10TH - TAMIL - MOZHITHIRAN - WORKSHEET - UNIT 3

  

பத்தாம் வகுப்பு 

தமிழ்

மொழித்திறன் பயிற்சிகள்

பணித்தாள்

இயல் - 3

அ )  பழமொழியை நிறைவு செய்க:- ( 2 மதிப்பெண் )

1.              உப்பில்லாப்_____________

2.             ஒரு பானை_______________

3.             உப்பிட்டவரை_______________

4.             விருந்தும்______________________

5.             அளவுக்கு_____________________          

ஆ ) பத்தியைப் படித்துக் கருத்தைச் சுருக்கி எழுதுக. ( 2 ( அ ) 5 மதிப்பெண் )

பழைய சோறு

பச்சை நெல் வயலைக் கண்கள் முழுதும் சுமந்து, இளநெல்லை நுகர்ந்து, அதன் பாலை ருசித்து, நீராவியில் அந்த நெல் அவியும் கதகதப்பான புழுங்கல் மணம் வரை சுவைத்தவள் நான். அவித்து, காய்ந்து, குத்திய அந்தப் புழுங்கல் அரிசியை, அதன் வழவழப்பை, கடுப்பு மணத்தை, சோறாகு முன் கை நிறைய அள்ளி வாயில் போட்டு நெரித்து  மென்றவள் சொல்கிறேன்.பகலெல்லாம் உச்சி வெயிலுக்கு அது சுடச்சுடப் புழுங்கலரிசிச் சோறு. இரவு முழுவதும் அந்தச் சோறு நீரில் ஊறும். விடிந்த இந்த காலையில் அதன் பெயர் பழைய சோறு அல்லது பழையது. காத்திருந்து, சின்ன வெங்காயம், பச்சை மிளகாய் கடித்து நீராகாரம் போல் குடிப்பது ஒரு வகை. வாழை இலையில் அந்தப் பழைய சோற்றைப் பிழிந்து போட்டால், வடுமாங்காய் அல்லது உப்பு நாரத்தங்காய் அதனுடன் சேர்ந்துகொள்ளத் துடிப்பது இன்னொரு வகை. சுண்ட வைத்த முதல் நாள் குழம்பு இன்னும் உச்சம் ! நல்ல பழையது மாம்பழ வாசம் வீசுமாம. பழைய சோறு – அது கிராமத்து உன்னதம்.

          “ மைக்கடல் முத்துக்கு ஈடாய் மிக்க நெல்முத்து “….. முக்கூடற்பள்ளு

 

 

 

இ ) கதையாக்குக:-   ( 5 மதிப்பெண் )                                      

          மனித வாழ்வில் ஒவ்வொருவரும் நாளும் நாளும் புதுப்புது  மனிதர்களைப் பார்க்கிறோம்;புதுப்புதுச் செய்திகள் கிட்டும்! கிட்டுகுற கருப்பொருள்களைத் திரட்டி,கற்பனை நயம் கூட்டிக்கதையாக்குவது ஒரு கலை. அது சிறுகதையாக இருக்கலாம்.புதினமாக இருக்கலாம்.அன்பை எதிர்பார்த்திருப்பவராக, யாருமற்றவராக..... இருக்கும் ஒருவர் உங்களின் உதவியால் மனம் மகிழ்ந்த நிகழ்வினைக் கதையாக்குக.

 

 

 

 

ஈ ) விடுபட்ட எழுத்துகளை நிரப்பி அந்த எழுத்துகளை மட்டும் இணைத்து ஒளிந்துள்ள ஒரு நூலின் பெயரைக் கண்டுபிடிக்க:- ( 2 மதிப்பெண் )

____கு ( பறவையிடம் இருப்பது )

கு____தி ( சிவப்பு நிறத்தில் இருக்கும் )

வா____  ( மன்னரிடம் இருப்பது )

____கா ( தங்கைக்கு மூத்தவள் )

_____ ( அறிவின் மறுபெயர் )

பட_____ ( நீரில் செல்வது )

 

உ )  இரு சொற்களையும் ஒரே தொடரில் அமைத்து எழுதுக:- ( 2 மதிப்பெண் )                              

1.சிலைசீலை          2.தொடுதோடு        3 மடு - மாடு

4 மலைமாலை      5 வளிவாளி          6 விடுவீடு

 

ஊ ) கலைச்சொல் தருக

Classical literature –

Epic literature –

Devotional literature –

Ancient literature

Regional literature –

Folk literature –

Modern literature –

எ) அகராதியில் காண்க.

ஊண்,ஊன் –

திணை,தினை-

அண்ணம்,அன்னம்-

வெல்லம்,வெள்ளம்

 

தமிழ்விதை மற்றும் கல்விவிதைதள்

www.tamilvithai.com                                                              www.kalvivithaigal.com

CLICK HERE TO GET PDF

 


Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post