பத்தாம் வகுப்பு
தமிழ்
மொழித்திறன் பயிற்சிகள்
பணித்தாள்
இயல் - 6
அ ) தொடர்களை அடைப்புக்குறிக்குள் குறிப்பிட்டுள்ளவாறு மாற்றுக. ( 2 மதிப்பெண் )
1. அழைப்பு மணி ஒலித்தது. கயல்விழி கதவைத் திறந்தார். ( கலவைச் சொற்றொடராக மாற்றுக )
2. இன்னாசியார் புத்தகங்களை வரிசைப்படுத்தினார். அவற்றைப் புத்தக அடுக்கங்களில் அடுக்கிவைத்தார்.புத்தகங்களைக் கேட்டவர்களுக்கு எடுத்துக் கொடுத்தார்.(தொடர் சொற்றொடராக மாற்றுக )
3. ஒயிலாட்டத்தில் குழுவினர் ஒரே நிறத் துணியை முண்டாசு போலக் கட்டிக்கொண்டு,காலில் சலங்கை அணிந்து கொண்டு,கையில் ஒரு சிறுதுணியை இசைக்கேற்ப வீசியும் ஆடுவர். ( தனிச் சொற்றொடர்களாக மாற்றுக )
4. கூத்துக் கலைஞர் பாடத் தொடங்கினார். கூடியிருந்த மக்கள் அமைதியாயினர். (கலவைச் சொற்றொடராக மாற்றுக )
5. ஓடிக் கொண்டிருந்த மின் விசிறி சட்டென நின்றவுடன்,அறையில் உள்ளவர்கள் பேச்சு தடைபட்டது.
( தனிச் சொற்றொடராக மாற்றுக )
ஆ ) பிறமொழிச்சொற்களைத் தமிழ்ச் சொற்களாக மாற்றுக:- ( 2 ( அ ) 5 மதிப்பெண் )
புதிர்
உங்களிடம் ஏழு கோல்டு பிஸ்கட் உள்ளது. அதில் ஒன்று மட்டும் எடை குறைவானது. உங்களிடம் உள்ள ஒரு தராசை இரு முறைகள் மட்டுமே யூஸ் பண்ணி வெயிட் குறைந்த கோல்டு பிஸ்கட்டைக் கண்டுபிடிக்கவும்.
விடை
தராசின் இரண்டு தட்டுகளிலும் மூன்று மூன்று கோல்டு பிஸ்கட்டுகளை வையுங்கள்.இரண்டு தட்டுகளும் ஈக்வலாக இருந்தால்,கையில் மிச்சம் உள்ள பிஸ்கட்டே வெயிட் குறைவானது. பட் ஆனால், ஒரு பக்க தராசுத் தட்டு உயர்ந்தால் அதில் உள்ள மூன்று பிஸ்கட்களில் ஒன்று வெயிட் குறைவானது. அந்த மூன்று பிஸ்கட்டுகளை மட்டும் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இரண்டு தட்டுகளிலும் ஒரு ஒரு பிஸ்கட்டைப் போட்டு இதே எக்ஸ்பெரிமெண்ட்டை ரிப்பீட் செய்து ஆன்சரைக் கண்டுபிடியுங்கள்! ஆல் தி பெஸ்ட்!.
பிறமொழிச் சொல்
தமிழ்ச்சொல்
பிறமொழிச் சொல்
தமிழ்ச்சொல்
கோல்ட் பிஸ்கட்
தங்கக்கட்டி
இ ) நாட்டுப்புறப் பாடலுக்கேற்ற சூழலை எழுதுக:- ( 2 மதிப்பெண் )
பாடல்
பாடல் எழுந்த சூழல்
பாடறியேன் படிப்பறியேன் – நான் தான்
பள்ளிக்கூடம் தானறியேன்
ஏடறியேன் எழுத்தறியேன் – நான் தான்
எழுத்துவகை தானறியேன்
படிக்க நல்லா தெரிஞ்சிருந்தா – நான் தான்
பங்காளிய ஏன் தேடுறேன்
எழுத நல்லா தெரிஞ்சிருந்தா – நான் தான்
எதிராளிய ஏன் தேடுறேன்
நாலெழுத்துப் படிச்சிருந்தா – நான் தான்
நாலு தேசம் போய்வருவேன்
நாலு பக்கம் வரப்புக்குள்ள – தெனமும்
நான் பாடுறேன் தெம்மாங்கு தான்
ஈ ) மனிதனுக்கும் மலருக்குமான மணம் வீசும் இந்த நயவுரையைத் தொடர்க;- ( 2 மதிப்பெண் )
வண்டுகளை ஈர்க்கும் வாசனையில்
பூக்களிடம் வசப்படுவது மனிதர்களே!
பூச்சியைக் கவரும் வண்ணங்களில்
பூக்களிடம் விழுவது மனிதர்களே!
உ ) தொடரில் விடுபட்ட வண்ணங்களை உங்களின் எண்ணங்களால் நிரப்புக:- ( 2 மதிப்பெண் )
1. வானம் _______________________________தொடங்கியது. மழை வரும் போலிருக்கிறது.
2. அனைவரின் பாராட்டுகளால்,வெட்கத்தில் பாடகர் முகம் _____________________________
3. ____________________________ மனம் உள்ளவரை அப்பாவி என்கிறோம்.
4. கண்ணுக்குக் குளுமையாக இருக்கும் ____________________ புல்வெளிகளில் கதிரவனின் ____________________வெயில் பரவிக்கிடக்கிறது.
5. வெயில் அலையாதே;உடல் -------------- விடும்
ஊ. பொருத்தமானவற்றைச் சொற்பெட்டியில் கண்டு எழுதுக. ( 1 ( அ ) 2 மதிப்பெண் )
தங்கும், மரம் வீடு, அவிழும், தயங்கும்,மரவீடு, தோற்பாவை, விருது, தோற்பவை,கவிழும்,விருந்து
1. விரட்டாதீர்கள் – பறவைக்கு மரம் வீடு
வெட்டாதீர்கள் – மனிதருக்கு அவை தரும் -----------
2. காலை ஒளியினில் மலரிதழ் …………….
சோலைப் பூவினில் வண்டினம் ……………
3. மலைமுகட்டில் மேகம் ………………. அதைப்
பார்க்கும் மனங்கள் செல்லத் ……………..
4. வாழ்க்கையில்………………… மீண்டும் வெல்லும் – இதைத்
தத்துவமாய்த் ………………….. கூத்து சொல்லும்.
5. தெருக் கூத்தில் நடிகருக்குக் கைதட்டலே ………………. அதில்
வரும் காசு குறைந்தாலும் அதுவேயவர் ……………..
எ) கலைச்சொல் தருக.
Aesthetics –
Artifacts –
Terminology-
Myth -
ஏ. அகராதியில் காண்க.
தால் –
உழுவை –
அகவுதல் –
ஏந்தெழில் –
அணிமை -
தமிழ்விதை மற்றும் கல்விவிதைதள்
CLICK HERE TO GET PDF