10TH-TAMIL-DHARMAPURI DT - 2ND REVISION - ANSWER KEY

 

தர்மபுரி –  இரண்டாம் திருப்புதல் தேர்வு வினாத்தாள்

பிப்ரவரி - 2022-2023

பத்தாம் வகுப்பு / மொழிப்பாடம் – தமிழ்

உத்தேச விடைக் குறிப்பு

நேரம் : 15 நிமிடம் + 3.00 மணி                                                         மதிப்பெண் : 100

பகுதி – 1

மதிப்பெண்கள் - 15

வினா.எண்

விடைக் குறிப்பு

மதிப்பெண்

1.

ஈ. பாடல்: கேட்டவர்

1

2.

ஆ. மோனை, எதுகை

1

3.

ஈ. சிற்றூர்

1

4.

இ.மரபு வழுவமைதி

1

5.

இ. கல்வி

1

6.

ஈ. அங்கு வறுமை இல்லாததால்

1

7.

ஈ. நெறியோடு நின்று காவல் காப்பவர்

1

8.

அ. கைம்மாறு கருதாமல் அறம் செய்வது

1

9.

அ. கண்ணதாசன்

1

10.

அ.விளக்கு

1

11.

ஆ. நாகூர் ரூமி

1

12.

அ. சிலப்பதிகாரம்

1

13.

அ. வண்ணமும், சுண்ணமும்

1

14.

அ. இளங்கோவடிகள்

1

15.

அ. நெய்பவர்

1

பகுதி – 2

பிரிவு - 1

16.

அ. காசி நகரத்தின் பெருமையைக் கூறும் நூல் எது?

ஆ. ‘ சிலம்புச்செல்வர்’ என்று போற்றப்படுவர் யார்?

( ஏற்புடைய பதில் இருப்பின் மதிப்பெண் வழங்கலாம் )

1

1

17.

மாஅல் – திருமாள்

மாஅல் – செய்யுளிசை அளபெடை

2

18.

Ø  அறிவைத் திருத்தி சீராக்குவோம்

Ø  கல்வி பெற்று மயக்கம் அகற்றுவோம்

2

19

·         பாசவர்வெற்றிலை விற்போர்

·         வாசவர்நறுமணப் பொருள் விற்போர்

·         பல்நிண வினைஞர்இறைச்சிகளை விற்பவர்

·         உமணர்உப்பு விற்பவர்

1

1

20.

·         முதல் நிலை தீவகம்

·         இடைநிலை தீவகம்

·         கடைநிலை தீவகம்

1

1

21

கட்டாய வினா:

அருமை உடைத்தென் றசாவாமை வேண்டும்

பெருமை முயற்சி தரும்

2

பகுதி – 2 / பிரிவு - 2

22

அ. ஊட்டமிகு உணவு உண்டவர் நீண்ட வாழ்நாள் பெற்றார்.

ஆ. நேற்று என்னைச் சந்தித்தவர் என் நண்பர்.

1

1

23

அ. மடு என்பதற்கு பதில் மாடு என எழுதினான்

ஆ. சிலையை சீலையால் மூடினான்

( ஏற்புடைய பதில் இருப்பின் மதிப்பெண் வழங்கலாம் )

1

1

24

அ. காட்சி, காணுதல்

ஆ. நடித்தல், நடிப்பு

1

1

25.

ஒலித்து – ஒலி + த் + த் + உ

ஒலி – பகுதி

த் – சந்தி

த் – இடைநிலை

உ – வினையெச்ச விகுதி

1

1

26.

அ. நிலக்காற்று

ஆ. நம்பிக்கை

1

1

26

மாற்றுத் திறனாளர் வினா

அ. இறகு

ஆ. குருதி

1

1

27.

அ. நிழல் தரும் மரத்தை வளர்ப்பது நன்மை பயக்கும்.

ஆ. உயர்கல்வியே ஒருவருக்கு உயர்வு தரும்.

1

1

28.

அ. கனலி – சூரியன்

ஆ. பூட்கை - கொள்கை

1

1

பகுதி – 3 / பிரிவு - 1

29

மழை நின்றதும் மரம் செடிகளில் உள்ள இலைகளிலிருந்து சொட்டும் நீர் ‘ சொட்,சொட் ‘ எனச் சொட்டியது.  உடலில் உண்டான மெல்லிய குளிர் இனிய அனுபவத்தைத் தந்தது. தேங்கிய குட்டையில் குழந்தைகள் ‘ சளப், தளப் ‘ என குதித்து மகிழ்ச்சியாக விளையாடினர். ஆறு போல தெருக்களில் ஓடும் தண்ணீரில் குழந்தைகள் காகிதக் கப்பல் செய்து விட்டு மகிழ்ச்சியாக இருந்தனர்.

3

30

வீட்டின் சுவர், சன்னல் போன்றவற்றில் அழுக்குப்படிந்தும், சன்னல்களில் கரையான் படிவதைத் தடுக்கவாளித் தண்ணீரைக் கொண்டு சுவரையும் சன்னலையும் நன்கு கழுவ வேண்டும். பின் கந்தை துணியால் துடைத்து, சாயக் குவளையில் கட்டைத் தூரிகைக் கொண்டு வண்ணமடிக்க வேண்டும்

3

31.

Ø  கடவுச்சொல்லும், கைரேகையும்

Ø  தன்னை தகவமைத்துக் கொள்கிறது.

Ø  செய்ற்கை நுண்ணறிவு

1

1

1

பகுதி – 3 / பிரிவு - 2

32

·       நீயும் அந்த வள்ளலிடம் சென்று வளம் பெற்று வாழ்வாயாக என கூத்தனைக் கூத்தன் ஆற்றுப்படுத்துதல் ஆற்றுப்படை

·       நன்னன் எனும் மன்னனிடம் பரிசில் பெற்ற கூத்தர், மற்றொரு கூத்தரிடம் பரிசில் பெறுவதற்கான வழியினை கூறுகிறது.

·       உணவினைப் பெறுவதற்கான வழியினைக் கூறல்.

3

33.

·       மேல் மண் பதமாகிவிட்டது.

·       வெள்ளி முளைத்திடுது

·       காளைகளை ஓட்டி விரைந்து செல்

3

34.

அ) விருந்தினனாக ஒருவன் வந்து எதிரின்

வியத்தல் நன்மொழி இனிது உரைத்தல்

திருந்துற நோக்கல் வருக என உரைத்தல்

            எழுதல் முன் மகிழ்வன செப்பல்

பொருந்து மற்றுஅவன் தன்அருகுற இருத்தல்

            போமெனில் பின் செல்வதாதல்

பரிந்துநன் முகமன் வழங்கல் இவ்வொன்பான்

            ஒழுக்கமும் வழிபடும் பண்பே                    - அதிவீரராம பாண்டியர்

 

( அல்லது )

ஆ)         நவமணி வடக்க யில்போல்

நல்லறப் படலைப் பூட்டும்

       தவமணி மார்பன் சொன்ன

தன்னிசைக்கு இசைகள் பாடத்

        துவமணி மரங்கள் தோறும்

துணர்அணிச் சுனைகள் தோறும்

        உவமணி கானம்கொல் என்று

ஒலித்து அழுவ போன்றே

                                                                              வீரமாமுனிவர்

3

பகுதி – 3 / பிரிவு - 3

35

விடை 8 எட்டுவகைப்படும்

1. சுட்டுவிடை   - சுட்டி விடைக் கூறுவது

 2.மறை விடை  - எதிர்மறையாக விடையளிப்பது  

3. நேர்விடை   - உடன்பட்டு கூறுவது

4. ஏவல் விடை - மாட்டேன் என்று மறுப்பதை ஏவுதலாகக் கூறும் விடை.  

5. வினா எதிர் வினாதல் விடை  - வினாவிற்கு விடையாக இன்னொரு வினாவைக் கேட்பது.

6. உற்றது உரைத்தல் விடை  - வினாவிற்கு விடையாக ஏற்கெனவே நேர்ந்ததைக் கூறல்.  

7. உறுவது கூறல்  விடை  - வினாவிற்கு விடையாக இனிமேல் நேர்வதைக் கூறல்.

8. இனமொழி விடை - வினாவிற்கு விடையாக இனமான மற்றொன்றை விடையாகக் கூறல்.

3

36.

நிரல் நிறை அணி. சொல்லையும் பொருளையும் வரிசையாக நிறுத்திப் பொருள் கொள்வது.

.கா: அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

        பண்பும் பயனும் அது

அன்புக்கு அறன், பண்புக்குப் பயன்

 

3

37

வ.எண்

சீர்

அசை

வாய்பாடு

1

குற்-றம்

நேர் - நேர்

தேமா

2

இல-னாய்க்

நிரை – நேர்

புளிமா

3

குடி – செய் - து

நிரை – நேர் - நேர்

புளிமாங்காய்

4

வாழ் – வா-னைச்

நேர் – நேர் - நேர்

தேமாங்காய்

5

சுற் - றமாச்

நேர் - நிரை

கூவிளம்

6

சுற் - றும்

நேர் - நேர்

தேமா

7

உலகு

நிரைபு

பிறப்பு

இக்குறளின் ஈற்றுச்சீர் “ பிறப்பு “ என்னும் வாய்பாட்டில் முடிந்துள்ளது.

3

பகுதி – 4

38

  அ)

சுந்தரனார் வாழ்த்து

பெருஞ்சித்திரனார் வாழ்த்து

கடலெனும் ஆடை உடுத்திய நிலமகளுக்கு முகம் பாரத கண்டம்

மண்ணுலகப் பேரரசி

நெற்றியில் மணம் வீசூம் திலகமாக தமிழ்நாடு

சங்க இலக்கியங்கள் அணிகலன்கள்

எல்லா திசைகளில் உன் புகழ்

தும்பி போல உன்னை சுவைத்து உன் பெருமையை எங்கும் முழங்குகின்றோம்

5

38

ஆ.

Ø  மன்னன் இடைக்காடனார் புலவரின் பாடலை இகழ்ந்தார்.

Ø  இடைக்காடனார், மன்னன் இகழ்ந்ததை இறைவனிடம் முறையிடுகிறார்

Ø  இறைவன் கோவிலை விட்டு நீங்கினார்

Ø  மன்னன் இறைவனிடம் தன் பிழையைப் பொறுத்து அருள்புரியுமாறு வேண்டினார்

Ø  மன்னன் புலவருக்கு மரியாதை செய்து, மன்னிப்பு வேண்டினார்

5

39

. அனுப்புநர்

            அ அ அ அ அ,

            100,பாரதி தெரு,

            சக்தி நகர்,

            சேலம் – 636006.

பெறுநர்

                        மாநகராட்சி ஆணையர் அவர்கள்,

            மாநகராட்சி ஆணையம்,

            சேலம் – 636001

ஐயா,

பொருள்: கடும் புயலால் பாதிக்கப்பட்டப் பகுதிகளை சீரமைத்து தர வேண்டுதல் – சார்பு

            எங்கள் பகுதியில் கடும் புயலால்  சாய்ந்துவிட்ட மரங்களை அகற்றியும், பழுதுபட்ட சாலைகளை சீரமைத்தும், பழுதுபட்ட மின் கம்பங்களை சீர் செய்து தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி.

                                                                                                       இப்படிக்கு,

                                                                                                                                                                     தங்கள் உண்மையுள்ள,                                                                                                                                                                                          அ அ அ அ அ.

இடம் : சேலம்    

நாள் : 04-03-2021

உறை மேல் முகவரி:

பெறுநர்

            மாநகராட்சி ஆணையர் அவர்கள்,

            மாநகராட்சி ஆணையம்,

            சேலம் – 636001.

5

39

சேலம்

03-03-2021

அன்புள்ள நண்பனுக்கு,

            நான் நலம். நீ அங்கு நலமா? என அறிய ஆவல்.” மரம் இயற்கையின் வரம்என்ற தலைப்பில் மாநில அளவில் நடைபெற்ற கட்டுரைப் போட்டியில் நீ முதல் பரிசு பெற்றது மிக மகிழ்ச்சியாக உள்ளது. மனமார வாழ்த்துகிறேன். நீ இன்னும் பல பரிசுகள் பெற வாழ்த்துகிறேன்.

இப்படிக்கு,

உன் அன்பு நண்பன்,

அ அ அ அ அ அ அ .

உறைமேல் முகவரி;

            பெறுதல்

                        திரு.இரா.இளங்கோ,

                        100,பாரதி தெரு,

                        சேலம்

5

40

( ஏற்புடைய விடை இருப்பின் மதிப்பெண் வழங்கலாம் )

ஏடு எடுத்தேன் கவி ஒன்று எழுத  

என்னை எழுது என்று சொன்னது இந்தக் காட்சி    

அர்த்தமுள்ள இந்தக் காட்சி

சமூகத்திற்கு தேவையான காட்சி

சமூக விளைவை ஏற்படுத்துக் காட்சி

எல்லோருக்கும் அறிவுறுத்தும் காட்சி

5

41.

கொடுக்கப்பட்ட தரவுகளைக் கொண்டு விண்ணப்பம் முழுமையாக பூர்த்தி செய்து இருப்பின் முழு மதிப்பெண் வழங்கலாம்.

5

42

அ.  

1.        தேவையான உணவுப்பொருட்களைப் பாதுகாப்பான இடத்தில் வைத்துக்கொள்வேன்.

2.      குடிநீரைச் சேமித்து வைத்துக்கொள்வேன்.

3.      உணவைச் சிக்கனமாக பயன்படுத்துவேன்.

4.      நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துவேன்.

5.      வானொலியில் தரும் தகவல்களைக் கேட்டு, அதன்படி நடப்பேன்.

5

42

பொன்னிற கதிரவன் தன் ஒளிக் கதிரால் இந்தப் பூமியைப் பொலிவு பெற எழுகின்றான்.அழகிய காலை வேளையில் பால் போன்ற வெண்மை மேகங்கள் சூழ அந்த காட்சி பரவசத்தை உண்டாக்குகிறது. வண்ணப் பறவைகள் காலை மெல்லிசையை ஒலித்துக் கொண்டே வலம் வர பட்டாம்பூச்சிகளும் பூக்களைச் சுற்றிவர, பூக்கள் தன் மணத்தை எல்லா இடங்களிலும் பரவச் செய்து,சுகந்தம் வீசின். காலை சில்லென உணர்வும், மணமும் பரவி எங்கும் இனிமையாக இருக்கிறது.

5

42

செவி மாற்றுத்திறனாளிகளுக்கான மாற்று வினா

1. மீண்டும் மீண்டும்

2. தொடர்ந்து பெயத மழை

3. பெய்மழை

4. பெரு வெடிப்பு கோட்பாடு.

5. ஐம்பூதங்கள்

 

 

பகுதி – 5

 

43

அ)

காற்றைப் பாராட்டுதல் :

          கவிஞர் காற்றினை பலவாறாக பாராட்டியுள்ளார்.

·         பாதி மலர் போல் வரும் மெல்லியக் காற்று.

·         காலைப் பொழுதின் குளிர்க்காற்று

·         மெல்ல நடந்து வரும் இளந்தென்றல்

·         தமிழ்ப் போல் சிறப்புடன் வாழ்வாயாக

மோனை நயம்:

          செய்யுளில் முதல் எழுத்து ஒன்றிவரத் தொடுப்பது மோனை நயம்.

            லர்ந்தும்        லராத

            ளரும் ண்ணமே

எதுகை நயம்:

            செய்யுளில் இரண்டாம் எழுத்து ஒன்றிவரத் தொடுப்பது எதுகை நயம்.

            ர்ந்தும்        ராத

சந்த நயம்:

          இப்பாடல் இசையோடு பாடுவதற்கு ஏற்ற முறையில் அமைந்துள்ளது.

இயைபு நயம்:

          இறுதி எழுத்தோ,சீரோ,அசையோ ஒன்றி வருதல் இயைபு நயம்.

          வண்ணமே

          அன்னமே

முரண் நயம்:

          முரண்பாடாக அமைவது முரண்.

                        மலர்ந்தும் × மலராத

                        விடிந்தும்  × விடியாத

பொருள் நயம்:

            காற்றோடு தமிழை சிறப்பித்து நல்ல பொருள் நயத்தோடு இப்பாடல் பாடப்பெற்றுள்ளது

8

 

ஆ.

குறிப்புச் சட்டகம்

Ø  முன்னுரை

Ø  நாட்டு விழாக்கள்

Ø  விடுதலைப் போராட்ட வரலாறு

Ø  நாட்டின் முன்னேற்றத்தில் மாணவர்பங்கு

Ø  முடிவுரை

முன்னுரை:

          மாணவப் பருவமும் நாட்டுப் பற்றும் பற்றி இக் கட்டுரையில் காணலாம்.

நாட்டு விழாக்கள்:

          சுதந்திர தினம், குடியரசு தினம், காந்திஜெயந்தி, தேசிய ஒருமைப்பாடு தினம், ஆகிய நாட்களில் மாணவர்கள் ஒற்றுமையோடு கொண்டாடி நாட்டிற்கு பெருமை சேர்க்கின்றனர்.

விடுதலைப் போராட்ட வரலாறு:

          வெள்ளையனே வெளியேறு,உப்புச் சத்தியாகிரகம் போன்ற போராட்டங்கள் மூலம் பெற்ற விடுதலையை எண்ணி போற்ற வேண்டும்.

நாட்டின் முன்னேற்றத்தில் மாணவர்பங்கு:

          மாணவர்கள் கல்வி பயில்வதோடு பள்ளியில் செயல்படும் சாரணர் இயக்கம், இளஞ்செஞ்சிலுவை சங்கம், NSS, NCC போன்ற இயக்கங்களில் இணைந்து சுதந்திர இந்தியாவைக் காப்பாற்றும் பொறுப்பு அறிந்து செயல் பட வேண்டும்.

முடிவுரை:

          நாட்டினை உயர்த்துவேன்,தலை நிமிர்ந்து வாழ்வேன் என்ற உறுதியான மனநிறைவோடு வாழ்ந்திடுவோம்.

8

44.

அ.

குறிப்புச் சட்டகம்

முன்னுரை

தேசாந்திரி

கருணை அன்னமய்யா

முடிவுரை

முன்னுரை :

          பசியென்று வந்தவர்களுக்கு தன்னிடம் இருப்பதைக் கொடுத்து காக்கின்ற மனித நேயம் விருந்தோம்பல்.இக்கட்டுரையில் கோபல்லபுரத்து மக்களின் விருந்தோம்பலைக் காணலாம்.

தேசாந்திரி:

Ø  சுப்பையாவின் வயலில் அருகு எடுக்கும் பணி.

Ø  அன்னமய்யாவுடன் ஒரு ஆள் வந்தான்

Ø  அவன் மிக சோர்வாக இருந்தான்

Ø  லாட சன்னியாசி போல உடை அணிந்து இருந்தான்.

Ø  குடிக்க தண்ணீர் கேட்ட அவனுக்கு நீச்ச தண்ணீர் கொடுக்கப்பட்டது.

Ø  வேப்பமர நிழலில் சோர்வாக அமர்ந்தான்

கருணை அன்னமய்யா:

Ø  அவன் பெயர் பரமேஸ்வரன் என்றும்,தற்போது மணி என்றும் கூறினான்.

Ø  அன்னமய்யா ஒரு உருண்டை கம்மஞ் சோற்றையும், துவையலும் வைத்துக் கொடுத்தார்.

Ø  கடுமையான பசியிலும் அரை உருண்டை சாப்பிட்டுவிட்டு கண்மூடி உறங்கினான்.

Ø  ஆனந்த உறக்கம் கண்டான்.

முடிவுரை:

          பசியென்று வந்தவர்களுக்கு தன்னிடம் இருப்பதைக் கொடுத்து காக்கின்ற கோபல்லபுரத்து மக்களின் விருந்தோம்பல் போற்றுதலுக்கு உரியது..

8

44

ஆ)

முன்னுரை

·         உண்மைக் கலைஞன் தன் கலையில் முழு ஈடுபாட்டைக் காட்டுவான்.

·         கலை ஈடுபாட்டில் அவனுக்கு வயதோ உடற்சோர்வோ பாதிப்பை ஏற்படுத்துவதில்லை.

அனுமார் ஆட்டம்

·         ஆளுயரக் குரங்கு ஒன்று மரத்தில் இருந்து இறங்குவது கண்டு அதிசயித்தான் அழகு.

·         நாதசுரமும் மேளமும் ஒன்றாக இழைந்து ஒலித்தன.

·         வலது, இடது எனக் கால் மாற்றி சதங்கை ஒலியோடு ஆடியது அனுமார் என உணர்ந்தான்.

அனுமார் ஆட்டம் உச்சம் தொட்டது

·         கடையில் தொங்கிய வாழைத்தாரில் இருந்து பழங்களைப் பறித்துக் கூட்டத்தில் உள்ளவர்களுக்குக் கொடுத்தார்.

·         பெருங்குரல் எழுப்பியபடி கீழே குதித்தபோது வாலில் தீப்பந்தம். கரணமடித்தல், பெரிய சத்தம், பெரிய சிரிப்பு என அனுமார் ஆட்டம் உச்சம் தொட்டது.

அனுமாரின் களைப்பு

·         ஆட்டத்தில் அனுமாருக்கு அவ்வளவு ஈடுபாடு.

·         வாய், வேட்டி, மார்புக்கச்சை, சதங்கைகளைக் கழற்றிப் போட்ட படி சுவரில் சாய்ந்தார்.

வாரிசை வாழ்த்தும் கலைஞன்

·         அனுமாரைப் போல, ஆட ஆசை எனச் சொன்னான் அழகு.

·         அனுமாருக்கு உடனே, உற்சாகம் தொற்றியது காலில் சலங்கை, பின்னர் வாலில் தீப்பந்தம் கட்டி அழகு ஆட இவர் உற்சாகப்படுத்தியபடி ஓட, இறுதியில் அழகு மட்டும் ஆடிக்கொண்டிருந்தான்.

முடிவுரை

·         தனக்கு ஒரு  வாரிக உருவாகி விட்டதைக் காணும் போது உடம்பின் வலியும் வேதனையும் இருமலும் ஒரு பொருட்டல்ல.

கற்றுகொள்ளக் கற்றுகொள்ளக், கலைஞனுக்குக் கொடுப்பது உயிரானாலும் வலி தெரிவதே இல்லை

.

8

45

அ.

குறிப்புச் சட்டம்

முன்னுரை

பிறப்பும்,கல்வியும்

விண்வெளிப் பயணம்

இறப்பு

விருது

முடிவுரை

முன்னுரை :

          விண்வெளிக்கு பயணம் செய்த முதல் இந்திய பெண் வீராங்கனை கல்பனா சாவ்லா குறித்து நாம் இக்கட்டுரையில் காணலாம்.

பிறப்பும், கல்வியும் :

பிறப்பு : இந்தியாவில் ஹரியானா மாநிலத்தில் கர்னலில் ஜூலை 1,1961 இல் பிறந்தார்.

            பெற்றோர் : பனாரஸ்லால் - சன்யோகிதா தேவி

கல்வி : கர்னலில் பஞ்சாப் பொறியியல் கல்லூரியில் விமான ஊர்தியியல் துறையில் இளங்கலைப் பட்டம்

·         டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் விண்வெளி பொறியியல் துறையில் முதுகலைப் பட்டம்.

·         . 1986-ஆம் ஆண்டு கொலராடோ பல்கலைக் கழகத்தில் 2-ஆவது முதுகலைப்பட்டம்.   

·         பிறகு 1988-ஆம் ஆண்டு விண்வெளி பொறியியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றார்.

 

விண்வெளிப் பயணம்:

·         1995 இல் நாசா விண்வெளி வீரர் பயிற்சியில் இணைந்து கொலம்பிய விண்வெளி ஊர்தி எஸ்,டி,எஸ்-87 இல் பயணம் செய்தார்,

·         சுமார் 372 மணிநேரம் விண்வெளியில் இருந்து சாதனையுடன் பூமி திரும்பினார்.

வீர மரணம் :

·         2003இல் ஜனவரி 16 ந் தேதி அமெரிக்காவின் கென்னடி நிலையத்திலிருந்து கொலம்பிய விண்கலம் எஸ்.டி.எஸ் 107 இல மீண்டும் பயணம் செய்தார்.

·         அந்த விண்கலம் ஆய்வை முடித்து திரும்பிய போது பிப்ரவரி -1 இல் டெக்சாஸ் வான்வெளியில் வெடித்துச் சிதறியதில் கல்பனா சாவ்லாவுடன் உடன் பயணித்த 7 வீரர்களும் மரணமடைந்தனர்

விருது:

·         நியூயார்க் நகரின் ஒரு சாலைக்கு அவரின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

·         பிப்ரவரி 1ந் தேதி கல்பனா சால்வலா நினைவு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

·         2011 முதல் வீரதீர சாதனைப் புரிந்த பெண்களுக்கு “ கல்பனா சாவ்லா விருது “ அரசு வழங்கி வருகிறது.

முடிவுரை:

          மாணவர்களாகிய நாமும் இவரைப் போன்றவர்களை உதாரணமாகக் கொண்டு விடாமுயற்சியுடன் படித்தால் அனைத்தையும் சாதிக்க முடியும்.

8

45

ஆ. குறிப்புகளைக் கொண்டு கட்டுரை எழுதுக

முன்னுரை

உழவே தமிழர் பண்பாட்டின் மகுடம்

உழவுத் தொழிலுக்கு வந்தனை செய்வோம்

சுழன்றும் ஏர்பின்னது உலகம்

முடிவுரை

( பொருத்தமான கருத்துகள் எழுதப்பட்டிருந்தால் மதிப்பெண் வழங்கலாம்

8

  DOWNLOAD THIS PDF


ஆக்கம் :

வெ.ராமகிருஷ்ணன்,

அரசு உயர்நிலைப் பள்ளி,

கோரணம்பட்டி.

2 Comments

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

  1. Verry very important

    ReplyDelete
  2. Adhu therinjadhu Nala thana vandhu paathutu irukom 😏

    ReplyDelete
Previous Post Next Post