பத்தாம் வகுப்பு
தமிழ்
மொழித்திறன் பயிற்சிகள்
பணித்தாள்
இயல் - 8
அ ) மரபுத் தொடருக்கான பொருளறிந்து தொடரில் அமைத்து எழுதுக;-
( 2 மதிப்பெண் )
மனக்கோட்டை
கண்ணும் கருத்தும்
அள்ளி இறைத்தல்
ஆறப்போடுதல்
ஆ ) பின் வரும் உரையாடலில் உள்ள பேச்சு வழக்கினை எழுத்து வழக்காக மாற்றுக;- ( 2 மதிப்பெண் )
“ தம்பீ? எங்க நிக்கிறே?”
“ நீங்க சொன்ன எடத்துலதாண்ணே! எதிர்த்தாப்புல ஒரு டீ ஸ்டால் இருக்குது.”
“ அங்ஙனக்குள்ளயே டீ சாப்டுட்டு,பேப்பரப் படிச்சிக்கிட்டு இரு.... நா வெரசா வந்துருவேன்”
“அண்ணே! சம்முவத்தையும் கூட்டிக்கிட்டு வாங்கண்ணே ! அவனெப் பாத்தே ரொம்ப நாளாச்சு !”
“அவம்பாட்டியோட வெளியூர் போயிருக்கான். உங்கூருக்கே அவனெக் கூட்டிக்கிட்டு வர்றேன்.”
“ ரொம்பச் சின்ன வயசுல பார்த்ததுண்ணே ! அப்பம் அவனுக்கு மூணு வயசு இருக்கும்!”
“ இப்ப ஒசரமா வளந்துட்டான்! ஒனக்கு அடையாளமே தெரியாது.! ஊருக்கு எங்கூட வருவாம் பாரேன்! சரி, போனை வையி. நாங் கெளம்பிட்டேன்.
இ) சொற்களைப் பிரித்துப் பார்த்துப் பொருள் தருக. ( 2 மதிப்பெண் )
1. கானடை
எ.கா : கானடை என்பதை,
கான் அடை – காட்டைச் சேர்
கான் நடை - காட்டுக்கு நடத்தல்
கால் நடை - காலால் நடத்தல்
இவ்வாறு மூன்று வகையாகப் பிரித்துப் பொருள் கூறலாம்.
2. வருந்தாமரை
3. பிண்ணாக்கு
4. பலகையொலி
கலைச்சொல் அறிக:-
Belief –
Renaissance –
Philosopher –
Revivalism –
அகராதியில் காண்க
ஆசுகவி –
மதுரகவி –
சித்திரகவி –
வித்தாரகவி -
தமிழ்விதை மற்றும் கல்விவிதைதள்