10TH-TAMIL-SALEM DT - 3RD REVISION - ANSWER KEY

   

சேலம் –  மூன்றாம் திருப்புதல் தேர்வு வினாத்தாள்

மார்ச் - 2022-2023

பத்தாம் வகுப்பு / மொழிப்பாடம் – தமிழ்

சேலம் –  மூன்றாம் திருப்புதல் தேர்வு வினாத்தாள்

மார்ச்- 2022-2023

பத்தாம் வகுப்பு / மொழிப்பாடம் – தமிழ்

உத்தேச விடைக் குறிப்பு

நேரம் : 15 நிமிடம் + 3.00 மணி                                                         மதிப்பெண் : 100

பகுதி – 1

மதிப்பெண்கள் - 15

வினா.எண்

விடைக் குறிப்பு

மதிப்பெண்

1.

ஈ. சருகும் சண்டும்

1

2.

இ. அன்மொழித்தொகை

1

3.

அ. வேற்றுமை உருபு

1

4.

இ. பால் வழுவமைதி, திணை வழுவமைதி

1

5.

அ. கூவிளம் தேமா மலர்

1

6.

அ. அருமை + துணை

1

7.

இ. ஒயிலாட்டம் இரு வரிசையில் நின்று ஆடப்படுகிறது.

1

8.

ஈ. நெறியோடு நின்று காவல் காப்பவர்

1

9.

ஆ. அதியன்; பெருஞ்சாத்தன்

1

10.

ஆ. பெற்ற சுதந்திரத்தைப் பேணிகாத்தல்

1

11.

ஆ. இராமாவதாரம்

1

12.

ஆ. கனிச்சாறு

1

13.

ஆ. பண்புத்தொகை

1

14.

இ. வண்டு

1

15.

இ. பெருஞ்சித்திரனார்

1

பகுதி – 2

பிரிவு - 1

16.

அ. வித்துவக்கோடு என்னும் ஊர் எங்கு உள்ளது?

ஆ. முல்லைப்பாட்டை எழுதியவர் யார்?

( ஏற்புடைய வேறு பதில் இருப்பினும் மதிப்பெண் வழங்கலாம் )

1

1

17.

Ø  வேங்கைமரம்தனிமொழி

Ø  வேம் + கை = வேகின்ற கைதொடர்மொழி

Ø  வேங்கை எனும் சொல் தனிமொழிக்கும் தொடர்மொழிக்கும் பொதுவாய் அமைந்துள்ளது.

2

18.

·         கவிஞர்              – பெயர் பயனிலை

·         சென்றார்            – வினை பயனிலை

·         யார்                  - வினா பயனிலை

2

19

·         இந்தி

·         இந்தியாவின் எந்த மூலைக்கும் செல்லலாம்.

( ஏற்புடைய வேறு பதில் இருப்பினும் மதிப்பெண் வழங்கலாம் )

1

1

20.

·         வெற்பர்கள் மலையில் உழுதனர்.

·         தாழைப் பூச்செடியைப் பார்த்தவாறே பரதவர் கடலுக்குச் சென்றனர்.

1

1

21

கட்டாய வினா:

பண்என்னாம் பாடற் கியைபின்றேல்; கண்என்னாம்

கண்ணோட்டம் இல்லாத கண்

2

பகுதி – 2 / பிரிவு - 2

22

மலைந்து – மலை + த்(ந்)+த் + உ

மலை – பகுதி, த் – சந்தி, த் – ந் ஆனது விகாரம், த் – இறந்த கால இடைநிலை, உ – வினையெச்ச விகுதி

1

1

23

குறளின்பம் – குறளின்பத்தில் சுவைக்காதவர் உண்டோ?

2

24

அ. அழகிய குளிர்ந்த கடம்பவனத்தை விட்டு இறைவன் நீங்கினான்.

ஆ.உயர்  கல்வியே ஒருவருக்கு உயர்வு தரும்

1

1

25.

அ. ஆய்வேடு

ஆ. காப்புரிமை

1

1

26.

அ. அடுக்குத் தொடர்

ஆ. பெயரெச்சம்

1

1

27.

அ) கானடை

கான் அடை – காட்டைச் சேர்

கான் நடை – காட்டுக்கு நடத்தல்

கால் நடை – காலால் நடத்தல்

ஆ) வருந்தாமரை

வரும் + தாமரை – வருகின்ற தாமரை மலர்

வரும் + தா + மரை – தாவுகின்ற மான் வருகிறது

வருந்தா + மரை – துன்புறாத மான்

இவற்றில் ஏதேனும் ஒன்றுக்கு விடையளித்தால் மதிப்பெண் வழங்கலாம்

2

28.

அ.இளவயதில் பயின்ற பாடங்கள் சிலை மேல் எழுத்து போல நிலையாக உள்ளது.

ஆ. தனது மகளை தாய் கண்ணினைக் காக்கும் இமை போல பாதுகாப்பாக காத்து வந்தாள்

2

பகுதி – 3 / பிரிவு - 1

29

அ. ஒரு நாடு எவ்வளவு மின்னாற்றலைப் பயன்படுத்துகிறது என்பதைக் கொண்டு அதன் தொழில் வளர்ச்சியை மதிப்பிடுவர்.

ஆ. பாரதியார் கவிதைகள்

இ. நாட்டின் பண்பாட்டினையும், அறிவையும்.

1

1

1

30

v  அன்னை மொழியானவள்

v  அழகான செந்தமிழானவள்

v  பழமைக்கு பழமையாய் தோன்றிய நறுங்கனி

v  பாண்டியன் மகள்

v  திருக்குறளின் பெருமைக்கு உரியவள்

3

31.

வீட்டின் சுவர், சன்னல் போன்றவற்றில் அழுக்குப்படிந்தும், சன்னல்களில் கரையான் படிவதைத் தடுக்கவாளித் தண்ணீரைக் கொண்டு சுவரையும் சன்னலையும் நன்கு கழுவ வேண்டும். பின் கந்தை துணியால் துடைத்து, சாயக் குவளையில் கட்டைத் தூரிகைக் கொண்டு வண்ணமடிக்க வேண்டும்.

3

பகுதி – 3 / பிரிவு - 2

32

தமிழ்

கடல்

1. முத்தமிழாக வளர்ந்தது

1. முத்தினைத் தருகிறது

2. முச்சங்களால் வளர்க்கப்பட்டு

2. மூன்று சங்குகளைத் தருகிறது

3. ஐம்பெருங்காப்பியங்கள்

3. பெரும் வணிகக் கப்பல்

4. சங்கப் புலவர்களால் காக்கப்பட்டது.

4. சங்கினைத் தடுத்து காக்கிறது

3

33.

Ø  உயிர் பிழைக்கும் வழி

Ø  உடலின் தன்மை

Ø  உணவை தேடும் வழி

Ø  காட்டில் செல்லும் வழி

3

34.

அ) விருந்தினனாக ஒருவன் வந்து எதிரின்

வியத்தல் நன்மொழி இனிது உரைத்தல்

திருந்துற நோக்கல் வருக என உரைத்தல்

            எழுதல் முன் மகிழ்வன செப்பல்

பொருந்து மற்றுஅவன் தன்அருகுற இருத்தல்

            போமெனில் பின் செல்வதாதல்

பரிந்துநன் முகமன் வழங்கல் இவ்வொன்பான்

            ஒழுக்கமும் வழிபடும் பண்பே                    - அதிவீரராம பாண்டியர்

அ) செம்பொ னடிச்சிறு கிங் கிணியோடு சிலம்பு கலந்தாடக்

            திருவரை யரைஞா  ணரைமணி யொடு மொளி திகழரை வடமாடப்

பைப்பொ னசும்பிய தொந்தி யொடுஞ்சிறு பண்டி சரிந்தாடப்

            பட்ட நுதற்பொலி பொட்டொடு வட்டச் சுட்டி பதிந்தாடக்

கம்பி விதம்பொதி குண்டல முங்குழை காது மசைந்தாடக்

            கட்டிய சூழியு முச்சியு முச்சிக் கதிர்முத் தொடுமாட

வம்பவ ளத்திரு மேனியு மாடிட ஆடுக செங்கீரை

            ஆதி வயித்திய நாத புரிக்குக னாடுக செங்கீரை

                                                                        - குமரகுருபரர்

3

பகுதி – 3/ பிரிவு - 3

35

தொழிற்பெயர்

 

வினையாலணையும் பெயர்

வினை, பெயர்த் தன்மை யாகி வினையையே உணர்த்தி நிற்கும

தொழிலைச் செய்யும் கருத்தாவைக் குறிக்கும

காலம் காட்டாது

காலம் காட்டும்

படர்க்கைக்கே உரியது

மூவித்டதிற்கும் உரியது

எ.கா: பாடுதல்

எ.கா : பாடியவர்

3

36.

இலக்கணம்: நிரல் = வரிசை; நிறை = நிறுத்துதல். சொல்லையும் பொருளையும் வரிசையாக நிறுத்தி அவ்வரிசைப்படியே இணைத்துப் பொருள் கொள்வது நி ர ல் நிறை அணி எனப்படும்.

பாடலின் பொருள்

 இல்வாழ்க்கை அ ன் பு ம் அ ற மு ம் உ டையதாக விளங்குமானால், அந்த வாழ்க்கையின் பண்பும் பயனும் அதுவே ஆகும்.

அணிப்பொருத்தம்

 இக்குறளில் அன்பும் அறனும் என்ற சொற்களை வரிசையாக நிறுத்தி, பண்பும் பயனும் என்ற சொற்களை முறைபடக் கூறியுள்ளமையால் இது நிரல் நிறை அணி ஆகும்.

3

37

 

வ.எ

சீர்

அசை

வாய்பாடு

1

முயற்/சி

நிரை - நேர்

புளிமா

2

திரு-வினை

நிரை - நிரை

கருவிளம்

3

ஆக்-கும்

தேர் - நேர்

தேமா

4

முயற்-றின்-மை

நிரை-நேர்-நேர்

புளிமாங்காய்

5

இன்-மை

நேர்- நேர்

தேமா

6

புகுத் -தி

நேர் - நேர்

தேமா

7

விடும்

நிரை

மல்ர்

இக்குறள் இறுதிச்சீர் மலர் என்னும் வாய்பாட்டில் முடிந்துள்ளது.

3

பகுதி – 4

38

  அ)  ஒழுக்கமுடைமை

·            ஒழுக்கம் எல்லோர்க்கும் சிறப்பை தருவதால் அதனை உயிர்னும் மேலனாதாக கருதி காக்க வேண்டும்.

·            ஒழுக்கமாக வாழும் எல்லோரும் மேன்மை அடைவர். ஒழுக்கம் தவறுபவர் அடையக் கூடாத பழியை அடைவர்

·            . உலகத்தோடு ஒத்து வாழக்கல்லாதோர், பல நூல்களை கற்றாராயினும் அறிவு இல்லாதவரே

மெய் உணர்தல்

·            எந்தப்ப் பொருள் எந்த இயல்பினதாகத் தோன்றினாலும் அந்தப் பொருளின் உண்மைப் பொருளை காண்பதே அறிவாகும்.

·            ஆசை, சினம், அறியாமை என்ற மூன்றும் அழிந்தால் அவற்றால் வரும் துன்பமும் அழியும்

5

38

ஆ.

பகலவன் பட்டொளி இராமனின் நீலமேனி ஒளியில் பட்டு இல்லையெனும்படி மறைந்துவிட, இடையே இல்லையெனும்படியான நுண்ணிய இடையாள் சீதையொடும், இளையவன் இலக்குவனொடும் போ னான். அவன் நிறம் மையோ? பச்சைநிற மரகதமோ? மறிக்கின்ற நீலக் கடலோ? கார்மேகமோ ? ஐயோ! ஒப்பற்ற அழியாத அழகினை உடைய வடிவு கொ ண்டவன் இராமன்.

5

39

அ.

கிழக்கு

கிழக்கு என்பதற்குக் குணக்கு என்னும் பெயருமுண்டு. கிழக்கிலிருந்து வீசும்போது  கொண்டல் எனப்படுகிறது . கொண்டலாக நான் குளிர்ச்சி தருகிறது; கடல் பகுதிக்கு மேலுள்ள மழைமேகங்களை சுமந்து வருவதால் மழைக்காற் று எனப்படுகிறது.

மேற்கு

மேற்கு என்பதற்குக் குடக்கு என்னும் பெயருமுண்டு.

மேற்கிலிருந்து வீசும் போது கோடை.

வறண்ட நிலப்பகுதியிலிருந்து வீசுவதால் வெப்பக் காற்று.

வடக்கு

வடக்கு என்பதற்கு வாடை என்ற பெயரும் உண்டு.

பனிப்பகுதியிலிருந்து வீசுவதால் ஊதை காற்று என அழைக்கப்படுகிறது,

தெற்கு

தெற்கிலிருந்து வீசும் போது தென்றல்.

வேகம் குறைந்து இயல்பான காற்றாக வீசுகிறது.

5

39

ஆ.       அனுப்புநர்

            அ அ அ அ அ,

            100,பாரதி தெரு,

            சக்தி நகர்,

            சேலம் – 636006.

பெறுநர்

            உணவு பாதுகாப்பு ஆணையர் அவர்கள்,

            உணவு பாதுகாப்பு ஆணையம்,

            சேலம் – 636001

ஐயா,

பொருள்: தரமற்ற உணவு வழங்கிய உணவு விடுதி மீது நடவடிக்கை எடுக்க வேண்டுதல்சார்பு

            வணக்கம். நான் நேற்று சேலத்தில் அன்பு உணவகத்தில் கோழி பிரியாணி உண்டேன். அது கெட்டுப் போனதாகவும் மேலும் அதன் விலைப்பட்டியலைவிட விலைக் கூடுதலாகவும் இருந்தது. இத்துடன் அந்த உணவிற்கான விலை இரசீது நகல் மற்றும் உணவு பட்டியல் நகலையும் இணைத்துள்ளேன். தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு பணிவுடன் வேண்டுகிறேன்.

நன்றி.

இணைப்பு:                                                                     இப்படிக்கு,

1. விலை இரசீதுநகல்                                                                              தங்கள் உண்மையுள்ள,

2. விலைப்பட்டியல்நகல்                                                                                                    அ அ அ அ அ.

இடம் : சேலம்    

நாள் : 04-03-2021

உறை மேல் முகவரி:

பெறுநர்

          உணவு பாதுகாப்பு ஆணையர் அவர்கள்,

உணவு பாதுகாப்பு ஆணையம்,

சென்னை.

5

40

அ) திரண்ட கருத்து:

Ø  நிலவையும்,நட்சத்திரங்களையும் வரிசையாக வைப்போம்.

Ø  அமுத குழம்பினைக் குடிப்போம்.

Ø  பட்டாம் பூச்சியை எங்கு வேண்டுமானாலும் பறக்க வைப்போம்.

Ø  பலாக்கனிகள் ஏற்றிவரும் வாகனத்தில் வண்டின் ஓசையைக் கேட்போம்.

மையக் கருத்து:

நிலவிலும்,நட்சத்திர ஒளியிலும்,காற்றிலும், அமுதத்தைப் பருகி மனதை இலேசாக்கி எங்கும் பறந்து இனிமை நிறைந்த பலாவினை சுவைத்து இன்பம் பெறுவோம்.

மோனை:

            முதலெழுத்து ஒன்றி வருவது மோனை

                        நிலாவையும்நேர்ப்பட

எதுகை :

            முதலெழுத்து அளவொத்து நிற்க இரண்டாமெழுத்து ஒன்றி வருவது எதுகை.

                        நிலாவையும்       -          குலாவும்

இயைபு :

            செய்யுளில் ஒவ்வொரு அடியிலும் இறுதியில் வரும் எழுத்தோ,சீரோ,அசையோ ஒன்றி வருவது

            வெறிபடைத்தோம்            -          மகிழ்ந்திடுவோம்

அணி நயம்:

            இப்பாடலில் மனதை சிறு பறவையாக உருவகம் செய்யப்பட்டுள்ளமையால் இதில் உருவக அணி வந்துள்ளது.

தலைப்பு:

            இயற்கை இன்பம்

( அல்லது )

ஆ. ஏடு எடுத்தேன் கவி ஒன்று எழுத         

என்னை எழுது என்று சொன்னது இந்தக் காட்சி

நீட்டிய கை என் உயிர் தவிப்பை பற்றி எழுது என்றது

சுற்றியுள்ளவர்கள் என் விரும்புவோர் எண்ணிக்கை பற்றி எழுது என்றனர்

நான் எழுதுகிறேன் மனிதம் காக்க வேண்டும் என்று

5

41.

மேல்நிலை சேர்க்கை விண்ணப்பப் படிவம்.  உரிய படிநிலைகள் அனைத்தும் எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்.

5

42

அ.

பள்ளியில் நான்

வீட்டில் நான்

1.  நேரத்தைச் சரியாகக் கடைபிடிப்பேன்

1. அதிகாலையில் எழுதல்.

2.  ஆசிரியர் சொல்படி நடப்பேன்..

2.  பெற்றோர் சொல்படி நடப்பேன்.

3. ஆசிரியரிடம் பணிவுடன் நடந்துக்கொள்வேன்.

3. பெரியவர்களிடம் பணிவுடன் நடந்துக்கொள்வேன்.

4. நண்பர்களுடன்  கலந்து உரையாடுவேன். ..

4. உறவினர்களுடன் கலந்து உரையாடுவேன்.

5. நண்பர்களுக்கு உதவிகள் செய்வேன்.

5. பெற்றோருக்கு உதவிகள் செய்வேன்

5

42

பொன்னிற கதிரவன் தன் ஒளிக் கதிரால் இந்தப் பூமியைப் பொலிவு பெற எழுகின்றான்.அழகிய காலை வேளையில் பால் போன்ற வெண்மை மேகங்கள் சூழ அந்த காட்சி பரவசத்தை உண்டாக்குது. வண்ணப் பறவைகள் காலை மெல்லிசையை ஒலித்துக் கொண்டே வலம் வர பட்டாம்பூச்சிகளும் பூக்களைச் சுற்றிவர, பூக்கள் தன் மணத்தை எல்லா இடங்களிலும் பரவச் செய்து,சுகந்தம் வீசின். காலை சில்லென உணர்வும், மணமும் பரவி எங்கும் இனிமையாக இருக்கிறது.

5

 

செவி மாற்றுத்திறனாளிக்கான வினா.

அ. நறுமணம்

ஆ. புதுமை

இ. காற்று

ஈ. விண்மீன்

உ. காடு

 

 

பகுதி – 5

 

43

அ)

·         வழக்கத்தில் பல ஆங்கில சொற்களை தமிழோடு இணைத்து பேசவும், எழுதவும் செய்வதை தவிர்க்க புதிய சொல்லாக்கம் தேவை.

·         தொழில் நுட்பம் சார்ந்த பல சொற்களை தமிழில் பயன்படுத்த சொல்லாக்கம் தேவை.

·         தாவரத்தின் அனைத்து நிலைகளுக்கும் தமிழில் சொற்கள் உண்டு.

·         புதிய தமிழ்ச்சொல்லாக்கம் தமிழ் மொழியை அழியாமல் பாதுகாக்கிறது.

·         மொழியின் மூலம் நாட்டாரின் நாகரிகத்தையும்,நாட்டு வளத்தின் மூலம் மொழிவளத்தினை அறியலாம்.

 

8

43

ஆ. குறிப்புச்சட்டம்

முன்னுரை

மன்னனும் இடைக்காடனும்

இறைவனிடம் முறையிடல்

இறைவன் நீங்குதல்

மன்னன் முறையிடல்

புலவனுக்கு சிறப்பு செய்தல்

முடிவுரை

முன்னுரை :

          கபிலரின் நண்பர் இடைக்காடனரை மன்னன் இகழ்ந்ததன் பொருட்டு இறைவன புலவனின் குரலுக்கு செவி சாய்த்த நிகழ்வைக் இக்கட்டுரையில் காண்போம்.

மன்னனும் இடைக்காடனும்

·         மன்னன் குசேலேப் பாண்டியன் முன் இடைக்காடன் தன் கவிதையை பாடினார்

·         மன்னன் அதனை பொருட்ப்படுத்தாமல்  இகழ்ந்தார்

·         புலவன்  அங்கிருந்து வெளியேறினார்.

இறைவனிடம் முறையிடல்

·         இடைக்காடன் இறைவனிடம் முறையிடல்

·         மன்னன் தன்னை இகழவில்லை.

·         இறைவனான உன்னை இகழ்ந்தான்.

இறைவன் நீங்குதல்

·         இறைவன் இதனைக் கண்டு கடம்பவன கோயிலை விட்டு நீங்கினார்

·         வையை ஆற்றின் தென் பக்கத்தே ஒரு திருக்கோயிலில் சென்றார்.

மன்னன் முறையிடல் :

·         மன்னன் இறைவன் நீங்கியதைக் கண்டு வருத்தம் அடைந்தான்.

·         இடைக்காடன் பாடலை இகழ்ந்தது தவறு தான் பொறுத்தருள   வேண்டினான்

புலவனுக்கு சிறப்பு செய்தல்

·         மன்னன் இடைக்காடனாரிடம் தன்னைப் பொறுத்துக் கொள்ள வேண்டுதல்

·         இறைவன் சொல் கேட்டு இடைக்காடனுக்கு மன்னன் சிறப்பு செய்தான்

முடிவுரை :

          மன்னனின் சொல் கேட்ட புலவர்களின் கோபம் தணிந்தது.

இடைக்கானார் புலவரின் பாடலை இகழ்ந்தன் காரணமாக இறைவன் புலவனின் குரலுக்குச் செவிச்சாய்த்தார்,

 

 

44

அ. குறிப்புச் சட்டம்

முன்னுரை

புயல் வருணனை

அடுக்குத் தொடர்

ஒலிக் குறிப்பு

முடிவுரை

முன்னுரை :

          புயலிலே ஒரு தோணியில் பா.சிங்காரம் எழுதியுள்ள புயல் வருணனை, அடுக்குத் தொடர், ஒலிக் குறிப்பு பற்றி இக்கட்டுரையில் காணலாம்.

புயல் வருணனை :

·         கொளுத்தும் வெயில்

·         மேகங்கள் கும்மிருட்டு

·         இடி முழக்கம் வானத்தைப் பிளந்தது.

·         மலைத் தொடர் போன்ற அலைகள்

·         வெள்ளத்தால் உடை உடலை ரம்பமாய் அறுக்கிறது

அடுக்குத் தொடர் :

·         நடுநடுங்கி

·         தாவி தாவி

·         குதி குதித்தது

·         இருட்டிருட்டு

·         விழுவிழுந்து

ஒலிக் குறிப்பு :

·         கடலில் சிலுசிலு, மரமரப்பு

·         ஙொய்ங், புய்ங் ஙொய்ங் புய்ங் ஙொய்ங் புய்ங்

முடிவுரை :

·         பகல் இரவாகி உப்பக்காற்று உடலை வருடியது

·         அடுத்த நாள் பினாங்கு துறைமுகத்தை அணுகினார்கள்.

·         இவ்வாறாக வருணனைகளோடும், அடுக்குத் தொடர்களையும், ஒலிக் குறிப்புகளையும் கொண்டு தோணி படும் பாட்டை பா.சிங்காரம் விவரிக்கின்றார்.

8

44.

ஆ.

முன்னுரை

தலைமுறைக்கு ஒரு முறை மட்டுமே மலரும் மூங்கில் போல, நம் தலைமுறைக்கு ஒருமுறை பிறப்பவர்கள் ஞானிகள் அவ்வாறு வந்தவரான இராமானுசரைப் பற்றி நாம் இங்கு காண்போம்.

இராமானுசரும் அவரது நண்பர்களும் பூரணர் இல்லத்திற்கு செல்லுதல்.                   

முதலியாண்டான் இராமானுசர், கூரேசர் ஆகிய மூவரும் பூரணர் இல்லத்திற்குச் சென்றனர்.

பூரணரின் கோபம்

§   மூவரையும் கண்ட பூரணர், இராமானுசரைப் பார்த்துதண்டும் கொடியுடன்  உங்களைத் தானே வர சொன்னேன்

இராமானுசர் நட்புக்கு அளித்த மரியாதை

· தங்கள் விருப்பப்படியே தான் வந்துள்ளேன்.

· தாங்கள் கூறிய தண்டு கொடிக்கு இணையானவர்கள் இவர்கள் என்றார்.

பூரணர் கூறியவை

·           நான் கூறும் மந்திரம் மறைபொருள் பரம ஆச்சார்யார் ஆளவந்தாரால் எனக்கு மட்டுமே கிடைத்தது.

·           இதை நாள்தோறும் தியானிப்பதால் பிறவிப்பணி நீங்கும்.

·           வேறு யாரிடமும் இதை வெளிப்படுத்தக் கூடாது.

·           வெளிப்படுத்தினால் தண்டனையாக நரகமே கிட்டும்.

பூரணர் திருமந்திரத்தை வழங்கல்

· நான் கூறும் திருமந்திரத்தை நீங்களும் சேர்ந்துக் கூறுங்கள்.

· திருமகளுடன் கூடிய நாராயணனின் திருப்பாதங்களை புகலிடமாக கொள்கிறேன். திருவுடன் சேர்ந்த நாராயணனை வணங்குகிறேன்.

இராமானுசர் பொதுமக்களுக்கு திருமந்திரம் வழங்குதல்                 

·                      மக்களிடம் பிறவிப் பிணியைத் தீர்க்கும் திருமந்திரத்தை உரத்த குரலில் மூன்று முறை கூறி, மக்களையும் மூன்று முறை கூறச் சொல்கிறார்.

 

பூரணர் இராமானுசரை அழைத்தல்

·                      பூரணர் தங்கள் மீது  கோபமாக உள்ளார். உடனே தங்களை அழைத்து வரச் சொன்னார் என பூரணரின் சீடர் கூறினார்;.

பூரணர் இல்லம்

· இராமானுசர் பூரணர் இல்லம் செல்கிறார்.

· பூரணர், குருவிற்கு நம்பிக்கை கேடு செய்து விட்டீர்கள் இதற்கு என்ன தண்டனை தெரியுமா என்கிறார்.

· இராமானுஜர் நரகமே கிட்டும் குருவே என்கிறார்.

· அது தெரிந்தும் ஏன் இப்படி செய்தீர்கள் எனக் கேட்கிறார் பூரணர்.

o    இச்செயலால் நான் மட்டுமே நரகத்தை சேர்வேன். ஆனால், பல்லாயிரக்கணக்கான மக்கள் பேறு பெறுவர் என்றார் இராமானுசர்.

பூரணர் மகிழ்வும், பூரணரின் மகனை இராமானுசர் தன் சீடனாக பெறுதலும்.

§  இராமானுசரின் பதிலைக் கேட்ட பூரணர் மனம் மகிழ்ந்து இந்த எண்ணம் எனக்கு தோன்றாமல் போய்விட்டதே எனக்கூறி, தன் மகனை இராமானுசரிடம் அடைக்கலமாக அளித்தார்.

முடிவுரை

இவ்வுலகில் பலர் தோன்றலாம் மறையலாம். ஆனாலும், வாழும் காலத்தில் பலருக்கும் பயன் அளித்துச் செல்பவர்கள் சிலர். அந்த வகையில் மிகவும் சிறப்பு பெற்றவர் நம் ஞானியான இராமானுசர் அவர்கள் என்பதை இக் கதையின் வாயிலாக உணர்ந்தோம்.

 .

8

44

1. சான்றோர் வளர்த்த தமிழ்

குறிப்புச்சட்டகம்

முன்னுரை

தமிழின் தொன்மை

சான்றோர்களின் தமிழ்ப்பணி

தமிழின் சிறப்பு

முடிவுரை

முன்னுரை:

          சான்றோர் வளர்த்த தமிழ் பற்றி இக்கட்டுரையில் நாம் காண்போம்.

தமிழின் தொன்மை:

Ø  தமிழின் தொன்மையைக் கருதி கம்பர் என்றுமுள தென்தமிழ் என்றார்.

Ø  கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்தக் குடி தமிழ்.

சான்றோர்களின் தமிழ்ப்பணி:

Ø  ஆங்கில மொழியை தாய் மொழியாகக் கொண்ட ஜி.யு.போப் திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிப் பெயர்த்து உலகறியச் செய்தார்.

Ø  வீரமாமுனிவர் தமிழில் முதல் சதுரகராதி வெளியிட்டார்

Ø  தமிழ் தாத்தா உ.வே.சாமிநாதன் அவர்கள் ஓலைச்சுவடியிலிருந்த பல தமிழ் நூல்களை அச்சிட்டு வெளியிட்டார்.

தமிழின் சிறப்புகள்:

Ø  தமிழ் இனிமையான மொழி. பல இலக்கிய, இலக்கணங்களை கொண்ட மொழி.

Ø  இயல்,இசை,நாடகம் என முத்தமிழ் உடையது.

Ø  தமிழ் மூன்று சங்கங்களை கண்டு வளர்ந்தது.

முடிவுரை:

          சான்றோர் வளர்த்த தமிழ் பற்றி இக்கட்டுரையில் நாம் கண்டோம்

8

45

அ.

குறிப்புச் சட்டம்

முன்னுரை

காட்சியமைப்பு

துறைவாரியான அரங்கம்

மக்களின் பயன்பாடு

முடிவுரை

. குறிப்புகளைக் கொண்டு கட்டுரை எழுதுக

( பொருத்தமான கருத்துகள் எழுதப்பட்டிருந்தால் மதிப்பெண் வழங்கலாம் )

 

8

 CLICK HERE TO DOWNLOAD PDF

நீங்கள் 10 விநாடிகள் காத்திருக்கவும் .

காத்திருப்புக்கு நன்றி
 


ஆக்கம் :

வெ.ராமகிருஷ்ணன்,

அரசு உயர்நிலைப் பள்ளி,

கோரணம்பட்டி.


Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post