பத்தாம் வகுப்பு
தமிழ்
மொழித்திறன் பயிற்சிகள்
பணித்தாள்
இயல் - 4
அ ) வல்லின ஒற்றை இட்டும் நீக்கியும் எழுதுக:- ( 2 மதிப்பெண் )
காகத்திற்கு காது உண்டா? அதற்கு காது கேட்குமா?
எல்லா பறவைகளுக்கும் காது உண்டு.செவி துளைகள் இறகுகளால் மூடி இருக்கும். மற்ற படி பாலூட்டிகளுக்கு உள்ளதுபோல் புற செவிமடல் இருக்காது. காகத்திற்கு காது உண்டு. காது கேட்கும்.
பறவைகளுக்கு பார்த்தல்,கேட்டல் உணர்வு நன்றாக வளர்ச்சிப் பெற்று இருக்கும். சுவைத்தல் உணர்வு குறைவாகவும் நுகர்தல் உணர்வு இல்லையென்றே கூறலாம்.
ஆ ) கொடுக்கப்பட்டுள்ள இரு சொற்களைப் பயன்படுத்தி ஒரு தொடர் அமைக்க:- ( 2 மதிப்பெண் )
அ) இயற்கை – செயற்கை
ஆ) கொடு - கோடு
இ) கொள் - கோள்
ஈ) சிறு - சீறு
உ) தான் - தாம்
ஊ) விதி - வீதி
இ ) பத்தியைப் படித்துப் பதில் தருக:- ( 5 மதிப்பெண் )
பருப்பொருள்கள் சிதறும்படியாகப் பல காலங்கள் கடந்து சென்றன. புவி உருவானபோதுநெருப்புப் பந்துபோல் விளங்கிய ஊழிக்காலம் தோன்றியது. பின்னர்ப் புவி குளிரும்படியாகத் தொடர்ந்து மழை பொழிந்த ஊழிக்காலம் கடந்தது. அவ்வாறு தொடர்ந்து பெய்த மழையால் புவி வெள்ளத்தில் மூழ்கியது. இப்படி மீண்டும் மீண்டும் சிறப்பாக ஆற்றல் மிகுந்து செறிந்து திரண்டு இப்படியாக ( வெள்ளத்தில் மூழ்குதல் ) நடந்த இந்தப் பெரிய உலகத்தில், உயிர்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழலாகிய உள்ளீடு தோன்றியது. உயிர்கள் தோன்றி நிலைபெறும்படியாக இப்பெரிய புவியில் ஊழிக்காலம் கடந்தது.
1. பத்தியில் உள்ள அடுக்குத்தொடர்களை எடுத்து எழுதுக.
2. புவி ஏன் வெள்ளத்தில் மூழ்கியது?
3. பெய்த மழை – இத்தொடரை வினைத்தொகையாக மாற்றுக.
4. இப்பத்தி உணர்த்தும் அறிவியல் கொள்கை யாது?
5. உயிர்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழலாக நீவிர் கருதுவன யாவை?
ஈ ) தொடரைப் படித்து விடையைக் கண்டறிக:- ( 2 மதிப்பெண் )
1. நூலின் பயன் படித்தல் எனில்,கல்வியின் பயன்____
2.விதைக்குத் தேவை எரு எனில்,கதைக்குத் தேவை_____
3.கல் சிலை ஆகுமெனில்,நெல் _______ ஆகும்.
4.குரலில் இருந்து பேச்சு எனில்,விரலில் இருந்து ________
5.மீன் இருப்பது நீரில்;தேன் இருப்பது________________
உ ) குறிப்பைப் பயன்படுத்தி விடை தருக:- ( 1 ( அ ) 2 மதிப்பெண் )
குறிப்பு – எதிர்மறையான சொற்கள்
1. மீளாத் துயர்
2. கொடுத்துச் சிவந்த
3. மறைத்துக் காட்டு
4. அருகில் அமர்க
5. பெரியவரின் அமைதி
6. எழுதாக்கவிதை
ஊ) கலச்சொல் தருக:-
Nanotechnology –
Biotechnology –
Ultraviolet rays –
Space Technology –
Cosmic rays –
Infrared rays –
எ. அகராதியில் காண்க:-
அவிர்தல் –
அழல் –
உவா –
கங்குல் –
கனலி –
தமிழ்விதை மற்றும் கல்விவிதைதள்
CLICK HERE TO GET PDF