வினா – வங்கி / ஆறாம் வகுப்பு - தமிழ்
முதல் பருவத் தேர்வு - சிறப்பு பயிற்சிப் புத்தகம்
புத்தக வினாக்கள்
இயல் - 3
இளந்தமிழ்
தமிழ்
– வினாத்தொகுப்பு
அறிவியல் தொழில் நுட்பம்
அறிவியல் ஆத்திசூடி
அ) சரியான விடையைத்
தேர்ந்தெடுத்து எழுதுக.
1. உடல் நோய்க்கு ____________
தேவை.
அ) ஔடதம் ஆ) இனிப்பு இ) உணவு ஈ) உடை
2. நண்பர்களுடன் _____________
விளையாடு.
அ) ஒருமித்து ஆ) மாறுபட்டு இ) தனித்து ஈ) பகைத்து
3. 'கண்டறி'
என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது______
அ) கண் + அறி ஆ) கண்டு + அறி இ)
கண்ட + அறி ஈ) கண் + டற
4. 'ஓய்வற' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது________
அ) ஓய்வு + அற ஆ) ஓய்
+ அற இ) ஓய் + வற ஈ) ஓய்வு + வற
5. ஏன் + என்று
என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ________
அ) ஏன்என்று ஆ)
ஏனென்று இ) ஏன்னென்று ஈ) ஏனன்று
6. ஔடதம் + ஆம்
என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் _________
அ) ஔடதமாம் ஆ)
ஔடதம்ஆம் இ) ஔடதாம் ஈ) ஔடதஆம்
ஆ) எதிர்ச்சொற்களைப்
பொருத்துக.
1. அணுகு - தெளிவு
2. ஐயம் - சோர்வு
3. ஊக்கம் - பொய்மை
4. உண்மை – விலகு
இ) பாடல்
வரிகளுக்கேற்றவாறு முறைப்படுத்துக.
1. சிந்தனை கொள்
அறிவியல்
2. சொல் தெளிந்து
ஐயம்
3. கேள் ஏன் என்று
4. வெல்லும்
என்றும் அறிவியலே
ஈ )குறு வினா
மனிதர்களுக்கு மருந்தாக
விளங்குவது எது?
உ) சிறுவினா
பாடலின் கருத்தை
உங்கள் சொந்த நடையில் எழுதுக.
ஊ) சிந்தனை வினா
உங்களுக்குத் தெரிந்த
மருத்துவ முறைகள் யாவை?
அ) சரியான விடையைத்
தேர்ந்தெடுத்து எழுதுக.
1. மனிதன்
எப்போதும் உண்மையையே ______________.
அ) உரைக்கின்றான் ஆ)
உழைக்கின்றான் இ) உறைகின்றான் ஈ) உரைகின்றான்
2. ஆழக்கடல்
என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ______________.
அ) ஆழமான + கடல் ஆ)
ஆழ் + கடல் இ) ஆழ + கடல் ஈ) ஆழம் + கடல்
3. விண்வெளி
என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ____________
4. நீலம் + வான்
என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ___________
அ) நீலம்வான் ஆ)
நீளம்வான் இ) நீலவான் ஈ) நீலவ்வான்
5. இல்லாது +
இயங்கும் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் _____
அ) இல்லாதுஇயங்கும்
ஆ) இல்லாஇயங்கும் இ) இல்லாதியங்கும் ஈ) இல்லதியங்கும்
ஆ) நயம் அறிக.
1. பாடலில்
இடம்பெற்றுள்ள மோனைச் சொற்களை எழுதுக.
2. பாடலில்
இடம்பெற்றுள்ள எதுகைச் சொற்களை எழுதுக.
3. பாடலில்
இடம்பெற்றுள்ள இயைபுச் சொற்களை எழுதுக.
இ) குறுவினா
1. செயற்கைக்கோள்
எவற்றுக்கு எல்லாம் பயன்படுகிறது?
2. நாளைய மனிதனின் வாழ்வு எவ்வாறு
இருக்கும்?
ஈ) சிந்தனை வினா
1. எவற்றுக்குப் புதிய
கண்டுபிடிப்புகள் தேவை என்பது பற்றிச் சிந்தித்து எழுதுக
2. இதுவரை எத்தனை
கோள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன? அவை யாவை?
3. இந்தியா
அண்மையில் நிலவுக்கு அனுப்பிய செயற்கைக்கோளின் பெயர் யாது?
அ)
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1.
நுட்பமாகச் சிந்தித்து அறிவது _________________.
அ) நூலறிவு ஆ) நுண்ணறிவு இ) சிற்றறிவு ஈ)
பட்டறிவு
2.
தானே இயங்கும் எந்திரம் _______________.
அ)
கணினி ஆ) தானியங்கி இ) அலைபேசி ஈ) தொலைக்காட்சி
3.
'நின்றிருந்த’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது________
அ)
நின் + றிருந்த ஆ) நின்று + இருந்த இ) நின்றி + இருந்த ஈ) நின்றி + ருந்த
4. ’அவ்வுருவம்’ என்னும் சொல்லைப்
பிரித்து எழுதக் கிடைப்பது________
அ)
அவ்வு + ருவம் ஆ) அ + உருவம் இ) அவ் + வுருவம் ஈ) அ + வுருவம்
5. மருத்துவம் + துறை என்பதனைச்
சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் _______
அ)
மருத்துவம்துறை ஆ) மருத்துவதுறை இ) மருந்துதுறை ஈ) மருத்துவத்துறை
6.
செயல் + இழக்க என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்__________
அ)
செயலிழக்க ஆ) செயல்இழக்க இ) செயஇழக்க ஈ)
செயலிலக்க
7.
நீக்குதல் என்னும் சொல்லின் எதிர்ச்சொல் ------------
அ)
போக்குதல் ஆ) தள்ளுதல் இ) அழித்தல் ஈ)
சேர்த்தல்
8. எளிது என்னும் சொல்லின்
எதிர்ச்சொல் ------------
அ)
அரிது ஆ) சிறிது இ) பெரிது ஈ) வறிது
ஆ) கோடிட்ட இடங்களை நிரப்புக.
1. மனிதன் தன் வேலைகளை எளிதாக்கக்
கண்டுபிடித்தவை ________
2.
தானியங்கிகளுக்கும், எந்திரமனிதர்களுக்கும்
இடையே உள்ள முக்கிய வேறுபாடு _______
3.
உலக சதுரங்க வீரரை வெற்றிகொண்ட மீத்திறன் கணினியின் பெயர் ______
4.
‘சோபியா’ ரோபோவுக்குக் குடியுரிமை வழங்கிய நாடு _______
இ)
சொற்களைத் தொடரில் அமைத்து எழுதுக.
1. தொழிற்சாலை 2.
உற்பத்தி 3. ஆய்வு 4. செயற்கை
5.
நுண்ணறிவு
ஈ)
குறுவினா
1. ’ரோபோ’ என்னும் சொல் எவ்வாறு
உருவானது?
2.
‘டீப் புளூ’ – மீத்திறன் கணினி பற்றி எழுதுக. .
உ)
சிறுவினா
1. எந்திரமனிதனின் பயன்களை
விளக்குக.
2.
துருவப் பகுதிகளில் ஆய்வு செய்ய எந்திரமனிதர்களை அனுப்புவதன் காரணம்
யாது?
ஊ)
சிந்தனை வினா
1.
உங்களுக்கென ஒரு எந்திரமனிதன் இருந்தால் அதை எதற்கெல்லாம் பயன்படுத்துவீர்கள்
எனச் சிந்தித்து எழுதுக
ஒளி
பிறந்தது
1.
சுதந்திர இந்தியா அடைந்த வெற்றிகளாக அப்துல் கலாம் எவற்றைக் குறிப்பிடுகிறார்?
2.
தமக்குப் பெருமகிழ்வை அளித்ததாக அப்துல் கலாம் குறிப்பிடும் நிகழ்வு யாது?
மொழி
முதல், இறுதி எழுத்துகள்
1.
மொழிக்கு முதலில் வரும் உயிர்மெய் எழுத்துகள் யாவை?
2.
மொழிக்கு இறுதியில் வாரா மெய்யெழுத்துகள் யாவை?
3. சொல்லின் இடையில் மட்டுமே வரும் எழுத்துகள்
யாவை?
மொழியை
ஆள்வோம்
கீழ்க்காணும்
பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடை தருக.
1921
ஆம் ஆண்டு மத்திய தரைக் கடலில், ஒரு கப்பல்
இங்கிலாந்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. தமிழர் ஒருவர் கப்பலின் மேல்தளத்தில்
நின்று கடல் அலைகளைப் பார்த்துக் கொண்டிருந்தார். திடீரென அவரது உள்ளத்தில்
கடல்நீர் ஏன் நீலநிறமாகக் காட்சியளிக்கிறது என்ற வினா எழுந்தது. அவ்வினா அவரை
உறங்க விடவில்லை. இங்கிலாந்து பயணம் முடிந்து இந்தியா திரும்பினார். பிறகு பாதரச ஆவி
விளக்கு, பென்சீன் மற்றும் நிறமாலைக் காட்டி ஆகியவற்றின்
உதவியுடன் தமது ஆய்வைத் தொடங்கினார். ஆய்வின் முடிவில் 1928 பிப்ரவரி
28 ஆம் நாள் “இராமன் விளைவு” என்னும் தமது கண்டுபிடிப்பை
வெளியிட்டார். இக்கண்டுபிடிப்பு இந்தியாவிற்கு அறிவியலுக்கான முதல் நோபல் பரிசைப்
பெற்றுத் தந்தது. அவர் தமது கண்டுபிடிப்பை வெளியிட்ட பிப்ரவரி 28 ஆம் நாளை நாம் ஆண்டு தோறும் “ தேசிய அறிவியல் நாள்” எனக் கொண்டாடி
மகிழ்கிறோம். அவர் யார் தெரியுமா? அவர்தான் சர். சி. வி.
இராமன்.
1.
இராமன் விளைவைக் கண்டறிந்தவர் யார்?
2.
இராமன் அவர்களுக்கு நோபல் பரிசைப் பெற்றுத் தந்த கேள்வி எது?
அ) கடல்நீர் ஏன் கறுப்பாகக்
காட்சியளிக்கிறது?
ஆ)
கடல்நீர் ஏன் நீல நிறமாக இல்லை?
இ)
கடல்நீர் ஏன் நீல நிறமாகக் காட்சியளிக்கிறது?
ஈ) கடல்நீர் ஏன் உப்பாக
இருக்கிறது?
3.
தேசிய அறிவியல் நாள் எப்போது கொண்டாடப்படுகிறது ? ஏன்?
4.
இப்பத்திக்குப் பொருத்தமான தலைப்பிடுக:-
கீழ்க்காணும்
தலைப்பில் கட்டுரை எழுதுக.
அறிவியல் ஆக்கங்கள்
மொழியோடு
விளையாடு
சொல்வளம்
பெருக்குக.
பின்வரும்
தொடர்களில் அடிக்கோடிட்ட சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்களை எழுதுக.
1. கம்ப்யூட்டர் துறையில் உங்கள் அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள்.
2.
காலிங்பெல்லை அழுத்தினான் கணியன்.
3.
மனிதர்கள் தங்கள் வேலைகளை எளிதாக்க மிஷின் களைக்
கண்டுபிடித்தனர்.
4.
இன்று பல்வேறு துறைகளிலும் ரோபோ பயன்பாட்டிற்கு வந்துள்ளது.
பகிர்க.
1.
ரோபோக்கள் கண்டுபிடிப்பினால் ஏற்படும் விளைவுகள் பற்றி விவாதிக்க
கலைந்துள்ள
எழுத்துகளை முறைப்படுத்துக.
1. விகண்லம் -
2. மத்ருதும்வ -
3.
அவிறில்ய - 4.
ணினிக -
5.
எலால்ம் - 6.
அப்ழைபு -
வட்டத்தில்
சிக்கிய எழுத்துகளை எடுத்து எழுதுக.
எழுத்துகளை
வரிசைப்படுத்தி தமிழக அறிவியல் அறிஞரைக் கண்டுபிடியுங்கள்
2.
வாக்கியத்தை நீட்டி எழுதுக:-
எ.கா;
நான் படிப்பேன் ( அறிவியல் , பாடம், நன்றாக )
1.
அறிந்து கொள்ள விரும்பு. ( எதையும், காரணத்துடன், தெளிவாக )
2.
நான் சென்றேன் ( ஊருக்கு, நேற்று, [பேருந்தில் )
3.
அடிச்சொல்லுடன் எழுத்துகளைச் சேர்த்துப் புதிய சொற்களை உருவாக்குக.
எ.கா:
அறி – அறிக, அறிந்து, அறிஞர், அறிவியல், அறிவிப்பு
1.
பார் – 2. செய் – 3. தெளி – 4. படி –
4. மெய் எழுத்து நடுவில் அமையுமாறு சொற்களை உருவாக்குக.
எ. கா : கம்பு
5. குறுக்கெழுத்துப் புதிர்
இடமிருந்து
வலம்
1.
அப்துல் கலாமின் சுயசரிதை – _______
3.
சிந்தித்து செயல்படும் தானியங்கி – ________
10.
எந்திர மனிதனுக்குக் குடியுரிமை வழங்கிய முதல் நாடு – ___________
வலமிருந்து
இடம்
2.
ஆராய்ச்சி என்பதைக் குறிக்கும் சொல் – ________
6.
சதுரங்கப் போட்டியில் ________
8.
மருந்து என்னும் பொருள் தரும் சொல் –__________
மேலிருந்து
கீழ்
1.
ரோபோ என்னும் சொல்லின் பொருள் – _________
2. அகரவரிசையில் அமையும் இலக்கியம் –
________
7.
புதுமைகளின் வெற்றியாளர் என்னும் பட்டம் பெற்ற எந்திர மனிதன் – _______
கீழிருந்து
மேல்
4.
இந்தியா செலுத்திய ஏவுகணை – _______
5.
தானாகச் செயல்படும் எந்திரம் – _______
9.
அப்துல் கலாம் வகித்த பதவி _______
6.
சூழலைக் கையாள்க.
மாலையில்
பள்ளி முடிந்து பேருந்தில் வீட்டிற்கு வந்துகொண்டிருக்கிறீர்கள். அப்போது பேருந்து
பழுதாகிப் பாதி வழியில் நின்றுவிடுகிறது. இந்தப் பேருந்தை விட்டால் உங்கள் ஊருக்கு
வேறு பேருந்து இல்லை. இப்போது நீங்கள் என்ன செய்வீர்கள்? • அழ ஆரம்பித்து
விடுவேன்.
•
யாரிடமாவது உதவி கேட்பேன்.
• அருகில் உள்ளவரிடம் அலைபேசியை
வாங்கி வீட்டிற்குத் தகவல் தருவேன்.
•
ஊருக்கு நடந்தே செல்லத் தொடங்குவேன்.
கலைச்
சொல் அறிவோம்
Artificial
Intelligence
Super Computer
Satellite
Intelligence
ஆக்கம்
:
தமிழ்விதை
மற்றும் கல்விவிதைகள் வலைதளங்கள்
இந்த வினாத்தாளின் விடைக்குறிப்புகளை
கீழ்க்கண்ட வலைதளத்தில் காணலாம்