10TH - TAMIL - HALF YEARLY KEY - CHENNAI DT - PDF

    

சென்னை – அரையாண்டு வினாத்தாள்

டிசம்பர் - 2022-2023

வினாத்தாளினைப் பெற

பத்தாம் வகுப்பு / மொழிப்பாடம் – தமிழ்

உத்தேச விடைக் குறிப்பு

சென்னை – அரையாண்டு வினாத்தாள்

டிசம்பர் - 2022-2023

பத்தாம் வகுப்பு / மொழிப்பாடம் – தமிழ்

உத்தேச விடைக் குறிப்பு

நேரம் : 15 நிமிடம் + 3.00 மணி                                                         மதிப்பெண் : 100

பகுதி – 1

மதிப்பெண்கள் - 15

வினா.எண்

விடைக் குறிப்பு

மதிப்பெண்

1.

ஈ. பாடல்,கேட்டவர்

1

2.

ஈ. இலா

1

3.

ஆ. தளரப்பிணைத்தால்

1

4.

அ. அகவற்பா

1

5.

இ.நாகை

1

6.

இ.அறியா வினா, சுட்டுவிடை

1

7.

இ.காசி நகரத்தின் பெருமையைப் பாடும் நூல்

1

8.

ஈ. விண்மீன்

1

9.

ஆ. பெற்ற சுதந்திரத்தைப் பேணிக்காத்தல்

1

10.

அ. எழுதிய கவிதை

1

11.

ஆ. மணிவகை

1

12.

இ. மலைபடுகடாம்

1

13.

அ. தினைச்சோறு

1

14.

ஈ. கெழீஇ

1

15.

ஆ. மொழிந்த – பொம்மல்

1

பகுதி – 2

பிரிவு - 1

16.

வயது முதிர்ந்து உடலும் உடல் உறுப்புகளும் வலுவிழந்தாலும் அறப்பணியைத் தொடர்ந்து செய்கிறார்

2

17.

1. கண்காணிப்பு காமிராக்கள்                    2. நவீன திறன்பேசி

1

1

18.

அ. நூலின் பயன் எப்படி இருக்க வேண்டும்?

ஆ. தமிழ்,இலக்கியங்களை மட்டுமன்றி, சோவியத்,பிரெஞ்சு இலக்கியங்களையும் தானே படித்து உணர்ந்தவர் யார்?

1

1

19

அரசர்கள் தங்கள் வரலாறும் பெருமையும் காலம் கடந்தும் நிலைத்து நிற்க கல்லிலும் செப்பேட்டிலும் மெய்கீர்த்தி எழுதினார்கள்

2

20.

·                     மரம் வளர்ப்போம்;காற்றின் பயன் அறிவோம்

·                    மரம் நடுவோம்;காற்றை பெறுவோம்

1

1

21

கட்டாய வினா:

செயற்கை அறிந்தக் கடைத்தும் உலகத்

  தியற்கை அறிந்து செயல்

 

2

பகுதி – 2 / பிரிவு - 2

22

தேனிலே ஊறிய செந்தமிழின்சுவை

தேறும் சிலப்பதி காமதை ஊணிலே எம்முயிர் உள்ளளவும்நிதம்

ஓதி யுர்ந்தின் புறுவோமே

 கவிமணி தேசிக விநாயகனார்

2

23

Ø  ஆற்றுநீர் பொருள்கோள்

2

24

காகத்திற்குக் காது உண்டா? அதற்கு காதுக் கேட்குமா?

எல்லாப் பறவைகளுக்கும் காது உண்டு.செவித் துளைகள் இறகுகளால் மூடி இருக்கும். மற்ற படி பாலூட்டிகளுக்கு உள்ளதுபோல் புறச்செவிமடல் இருக்காது. காகத்திற்குக் காது உண்டு. காது கேட்கும்.

1

1

25.

மலைந்து – மலை + த்(ந்)+த் + உ

மலை – பகுதி

த் – சந்தி

ந் – ஆனது விகாரம்

த் – இறந்த கால இடைநிலை

உ – வினையெச்ச விகுதி

2

26.

சேர்ரகளின் பட்டப் பெயர்களில் ‘ கொல்லி வெற்பன் ‘, ‘மலையமான்’ போன்றவை குறிப்பிடத்தக்கவை. கொல்லி மலையை வென்றவன், ‘ கொல்லி வெற்பன் ‘ எனவும் பிற மலைப்பகுதிகளை வென்றவர்கள் ‘ மலையமான் ‘ எனவும் பெயர் சூட்டிக் கொண்டனர். இதற்குச் சங்க இலக்கியத்தில் சான்றுகள் உள்ளன.

2

27.

அ. கலந்துரையாடல்                ஆ. ஆவணம்

1

1

28.

v  வேங்கைமரம்தனிமொழி

v  வேம் + கை = வேகின்ற கைதொடர்மொழி

v  வேங்கை எனும் சொல் தனிமொழிக்கும் தொடர்மொழிக்கும் பொதுவாய் அமைந்துள்ளது.

2

பகுதி – 3 / பிரிவு - 1

29

·                    இன்றைய வ ள ரு ம் நாடுகளில் அறிவியலை உருவாக்க – அரசியலை உருவாக்க – பொருளியலை உருவாக்க – சமூகவியலை உருவாக்க – இலக்கியத்தை உருவாக்க மொழிபெயர்ப்பே உதவுகிறது

·                    மொழி பெயர்ப்பு, மனிதர்களையும் நாடுகளையும் காலங்களையும் இணைக்கிற நெடுஞ்சாலையாக இருக்கிறது.

·                    மொழியால் பிரிக்கப்பட்ட மானுடத்தை இணைக்கிறது

3

30

Ø  காட்டில் பனைவடலி நடப்பட்டது

Ø  தோட்டத்தில் மாங்கன்று நடப்பட்டது.

Ø  சோளப் பைங்கூழ் வளர்ந்து வருகிறது

Ø  புளியங்கன்று சாலை ஓரத்தில் வளர்ந்து வருகிறது.

Ø  தோட்டத்தில் தென்னம்பிள்ளை வளர்த்தேன்

3

31.

அ. இலக்கிய அறிவு

ஆ. அன்னையார் இளமையில் பயிற்றுவித்த பாக்கள்

இ. ஒன்று : கல்வி, மற்றொன்று : கேள்வி

1

1

1

பகுதி – 3 / பிரிவு - 2

32

v  மன்னன் இடைக்காடனார் புலவரின் பாடலை இகழ்ந்தார்.

v  இடைக்காடனார், மன்னன் இகழ்ந்ததை இறைவனிடம் முறையிடுகிறார்

v  இறைவன் கோவிலை விட்டு நீங்கினார்

v  மன்னன் இறைவனிடம் தன் பிழையைப் பொறுத்து அருள்புரியுமாறு வேண்டினார்

மன்னன் புலவருக்கு மரியாதை செய்து, மன்னிப்பு வேண்டினார்

3

33.

·         நீயும் அந்த வள்ளலிடம் சென்று வளம் பெற்று வாழ்வாயாக என கூத்தனை கூத்தன் ஆற்றுப்படுத்துதல் ஆற்றுப்படை

·         நன்னன் எனும் மன்னனிடம் பரிசில் பெற்ற கூத்தர், மற்றொரு கூத்தரிடம் பரிசில் பெறுவதற்கான வழியினை கூறுகிறது.

·         உணவினைப் பெறுவதற்கான வழியினை கூறல்.

3

34.

அ) வாளால் அறுத்துச் சுடினும் மருத்துவன் பால்

மாளாத காதல் நோயாளன் போல் மாயத்தால்

மீளாத் துயர்தரினும் வித்துவக் கோட்டம்மா! நீ

ஆளா உனதருளே பார்ப்பன் அடியேனே.              -குலசேகராழ்வார்

.

( அல்லது )

ஆ) நவமணி வடக்க யில்போல்

நல்லறப் படலைப் பூட்டும்

       தவமணி மார்பன் சொன்ன

தன்னிசைக்கு இசைகள் பாடத்

        துவமணி மரங்கள் தோறும்

துணர்அணிச் சுனைகள் தோறும்

        உவமணி கானம்கொல் என்று

ஒலித்து அழுவ போன்றே                                                                வீரமாமுனிவர்

 

3

பகுதி – 3 / பிரிவு - 3

35

சுட்டுவிடை,மறை விடை,நேர்விடை – வெளிப்படை விடைகள்

 

சுட்டு விடை – சுட்டிக் கூறுவது

வீடு எங்குள்ளது வினாவிற்கு “ இடப்பக்கம் உள்ளது “ எனக் கூறுவது

மறை விடை – மறுத்துக் கூறும் விடை

இதனை செய்வாயா? வினாவிற்கு செய்யமாட்டேன் எனக் கூறுவது.

நேர் விடை – உடன் பட்டுக் கூறும் விடை

இதனை செய்வாயா? வினாவிற்கு செய்கிறேன் எனக் கூறுவது

3

36.

வ.எ

சீர்

அசை

வாய்பாடு

1

நாள்- தோ-றும்

நேர் – நேர்-நேர்

தேமாங்காய்

2

நா - டி

நேர் - நேர்

தேமா

3

முறை – செய்-யா

நிரை – நேர்-நேர்

புளிமாங்காய்

4

மன்-னவன்

நேர்-நிரை

கூவிளம்

5

நாள்-தொறும்

நேர்- நிரை

கூவிளம்

6

நா-டு

நேர் - நேர்

தேமா

7

கெடும்

நிரை

மலர்

இக்குறள் இறுதிச்சீர் “மலர்” என்னும் வாய்பாட்டில் முடிந்துள்ளது.

3

37

 

·         தீவகம் என்னும் சொல்லுக்கு விளக்கு என்பது பொருள்

·         செய்யுளில் ஓரிடத்தில் நின்ற சொல் செய்யுளின் அனைத்து பகுதி சொற்களோடும் சேர்ந்து பொருள் தருவது தீவக அணி.

·         மூன்று வகைப்படும்

·         முதல்நிலை தீவகம், இடைநிலை தீவகம், கடைநிலை தீவகம்

3

பகுதி – 4

38

  அ)

சுந்தரனார் வாழ்த்து

பெருஞ்சித்திரனார் வாழ்த்து

கடலெனும் ஆடை உடுத்திய நிலமகளுக்கு முகம் பாரத கண்டம்

மண்ணுலகப் பேரரசி

நெற்றியில் மணம் வீசூம் திலகமாக தமிழ்நாடு

சங்க இலக்கியங்கள் அணிகலன்கள்

எல்லா திசைகளில் உன் புகழ்

தும்பி போல உன்னை சுவைத்து உன் பெருமையை எங்கும் முழங்குகின்றோம்

5

38

ஆ.

மருவூர்ப்பாக்க வணிக வீதி

இக்கால வணிக வளாகங்கள்

தானியக் கடைத் தெருக்கள்

தனித்தனி அங்காடிகள்

நேரடி வணிகம்

இடைத் தரகர்கள் அதிகம்

இலாப நோக்கமற்றது

இலாபம் மட்டுமே முக்கியம்

கலப்படம் இல்லாதது

கலப்படம் கலந்துள்ளது

தரம் உண்டு.விலை குறைவு

விலை அதிகம்

5

39

அ.

சேலம்

03-03-2021

அன்புள்ள நண்பனுக்கு,

            நான் நலம். நீ அங்கு நலமா? என அறிய ஆவல்.சென்ற வார மழை வெள்ளத்தில் சிக்கிய குழந்தையை காப்பாற்றியதற்காக மாவட்ட ஆட்சியரிடம் பாராட்டு பெற்ற நிகழ்வை தொலைக்காட்சி மூலம் கண்டேன். மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. மனமார வாழ்த்துகிறேன். நீ இன்னும் இதுபோல பலருக்கு உதவி செய்து பாராட்டுப் பெற வாழ்த்துகிறேன்.

இப்படிக்கு,

உன் அன்பு நண்பன்,

அ அ அ அ அ அ அ .

உறைமேல் முகவரி;

            பெறுதல்

                        திரு.இரா.இளங்கோ,

                        100,பாரதி தெரு,

                        சேலம்.

5

39

அனுப்புநர்

            அ அ அ அ அ,

            100,பாரதி தெரு,

            சக்தி நகர்,

            சேலம் – 636006.

பெறுநர்

            உணவு பாதுகாப்பு ஆணையர் அவர்கள்,

            உணவு பாதுகாப்பு ஆணையம்,

            சேலம் – 636001

ஐயா,

பொருள்: காலக்கெடு முடிந்த உணவுப் பொருட்கள் விற்கும் அங்காடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டுதல்சார்பு

            வணக்கம். நான் நேற்று சேலத்தில் அம்மன் பல்பொருள் அங்காடியில் ஊறுகாய் வாங்கினேன். அந்த ஊறுகாய் பாட்டில் மேல் இருந்த தேதியின் காலக் கெடு முடிந்துவிட்டது. ஆனால் அந்த பல்பொருள் அங்காடி அந்த ஊறுகாய் விற்றுக் கொண்டு இருக்கிறார்கள்.  இத்துடன் அந்த உணவிற்கான விலை இரசீது நகல் மற்றும் ஊறுகாய் பாட்டிலையும் நகலையும் இணைத்துள்ளேன். தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு பணிவுடன் வேண்டுகிறேன்.

நன்றி.

இணைப்பு:                                                                            இப்படிக்கு,

1. விலை இரசீதுநகல்                                                                              தங்கள் உண்மையுள்ள,

2. ஊறுகாய்–நகல்                                                                                                                       அ அ அ அ அ.

இடம் : சேலம்    

நாள் : 04-03-2021

உறை மேல் முகவரி:

பெறுநர்

          உணவு பாதுகாப்பு ஆணையர் அவர்கள்,

உணவு பாதுகாப்பு ஆணையம்,

சென்னை.

5

40

( ஏற்புடைய விடை இருப்பின் மதிப்பெண் வழங்கலாம் )

ஏடு எடுத்தேன் கவி ஒன்று எழுத  

என்னை எழுது என்று சொன்னது இந்தக் காட்சி    

அர்த்தமுள்ள இந்தக் காட்சி

சமூகத்திற்கு தேவையான காட்சி

சமூக விளைவை ஏற்படுத்துக் காட்சி

எல்லோருக்கும் அறிவுறுத்தும் காட்சி

5

41.

படிவத்தில் அனைத்து படிநிலைகளையும் சரியாக நிரப்பி இருப்பின் முழு மதிப்பெண் வழங்கலாம்

5

42

அ.

1.குழு விளையாட்டுகள் விளையாடுதல்.

2.உலக நிகழ்வுகளைப் பற்றி  கலந்துரையாடுதல்.

3.விளையாட்டு களத்திற்குச் சென்று விளையாடுதல்.

4நூல்களைப் படித்தல்.

5..திறன்பேசியின் தீமைகளை எடுத்துரைத்தல், அதன் பயன்பாட்டை குறைக்கச் செய்தல்.

5

42

மொழிபெயர்க்க

1. ஒருவரிடம் அவர் புரிந்து கொள்ளக் கூடிய ஏதாவது ஒரு மொழியில் பேசினால் அது அவருடைய மூளையை சென்றடைகிறது.அதுவே அவர் தாய் மொழியில் பேசினால் அது அவருடைய இதயத்தைச் சென்றடைகிறதுநெல்சன் மண்டேலா

2. பள்ளியில் கற்றபின் எது நமது நினைவில் நிற்கின்றதோ அதுவே கல்வி – ஆல்பிரட் ஐன்ஸ்டீன்

3. நாளையே இந்த வாரத்தின் மிகப் பரபரப்பான நாள் – ஸ்பானிஷ் பழமொழி

4. நம் வாழ்வில் மிகவும் இருண்ட காலத்தில் தான் நாம் அகவொளியைக் காண முற்பட வேண்டும் - அரிஸ்டாட்டில்

5. வெற்றி என்பது முடிவல்ல தோல்வி என்பது மரணமல்ல தொடர்ந்து முனைகின்ற துணிவே கணக்கில் உள்ளது – வின்ஸ்டன் சர்ச்சில்

5

42.

செவி மாற்றுத் திறனாளர்களுக்கான வினா:

1. தாள்,இலை,தோகை,ஓலை

2. ஆங்கில மொழியிலும் நூலிலும் இலையைக் குறிக்க லீஃப் என்னும் ஒரே சொல் உள்ளது.ஆங்கில நூல்களிலும் வேறு பல வகைகளிலும்  இலைகளைப் பாகுபாடு செய்தனரேயன்றி, தமிழ்ப் பொதுமக்களைப் போல வன்மை மென்மை பற்றித் தாள்,இலை,தோகை, ஓலை எனப் பாகுபாடு செய்தாரில்லை.

3. புல மக்களால்

4. விளைப்பொருள் வகைகளை நோக்கினால் விளங்கும்.

5. தமிழ்ச்சொல்வளம்

5

 

பகுதி – 5

 

43

( ஏற்புடைய விடை இருப்பின் மதிப்பெண் வழங்கலாம் )

அ)    காலமாற்றத்தால் வீட்டின் முன்புறம் திண்ணை வைத்து யாரும் வீடு கட்டுவதில்லை. காரணம் சமூக விரோதிகள், சமூகத்திற்கு தீங்கு விளைவிப்போர் இரவில் தங்கும் இடமாக மாறி வருவதால் இவை காணப்படுவதில்லை.

·         திருவிழாக்காலங்களில் தங்களுடைய உறவினர்களை அழைத்து விருந்து படைப்பதே இன்றைய விருந்தோம்பலாக மாறியுள்ளது.

·         முன் பின் அறிமுகம் இல்லாதவர்களை இன்றைய சூழலில் யாரும் வீட்டில் அனுமதிப்பதில்லை.

 

8

 

ஆ. ( நான்கு அறங்கள் குறிப்பிட்டு அவை இன்றைய சமூகத்திற்கு எவ்விதம் தேவை என்பதனை ஏற்புடைய விடையாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம் )

·         வணிக நோக்கமின்றி அறம் செய்ய வேண்டும். அதை விளம்பரப்படுத்தக்கூடாது.

·         நீர்நிலை பெருக்கி,நிலவளம்கண்டு,உணவுப் பெருக்கம் காணவேண்டும் என்று கூறுவது இன்றைய அரசியல் தலைவர்களுக்கு பொருந்தும்

8

44.

அ. குறிப்புச்சட்டம்

முன்னுரை

மேரி

அவமானம்

புதிய நம்பிக்கை

கல்வி

உதவிக்கரம்

மேல்படிப்பு

முடிவுரை

முன்னுரை :

          மேரியிடமிருந்து பறிக்கப்பட்ட புத்தகம், அச்சிறுமியின் வாழ்க்கையில் கல்விச் சுடரை ஏற்றிய கதையைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

மேரி :

·         சாம் – பாட்ஸி இணையருக்கு மகளாகப் பிறந்தவள் மேரி.

·         பருத்திக்காட்டில் வேலை செய்து தங்கள் குடும்பத்தை நடத்துகிறார்கள்.

அவமானம் :

·         மேரி பாட்ஸியுடன் பென்வில்ஸன் வீட்டிற்கு செல்கிறார்கள்.

·         மேரி அந்த வீட்டின் அலமாரியிலிருந்த புத்தகத்தை எடுக்கிறாள்.

·         பென்வில்ஸன் இளையமகள் அவளிடமிருந்து புத்தகத்தை பிடிங்கினாள்.

·         உனக்கு படிக்கத் தெரியாது என கூறினாள்.

·         மேரி மனம் துவண்டாள்.

புதிய நம்பிக்கை

·         மேரிக்கு படிக்க வேண்டும் என்ற ஆர்வம் உணடானது.

·         ஒரு நாள் மிஸ் வில்ஸன் என்பவர் “ உன் போன்ற குழந்தைகள் படிக்க வேண்டும். நீ சீக்கிரமாக மேயெஸ் வில்லிக்கு வர வேன்டும்.

·         மேரிக்கு புதிய நம்பிக்கை பிறந்தது.

கல்வி

·         மேரி ஐந்து மைல்கள் நடந்து சென்று கல்வி கற்றாள்.

·         சில வருடங்கள் கழித்து மேரிக்கு பட்டமளிப்பு விழா நடந்தது.

·         அதில் “ இந்த பட்டம் பெறும் மாணவர் எழுதவும் படிக்கவும் கூடியவர் “ என எழுதப்பட்டிருந்தது.

 

உதவிக்கரம்

·         மிஸ்வில்சன் மூலம் மேரிக்கு மீண்டும் ஒரு நல்ல செய்தி

·         அவளின் மேல்படிப்பு செலவுக்காக மேற்குப் பகுதியில் வாழ்கின்ற வெள்ளைக்கார பெண் மணி பணம் அனுப்பி இருக்கிறார்.

·         அவள் மேல் படிப்புக்காக டவுணுக்கு செல்கிறாள்.

மேல்படிப்பு

·         மேரியை மேல்படிப்பு படிப்பதற்காக இரயில் நிலையத்தில் அவளது கிராமமே வழியனுப்ப திரண்டு வந்தது.

·         மிஸ் வில்ஸனும் இரயில் நிலையத்தில் வந்தார்கள்.

முடிவுரை

          எப்படிப்பட்ட நிலையிலும் கல்வி நம்மை உயர்த்தும் என்பதற்கு மேரியின் வாழ்க்கையை நாம் உதாரணமாகக் கொள்ளலாம். மேரியிடமிருந்து பறிக்கப்பட்டப் புத்தகம் அவள் வாழ்க்கையில் கல்விச் சுடரை ஏற்றியது என்பதனை இக்கட்டுரை வழியாகக் கண்டோம்.

8

44

ஆ) குறிப்புச்சட்டம்

குறிப்புச் சட்டகம்

முன்னுரை

குப்புசாமி

பக்கத்து வீட்டுக்காரர்

முடிவுரை

முன்னுரை:

          கல்மனதையும் கரைய வைக்கும் கதை இந்த ஒருவன இருக்கிறான். இதை இக்கட்டுரையில் காண்போம்.

குப்புசாமி:

Ø  குப்புசாமி 25 வயது வாலிபன்.வயிற்று வலிக்காரன்

Ø  உறவினர்கள் இவனை அனாதைப் போல நடத்தினார்கள்.

Ø  காரணமில்லாமல் பக்கத்து வீட்டுக்காரரால் வெறுக்கப்பட்டான் குப்புசாமி.

Ø  வயிற்றுவலிக்கு மருத்துவம் பார்க்க சென்னை வந்தவன் இந்த குப்புசாமி.

பக்கத்து வீட்டுக்காரர்:

Ø  பக்கத்து வீட்டுக்காரர் காரணமில்லாமல் வெறுப்பை அவன் மீது காட்டியவர். அவரின் மனைவி கருணையோடு இருந்தவர்.

Ø  குப்புசாமிக்கு ஆறுமுகம் மூலம் கடிதம் வந்தது. ஆறுமுகமும் தன் பங்காக இரு சாத்துகுடியும்,ஒரு ரூபாய் பணமும் கொடுத்தார்.

Ø  பக்கத்து வீட்டுக்காரர் குப்புசாமிக்கும் ஒருவன் இருக்கிறான் என்பதை வீரப்பனின் கடிதம் மூலம் அறிந்தார். கடன் வாங்கி கொடுத்த அந்த மூன்று ரூபாயும் அவரின் மனதை மாற்றியது.

Ø  மனைவியை உடன் அழைத்துக்கொண்டு மருத்துவமனை செல்ல சாத்துக்குடி வாங்க சென்றார்.

முடிவுரை:

          எல்லோருக்கும் ஒருவன் இருக்கிறான் யாரும் அனாதை இல்லை என்பதை இக்கட்டுரையின் மூலம் காணும் போது மனிதம் துளிர்க்கிறது எனபதனை அறிய முடிகிறது.

8

45

அ.

உங்கள் பகுதியில் நடைபெற்ற அரசுப் பொருட்காட்சிக்குச் சென்று வந்த நிகழ்வைக் கட்டுரையாக்குக.

குறிப்புச்சட்டகம்

முன்னுரை

பொருட்காட்சி

நுழைவுச் சீட்டு

பல்துறை அரங்கம்

அங்காடிகள்

பொழுதுபோக்கு

முடிவுரை

முன்னுரை :

எங்கள் பகுதியில் நடைபெற்ற அரசுப்பொருட்காட்சிக்குச் சென்று வந்த நிகழ்வை இக்கட்டுரையில் காண்போம்.

பொருட்காட்சி :

          மக்கள் அதிகமாக கூடும் இடத்தில் பொருட்காட்சி நடைபெற்றது.

நுழைவுச் சீட்டு:

          பொருட்காட்சி நடைபெறும் இடத்தின் உள்ளே செல்ல நுழைவு கட்டணம் வசூலிக்கப்பட்டது.பெரியவர்களுக்கு 30 ரூபாயும்,சிறுவர்களுக்கு 15 ரூபாயும் என நுழைவுச்சீட்டு நிர்ணயம் செய்யப்பட்டது.

பல்துறை அரங்கம் :

          அரசின் சாதனைகள் கூறும் பல்வேறு அரசுத்துறை அரங்கங்களும்,தனியார் பொழுது போக்கு நிறுவனங்களும் நிறைய இருந்தன.

அங்காடிகள்:

          வீட்டு உபயோகப் பொருட்கள்,விளையாட்டுப் பொருட்கள், கைவினைப் பொருட்கள் என பல்வேறு பொருட்களும் ஒரே இடத்தில் கிடைத்தன.

பொழுதுபோக்கு :

          சிறுவர்கள் மகிழ்ச்சியுடன் விளையாட பொம்மை அரங்கம் போன்ற பல்வேறு அரங்கங்களும்,இராட்டின்ங்களும் நிறைய இருந்தன.

முடிவுரை:

          எங்கள் பகுதியில் நடைபெற்ற அரசுப் பொருட்காட்சிக்குச் சென்று வந்த நிகழ்வினை இக்கட்டுரையில் கண்டோம்.

8

45

ஆ.

குறிப்புச்சட்டம்

முன்னுரை

மழைவெள்ளம்

இயற்கை மாற்றம்

மழை நீர் சேகரிப்பு

மழைநீர் வடிகால் அமைப்பு

நமது கடமை

முடிவுரை

மேற்கண்ட தலைப்புகளில் பொருத்தமான விடை எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

8

 10 விநாடிகள் காத்திருக்கவும்

நீங்கள் 10 விநாடிகள் காத்திருக்கவும் .

காத்திருப்புக்கு நன்றி


ஆக்கம் :

வெ.ராமகிருஷ்ணன்,

அரசு உயர்நிலைப் பள்ளி,

கோரணம்பட்டி.

10 விநாடிகள் காத்திருக்கவும்

நீங்கள் 10 விநாடிகள் காத்திருக்கவும் .

காத்திருப்புக்கு நன்றி


Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post