சேலம் – அரையாண்டு வினாத்தாள்
டிசம்பர் - 2022-2023
வினாத்தாளினைப் பெற
ஒன்பதாம் / மொழிப்பாடம் – தமிழ்
உத்தேச விடைக் குறிப்பு
சேலம் – அரையாண்டு வினாத்தாள்
டிசம்பர் - 2022-2023
ஒன்பதாம் வகுப்பு / மொழிப்பாடம் – தமிழ்
உத்தேச விடைக் குறிப்பு
நேரம் : 15 நிமிடம் + 3.00 மணி மதிப்பெண் : 100
பகுதி – 1
மதிப்பெண்கள் - 15
வினா.எண்
விடைக் குறிப்பு
மதிப்பெண்
1.
ஆ. சிற்றிலக்கியம்
1
2.
ஆ. கீழே
1
3.
ஈ. தொகைச்சொற்கள்
1
4.
ஆ. ஊரகத் திறனறித் தேர்வு
1
5.
ஆ. ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
1
6.
அ. மாமல்லபுரம்
1
7.
ஈ.கெடுதல்
1
8.
இ.அள்ளல் - சேறு
1
9.
அ. கண்ணி
1
10.
ஆ. தொடு உணர்வு
1
11.
ஈ. எதிர்மறை வினையெச்சம்,உவமைத் தொகை
1
12.
ஆ. நாச்சியார் திருமொழி
1
13.
இ.ஆண்டாள்
1
14.
ஆ. விளக்கு
1
15.
அ. ஆண்டாள்
1
பகுதி – 2
பிரிவு - 1
16.
அ. சூடிக்கொடுத்த சுடர்கொடி என அழைக்கப்படுபவர் யார்?
ஆ. தமிழர் வரலாறு எப்படிப்பட்டது?
1
1
17.
திராவிட மொழிக்குடும்பத்தைச் சேர்ந்தது.
2
18.
நெற்பயிர்களுக்கு உவமையாக்கப்பட்டுள்ளது.
2
19
இசைத்தூண்கள் விஜய நகர மன்னர்கள் காலத்தில் அமைக்கப்பட்டன.
2
20.
மாடு பிடித்தல், மாடு அணைதல், மாடு விடுதல், மஞ்சு விரட்டு, வேலி மஞ்சு விரட்டு, எருது கட்டி, காளை விரட்டு, ஏறு விடுதல், சல்லிக்கட்டு.
1
1
21
கட்டாய வினா:
மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாம்தம்
தகுதியான் வென்று விடல்.
2
பகுதி – 2 / பிரிவு - 2
22
அ. எட்டு,பத்து என்னும் எண்ணுப்பெயர்களின் பின் வல்லினம் மிகும்
எ.கா: எட்டுத்தொகை,பத்துப்பாட்டு
ஆ. ஓரெழுத்து ஒரு மொழிக்குப்பின் வல்லினம் மிகும்.
பூச்செடி
2
23
வீணையோடு வந்தாள் – வேற்றுமைத் தொடர்
கிளியே பேசு – விளித்தொடர்
2
24
1. கயல் பானை வனையக் கற்றுக் கொண்டாள்
2. நேற்று தென்றல் காற்று வீசியது.வ்
2
25.
அ. நல்ல தமிழில் எழுதுவோம்
ஆ. குழலிக்கும் பாடத்தெரியும்
1
1
26.
அ. கருவூலம்
ஆ. பதிவிறக்கம்
2
27.
1. கல் 2. இடமெல்லாம் சிறப்பு
1
1
28.
1. பெரிய 2. கொடிய
1
1
பகுதி – 3 / பிரிவு - 1
29
இந்திய தேசிய இராணுவத்தில் இருந்து 45 வீரர்கள் நேதாஜியால் தேர்வு செய்யப்பட்டு வான்படைத் தாக்குதலுக்கான சிறப்புப் பயிற்சி பெறுவதற்காக, ஜப்பானில் உள்ள இம்பீரியல் மிலிட்டரி அகாடமிக்கு அனுப்பப்பட்ட பயிற்சிப் பிரிவின் பெயர்தான் டோக்கியோ கேடட்ஸ்.
3
30
- தமிழக அரசு ஆண்டு தோறும் பல கல்வி உதவி தொகை தேர்வுகளை நடத்துகின்றன.
- 8ம் வகுப்பு மாணவர்களுக்கு – தேசியத்திறனாய்வு மற்றும் கல்வி உதவித் தொகைத் தேர்வு (NMMS)
- 9ம் வகுப்பு கிராம பள்ளி மாணவர்களுக்கு – ஊரகத் திறனாய்வுத் தேர்வு (TRUST)
- 10ம் வகுப்பு மாணவர்களுக்கு – தேசியத்திறனாய்வு தேர்வு (NTSE) நடத்தப்படுகின்றது. அவற்றில் கலந்து கொள்ள விரும்பும் மாணவர்கள் தாங்கள் படிக்கும் பள்ளிகளிலேயே இணையத்தின் சேவையைப் பெறலாம்
- அரசின் விலையில்லா மிதிவண்டி, மடிக்கணினி ஆகியவற்றைப் பெற மாணவர்களின் விவரங்கள் இணையத்தின் மூலம் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.
3
31.
அ. காங்கேயம் இன காளைகள்
ஆ. காங்கேயம்
இ. காங்கேயம் மாடுகள்
1
1
1
பகுதி – 3 / பிரிவு - 2
32
v மொட்டைக் கிளையோடு, வெட்ட ஒரு நாள் வரும் என வருத்தமடைந்தது.
v இலைகளும், கிளைகளும் வெந்து கருகியதால் இந்த நிலை வந்ததோ என வருத்தமுற்றது.
v பட்டுக் கருதியதன் காரணமாக கட்டை என பெயர் வந்ததோ என வருத்தமுற்றது.
v மரப்பட்டைகள் எல்லாம் விழுந்ததனால் வருத்தமுற்றது
3
33.
v விளக்குகளையும், கலசத்தையும் ஏந்தியவாறு கண்ணனை இளம் பெண்கள் எதிர்கொண்டு அழைத்தார்கள்.
v கண்ணன் நடந்து வருகின்றான். இசைக்கருவிகள் முழங்குகின்றன.சங்குகளை ஊதுகின்றனர்.
v கண்ணன் முத்துமாலைகள் தொங்கவிடப்பட்ட பந்தலின் கீழ் தன்னைத் திருமணம் செய்து கொள்கிறான்.
v இக்காட்சிகளை ஆண்டாள் கண்டது.
3
34.
அ) பூவாது காய்க்கும் மரம் உள; நன்று அறிவார்,
மூவாது மூத்தவர், நூல் வல்லார்; தாவா,
விதையாமை நாறுவ வித்துஉள;
மேதைக்கு உரையாமை செல்லும் உணர்வு
( அல்லது )
ஆ) காடெல்லாம் கழைக்கரும்பு காவெல்லாம் குழைக்க கரும்பு மாடெல்லாம் கருங்குவளை வயலெல்லாம் நெருங்குவளை
கோடெல்லாம் மடஅன்னம் குளமெல்லாம் கடல்அன்ன
நாடெல்லாம் நீர்நாடு தனைஒவ்வா நலமெல்லாம
3
பகுதி – 3 / பிரிவு - 3
35
பண்பாகு பெயர் :
மஞ்சள் பூசினாள்
மஞ்சள் என்னும் நிறம் கிழங்கிற்கு ஆகி வந்துள்ளது.
தொழிலாகுபெயர்
‘வற்றல் தின்றான்’
‘வற்றல்’ என்னும் தொழிற்பெயர் வற்றிய உணவுப் பொருளுக்கு ஆகிவந்துள்ளது3
36.
தன்வினை
பிறவினை
எழுவாய் ஒரு வினையை செய்தல்
எழுவாய் ஒரு வினையை செய்ய வைத்தல்
எ.கா : பந்து உருண்டது
எ,கா: பந்தை உருட்ட வைத்தான்
அவன் திருந்தினான்
அவனைத் திருந்தச் செய்தான்
3
37
அணி : உவமை அணி
அணி விளக்கம் : உவமையும், உவமேயமும் வந்து உவம உருபு வெளிப்படையாக வந்தால் அது உவமை அணி எனப்படும்.
உவமை : அகழ்வாரை தாங்கும் நிலம்
உவமேயம் : இகழ்வார் பொறுத்தல் தலை
உவம உருபு : போல
3
பகுதி – 4
38
அ)
ü அமிழ்தினும் மேலான முத்திக் கனியே ! முத்தமிழே ! உன்னோடு
ü மகிழ்ந்து சொல்லும் விண்ணப்பம் உண்டு கேள்.
ü புலவர்கள் குறம்,பள்ளு பாடி தமிழிடமிருந்து சிறப்பு பெறுகின்றனர். அதனால் உனக்கும் பா வகைக்கும் உறவு உண்டு.
ü தமிழே ! சிந்தாமணியாய் இருந்த உன்னைச் சிந்து என்று அழைப்பவர் நா இற்று விழும்.
ü தேவர்கள் கூட மூன்று குணங்கள் தான் பெற்றுள்ளனர். ஆனால் தமிழே! நீ மட்டும் பத்து குணங்களைப் பெற்றுள்ளாய்.
ü மனிதர் உண்டாக்கிய வண்ணங்கள் கூட ஐந்து தான்,. ஆனால் தமிழே ! நீ மட்டும் நூறு வண்ணங்களைப் பெற்றுள்ளாய்.
ü உணவின் சுவையோ ஆறு தான். ஆனால், தமிழே ! நீயோ ஒன்பது சுவைகளைப் பெற்றுள்ளாய்.
ü மற்றையோர்க்கு அழகு ஒன்று தான். ஆனால் தமிழே! நீயோ எட்டு வகையான அழகினைப் பெற்றுள்ளாய்.
5
38
ஆ.
ஏமாங்கத நாடு
நமது ஊர்
தென்னையில் முற்றிய தேங்காய் விழுந்த வேகத்தில் தேனடை கிழிந்து தேன் சிந்தி, பலாமரத்தின் மீது விழுந்து பலாப்பழம் பிளந்தது,அருகில் இருந்த மாமரத்தில் விழுந்ததால் மாங்கனி சிதறியது, பின் வாழை மரத்தின் மீது விழுந்து வாழைப் பழங்கள் உதிர்ந்தது
சோலைகள் எல்லாம் பாலைகளாகக் காட்சி அளிக்கின்றன. தென்னை மரங்கள் போதிய நீர்வளம் இல்லாமையால்,மெலிந்த மட்டைகளும், ஓலைகளும் கொண்டு காட்சியளிக்கின்றன
மலையிலிருந்து வரும் வெள்ளம் நாட்டினுள் பாய்கிறது
மழைக்காலத்தில் தோன்றும் புது வெள்ளம் ஊர்களில் பாய்கிறது.
நீர் வளம் நிறைந்துள்ளமையால் கழனிகள் சேறும் சகதியுமாக உள்ளன.
நிலத்தடி நீர் மற்றும் மழை நீர் நம்பி வயல்கள் உள்ளன
வயல்களில் விளைச்சல் நன்றாக விளைந்து தலை சாய்ந்து இருக்கும்.
ஒரு பருவம் நன்றாக விளைந்தும்,அடுத்த பருவம் பயிர்கள் எல்லாம் காய்ந்து போவதைக் காணலாம்.
ஆயிரங்கணக்கான உணவு வகைகள், அறச்சாலைகள்,ஒப்பனை மண்டபங்கள்,திருமணக் கூடங்கள் இருக்கின்றன. அங்கு இல்லாததது எதுவும் இல்லை.ஆயிரங்கணக்கான நிகழ்வுகள் நிகழ்கின்றன.
ஊர் திருவிழா, திருமணம், தேர்தல் நேரங்களில் மட்டும் ஏதோ இங்கொன்றும் அங்கொன்றுமாக நிகழ்வுகள் நிகழ்கின்றன
5
39
அ.
அனுப்புநர்
க. இளவேந்தன்
மாணவச்செயலர்,
10ஆம் வகுப்பு ’ஆ’ பிரிவு,
அரசினர் உயர்நிலைப்பள்ளி,
கோரணம்பட்டி,
பெறுநர்
மேலாளர்,
தமிழ்விதைப் பதிப்பகம்,
சென்னை-600 001.
பெருந்தகையீர்,
சுமார் 500 மாணவர்கள் படிக்கும் எங்கள் பள்ளிக்கு தமிழ்மொழியில் உள்ள அருஞ்சொற்களின் பொருளை அறிய உங்கள் பதிப்பகத்தில் வெளியிட்டுள்ள தமிழ்- தமிழ்-ஆங்கிலம் அகராதியின் பத்துபடிகளை எங்கள் பள்ளி நூலகத்திற்கு பதிவஞ்சலில் அனுப்பிவைக்க வேண்டுகிறோம்.
நாள் : 01-09 -2021
இடம் : கோரணம்பட்டி
தங்கள் உண்மையுள்ள,
க.இளவேந்தன்.
(மாணவர் செயலர்)
உறைமேல் முகவரி:
மேலாளர்,
தமிழ்விதைப் பதிப்பகம்,
சென்னை-600 001.
5
39
ஆ. 12, தமிழ் வீதி,
மதுரை-2
28,செப்டம்பர் 2021.
அன்புள்ள நண்பா !
வணக்கம் . நலம். நலமறிய ஆவல் என்னுடைய பிறந்தநாள் பரிசாக நீ அனுப்பிய எழுத்தாளர் எஸ் . இராமகிருஷ்ணன் எழுதிய கால் முளைத்த கதைகள் என்ற கதைப்புத்தகம் கிடைத்தது. மிக்க மகிழ்ச்சி அடைந்தேன். அதில் உள்ள கதைகள் அனைத்தையும் படித்தேன். படிப்பதற்குப் புதுமையாகவும், மிக்க ஆர்வமாகவும் இருந்தன.
இந்நூலில் பூனையை நாய் ஏன் துரத்துகிறது? போன்ற தலைப்புகளில் கதைகள் உள்ளன. குழந்தைகள் மிகவும் விரும்பிப் படிப்பதற்கு ஏற்ற வகையில் இனிய எளிய சொற்களால், கதைகள் சிறியனவாக அமைந்துள்ளன. எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.
அன்பு நண்பன், அ.எழிலன்.
உறைமேல் முகவரி:
வெ.ராமகிருஷ்ணன்,
2,நெசவாளர் காலணி,
சேலம் - 1
5
40
திரண்ட கருத்து :
மழையானது மலை, காடு, மரம், செடிகொடிகள், மணற்பாங்கான சமவெளிகள் ஆகிய இடங்களில் தவழ்ந்து ஓடிவந்தது. ஏரி, குளம், குட்டைகள், வாய்க்கால், ஓடைகள் ஆகிய இடங்களில் எல்லாம் மழைநீர் ஓடிவந்தது என, மழையின் சிறப்பைப் பாடி உள்ளார்.
மையக்கருத்து :
காடு, மரம், செடி கொடிகள், ஏரி, குளம், ஓடைகள் எல்லாம் கடந்து மழைநீர் வந்தது.
மோனைத்தொடை : சீர், அடிகளில் முதலெழுத்து ஒன்றிவரத் தொடுப்பது மோனைத்தொடையாகும்.
கல்லும் - கடந்து, எல்லை - எங்கும், ஏறாத - ஏரி, ஊராத - ஊற்றிலும்.
எதுகைத்தொடை : அடி, சீர்களில் இரண்டாம் எழுத்து ஒன்றிவரத் தொடுப்பது எதுகைத் தொடையாகும்.
கல்லும் - எல்லை, ஏறாத - ஊறாத
இயைபுத் தொடை : இறுதி எழுத்தோ, சொல்லோ ஓசை ஒன்றிவரத் தொடுப்பது, இயைபுத் தொடையாகும்.
கடந்து வந்தேன், தவழ்ந்து வந்தேன்
அணிநயம் : மழைநீரின் ஓட்டத்தை வெகுவாகச் சிறப்பித்துக் கூறுவதால், உயர்வு நவிற்சி அணி பயின்று வந்துள்ளது.. வந்தேன், வந்தேன் என்னும் வினைச்சொல், பலமுறை வந்து ஒரே பொருளைத் தருவதால், இது சொற்பொருள் பின்வரு நிலையணியுமாகும்.
சொல்நயம் : குதித்து, கடந்து, தவழ்ந்து, மேடுகள் ஏறி, நிரப்பி, உட்புகுந்து என, மழைநீர்ச் சிறப்பை உணர்த்தப் பொருள் பொதிந்த சொற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
5
40
ஆ.
1. ஒரு நாட்டின் பண்பாடு மக்களின் இதயங்களிலும் ஆன்மாவிலும் தங்கியுள்ளது – மகாத்மா காந்தி
2. மக்களின் கலை அவர்களின் உண்மையான மனதின் கண்ணாடி – ஜவகர்லால் நேரு
3. குறைவான அன்பும் இரக்கமும் தான் மிகப்பெரிய பிரச்சனை – அன்னை தெரஸா
4. உங்கள் கனவு நனவாகும் வரை கனவு காணுங்கள் -A.P.J.அப்துல் கலாம்
5. வெற்றியாளர்கள் வித்தியாசமானச் செயல்களைச் செய்யாமல் செயல்களை வித்தியாசமாகச் செய்கிறர்கள் - சேவ்கேரா
5
41
ஏற்புடைய விடை இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்
5
42
( ஏற்புடைய விடை இருப்பின் மதிப்பெண் வழங்கலாம் )
ஏடு எடுத்தேன் கவி ஒன்று எழுத
என்னை எழுது என்று சொன்னது இந்தக் காட்சி
அர்த்தமுள்ள இந்தக் காட்சி
சமூகத்திற்கு தேவையான காட்சி
சமூக விளைவை ஏற்படுத்துக் காட்சி
எல்லோருக்கும் அறிவுறுத்தும் காட்சி
5
பகுதி – 5
43
அ. மூவலூர் இராமாமிர்தம்
o தமிழகத்தின் சமூகச் சீர்திருத்தவாதி
o எழுத்தாளர்
o திராவிட இயக்க செயல்பாட்டாளர்
o தேவதாசி ஒழிப்புச்சட்டம் நிறைவேறத் துணை நின்றவர்
o தமிழக அரசு எட்டாம் வகுப்பு வரை படித்த பெண்களுக்கு இவர் பெயரால் திருமண உதவித் தொகை வழங்கி வருகிறது.
முத்து லட்சுமி :
o தமிழகத்தின் முதல் பெண் மருத்துவர்.
o இந்திய பெண்கள் சங்கத்தின் முதல் தலைவர்
o சென்னை மாநகராட்சியின் முதல் துணை மேயர்
o சட்ட மேலவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் மணி
o அடையாற்றில் அவ்வை இல்லம், புற்று நோய் மருத்துவமனை ஆகியவற்றை நிறுவியவர்.
நீலாம்பிகை அம்மையார்
o மறைமலையடிகள் மகள் நீலாம்பிகை அம்மையார்
o தந்தையைப் போல தனித்தமிழ் பற்று உடையவர்.
o தனித்தமிழ் கட்டுரை, வடசொல் தமிழ் அகர வரிசை, முப்பெண்மணிகள் வரலாறு ஆகியன
இவர் எழுதிய நூல்கள்
8
ü ஆ. காவிரி ஆறு புதிய பூக்களை அடித்து வர அதனை வண்டுகள் மொய்த்து ஆராவாரம் செய்கின்றன.
ü நட்டபின் வயலில் வளர்ந்த நாற்றின் முதல் இலை சுருள் விரிந்து. இதனைக் கண்ட உழவர் இது தான் களை பறிக்கும் பருவம் என்று அறிந்தனர்.
ü காடுகளில் எல்லாம் கரும்புகள் உள்ளன.
ü வயல்களில் சங்குகள் நெருங்கி உள்ளன.
ü சோலைகள் எல்லாம் செடிகளின் புதிய கிளைகளில் அரும்புகள் உள்ளன.
ü பக்கங்களில் எல்லாம் குவளை மலர்கள் உள்ளன.
ü கரை எங்கும் இளைய அன்னங்கள் உலவுகின்றன.
ü குளங்கள் எல்லாம் கடல் போல் பெரிதாக உள்ளன.
ü அன்னங்கள் விளையாடும் நீர் நிலைகளில் எருமைகள் வீழ்ந்து மூழ்கும். அதனால் அதில் உள்ள வாளை மீன்கள் அருகில் உள்ள பாக்கு மரங்கள் மீது பாயும் இக்காட்சியை நிலையான வானத்தில் தோன்றி மறையும் வானவில் போன்றுள்ளது.
ü செந்நெல்லின் சூடுகள், பலவகைப்பட்ட மீன்கள் ,முத்துக்கள், மலர்த் தொகுதிகள் ஆகியவற்றைத் திருநாட்டில் குவித்து வைத்திருந்தனர்.
ü தென்னை, செருந்தி, அரசமரம், கடம்பமரம்,பச்சிலை மரம், குராமரம், பனை,சந்தனம், நாகம், வஞ்சி,காஞ்சி மலர்கள் நிறைந்த கோங்கு முதலியன எங்கும் திருநாட்டில் செழித்து வளர்ந்துள்ளன.
8
44.
அ.
Ø உலகமெங்கும் வாழும் மக்களுக்குப் பட்டறிவை நூலகம் தருகிறது. எழுத்தறிவு பெற்றோர் மிகுந்துள்ள நிலையில் மனவளம் பெருக வேண்டும்.
Ø வீட்டு நிலை மாற, வீட்டிற்கோர் புத்தகசாலை வேண்டும்.
Ø வீடுகளில் நற்பண்புகள் காண வேண்டுமெனில் வெள்ளி, பித்தளை, உடைகள், மருந்துகள், அணிகலன் போன்றவை இருப்பது போன்று புத்தகங்களும் இருக்க வேண்டும்.
Ø உணவு,உடை,அடிப்படைத் தேவைகள் பூர்த்தியானதும் முதலிடம் புத்தகசாலைக்குத் தர வேண்டும்.
Ø இதயத்தைப் பண்படுத்துவன புத்தகங்களே, மக்களின் மனவளத்தை அதிகப்படுத்துவன நூல்களே
Ø சுப நிகவுகளில் புத்தகங்களை பரிசாக வழங்க முன் வர வேண்டும்.
Ø உலக அறிவைத் தரக் கூடிய நூல்களும், வீட்டிற்கோர் திருக்குறளும் கட்டாயம் இருத்தல் வேண்டும்.
8
44
ஆ. முன்னுரை :
கந்தர்வன் எழுதிய தண்ணீர் என்ற இக்கதையில் நீரின் அவசியமும், நீருக்காக கிராம மக்கள் படும் பாட்டையும் அழகாக எழுதியுள்ளார். அதை இக்கட்டுரையில் காணலாம்.
கிராமத்தின் நிலை :
கதையின் கிராமத்தில் குடிப்பதற்கு நீர் பக்கத்து ஊருக்கு செல்ல வேண்டும்.
அந்த கிராமம் குடிநீருக்காக பிலாப்பட்டிக்கு செல்ல வேண்டும். நிலத்தடி நீர் வற்றி ஆண்டுகள் பல ஆயிற்று.
இரயில் நீர் :
அந்த ஊருக்கு வரும் இரயிலின் ஊதல் ஒலிக் கேட்டு அந்த கிராம மக்கள் தண்ணீருக்காக பெண்கள் ஒருவருக்கு ஒருவர் முண்டியடித்துக் கொண்டு ஓடுவர்.
ஸ்டேசன் மாஸ்டர் மிரட்டியும் பயன் இல்லை. இரயிலை விட்டால் பிலாப்பட்டிக்கு போக வேண்டும்.
இந்திரா :
இளம் பெண் இந்திரா தன்னை திருமணம் செய்து கொடுத்தால் நீர் இருக்கும் ஊருக்கு தான் கல்யாணம் பண்ணிக்க வேண்டும் என நினைத்துக் கொண்டே இரயில் பெட்டியில் நுழைந்தாள்.
மக்கள் தேடல் :
வீட்டில் நீர் இல்லை என்பதை நினைத்துக் கொண்டே நீர் பிடித்திருந்த இந்திரா இரயில் நகர்ந்ததை கவனிக்கவில்லை.
இந்திராவின் தாய் புலம்புகிறாள். இந்திராவைத் தேடி இராமநாதபுரம் பேருந்து நிலையம் சென்று தேடிப் பார்த்தனர். எங்கும் காணவில்லை.
திரும்பிய இந்திரா:
தண்டாவளத்தில் சிறுது தூரத்தில் பெண் ஒருத்தி தென்பட்டாள். அவள் இந்திரா. ஒரு குடம் நீர் பிடிக்க இரயிலிலேயே உள்ள நீர் பிடித்து அதனை சிந்தாமல் கொண்டு வந்து சேர்த்தாள்.
முடிவுரை :
தண்ணீர் வாழ்வில் மிக முக்கியம். அதனை அறிந்து நீரினை சேமிப்போம். சிக்கனமாகப் பயன்படுத்துவோம். நீர் மேலாண்மையைக் கட்டமைப்போம்.
8
45
அ.
பள்ளியில் நடைபெற்ற இலக்கியமன்ற விழா நிகழ்ச்சி செய்திகளைத் திரட்டித் தொகுப்புரை எழுதுக.
கோரணம்பட்டி அரசினர் உயர்நிலைப் பள்ளியில் 15-09-20 அன்று வள்ளுவன் இலக்கிய மன்ற தொடக்க விழா நடைபெற்றது. பள்ளி மாணவ – மாணவியர் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடினர்.
பள்ளித் தலைமையாசிரியர் சிறப்பான வரவேற்புரையாற்றினார். சிறப்பு விருந்தினராக வந்த முனைவர் எ.மாணிக்கம் தாய்மொழியின் மூலமாகத்தான் கருத்துக்களைச் சிறந்த முறையில் வெளியிட முடியும், தாய்மொழி வழியே கற்பதன் மூலமே பாடங்களைச் செம்மையாகவும் திருத்தமாகவும் கற்றுக்கொள்ள முடியும்.
மாணவர்கள் நாட்டுப்பற்றும் ,மொழிப்பற்றும் கொண்டு ஒழுக்கச் சீலர்களாகத் திகழ வேண்டும் என்று மாணவர்களுக்கு நல்ல அறிவுரைகளைக் கூறி சிறப்புரையாற்றினார்.
மாணவர் செயலர் நன்றி கூறினார். மாணவிகள் நாட்டுப்பண் பாட விழா இனிதே முடிந்தது.
8
45
ஆ. ஏழைகளின் ஊட்டி - ஏற்காடு
கடந்த 2018 சனவரி மாதம் இயற்கை எழில் கொஞ்சும் ஏழைகளின் ஊட்டி என அழைக்கப்படும் ஏற்காடுக்கு நான் சுற்றுலா சென்றிருந்தேன்.அந்த அழகான பயண அனுபவங்களை உங்கள் அனைவரிடமும் பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
சேலம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து பேருந்தில் சென்றோம். மலைகளின் இருபுறமும் எழில் கொஞ்சும் இயற்கை காட்சிகளைக் காண இரு கண்கள் போதாது. அங்கு சென்ற பின்
ஏற்காடு படகு இல்லம்,
சீமாட்டி இருக்கை,
பகோடா உச்சி,
பூங்கா,
காவேரி சிகரம்,
சேர்வராயன் மலை உச்சி என அனைத்து இடங்களும் மனதை கொள்ளைக் கொள்கிறது. எத்தனை அழகு. என்றும் நினைவை விட்டு அகலாது ஏற்காடு.
8
10 விநாடிகள் காத்திருக்கவும்
22222
ஆக்கம் :
வெ.ராமகிருஷ்ணன்,
அரசு உயர்நிலைப் பள்ளி,
கோரணம்பட்டி.