10TH-TAMIL-SALEM DT - 2ND REVISION - ANSWER KEY

    

சேலம் –  இரண்டாம் திருப்புதல் தேர்வு வினாத்தாள்

பிப்ரவரி - 2022-2023

பத்தாம் வகுப்பு / மொழிப்பாடம் – தமிழ்

உத்தேச விடைக் குறிப்பு

நேரம் : 15 நிமிடம் + 3.00 மணி                                                         மதிப்பெண் : 100

பகுதி – 1

மதிப்பெண்கள் - 15

வினா.எண்

விடைக் குறிப்பு

மதிப்பெண்

1.

அ. வணிகக்கப்பல்களும்,ஐம்பெரும் காப்பியங்களும்

1

2.

இ. தமிழர் பண்பாட்டில் வாழை இலைக்குத் தனித்த இடமுண்டு

1

3.

ஈ. வானத்தையும் போரொலியையும்

1

4.

அ. சங்க காலத்தில் மொழிபெயர்ப்பு இருந்தது

1

5.

ஈ. சிலப்பதிகாரம்

1

6.

அ. கைம்மாறு கருதாமல் அறம் செய்வது

1

7.

ஈ. பாடல்: கேட்டவர்

1

8.

இ. உருவகம்

1

9.

ஆ. கூட்டு நிலைப் பெயரெச்சம்

1

10.

இ. பெருஞ்சித்திரனார்

1

11.

ஆ. ம.பொ.சிவஞானம்

1

12.

இ. பரிபாடல்

1

13.

ஆ.கீரந்தையார்

1

14.

அ. அடுக்குத்தொடர்

1

15.

ஆ. வானம்

1

பகுதி – 2

பிரிவு - 1

16.

அ. பண்டையத் தமிழர் இல்லங்களிலும், உள்ளங்களிலும் எந்த பண்பாடு செழித்திருந்தது?

ஆ. யார் போரிலும் அறநெறிப் பின்பற்றினர்?

( ஏற்புடைய பதில் இருப்பின் மதிப்பெண் வழங்கலாம் )

1

1

17.

உரைநடையும்,கவிதையும் இணைந்து யாப்பு கட்டுகளுக்கு அப்பாற்பட்டு உருவாக்கப்படும் கவிதை வடிவம் வசன கவிதை.

2

18.

நச்சப் படாதவன் -        பிறருக்கு உதவி செய்யாதவன்

2

19

·         பாசவர்வெற்றிலை விற்போர்

·         வாசவர்நறுமணப் பொருள் விற்போர்

·         பல்நிண வினைஞர்இறைச்சிகளை விற்பவர்

·         உமணர்உப்பு விற்பவர்

1

1

20.

விடை 8 எட்டுவகைப்படும்

1. சுட்டுவிடை    2.மறை விடை     3. நேர்விடை    4. ஏவல் விடை    5. வினா எதிர் வினாதல் விடை  6. உற்றது உரைத்தல் விடை     7. உறுவது கூறல்  விடை  8. இனமொழி விடை

1

1

21

கட்டாய வினா:

அருமை உடைத்தென் றசாவாமை வேண்டும்

பெருமை முயற்சி தரும்

2

பகுதி – 2 / பிரிவு - 2

22

v  வெட்சிகரந்தை

v  வஞ்சிகாஞ்சி

v  நொச்சி - உழிஞை

2

23

அ. மலை மீது மாலையில் ஏறினேன்.

ஆ. கமலா தோடினைத் தொட்டாள்

( ஏற்புடைய பதில் இருப்பின் மதிப்பெண் வழங்கலாம் )

1

1

24

அ. நான்கு, இரண்டு – ௪ , ௨

ஆ. எட்டு - ௮  

1

1

25.

“ தம்பி, எங்கே நிற்கிறாய்?”, “ நீங்கள் கூறிய  இடத்தில் தான் அண்ணா!.எதிர்ப்புறம் ஒரு தேநீர் கடை இருக்கிறது!.

1

1

26.

அ. தொன்மம்

ஆ. நம்பிக்கை

1

1

26

மாற்றுத் திறனாளர் வினா

அ. எழுத்து

ஆ. பூவில்

1

1

27.

உரைத்த – உரை + த் + த் + அ

உரை – பகுதி . த் – சந்தி , த் – இடைநிலை, அ – பெயரெச்ச விகுதி

1

1

28.

வெளிநாட்டில் வாழும் தன் தந்தையை பிரிந்த மகன் மழை முகம் காணாப் பயிர் போல வாட்டமாக இருந்தான்

2

பகுதி – 3 / பிரிவு - 1

29

அ. சீனா

ஆ. குப்லாய்கான்

இ. சோழர்

1

1

1

30

·         ஓரளவு மேம்படுத்துகின்றன.

·         மனிதனுக்கு தேவையான தேவைகளை மேம்படுத்தி இருக்கிறது.

·         மனிதனிடம் இரக்கம், அன்பு போன்றவை இல்லை.

·         மனிதன் இயந்திரத் தனமான வாழ்வை வாழ்கின்றான்

3

31.

Ø  வணிக நோக்கமின்றி அறம் செய்ய வேண்டும். அதை விளம்பரப்படுத்தக்கூடாது.

Ø  நீர்நிலை பெருக்கி,நிலவளம்கண்டு,உணவுப் பெருக்கம் காணவேண்டும் என்று கூறுவது இன்றைய அரசியல் தலைவர்களுக்குப் பொருந்தும்

3

பகுதி – 3 / பிரிவு - 2

32

·         தொழில் செய்வதற்குத் தேவையான கருவி, அதற்கு ஏற்ற காலம், செயலின் தன்மை, செய்யும் முறை ஆகியவற்றை அறிந்து செயல்பட வேண்டும் என கூறியிருப்பது நமக்கும் பொருத்தமாக அமைகிறது.

·         மனவலிமை, குடிகளைக் காத்தல், ஆட்சி முறைகளைக் கற்றல், நூல்களைக் கற்றல்,விடாமுயற்சி போன்றவை நமக்கும் சிறப்பாக அமைய வேண்டும்.

·         இயற்கையான நுண்ணறிவும் ,நூலறிவும் உடையவர்களிடம் எந்த சூழ்ச்சியும் நடைபெறாது

·         ஒரு செயலைச் செய்வதற்குரிய முறைகளை நூல் வழியாக அறிந்திருப்பினும் உலகியல் நடைமுறைகளை அறிந்து தான் நாம் செயல்பட வேண்டும்.

3

33.

மருத்துவர் கத்தியால் அறுத்துச் சுட்டாலும் அது நன்மைக்கே என நோயாளி மருத்துவரை நேசிப்பார். அதுபோல நீங்காத துன்பத்தை எனக்குத் தந்தாலும் உன் அருளையே எதிர்பார்த்து வாழ்கிறேன்.

3

34.

அ) வாளால் அறுத்துச் சுடினும் மருத்துவன் பால்

மாளாத காதல் நோயாளன் போல் மாயத்தால்

மீளாத் துயர்தரினும் வித்துவக் கோட்டம்மா! நீ

ஆளா உனதருளே பார்ப்பன் அடியேனே.            

 -குலசேகராழ்வார்

 

( அல்லது )

ஆ) தூசும் துகிரும் ஆரமும் அகிலும்

மாசுஅறு முத்தும் மணியும் பொன்னும்

அருங்கல வெறுக்கையோடு அளந்துகடை அறியா

வளம்தலை மயங்கிய நனந்தலை மறுகும்;

பால்வகை தெரிந்த பகுதிப் பண்டமொடு

கூலம் குவித்த கூல வீதியும்;

                                                                   இளங்கோவடிகள

 

3

பகுதி – 3 / பிரிவு - 3

35

மல்லிகைப்பூ

இருபெயரொட்டுப் பண்புத்தொகை

மல்லிகையான பூ

பூங்கொடி

உவமைத் தொகை

பூப் போன்ற கொடி

ஆடுமாடு

உம்மைத் தொகை

ஆடுகளும்மாடுகளும்

தண்ணீர்த் தொட்டி

இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை

தண்ணீரை உடையத் தொட்டி

குடிநீர்

வினைத்தொகை

குடித்தநீர்,குடிக்கின்றநீர்,குடிக்கும் நீர்

சுவர்க்கடிகாரம்

ஏழாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை

சுவரின் கண் கடிகாரம்

மணி பார்த்தாள்

இரண்டாம் வேற்றுமைத் தொகை

மணியைப் பார்த்தாள்

3

36.

·         வினா ஆறு வகைப்படும்.

வினா வகை

விளக்கம்

உதாரணம்

அறிவினா

விடை அறிந்த வினாவிற்கு பிறருக்கு தெரியுமா என அறியும் பொருட்டு வினவுவது

மாணவரிடம் ஆசிரியர் “ இச்செய்யுளின் பொருள் யாது? என வினவுவது.

அறியா வினா

அறியாத ஒன்றை அறிவதற்கு கேட்கும் வினா

ஆசிரியரிடம் மாணவர் “ இச்செய்யுளின் பொருள் யாது? என வினவுவது.

ஐய வினா

ஐயம் நீங்க கேட்கும் வினா

அங்கு இருப்பது பாம்பா?கயிறா?

கொளல் வினா

ஒரு பொருளை வாங்கிக் கொள்ளும் பொருட்டு வினவுவது

சர்க்கரை உள்ளதா? என கடைக்காரரிடம் வினவுதல்

கொடை வினா

பிறருக்கு ஒரு பொருளை கொடுக்கும் பொருட்டு வினவுதல்

உனக்கு எழுதுகோல் வேண்டுமா?

ஏவல் வினா

செயலை செய்யுமாறு ஏவுதற் பொருட்டு வினவுவது

வீட்டில் அரிசி இல்லை. நீ கடைக்கு செல்கிறாயா?

3

37

தீவகம் – விளக்கு.

 செய்யுளின் ஓரிடத்தில் நின்ற ஒரு சொல் அச்செய்யுளின் பல இடங்களிலும் உள்ள சொற்களோடு பொருந்தி பொருள் தருவது.

எ.கா : சேந்தன வேந்தன் நெடுங்கண்………

சேந்தன என்னும் சொல் செய்யுளின் பல இடங்களிலும் சென்று சிவந்தன என்னும் பொருளை தருகிறது.

3

பகுதி – 4

38

  அ)

 

சுந்தரனார் வாழ்த்து

பெருஞ்சித்திரனார் வாழ்த்து

கடலெனும் ஆடை உடுத்திய நிலமகளுக்கு முகம் பாரத கண்டம்

மண்ணுலகப் பேரரசி

நெற்றியில் மணம் வீசூம் திலகமாக தமிழ்நாடு

சங்க இலக்கியங்கள் அணிகலன்கள்

எல்லா திசைகளில் உன் புகழ்

தும்பி போல உன்னை சுவைத்து உன் பெருமையை எங்கும் முழங்குகின்றோம்

5

38

ஆ.

Ø  இரண்டாம் இராச இராச சோழனின் நாட்டின் வளம்,ஆட்சிச் சிறப்பைச் சொல்கிறது.

Ø  யானைகள் மட்டும் பிணிக்கப்படுகிறது.மக்கள் பிணிக்கப்படவில்லை.

Ø  சிலம்புகள் புலம்புகின்றன. மக்கள் புலம்புவதில்லை.

Ø  ஓடைகள் கலக்கமடைகின்றன.மக்கள் கலக்கமடைவதில்லை.

Ø  நீர் அடைக்கப்பட்டிருக்கிறது. மக்கள் அடைக்கப்படுவதில்லை.

Ø  மாங்காய்கள் வடுப்படுகிறது. மக்கள் வடுபடுவதில்லை.

Ø   நெற்போர் மட்டுமே இருக்கிறது.மற்ற போர்கள் இல்லை..

5

39

சேலம்

03-03-2021

அன்புள்ள நண்பனுக்கு,

            நான் நலம். நீ அங்கு நலமா? என அறிய ஆவல்.” மரம் இயற்கையின் வரம்என்ற தலைப்பில் மாநில அளவில் நடைபெற்ற கட்டுரைப் போட்டியில் நீ முதல் பரிசு பெற்றது மிக மகிழ்ச்சியாக உள்ளது. மனமார வாழ்த்துகிறேன். நீ இன்னும் பல பரிசுகள் பெற வாழ்த்துகிறேன்.

இப்படிக்கு,

உன் அன்பு நண்பன்,

அ அ அ அ அ அ அ .

உறைமேல் முகவரி;

            பெறுதல்

                        திரு.இரா.இளங்கோ,

                        100,பாரதி தெரு,

                        சேலம்.

5

39

v  பசுமைப் பாதுகாப்புப் படை அனைத்து பள்ளிகளிலும் சிறப்பாகச் செயல்படுகிறது.இதன் மூலம் பள்ளிகள் பசுமையாக உள்ளது.

v  மரங்கள் நம் வாழ்வில் முக்கிய அங்கம். அதனை உணர்ந்து அனைவரும் மரங்களை வளர்க்க வேண்டும்.

v  மரம் நடும் விழாவிற்கு வருகைபுரிந்த சிறப்பு விருந்தினர் மரங்களின் அவசியம், மாணவர்கள் மற்றும் சமூகத்தின் கடமை ஆகியவற்றை எடுத்துரைத்து நமக்கு சிறப்பாக வழிகாட்டினார்.

இவ்விழாவினை ஏற்பாடு செய்த தலைமை ஆசிரியருக்கும் மற்றும் பள்ளியின் பசுமைப் பாதுகாப்புப் படைக்கும், சிறப்பான கருத்துகளை கூறிய சிறப்பு விருந்தினருக்கும்,பெற்றோருக்கும் பள்ளியின் சார்பாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்

5

40

( ஏற்புடைய விடை இருப்பின் மதிப்பெண் வழங்கலாம் )

ஏடு எடுத்தேன் கவி ஒன்று எழுத  

என்னை எழுது என்று சொன்னது இந்தக் காட்சி    

அர்த்தமுள்ள இந்தக் காட்சி

சமூகத்திற்கு தேவையான காட்சி

சமூக விளைவை ஏற்படுத்துக் காட்சி

எல்லோருக்கும் அறிவுறுத்தும் காட்சி

5

41.

கொடுக்கப்பட்ட தரவுகளைக் கொண்டு விண்ணப்பம் முழுமையாக பூர்த்தி செய்து இருப்பின் முழு மதிப்பெண் வழங்கலாம்.

5

42

அ.  மொழி பெயர்க்க

அறைக்குள் யாழிசை

 ஏதென்று சென்று

எட்டிப் பார்த்தேன்

    பேத்தி,

நெட்டுரு பண்ணினாள்

நீதிநூல் திரட்டையே

5

42

1. ஊட்டமிகு உணவு உண்டவர் நீண்ட வாழ்நாள் பெற்றார்..

2. கலையரங்கத்தில் எனக்காகக் காத்திருக்கிறவரை அழைத்து வாருங்கள்.

3. நேற்று என்னைச் சந்தித்தவர் என் நண்பர்.

4.பொது அறிவு நூல்களைத் தேடிப் படித்தவர் போட்டித் தேர்வில் வென்றார்.

 

5

42

செவி மாற்றுத்திறனாளிகளுக்கான மாற்று வினா

1. மீண்டும் மீண்டும்

2. தொடர்ந்து பெயத மழை

3. பெய்மழை

4. பெரு வெடிப்பு கோட்பாடு.

5. ஐம்பூதங்கள்

 

 

பகுதி – 5

 

43

அ)

Ø  வழக்கத்தில் பல ஆங்கில சொற்களைத் தமிழோடு இணைத்து பேசவும், எழுதவும் செய்வதைத் தவிர்க்கப் புதிய சொல்லாக்கம் தேவை.

Ø  தொழில் நுட்பம் சார்ந்த பல சொற்களை தமிழில் பயன்படுத்த சொல்லாக்கம் தேவை.

Ø  தாவரத்தின் அனைத்து நிலைகளுக்கும் தமிழில் சொற்கள் உண்டு.

Ø  புதிய தமிழ்ச்சொல்லாக்கம் தமிழ் மொழியை அழியாமல் பாதுகாக்கிறது.

Ø  மொழியின் மூலம் நாட்டாரின் நாகரிகத்தையும்,நாட்டு வளத்தின் மூலம் மொழிவளத்தினையும் அறியலாம்.

 

8

 

ஆ.

குறிப்புச் சட்டகம்

Ø  முன்னுரை

Ø  நாட்டு விழாக்கள்

Ø  விடுதலைப் போராட்ட வரலாறு

Ø  நாட்டின் முன்னேற்றத்தில் மாணவர்பங்கு

Ø  முடிவுரை

முன்னுரை:

          மாணவப் பருவமும் நாட்டுப் பற்றும் பற்றி இக் கட்டுரையில் காணலாம்.

நாட்டு விழாக்கள்:

          சுதந்திர தினம், குடியரசு தினம், காந்திஜெயந்தி, தேசிய ஒருமைப்பாடு தினம், ஆகிய நாட்களில் மாணவர்கள் ஒற்றுமையோடு கொண்டாடி நாட்டிற்கு பெருமை சேர்க்கின்றனர்.

விடுதலைப் போராட்ட வரலாறு:

          வெள்ளையனே வெளியேறு,உப்புச் சத்தியாகிரகம் போன்ற போராட்டங்கள் மூலம் பெற்ற விடுதலையை எண்ணி போற்ற வேண்டும்.

நாட்டின் முன்னேற்றத்தில் மாணவர்பங்கு:

          மாணவர்கள் கல்வி பயில்வதோடு பள்ளியில் செயல்படும் சாரணர் இயக்கம், இளஞ்செஞ்சிலுவை சங்கம், NSS, NCC போன்ற இயக்கங்களில் இணைந்து சுதந்திர இந்தியாவைக் காப்பாற்றும் பொறுப்பு அறிந்து செயல் பட வேண்டும்.

முடிவுரை:

          நாட்டினை உயர்த்துவேன்,தலை நிமிர்ந்து வாழ்வேன் என்ற உறுதியான மனநிறைவோடு வாழ்ந்திடுவோம்.

8

44.

அ.

குறிப்புச் சட்டகம்

முன்னுரை

தேசாந்திரி

கருணை அன்னமய்யா

முடிவுரை

முன்னுரை :

          பசியென்று வந்தவர்களுக்கு தன்னிடம் இருப்பதைக் கொடுத்து காக்கின்ற மனித நேயம் விருந்தோம்பல்.இக்கட்டுரையில் கோபல்லபுரத்து மக்களின் விருந்தோம்பலைக் காணலாம்.

தேசாந்திரி:

Ø  சுப்பையாவின் வயலில் அருகு எடுக்கும் பணி.

Ø  அன்னமய்யாவுடன் ஒரு ஆள் வந்தான்

Ø  அவன் மிக சோர்வாக இருந்தான்

Ø  லாட சன்னியாசி போல உடை அணிந்து இருந்தான்.

Ø  குடிக்க தண்ணீர் கேட்ட அவனுக்கு நீச்ச தண்ணீர் கொடுக்கப்பட்டது.

Ø  வேப்பமர நிழலில் சோர்வாக அமர்ந்தான்

கருணை அன்னமய்யா:

Ø  அவன் பெயர் பரமேஸ்வரன் என்றும்,தற்போது மணி என்றும் கூறினான்.

Ø  அன்னமய்யா ஒரு உருண்டை கம்மஞ் சோற்றையும், துவையலும் வைத்துக் கொடுத்தார்.

Ø  கடுமையான பசியிலும் அரை உருண்டை சாப்பிட்டுவிட்டு கண்மூடி உறங்கினான்.

Ø  ஆனந்த உறக்கம் கண்டான்.

முடிவுரை:

          பசியென்று வந்தவர்களுக்கு தன்னிடம் இருப்பதைக் கொடுத்து காக்கின்ற கோபல்லபுரத்து மக்களின் விருந்தோம்பல் போற்றுதலுக்கு உரியது..

8

44

ஆ)

இடம் : பள்ளி, வகுப்பறை

பங்கேற்பாளர்கள் : தமிழாசிரியர்,சகுந்தலாதேவி, பவித்ரா, தாரணி,

சகுந்தலாதேவி : பவித்ரா, தாரணி நமது தமிழ் ஆசிரியர் அன்றைய வகுப்பில்

மாணவர்கள் எப்படி இருக்க வேண்டும் எனக் கூற வந்தார். அதற்குள் மணி அடித்துவிட்டது. இன்று நாம் அவரிடம் முதலில் கேட்டிடுவோம்.

பவித்ரா       :     ஆம், வந்தவுடன் கேட்கலாம்.

மாணவர்கள் :    வணக்கம். ஐயா,

தமிழாசிரியர் :    வணக்கம் மாணவர்களே, எல்லோரும் உணவு உண்டீர்களா?

மாணவர்கள் :    உண்டோம் ஐயா.

சகுந்தலா தேவி : ஐயா நேற்றைய வகுப்பில் மாணவர்கள் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதனை கூற வந்தீர்கள். அதற்குள் மணி அடித்துவிட்டது. இப்போது கூறுங்கள்.

பவித்ரா, தாரணி: ஆமாம். ஐயா.

தமிழாசிரியர் :     ஆம். மூன்று உதாரணங்களுடன் கூறுகிறேன். கேளுங்கள்

மாணவர்கள் :    கூறுங்கள் ஐயா.

தமிழாசிர்யர் :     1. மாணவர்கள் கொக்கைப் போல இருக்க வேண்டும். காத்திருந்து கிடைக்கும் வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். பொறுமை அவசியம்.

சகுந்தலா தேவி : ஐயா, இனிமேல் நாங்கள் அவசரப்படமாட்டோம்.

தமிழாசிரியர்     : அடுத்து, இரண்டாவது கோழியைப் போல குப்பையைக் கிளறினாலும். தனக்கான உணவினை மட்டும் உட்கொள்வது போல சமூகத்தில் கெட்டது இருந்தாலும், நல்லதை மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும்.

பவித்ரா          : ஆமாம் ஐயா, நாங்கள் நல்லதை மட்டுமே எடுத்துக் கொண்டு எங்கள் பண்பினை வளர்த்துக் கொள்வோம்.

தமிழாசிரியர் :    மூன்றாவதாக உப்பைப் போல உணவில் உப்பின் சுவையை நாக்கு உணர்வதை போல , ஒவ்வொருவரின் வெளித்தோற்றத்தைக் காணாது அவரின்  குணநலன்களை ஆராய்ந்து உணர்ந்து பழக வேண்டும்.

மாணவர்கள் :    ஐயா, அருமை. மிக சரியாக விளக்கினீர்கள். இனி நாங்கள் இவ்வாறே நடந்து கொள்வோம். நன்றி ஐயா.

.

8

45

அ.

குறிப்புச் சட்டம்

குறிப்புச்சட்டகம்

முன்னுரை

பொருட்காட்சி

நுழைவுச் சீட்டு

பல்துறை அரங்கம்

அங்காடிகள்

பொழுதுபோக்கு

முடிவுரை

முன்னுரை :

எங்கள் பகுதியில் நடைபெற்ற அரசுப்பொருட்காட்சிக்குச் சென்று வந்த நிகழ்வை இக்கட்டுரையில் காண்போம்.

பொருட்காட்சி :

          மக்கள் அதிகமாக கூடும் இடத்தில் பொருட்காட்சி நடைபெற்றது.

நுழைவுச் சீட்டு:

          பொருட்காட்சி நடைபெறும் இடத்தின் உள்ளே செல்ல நுழைவுக் கட்டணம் வசூலிக்கப்பட்டது.பெரியவர்களுக்கு 30 ரூபாயும்,சிறுவர்களுக்கு 15 ரூபாயும் என நுழைவுக்கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டது.

பல்துறை அரங்கம் :

          அரசின் சாதனைகள் கூறும் பல்வேறு அரசுத்துறை அரங்கங்களும்,தனியார் பொழுது போக்கு நிறுவனங்களும் நிறைய இருந்தன.

அங்காடிகள்:

          வீட்டு உபயோகப் பொருட்கள்,விளையாட்டுப் பொருட்கள், கைவினைப் பொருட்கள் என பல்வேறு பொருட்களும் ஒரே இடத்தில் கிடைத்தன.

பொழுதுபோக்கு :

          சிறுவர்கள் மகிழ்ச்சியுடன் விளையாட பொம்மை அரங்கம் போன்ற பல்வேறு அரங்கங்களும்,இராட்டின்ங்களும் நிறைய இருந்தன.

முடிவுரை:

          எங்கள் பகுதியில் நடைபெற்ற அரசுப் பொருட்காட்சிக்குச் சென்று வந்த நிகழ்வினை இக்கட்டுரையில் கண்டோம்.

8

45

ஆ. குறிப்புகளைக் கொண்டு கட்டுரை எழுதுக

முன்னுரை

இயற்கையோடு இயைந்து வாழ்வோம்

வானத்து மழைநீரைப் பூமியில் காப்போம்

மழைக்கு ஆதாரமான மரங்களை வளர்ப்போம்

முடிவுரை

( பொருத்தமான கருத்துகள் எழுதப்பட்டிருந்தால் மதிப்பெண் வழங்கலாம்

8

 DOWNLOAD THIS PDF

 


ஆக்கம் :

வெ.ராமகிருஷ்ணன்,

அரசு உயர்நிலைப் பள்ளி,

கோரணம்பட்டி.

Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post