பத்தாம் வகுப்பு
தமிழ்
கற்றல் விளைவுகள்
10 ஆம் வகுப்பு தமிழ் கற்றல் விளைவுகள்
T1001 தமிழ்மொழியின் செழுமை குறித்து ஆற்றலுடன் தனித்தமிழில்
உரையாற்றுதல் கவிதையைப் படித்துச் சுவைத்தல், பொருளுணர்தல்.
T1002 மொழியிலுள்ள வகைப்படுத்தப்பட்ட சொல்வளங்களின் பொருளையும், நுட்பத்தையும் பேச்சிலும் எழுத்திலும் இடமறிந்து கையாளுதல், புதிய சொற்களை உருவாக்கி எழுதுதல்.
T1003 மொழி, தனித்தும் தொடர்ந்தும் பொருள்தரும் நுட்பத்தையும் அதன் நயங்களையும் அறிந்து முறையாக மொழியைப் பயன்படுத்துதல்.
T1004 உரை நடையில் பயின்று வரும் அணிநயங்களைக் கண்டறிதல், பொருளுக்குப் பொருந்தி வரும் தன்மையுணர்ந்து படித்துச் சுவைத்தல், நயமான தொடர்களுடன் உரைகளை எழுத முற்படுதல்.
T1005 எழுத்து, சொல்லின் அடிப்படை இலக்கணம் அறிந்து மொழியைக் கையாளுதல்.
T1006 இயற்கையின் இன்றியமையாத ஆற்றலான காற்றின் தேவையையும் காற்று மாசுபாடு குறித்த விழிப்புணர்வையும் ஊட்டத்தக்கவாறு மொழியைப் பயன்படுத்துதல்.
T1007 கவிதைகளிலும் கதைகளிலும் இடம்பெறும் நிகழ்வுகளைச் சுவையுணர்ந்து படித்தல், அவற்றின் மொழிக்கூறுகளை உணர்ந்து பேசுதல், எழுதுதல் மற்றும் அவை போன்ற படைப்புகளை உருவாக்குதல்.
T1008 சங்ககால வாழ்வு செய்யுளில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள நுட்பத்தினையும் அதன் மொழிப் பயன்பாட்டுத் திறனையும் படித்துச் சுவைத்து அவை சார்ந்த தங்களின் கருத்துகளைப் பதிவு செய்தல்
T1009 குறிப்புகளைக் கொண்டு படைப்புகளை உருவாக்குதல் அனுபவங்கள் வழி வெளிப்படும் எண்ணங்களை வருணித்தும் விவரித்தும் எழுதுதல்.
T1010 மொழியில் பொருள் வெளிப்பாட்டிற்கேற்ப பயன்படுத்தப்படும் தொகைநிலைகளின் தன்மைகளை அறிந்து எழுதுதல்.
T1011 வாழ்வியலுடன் பிணைந்துள்ள மொழியின் பண்பாட்டுக் கூறுகளுள் ஒன்றான விருந்தோம்பலின் மாண்பினை உணர்ந்து பின்பற்றுதல் பண்பாட்டுக் கூறுகள் சார்ந்து ஒப்பிட்டுப் பேசவும் கலந்துரையாடவும் திறன் பெறுதல்
T1012 இலக்கியங்களில் சொல்லப்பட்டுள்ள விருந்தோம்பல் கருத்துகளையும் அதன் மொழியையும் படித்துப் புரிந்து கொள்ளுதல்.
T1013 உணவு ஆக்கும் தன்மை,விருந்தோம்பும் முறை ஆகியவை மொழியில் நயம்படச் சொல்லப்படும் திறம் அறிந்து ஈர்ப்புடன் பேசவும் எழுதவும் பழகுதல்.
T1014 சிற்றூர் மக்களின் வாழ்வியல்முறையையும் பயன்பாட்டு மொழியையும் வட்டார இலக்கியங்களின் நடையில் படித்துப் புரிந்து கொள்ளுதல்.
T1015 மொழிப் பயன்பாட்டில் தொகா நிலைத் தொடர்களின் வகைகளை அறிந்து எழுதுதலை முறைப்படுத்துதல்.
T1016 எளிமையும் இனிமையும் நிறைந்த அறஇலக்கியத்தைப் படித்துச் சுவையுணர்தல், மனதில் நிறுத்துதல், வாழ்வில் பயன்படுத்துதல்.
T1017 வளர்ந்து வருகின்ற தொழில் நுட்பங்கள் நம் மொழியில் திறம்படச் சொல்லப்படும் பாங்கறிந்து மொழியைக் கையாளுதல், தொழில் சார் கருத்துகளைப் புதுப்பித்தல்.
T1018 அறிவியல் கருத்துகள் உட்பொதிந்துள்ள செய்யுள்களின் கருத்து வெளிப்பாட்டுத் திறனைப் படித்துணர்ந்து எதிர்வினையாற்றுதல்.
T1019 செய்யுள் கருத்துகளோடு அறிவியல் செய்திகளை ஒப்பிட்டுப் புரிந்து கொள்ளுதல்
T1020 உரையாடல் வழி கருத்துகளைப் படித்து பொருளுணர்தல்,அறிந்த படித்த கருத்துகளை உரையாடலாக வெளிப்படுத்துதல்.
T1021 இலக்கண அடிப்படைகளைப் புரிந்துகொண்டு பிழையற்ற சொல்,தொடரமைப்புகளைப் பேச்சிலும், எழுத்திலும் பயன்படுத்துதல்.
T1022 மொழிபெயர்ப்பின் இன்றியமையாமையையும் நுட்பத்தையும் உணர்ந்து மொழிபெயர்ப்புப் பகுதிகளைப் படித்தல், படித்த பகுதியின் கருத்துகளுடன் தங்கள் கருத்துகளையும் இணைத்து எளிமையாக வழங்கும் திறன் பெறுதல்.
T1023 செய்யுள் உணர்த்தும் கல்வி சார்ந்த கருத்துகளை அறிந்து சுவைத்தல், இன்றைய கல்வியுடன் ஒப்பிட்டு உணர்ந்து பேசுதல், எழுதுதல்.
T1024 புராண இலக்கியத்தின் மொழி,தொடர் அமைப்புகளை அறிதல், அறிவால் பெறப்படும் சமூக மதிப்பு காலந்தோறும் மாறாதிருப்பதைப் படித்துச் சுவைத்தல்.
T1025 மொழிபெயர்க்கப்பட்ட நிகழ்வை, கதையைப் படித்துப் பொருளுணர்வதுடன் கருத்துகளைத் தொகுத்து வரிசைப்படுத்தி எளிமையாக வழங்குதல்.
T1026 மொழியில் வினாக்கள், விடைகள் கட்டமைக்கப்படும் தன்மையறிந்து மொழியைக் கையாளுதல், பொருள் கொள்ளும் முறையறிந்து செய்யுளைப் படித்துச் சுவைத்தல்.
T1027 தமிழர்தம் நிகழ்கலைகளின் மேன்மையறிந்து, அவற்றை வளர்க்கவும் நிலைபெறச் செய்யவும் மொழிவழியாகத் தங்களின் பங்களிப்பைத் தருதல்.
T1028 எளிய சொற்களும் கருத்துகளும் கவிதை பொருளாகும் திறமறிந்து கவிதை படித்தல், படைத்தல்.
T1029 கருத்து வெளிப்பாட்டிற்கு ஏற்ற மொழிநடையைச் சிற்றிலக்கியம் வாயிலாகப் படித்தறிந்து சந்த நயத்தினைப் பிரித்துணர்ந்து சுவைத்தல்.
T1030 அழகியலும் கலைநயமும் இலக்கியத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளமையை அறிந்து செய்யுளைப் படித்தல், அதனுள் பொதிந்துள்ள பொருள், சொல், ஓசை நயங்களை உணர்ந்து இலக்கியம் பயிலும் ஆர்வம் பெறுல். நா நெகிழ், நா பிறழ் பயிற்சிகளில் ஆற்றல் பெறுதல்.
T1031 கதைகளைப் படித்து மையக் கருத்துணர்தல், கதைக் குறித்து கலந்துரையாடுதல்.
T1032 தமிழரின் அகப்பொருள் இலக்கணத்தை அறிதலின் வாயிலாக, இயற்கையுடன் ஒன்றியிருந்த பண்டைய மக்களின் வாழ்க்கைமுறையைப் புரிந்துகொள்ளுதல்.
T1033 எளிமையும் இனிமையும் நிறைந்த அற இலக்கியத்தைப் படித்துச் சுவையுணர்தல், மனதில் நிறுத்துதல், வாழ்வில் பயன்படுத்துதல்.
T1034 தன் வரலாறு என்னும் இலக்கிய வகைமையின் கருத்து வெளிப்பாட்டுத் தன்மையினைப் புரிந்து, அது போல எழுத முற்படுதல்.
T1035 கவிதையின் மையக் கருத்தறிதல், கவிதையில் சொற்களும் தொடர்களும் பயன்படுத்தப்பட்டுள்ள முறையறிந்து புதுக்கவிதை படித்தல், படைத்தல்.
T1036 வேந்தர்களின் சிறப்புணர்த்தும் கல்வெட்டு இலக்கியமான மெய்க்கீர்த்தியின் தனித்தன்மை உணர்ந்து படித்தல்.
T1037 முதல் காப்பியத்தின் மொழிநடை அறிதல், காப்பியம் வழி அக்காலச் சமூக வாழ்வையும் பயன்பாட்டு மொழியையும் படித்துச் சுவைத்தல்.
T1038 நாட்டின் பன்முக வளர்ச்சிக்கு வித்திட்ட பெண்களின் பங்களிப்பினைச் கலைநிகழ்ச்சி விவரிப்பாக வெளிப்படுத்தும் ஆற்றல் பெறுதல்.
T1039 புறப்பொருள் இலக்கணத்தைப் படித்தலின் வாயிலாகச் செய்யுளில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள பண்டைய போர் முறைகளைத் தெரிந்துகொள்ளுதல்.
T1040 அறக்கருத்துகளை வேராகக் கொண்ட சங்க இலக்கியப் பாடல்களின் மையப்பொருளறிதல், உரைநிகழ்த்துதல், அக்கருத்துகள் இன்றும் சமூகத்தில் பொருந்தி நிற்பது குறித்துக் கலந்துரையாடுதல்.
T1041 குறிப்பு பொருள் உணர்த்தும் புதுக்கவிதை இயல்பறிந்து படித்தல், மையக் கருத்துணர்தல்.
T1042 தொடைநயம் அமையப் பெற்ற புதுக்கவிதையினைப் படித்தல், தத்துவமொழியாம் தமிழின் நுட்பமறிந்து சுவைத்தல், அது போல எழுத முனைதல்.
T1043 கட்டுரை, நாடகம் போன்ற இலக்கிய வடிவங்களின் வாயிலாகக் கருத்துகளைப் படித்துணர்தல், கருத்துகள் வலுவாகச் சொல்லப்படுவதற்கு ஏற்ற வடிவத்தினைத் தேர்ந்தெடுத்துப் பயன்படுத்துதல்.
T1044 செய்யுளின் யாப்பு அமைப்புகளை அறிந்து படித்தல், அவற்றுள் அமைந்துள்ள யாப்புக் கூறுகளைப் புரிந்து கொண்டு செய்யுள்கூறுகளைப் பிரித்தல், யாப்புக் கட்டமைப்பின் நுட்பமறிந்து சுவைத்தல்.
T1045 மாற்றுச் சிந்தனைகள் சமூகத்தில் ஒருவரைத் தனித்து அடையாளம் காட்டுவதைப் படித்துணர்தல், அது போன்று சிந்திக்கும் ஆற்றல் பெறுதல், ஆளுமையை மையமிட்ட கருத்துகளைத் தொகுத்து முறைப்படுத்திச் சீர்மையுடன் இதழ் வடிவில் வெளிப்படுத்துதல்.
T1046 வெவ்வேறு தளங்களிலுள்ள மக்களின் வாழ்க்கைப் பதிவுகளை இலக்கியம் மூலம் படித்தல், அது போல படைத்தல்.
T1047 மனித மாண்புகளையும் விழுமியங்களையும் உட்பொருளாகக் கொண்ட பிற்காலக் காப்பிய இலக்கியத்தைப் படித்தல்.
T1048 நேர்த்தியும் செப்பமும் கொண்ட கதைகளை ஆர்வத்துடன் படித்தல், அது போல எழுதுதல்.
T1049 அணியிலக்கணக் கூறுகளைச் செய்யுளுடன் தொடர்புப்படுத்தி அதன் சுவையுணர்ந்து நயத்தல்.
மேலும் பல கற்றல் வளங்களுக்கு :