விருதுநகர் – அரையாண்டு வினாத்தாள்
டிசம்பர் - 2022-2023
பத்தாம் வகுப்பு / மொழிப்பாடம்
– தமிழ்
உத்தேச விடைக் குறிப்பு
நேரம்
: 15 நிமிடம் + 3.00 மணி மதிப்பெண்
: 100
பகுதி
– 1 மதிப்பெண்கள்
- 15 |
|||||||||||||||||||||||||||||||||||||||
வினா.எண் |
விடைக்
குறிப்பு |
மதிப்பெண் |
|||||||||||||||||||||||||||||||||||||
1. |
ஈ. சருகும்,சண்டும் |
1 |
|||||||||||||||||||||||||||||||||||||
2. |
அ. வேற்றுமை உருபு |
1 |
|||||||||||||||||||||||||||||||||||||
3. |
இ. அறியா வினா, சுட்டு விடை |
1 |
|||||||||||||||||||||||||||||||||||||
4. |
ஆ. இறைவனிடம் குலசேகராழ்வார் |
1 |
|||||||||||||||||||||||||||||||||||||
5. |
ஆ. தளரப் பிணைத்தால் |
1 |
|||||||||||||||||||||||||||||||||||||
6. |
ஈ. சிலப்பதிகாரம் |
1 |
|||||||||||||||||||||||||||||||||||||
7. |
அ. அகவற்பா |
1 |
|||||||||||||||||||||||||||||||||||||
8. |
இ. நறுமணம் |
1 |
|||||||||||||||||||||||||||||||||||||
9. |
ஆ. பெற்ற சுதந்திரத்தைப் பேணிக்காத்தல் |
1 |
|||||||||||||||||||||||||||||||||||||
10. |
ஈ. சின்னபிள்ளை |
1 |
|||||||||||||||||||||||||||||||||||||
11. |
ஆ. பாரதியார் |
1 |
|||||||||||||||||||||||||||||||||||||
12. |
இ. பெருங்கெளசிகனார் |
1 |
|||||||||||||||||||||||||||||||||||||
13. |
அ. ஒலிக்கும் |
1 |
|||||||||||||||||||||||||||||||||||||
14. |
ஈ. சொல்லிசை அளபெடை |
1 |
|||||||||||||||||||||||||||||||||||||
15. |
அ. அன்று - கன்று |
1 |
|||||||||||||||||||||||||||||||||||||
பகுதி
– 2 பிரிவு
- 1 |
|||||||||||||||||||||||||||||||||||||||
16. |
உரைநடையும்,கவிதையும் இணைந்து யாப்பு கட்டுகளுக்கு அப்பாற்பட்டு உருவாக்கப்படும்
கவிதை வடிவம் வசன கவிதை. |
2 |
|||||||||||||||||||||||||||||||||||||
17. |
அ. உலகத்திலேயே ஒரு மொழிக்காக உலக மாநாடு நடத்திய முதல் நாடு எது? ஆ. திருந்திய மக்களை மற்ற உயிரினின்றும் பரித்துக் காட்டுவது எது? |
1 1 |
|||||||||||||||||||||||||||||||||||||
18. |
·
பழைய புத்தக கடையில் புத்தகம் வாங்குதல் ·
உணவுக்கான பணத்தில் புத்தகம் வாங்குதல |
2 |
|||||||||||||||||||||||||||||||||||||
19 |
வயது முதிர்ந்து உடலும் உடல் உறுப்புகளும்
வலுவிழந்தாலும் அறப்பணியைத் தொடர்ந்து செய்கிறார் |
2 |
|||||||||||||||||||||||||||||||||||||
20. |
·
வருக, வணக்கம் ·
வாருங்கள். ·
அமருங்கள், நலமா? ·
நீர் அருந்துங்கள் |
2
|
|||||||||||||||||||||||||||||||||||||
21
|
கட்டாய வினா: அருமை உடைத்தென் றசாவாமை வேண்டும் பெருமை முயற்சி தரும் |
2
|
|||||||||||||||||||||||||||||||||||||
பகுதி
– 2 / பிரிவு - 2 |
|||||||||||||||||||||||||||||||||||||||
22 |
காகத்திற்குக் காது உண்டா? அதற்கு
காதுக் கேட்குமா? எல்லாப் பறவைகளுக்கும் காது உண்டு.செவித் துளைகள் இறகுகளால் மூடி இருக்கும். |
2 |
|||||||||||||||||||||||||||||||||||||
23 |
பதிந்து – பதி + த் (ந்) + த் + உ பதி – பகுதி த் – சந்தி ந் – ஆனது விகாரம் த் – இறந்தகால இடை நிலை உ – வினையெச்ச விகுதி |
2 |
|||||||||||||||||||||||||||||||||||||
24 |
தான் – தாம் தான் என்று இல்லாமல் தாம் என்று இருக்க வேண்டும், விடு - வீடு விடு வீட்டிற்கு செல்ல வேண்டும். |
1 1 |
|||||||||||||||||||||||||||||||||||||
25. |
v வேங்கை – மரம் – தனிமொழி v வேம் + கை = வேகின்ற கை – தொடர்மொழி v வேங்கை எனும் சொல் தனிமொழிக்கும் தொடர்மொழிக்கும் பொதுவாய் அமைந்துள்ளது. |
2 |
|||||||||||||||||||||||||||||||||||||
26. |
அ. பக்தி இலக்கியம் ஆ. மனித நேயம் |
1 1 |
|||||||||||||||||||||||||||||||||||||
27. |
Ø
நிலம் – காட்டில் Ø
பெரும் பொழுது - மழைக்காலம் Ø
சிறுபொழுது -
மாலை கருப்பொருள்: Ø
உணவு - வரகு |
1 1 |
|||||||||||||||||||||||||||||||||||||
28.
|
கூத்துக்கலைஞர் பாடத் தொடங்கியதும் கூடியிருந்த மக்கள் அமைதியாயினர் |
2
|
|||||||||||||||||||||||||||||||||||||
பகுதி
– 3 / பிரிவு - 1 |
|||||||||||||||||||||||||||||||||||||||
29 |
·
ஒரளவு மேம்படுத்துகின்றன. ·
மனிதனுக்கு தேவையான
தேவைகளை மேம்படுத்தி இருக்கிறது. ·
மனிதனிடம் இரக்கம்,
அன்பு போன்றவை இல்லை. ·
மனிதன் இயந்திரதனமான
வாழ்வை வாழ்கின்றான் |
3
|
|||||||||||||||||||||||||||||||||||||
30
|
இடம்: மாநகர தந்தை செங்கல்வராயன் தலைமை – மாநகராட்சி சிறப்புக்
கூட்டம் பொருள் : மொழி வாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது ஆந்திராவின் தலைநகர்
சென்னை இருக்க வேண்டும் என்ற நீதிபதி வாஞ்சு தலைமையிலான ஒருநபர் ஆணையத்தை எதிர்த்து
முழங்கிய முழக்கம் இது. விளக்கம் : இதன் பொருட்டு மா.பொ.சி. சென்னையை மீட்க தலைக்கொடுத்தேனும் தலைநகர் காப்போம்
என முழங்கினார். |
3 |
|||||||||||||||||||||||||||||||||||||
31. |
அ. அதியன் ஆ. இரவலர் வராவிட்டாலும் அவர்களை தேடி வரவழைத்தல் இ. தன்னை நாடி வந்த பரிசிலன் பொருள் பெறாமல் திரும்புவது,
தன் நாட்டை இழந்த துன்பத்தைவிடப் பெருந்துன்பம் என வருந்தினான். |
1 1 1 |
|||||||||||||||||||||||||||||||||||||
பகுதி
– 3 / பிரிவு - 2 |
|||||||||||||||||||||||||||||||||||||||
32 |
|
3 |
|||||||||||||||||||||||||||||||||||||
33. |
v மன்னன் இடைக்காடனார் புலவரின் பாடலை இகழ்ந்தார். v இடைக்காடனார், மன்னன் இகழ்ந்ததை இறைவனிடம் முறையிடுகிறார் v இறைவன் கோவிலை விட்டு நீங்கினார் v மன்னன் இறைவனிடம் தன் பிழையைப் பொறுத்து அருள்புரியுமாறு
வேண்டினார் v மன்னன் புலவருக்கு மரியாதை செய்து, மன்னிப்பு வேண்டினார் |
3
|
|||||||||||||||||||||||||||||||||||||
34. |
மருளை அகற்றி மதிக்கும் தெருளை அருத்துவதும் ஆவிக்கு அருந்துணையாய் இன்பம் பொருத்துவதும் கல்வியென்றே போற்று. ( அல்லது )
மாறும் உலகின் மகத்துவம் அறிவேன்! எவ்வெவை தீமை எவ்வெவை நன்மை என்ப தறிந்து ஏகுமென் சாலை! தலைவர் மாறுவர்; தர்பார் மாறும்; தத்துவம் மட்டுமே அட்சய பாத்திரம் |
3
|
|||||||||||||||||||||||||||||||||||||
பகுதி
– 3 பிரிவு
- 3 |
|||||||||||||||||||||||||||||||||||||||
35 |
|
3 |
|||||||||||||||||||||||||||||||||||||
36. |
இலக்கணம்: இயல்பாக நிகழும்
நிகழ்ச்சியின் மீது கவிஞர் தன் குறிப்பினை ஏற்றிக்கூறுதல். எ.கா: தையல் துயர்க்குத் தறியா தம் சிறகால் .................................................................................. ................... கூவினவே கோழிக் குலம். விளக்கம்: அதிகாலை விடிந்து கோழிகளும் இயல்பாக கூவும்.ஆனால் புலவர்
தமயந்தியின் துயர் கண்டே கோழிகள் சூரியனை விரைவாக வரக் கதறுவதாகக் கூறுகிறார். |
3 |
|||||||||||||||||||||||||||||||||||||
37 |
|
3 |
|||||||||||||||||||||||||||||||||||||
பகுதி
– 4 |
|||||||||||||||||||||||||||||||||||||||
38 |
அ)
முன்னுரை : முல்லைப்பாட்டில்
உள்ள கார்காலச் செய்திகளை நாம் கட்டுரை வடிவில் காணலாம். மழை மேகம் : திருமால் மாவலி மன்னனுக்கு
நீர் வார்த்து தரும் போது விண்ணுக்கும் மண்ணுக்கும் பேருருவம் எடுத்தது போல் மழை
மேகம் உயர்ந்து நின்றது. மழைப் பொழிவு : கடலின் குளிர்
நீரைப் பருகி, மலையைச் சூழ்ந்து விரைந்த வேகமாய் பெருமழைப் பொழிகிறது. மாலைப் பொழுது : வண்டுகளின் ஆரவாரம்
கொண்ட அரும்புகள். முதுப் பெண்கள்
மாலை வேலையில் முல்லைப் பூக்களோடு, நெல்லையும் தெய்வத்தின் முன் தூவினர். நற்சொல் கேட்டல் : முதுப்பெண்கள் தலைவிக்காக நற்சொல் கேட்டு நின்றனர். இது விரிச்சி என அழைக்கப்படும் ஆற்றுப்படுத்துதல் : இடைமகள் பசியால் வாடிய இளங்கன்றை காணல் உன் தாய்மாரை எம் இடையர் இப்போது வந்து விடுவர் எனக் கூறல் முதுப் பெண்கள் இந்த நற்சொல்லை நாங்கள் கேட்டோம். உன் தலைவன்
வந்து விரைந்து வந்துவிடுவான் என ஆற்றுப்படுத்தினர் முடிவுரை : இவ்வாறு முல்லைப் பாட்டில் மழைமேகம், மழைப்பொழிவு, மாலைப்
பொழுது, நற்சொல் கேட்டல், ஆற்றுப்படுத்துதல் என செய்திகளை கண்டோம். |
5 |
|||||||||||||||||||||||||||||||||||||
38 |
ஆ. மோனை நயம்: செய்யுளில் முதல் எழுத்து ஒன்றிவரத் தொடுப்பது மோனை நயம். கவிஞன் கருப்படு எதுகை நயம்: செய்யுளில் இரண்டாம் எழுத்து ஒன்றிவரத் தொடுப்பது எதுகை
நயம். கருப்படு உருப்பட சந்த நயம்: இப்பாடல் இசையோடு பாடுவதற்கு ஏற்ற முறையில் அமைந்துள்ளது. இயைபு நயம்: இறுதி எழுத்தோ,சீரோ,அசையோ ஒன்றி வருதல் இயைபு நயம். தெய்வம் செல்வம் முரண் நயம்: முரண்பாடாக அமைவது முரண். ஆக்கல் × அழித்தல். |
5 |
|||||||||||||||||||||||||||||||||||||
39 |
அ. சேலம் 03-03-2021 அன்புள்ள நண்பனுக்கு, நான் நலம். நீ அங்கு நலமா? என அறிய ஆவல்.” மரம் இயற்கையின் வரம் “ என்ற தலைப்பில் மாநில அளவில் நடைபெற்ற கட்டுரைப் போட்டியில்
நீ முதல் பரிசு பெற்றது மிக மகிழ்ச்சியாக உள்ளது. மனமார வாழ்த்துகிறேன். நீ இன்னும் பல பரிசுகள் பெற வாழ்த்துகிறேன். இப்படிக்கு, உன் அன்பு நண்பன், அ அ அ அ அ அ அ . உறைமேல் முகவரி; பெறுதல் திரு.இரா.இளங்கோ, 100,பாரதி தெரு, சேலம். |
5 |
|||||||||||||||||||||||||||||||||||||
39 |
ஆ. அனைவருக்கும் வணக்கம். v
நாட்டு நலப்பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட மாணவர்களை வாழ்த்துகிறேன். v
சேவை மற்றும் தொண்டு பணியில் தம்மை ஈடுபடுத்திக் கொண்ட மாணவர்களுக்கு நன்றி. v
மாணவர்களின் உங்களின் இந்த பொது நலத் தொண்டு நாட்டின் வளத்தினை உயர்த்தும். v
சேவை மனப்பான்மையை வளர்க்கும் நாட்டு நலப் பணித்திட்ட செயல்பாட்டாளர்களுக்கும், பள்ளியின் தலைமை ஆசிரியருக்கும் வாழ்த்துகள். |
5 |
|||||||||||||||||||||||||||||||||||||
40 |
( ஏற்புடைய
விடை இருப்பின் மதிப்பெண் வழங்கலாம் ) ஏடு
எடுத்தேன் கவி ஒன்று எழுத என்னை
எழுது என்று சொன்னது இந்தக் காட்சி அர்த்தமுள்ள
இந்தக் காட்சி சமூகத்திற்கு
தேவையான காட்சி சமூக விளைவை
ஏற்படுத்துக் காட்சி எல்லோருக்கும்
அறிவுறுத்தும் காட்சி |
5 |
|||||||||||||||||||||||||||||||||||||
41. |
படிவத்தில் அனைத்து படிநிலைகளையும் சரியாக
நிரப்பி இருப்பின் முழு மதிப்பெண் வழங்கலாம் |
5 |
|||||||||||||||||||||||||||||||||||||
42 |
அ. 1.குழு விளையாட்டுகள் விளையாடுதல். 2.உலக நிகழ்வுகளைப் பற்றி கலந்துரையாடுதல். 3.விளையாட்டு களத்திற்குச் சென்று விளையாடுதல். 4நூல்களைப் படித்தல். 5..திறன்பேசியின் தீமைகளை எடுத்துரைத்தல், அதன் பயன்பாட்டை
குறைக்கச் செய்தல். |
5 |
|||||||||||||||||||||||||||||||||||||
42 |
மொழிபெயர்க்க கலைஞர்களால் தெருவில் இசை நாடகம் போல் நடத்தப்படுவதே தெருக்கூத்து. இதில் இராமாயணம்,மகாபாரதம் போன்ற இதிகாசங்களிலும் இன்னபிற பழங்கால புராணங்களிலிருந்தும் கதைகளை,நிறைய பாடல்களுடன் நாடகமாக்கம் செய்து, சூழ்நிலைக்கேற்ப வசன்ங்களை சேர்த்து கலைஞர்கள் மெருகேற்றி
நடிப்பார்கள். பதினைந்திலிருந்து இருபது கலைஞர்கள் ஒரு குழுவாக “ கூத்து குழு “ ஒன்றை அமைத்து இதை நடத்துவர். குழுவுக்கென
பாடகர் இருந்தாலும் அனைவருமே தங்கள் குரலில் பாடுவர். கலைஞர்கள் மிக கனமான உடைகளும்,ஆபரணங்களும்
அணிந்து கனமாக முகப்பூச்சும் அணிந்து பங்கு கொள்கிறார்கள். இவை கிராமங்களில் புகழ் பெற்றவை. |
5 |
|||||||||||||||||||||||||||||||||||||
|
பகுதி
– 5 |
|
|||||||||||||||||||||||||||||||||||||
43 |
அ) வாசிப்போம் நேசிப்போம் இதழ் வெளியீடு இதழ் : ஜெயகாந்தன் நினைவுச் சிறப்பிதழ் எழுத்தாளர் : ஜெயகாந்தன் ( சிறுகதை மன்னன் ) இனி வாராவாரம் ஆரவாரம். வாரந்தோறும் ஜெயகாந்தன் அவர்களின் கதைகள் நமது இதழின் நடுப்பக்கத்தில்
வெளிவரும். இப்போது பரபரப்பான விற்பனையில்..... இது தமிழ்விதை வார இதழ் வெளியீடு. உங்கள் பிரதிக்கு முந்துங்கள்….. நன்றி |
8 |
|||||||||||||||||||||||||||||||||||||
|
ஆ. குறிப்புச் சட்டம்
வரவேற்பு : ·
என்
இல்லத்திற்கு வந்த உறவினர்களை வருக,வருக என மகிழ்ச்சியாக வரவேற்றேன். ·
அவர்கள்
அமர்வதற்கு இருக்கையை சுத்தப்படுத்திக் கொடுத்தேன். ·
வந்தவர்களுக்கு
முதலில் நீர் அருந்தத் தந்தேன். விருந்து உபசரிப்பு : ·
வந்தவர்களுக்கு
கறியும், மீனும் வாங்கி வந்தேன். ·
மாமிச உணவை
வாழை இலையில் பரிமாறினேன். ·
அவர்கள்
உண்ணும் வரை அருகில் இருந்து அவர்களுக்குத் தேவையானவற்றை பார்த்துப் பார்த்து
கவனித்தேன். நகர்வலம் : ·
விருந்து
முடித்து, எங்கள் ஊரின் சிறப்புகளை கூறினேன். ·
ஊரின்
சிறப்புமிக்க இடங்களுக்கு சென்று அவற்றை உறவினர்களோடு கண்டு களித்தேன். இரவு விருந்து : ·
நகர்வலம்
முடித்து, இரவு விருந்துக்கு தேவையானவற்றை செய்தேன். ·
இரவில் இரவு
நேரத்திற்கு ஏற்ற உணவுகளை விருந்துப்
படைத்தேன். பிரியா விடை : ·
இரவு விருந்து
முடித்து அவர்கள் தங்கள் ஊருக்கு செல்வதாக கூறினர். ·
எனக்குப் பிரிய
மனமில்லாமல் அவர்கள் கூடவே பேருந்து நிறுத்தம் வரை சென்று வழி அனுப்பிவிட்டு வந்தேன் |
8 |
|||||||||||||||||||||||||||||||||||||
44. |
அ. குறிப்புச்சட்டம்
முன்னுரை : அறிவியலாளர்
ஸ்டீபன் ஹாக்கிங்க் என்பவருடன் விண்வெளி பயணம் மூலம் கிடைத்த கருத்தையும், அனுபவத்தையும்
இக்கட்டுரை வாயிலாக காணலாம். பேரண்டம் : இப்பேரண்டம் பெருவெடிப்பினால் உருவானது என்பதற்கான சான்றுகளை
கணிதவியல் அடிப்படையில் எங்களுக்கு விளக்கினார். கருந்துளைகள்: ஞாயிறு ஒரு விண்மீன். ஒரு விண்மீன் ஆயுள் கால முடிவில்
உள்நோக்கிய ஈர்ப்பு விசை கூடுகிறது. அதனால் விண்மீன் சுருங்கத் தொடங்குகிறது. இதனால்
அதன் ஈர்ப்பாற்றல் உயர்ந்துக் கொண்டே செல்கிறது என விளக்கினார். கருந்துளைகள்: விண்மீனின் ஈர்ப்பெல்லைக்களுள் செல்கிற எதுவும், ஒளிக்
கூட தப்ப முடியாது. இவ்வாறு உள்ளே சென்ற யாவையும் வெளிவர முடியாததால் இதனை கருந்துளை
என்பதனை ஹாக்கின் விளக்கினார். தலைவிதி : தலைவிதி ஒன்று இல்லை. தலைவிதி தான் நம்மை தீர்மானிக்கிறது
என்றால் சாலையைக் கடக்கும் போது ஏன் இருப்புறமும் பார்த்துக் கடக்கிறீர்கள்? எனக்
கேட்டு எங்களை சிந்திக்க வைத்தார். திரும்புதல் : ஹாக்கின் அவர்களுடன் விண்வெளிப் பயணம் மிகவும் மகிழ்ச்சியாக
இருந்தது. பல்வேறு விதமான நிகழ்வுகளைக் கண்டும் அவற்றை அறிந்தும் பூமியை வந்தடைந்தோம். முடிவுரை : ஹாக்கின் விண்வெளிப் பயணம் விண்வெளியைப் பற்றி அறிந்துக்
கொள்ள ஒரு அரிய வாய்ப்பாக எங்களுக்கு அமைந்தது |
8 |
|||||||||||||||||||||||||||||||||||||
44 |
ஆ) குறிப்புச்சட்டம்
முன்னுரை: கல்மனதையும்
கரைய வைக்கும் கதை இந்த ஒருவன இருக்கிறான். இதை இக்கட்டுரையில் காண்போம். குப்புசாமி: Ø குப்புசாமி 25 வயது வாலிபன்.வயிற்று வலிக்காரன் Ø உறவினர்கள் இவனை அனாதைப் போல நடத்தினார்கள். Ø காரணமில்லாமல் பக்கத்து வீட்டுக்காரரால் வெறுக்கப்பட்டான்
குப்புசாமி. Ø வயிற்றுவலிக்கு மருத்துவம் பார்க்க சென்னை வந்தவன் இந்த
குப்புசாமி. பக்கத்து வீட்டுக்காரர்: Ø பக்கத்து வீட்டுக்காரர் காரணமில்லாமல் வெறுப்பை அவன் மீது
காட்டியவர். அவரின் மனைவி கருணையோடு இருந்தவர். Ø குப்புசாமிக்கு ஆறுமுகம் மூலம் கடிதம் வந்தது. ஆறுமுகமும் தன் பங்காக இரு சாத்துகுடியும்,ஒரு ரூபாய் பணமும் கொடுத்தார். Ø பக்கத்து வீட்டுக்காரர் குப்புசாமிக்கும் ஒருவன் இருக்கிறான்
என்பதை வீரப்பனின் கடிதம் மூலம் அறிந்தார். கடன் வாங்கி கொடுத்த அந்த மூன்று ரூபாயும் அவரின் மனதை மாற்றியது. Ø மனைவியை உடன் அழைத்துக்கொண்டு மருத்துவமனை செல்ல சாத்துக்குடி
வாங்க சென்றார். முடிவுரை: எல்லோருக்கும் ஒருவன் இருக்கிறான் யாரும் அனாதை இல்லை என்பதை
இக்கட்டுரையின் மூலம் காணும் போது மனிதம் துளிர்க்கிறது எனபதனை அறிய முடிகிறது. |
8 |
|||||||||||||||||||||||||||||||||||||
45 |
அ.
முன்னுரை: சான்றோர் வளர்த்த தமிழ் பற்றி இக்கட்டுரையில் நாம் காண்போம். தமிழின் தொன்மை: Ø
தமிழின் தொன்மையைக்
கருதி கம்பர் “என்றுமுள தென்தமிழ்” என்றார். Ø
கல் தோன்றி மண்
தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்தக் குடி தமிழ். சான்றோர்களின் தமிழ்ப்பணி: Ø
ஆங்கில மொழியை
தாய் மொழியாகக் கொண்ட ஜி.யு.போப் திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிப் பெயர்த்து உலகறியச்
செய்தார். Ø
வீரமாமுனிவர்
தமிழில் முதல் சதுரகராதி வெளியிட்டார் Ø
தமிழ் தாத்தா
உ.வே.சாமிநாதன் அவர்கள்
ஓலைச்சுவடியிலிருந்த பல தமிழ் நூல்களை அச்சிட்டு வெளியிட்டார். தமிழின் சிறப்புகள்: Ø
தமிழ் இனிமையான
மொழி. பல இலக்கிய, இலக்கணங்களை
கொண்ட மொழி. Ø
இயல்,இசை,நாடகம் என முத்தமிழ்
உடையது. Ø
தமிழ் மூன்று
சங்கங்களை கண்டு வளர்ந்தது. முடிவுரை: சான்றோர் வளர்த்த தமிழ் பற்றி இக்கட்டுரையில் நாம் கண்டோம். |
8 |
|||||||||||||||||||||||||||||||||||||
45 |
ஆ. உங்கள் பகுதியில் நடைபெற்ற அரசுப் பொருட்காட்சிக்குச் சென்று
வந்த நிகழ்வைக் கட்டுரையாக்குக.
முன்னுரை : எங்கள் பகுதியில் நடைபெற்ற அரசுப்பொருட்காட்சிக்குச் சென்று
வந்த நிகழ்வை இக்கட்டுரையில் காண்போம். பொருட்காட்சி : மக்கள் அதிகமாக கூடும் இடத்தில் பொருட்காட்சி நடைபெற்றது. நுழைவுச் சீட்டு: பொருட்காட்சி நடைபெறும் இடத்தின் உள்ளே செல்ல நுழைவு கட்டணம்
வசூலிக்கப்பட்டது.பெரியவர்களுக்கு 30 ரூபாயும்,சிறுவர்களுக்கு 15 ரூபாயும் என நுழைவுச்சீட்டு நிர்ணயம் செய்யப்பட்டது. பல்துறை அரங்கம் : அரசின் சாதனைகள் கூறும் பல்வேறு அரசுத்துறை அரங்கங்களும்,தனியார் பொழுது
போக்கு நிறுவனங்களும் நிறைய இருந்தன. அங்காடிகள்: வீட்டு உபயோகப் பொருட்கள்,விளையாட்டுப் பொருட்கள், கைவினைப் பொருட்கள் என பல்வேறு பொருட்களும் ஒரே இடத்தில்
கிடைத்தன. பொழுதுபோக்கு : சிறுவர்கள் மகிழ்ச்சியுடன் விளையாட பொம்மை அரங்கம் போன்ற
பல்வேறு அரங்கங்களும்,இராட்டின்ங்களும் நிறைய இருந்தன. முடிவுரை: எங்கள் பகுதியில் நடைபெற்ற அரசுப் பொருட்காட்சிக்குச் சென்று
வந்த நிகழ்வினை இக்கட்டுரையில் கண்டோம். |
8 |
|||||||||||||||||||||||||||||||||||||
ஆக்கம் :
வெ.ராமகிருஷ்ணன்,
அரசு
உயர்நிலைப் பள்ளி,
கோரணம்பட்டி.