பத்தாம் வகுப்பு
தமிழ்
மொழித்திறன் பயிற்சிகள்
பணித்தாள்
இயல் - 7
அ ) பின்வரும் தொடர்களைக் கொண்டு பொருத்தமான தொடர் அமைக்க. ( 2 மதிப்பெண் )
வரப் போகிறேன் :
இல்லாமல் இருக்கிறது :
கொஞ்சம் அதிகம் :
முன்னுக்குப் பின் :
மறக்க நினைக்கிறேன்:
ஆ ) தொகைச் சொற்களைப் பிரித்து எழுதி,தமிழ் எண்ணுரு தருக. ( 2 மதிப்பெண் )
மூவேந்தர்களால் நாற்றிசையும் போற்றி வளர்க்கப்பட்ட முத்தமிழே, உலக மொழிகளில் உயர்ந்ததென்ற செம்மாந்த கூற்றிற்கு, தமிழ் இலக்கியங்களில் அமைந்துள்ள இருதிணை அமைப்பே காரணமாகும். முப்பாலை முழுமையாகத் தந்த தமிழின் சிறப்பினை ஐந்திணைகளில் அழகுற விளக்குபவை சங்க இலக்கியங்கள். நானிலத்தில் பசித்தவருக்கு அறுசுவை உணவுபோல் பத்துப்பாட்டும் எட்டுத்தொகையும் படிப்பவர்க்கு மனதிற்கினிமை ஈந்து தமிழ்ப் பெருமை சாற்றுகிறது.
இ ) கவிதையை உரையாடலாக மாற்றுக ( 5 மதிப்பெண் )
மகள் சொல்லுகிறாள்
அம்மா என் காதுக்கொரு தோடு – நீ
அவசியம் வாங்கி வந்து போடு!
சும்மா இருக்க முடியாது – நான்
சொல்லி விட்டேன் உனக்கு இப்போது!
தாய் சொல்லுகிறாள்
காதுக்குக் கம்மல் அழகன்று – நான்
கழறுவதைக் கவனி நன்று
நீதர் மொழியை வெகுபணிவாய் – நிதம்
நீ கேட்டு வந்து காதில் அணிவாய்!
மகள் மேலும் சொல்லுகிறாள்
கைக்கிரண்டு வளையல் வீதம் – நீ
கடன்பட்டுப் போட்டிடினும் போதும் !
பக்கியென் றென்னை யெல்லோரும் – என்
பாடசாலையிற் சொல்ல நேரும் !
தாய் சொல்லும் சமாதானம்
வாரா விருந்து வந்த களையில் – அவர்
மகிழ உபசரித்தல் வளையல்!
ஆராவமுதே மதி துலங்கு – பெண்ணே
அவர்சொல்வ துன்கைகட்கு விலங்கு!
பின்னும் மகள்
ஆபர ணங்கள் இல்லை யானால் – என்னை
யார் மதிப்பார் தெருவில் போனால்
கோபமோ அம்மா இதைச் சொன்னால் – என்
குறைதவிர்க்க முடியும்
அதற்குத் தாய்:
கற்பது பெண்களுக்கா பரணம் – கெம்புக்
கல்வைத்த, நகைதீராத ரணம்!
கற்ற பெண்களை இந்த நாடு – தன்
கண்ணில் ஒற்றிக் கொள்ளுமன் போடு.
ஈ ) ஊர்பெயர்களின் மரூஉவை எழுதுக:- ( 2 மதிப்பெண் )
புதுக்கோட்டை –
திருச்சிராப்பள்ளி -
உதக மண்டலம் -
கோயம்புத்தூர் -
நாகப்பட்டினம் -
புதுச்சேரி -
கும்பகோணம் -
திருநெல்வேலி -
மன்னார்குடி -
மயிலாப்பூர் -
சைதாப்பேட்டை -
.
உ) படம் தரும் செய்தியைப் பத்தியாக தருக. ( 5 மதிப்பெண் )
ஊ) கலைச்சொல் தருக
Consulate –
Patent –
Document –
Guild –
Irrigation –
Territory -
எ) அகராதியில் காண்க.
மிரியல் –
வருத்தனை –
அதசி –
துரிஞ்சல் -
தமிழ்விதை மற்றும் கல்விவிதைகள்