ஒன்பதாம் வகுப்பு
தமிழ்
கற்றல் விளைவுகள்
9 ஆம் வகுப்பு தமிழ் கற்றல் விளைவுகள்
T901 மொழியின் தேவை, தோற்றம், தொன்மை, தனித்தன்மை, மொழிக்குடும்ப அமைப்பு அறிந்து சூழலுக்கு ஏற்றவாறு பயன்படுத்துதல் ( பேசுதல், எழுதுதல் )
T902 வேறுபட்ட கவிதை வடிவங்களைப் படித்து மையப் பொருளுணர்ந்து சுவைத்தல் மற்றும் அவை போன்ற கவிதை வடிவங்களை எழுதுதல்
T903 தமிழ்ச்சொற்களையும் பிறமொழிச் சொற்களையும் வேறுபடுத்தும் திறனறிந்து தனித்தமிழைப் பயன்படுத்துதல். உரையாடலின் வடிவத்தை உணர்ந்து படித்து அது போன்று கட்டமைத்தல்
T904 மொழியின் தொடர் அமைப்பினை அறிந்து பேசுதல், கடிதம்,கட்டுரைஉரையாடல்களைக் கட்டமைத்து முறையாக எழுதுதல்.
T905 சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் மொழிக்கூறுகளைக் கருத்தரங்கிற்கு ஏற்றவாறு திரட்டி, பகுத்தும் தொகுத்தும் முறைப்படுத்திப் பேசுதல்.
T906 பாடல்களில் வெளிப்படுத்தப்படும் இயற்கையழகை உணர்ந்து உள்வாங்குதல், கவிதையின் மொழிநடையைப் படித்தறிந்து புதிதாக உருவாக்குதல்.
T907 சமய இலக்கியம் காட்டும் சமூகச்செழுமை,வளத்தை வெளிப்படுத்தும் சந்தநயமிக்கச் சொற்கூறுகளை நயமுணர்ந்து படித்தல்.
T908 இயற்கை இணைந்த சமூக வாழ்வையும் அதனுடன் இணைத்துச் சொல்லப்பட்ட வாழ்வியல் உண்மைகளையும் சங்க இலக்கியம் வழியாகப் படித்தல், சங்கச் சொற்களின் பொருளறிந்து பயன்படுத்துதல்
T909 கதைகள், கட்டுரைகளைப் படித்துக் கருத்துகளைச் சுருக்கியும் விரித்தும் எழுதுதல்.
T910 மொழியின் இலக்கணக் கூறான துணைவினைகளைப் பேச்சிலும்,எழுத்திலும் இனம் கண்டு முறையாகப் பயன்படுத்துதல்.
T911 மொழியில் பொதிந்துள்ள பண்பாட்டுப் பெருமைகளையும், தொல்லியல் உண்மைகளையும் படித்துணர்தலுடன் அறம், மறம், கொடை, நேர்மை போன்ற சமூக மதிப்புகளைப் படைப்புகளில் வெளிப்படுத்துதல்
T912 பண்டைய சமூக விழா மரபினைக் காப்பிய மொழியின் வாயிலாகப் படித்தல், விழாக்கள், பண்பாட்டின் தொடர்ச்சியாகக் கொண்டாடப்பட்டு வருபவை என்பதை உணர்ந்து பங்கேற்றல்.
T913 பட்டிமன்றம், சொற்போர் போன்ற சொல்வன்மையை வளப்படுத்தும் செயல்களில் பயிற்சிபெறுதல், தொல்லியல் எச்சங்களைப் பாதுகாத்தல்.
T914 வல்லினங்களைப் பயன்படுத்தும் இடமறிந்து எழுதுதல்.
T915 அறநூலில் சொல்லப்பட்டுள்ள நன்னெறிக் கருத்துகளின் முறைமைகளையும் செப்பத்தையும் படித்துப் புரிந்துகொள்ளுதல், பயன்படுத்துதல்.
T916 மின்னணு இயந்திரங்களின் தேவையையும் இணையத்தின் இன்றியமையாமையையும் சமூகத் தேவைகளுக்கேற்ப மேம்பட்டு வருவதை உணர்ந்து மொழியைப் பயன்படுத்துதல்.
T917 அறிவியல் செய்திகளையும் கவிதையாக்க முடியும் என்பதை அறிந்து படைப்பூக்கம் பெறுதல்
T918 இலக்கண இலக்கியங்கள் காட்டும் தமிழர்களின் அறிவியல் சிந்தனைகளை அறிவியல் செய்திகளோடு ஒப்பிட்டுப் புரிந்துக் கொள்ளுதல்.
T919 நேர்காணல் கட்டுரையின் அமைப்பையும் நோக்கத்தின் அடிப்படையில் வினாக்களைக் கட்டமைத்தலையும் அவற்றின் மொழிநடையையும் அறிந்து கொள்ளுதல்.
T920 ஒற்றுப்பிழையின்றி எழுதுதல்
T921 இலக்கியங்கள் வழியாகச் சமூக மக்களின் வாழ்க்கைமுறையை அறிந்து இன்றைய வாழ்க்கையைச் சீரமைத்துக் கொள்ளும் திறன் பெறுதல்
T922 புதுக்கவிதை என்னும் இலக்கிய வடிவத்தின் அமைப்பு, மொழிநடையைப் புரிந்துகொள்ளல்,படித்தல், படைத்தல்.
T923 அற இலக்கியத்தின் எளிய, செம்மையான மொழிநடையையும், கருத்திச் செறிவையும் படித்து வாழ்வியல் பண்புகளை மேம்படுத்துதல்.
T924 நூலகத்தின் பயனறிந்து பயன்படுத்துதல், பிறரையும் படிக்க வழிகாட்டுதல், படித்தவற்றை எடுத்துரைத்தல்.
T925 இலக்கணமறிந்து பேச்சிலும், எழுத்திலும் சொற்களை முறையாகப் பயன்படுத்துதல்.
T926 வரலாற்றுச் சிறப்புமிக்க தமிழர் சிற்பக்கலையைப் போற்றுதலோடு சிற்பங்களைக் கூர்ந்து நோக்குதல், அவை பற்றிய செய்திகளைத் திரட்டுதல்,செய்திக் குறிப்பு உருவாக்குதல்.
T927 இலக்கியத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள ஐவகை நிலங்களின் அழகை நுகர்ந்து அவற்றை விவரித்து எழுதுதல்.
T928 பொருளுணர்ந்து பிரித்துப் படித்தல் வாயிலாகப் பக்தி இலக்கியச் சொற்கூறுகளையும் பொருள் வெளிப்பாட்டினையும் அறிந்து பயன்படுத்துதல்.
T929 சிறுகதையின் மையக்கருத்து வாயிலாகச் சமூக மதிப்புகளை உணர்ந்து பின்பற்றுதல்.
T930 மொழிப் பயன்பாட்டில் புணர்ச்சி இலக்கண அடிப்படைகளை அறிந்து பயன்படுத்துதல்.
T931 திருக்குறளின் எளிய வடிவத்தையும் அதன் பொருளையும் அறிந்து சுவைத்தல், வாழ்வியல் திறன்களை உணர்ந்து பின்பற்றுதல்.
T932 விடுதலைப்போரில் தமிழர்கள் ஆற்றிய தொண்டினை உணர்ந்து நாட்டுணர்வு பெறுதல், அதனை மொழியின் வாயிலாக வெளிப்படுத்துதல், சமூகத்திற்குத் தம்மால் இயன்ற பணிகளை அளிக்க தாமாக முன்வருதல்.
T933 பெருங்காப்பியம் காட்சிப்படுத்தியுள்ள செழிப்பான நாட்டுவளத்தினை மொழிவழி பெற்றுச் சுவைத்தல், சொல் வளங்களைப் பயன்படுத்துதல்.
T934 இலக்கியங்கள் விவரிக்கும் நாட்டு வளம் குறித்த செய்திகளை அறிந்து நாட்டை வளப்படுத்தும் ஊக்கத்தைப் பெறுதல்.
T935 இலக்கியங்கள்வழி அறிந்த நகர அமைப்புகளை இன்றைய நிலையுடன் ஒப்பிட்டுப் பேசுதல்.
T936 ஒரு தலைப்பையொட்டிக் கருத்துகளை ஒருங்கிணைத்து உரையாடலாக/கலந்துரையாடலாக வெளிப்படுத்துதல்.
T937 மொழிப்பயன்பாட்டில் ஆகுபெயர் எவ்விதம் வெளிப்படுத்தப்படுகிறது என்பதனை அறிந்து கையாளுதல்.
T938 மொழியில் வழங்கப்பட்டுள்ள சிந்தனைமரபுகளைப் படித்தறிதலுடன் ஒரு சமூகக் கருத்தையொட்டி தர்க்க அடிப்படையில் கலந்துரையாடுதல், அறச்செயல்களைப் பின்பற்றி வாழும் எழுச்சி பெறுதல்.
T939 நடைமுறையில் பயன்படுத்தப்படும் எளியச் சொற்கள் வாயிலாகவே தத்துவக் கருத்துகள் புதுக்கவிதையில் சொல்லப்பட்ட தன்மையுணர்தல், அது போன்று எழுதுதல்.
T940 மொழிப்பெயர்ப்பு மொழியின் வாயிலாகத் தத்துவங்களைப் புரிந்துகொண்டு எதிர்வினையாற்றுதல்.
T941 சிறுகாப்பிய மொழிநடையில் அறக்கருத்துகளைப் புரிந்துகொள்ளுதல், படைக்கப்பட்ட காலத்துடன் ஒப்பிட்டுப் புரிந்துகொள்ளுதல், எண்ணங்களை வெளிப்படுத்துதல்.
T942 செப்பமான மொழிநடையைப் படித்துச் சுவைத்தல், பல்வேறு கடித உத்திகளையும் வடிவங்களையும் அறிந்து எழுதுதல்.
T943 தலைப்பை மையமிட்டுக் கவிதை புனைதல்/பாடல் எழுதுதல்.
T944 சான்றோர்கள், அறிஞர்களின் தமிழ்ப்பணிகளைப் படித்துணர்ந்து தம்மால் இயன்ற பங்களிப்பைச் செய்தல்.
T945 தற்காலக் கவிதைப் போக்கினை அறிந்து புதுக்கவிதைகளைப் படித்தல், அவை போல எழுதுதல்.
T946 அன்பின் வயப்பட்ட வாழ்க்கை சங்க காலத்திலும் நிலவி வந்ததை இலக்கியம் வாயிலாகப் படித்தறிதல்.
T947 மனிதம் சார்ந்த படைப்புகளைப் படிப்பதன் வாயிலாக மனிதநேயப் பண்புகளைத் தக்க சூழலில் உணர்ந்து பின்பற்றுதல்.
T948 அணியிலக்கணத்தை அறிந்து செய்யுளைச் சுவைத்துப் படித்தல்
மேலும் பல கற்றல் வளங்களுக்கு :