கள் தேர்ச்சி பெற உதவி புரிய வேண்டுமாய் அன்பான வேண்டுகோளாக இங்கு முன் வைக்கிறோம்.
உங்களுடைய படைப்புகளை 8695617154 என்ற புலன எண்ணிலோ அல்லது thamizhvithai@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பும்படி அன்புடன் வேண்டுகிறேன். உங்களின் படைப்புகள் அனைத்து மாணவர்களுக்கும் மிகப் பெரிய உதவியாக இருக்கும்.
நன்றி., வணக்கம்
தமிழ்
அலகுத் தேர்வு வினாத்தாள்
இயல் - 1 - CLICK HERE
இயல் - 2 - CLICK HERE
இயல் - 3 - CLICK HERE
இயல் - 4 - CLICK HERE
இயல் - 5 - CLICK HERE
இயல் - 6 - CLICK HERE
இயல் - 7 - CLICK HERE
இயல் - 8 - CLICK HERE
இயல் - 9 - CLICK HERE
Tharun
ReplyDelete