இளந்தமிழ்
ஏழாம் வகுப்பு
தமிழ் – வினா – விடைத் தொகுப்பு
பருவம் : 1 இயல் : 2
அணிநிழல் காடு காடு
மனப்பாடப்பாடல்
அ) சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. வாழை, கன்றை ________.
அ) ஈன்றது ஆ) வழங்கியது இ) கொடுத்தது ஈ) தந்தது
2. ‘காடெல்லாம்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _______.
அ) காடு + டெல்லாம் ஆ) காடு + எல்லாம் இ) கா + டெல்லா ம் ஈ) கான் + எல்லாம்
3. ‘கிழங்கு + எடுக்கும்’ என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் _________.
அ) கிழங்குஎடுக்கும் ஆ) கிழங்கெடுக்கும் இ) கிழங்குடுக்கும் ஈ) கிழங்கொடுக்கும
ஆ) நயம் அறிக
பாடலிலுள்ள மோனை, எதுகை, இயைபுச் சொற்களை எடுத்து எழுதுக..
மோனை : பச்சை – பன்றி , நச்சர – நரியெலாம்
எதுகை : பச்சை – நச்சர , சிங்கம் – எங்கும்
இயைபு : நடிக்கும் – எடுக்கும் . வங்கலங்கும் - ஊலையிடும்
ஈ) குறுவினா .
1. காட்டுப்பூக்களுக்கு எதனை உவமையாகக் கவிஞர் சுரதா குறிப்பிடுகிறார்?
கவிஞர் காட்டுப் பூக்களுக்கு கார்த்திகை விளக்குகளை உவமையாகக் கூறுகிறார்.
2. காட்டின் பயன்களாகக் கவிஞர் சுரதா கூறுவன யாவை?
காடு பலவகையான பொருள்களைத் தருகின்றது. எல்லாரும் கூடி மகிழ்ந்திட குளிர்ந்த நிழலைத் தரும். காய்கனிகளைத் தந்து மற்ற உயிரினங்களை வாழச் செய்கிறது.
உ) சிறுவினா
1. ‘‘காடு’ பாடலில் விலங்குகளின் செயல்களாகக் கவிஞர் கூறுவனவற்றை எழுதுக.
Ø குரங்குகள் மரக்கிளைகளில் உள்ள கனிகளைப் பறித்து உண்ணும்.
Ø பன்றிகள் காட்டில் உள்ள கிழங்குகளைத் தோண்டி உண்ணும்.
Ø இந்தச் செயலைக் கண்டு நச்சுத் தன்மை உடைய பாம்புகள் அச்சத்தால் கலக்கம் அடையும்.
Ø நரிகள் ஊளையிடும்.
Ø மிகுந்த சுவையான தழையை யானைகள் தின்றபடி புதிய நடைபோடும்.
Ø இயற்கையான காட்டில் வாழும் சிங்கம், புலி, கரடி, சிறுத்தை போன்ற விலங்கினங்கள் மனம் போன போக்கில் அலைந்து திரியும்
ஊ) சிந்தனை வினா
1. காட்டை இயற்கை விடுதி என்று கவிஞர் கூறக் காரணம் என்ன?
· காட்டில் விலங்குகளுக்கு இருப்பிடம் உள்ளது.
· விலங்குகளுக்குத் தேவையான உணவு காடுகள் மூலம் கிடைக்கிறது.
· அனைத்து விலங்குகளும் காடுகளில் வசிக்கின்றது.
· ஆதலால் காடு இயற்கை விடுதியாக உள்ளது,
அப்படியே நிற்கட்டும் அந்த மரம்
அ) சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. நாவற்பழத்திற்கு உவமையாகக் கூறப்படுவது _____.
அ) பச்சை இலை ஆ) கோலிக்குண்டு இ) பச்சைக்காய் ஈ) செங்காய்
2. ‘சுட்ட பழங்கள்’ என்று குறிப்பிடப்படுபவை _____.
அ) ஒட்டிய பழங்கள் ஆ) சூடா ன பழங்கள் இ) வேகவைத்த பழங்கள்
ஈ) சுடப்பட்ட பழங்கள்
3. ‘பெயரறியா’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _____.
அ) பெயர + றியா ஆ) பெயர் + ரறியா இ) பெயர் + அறியா ஈ) பெயர + அறியா
4. ‘மனமில்லை’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _____.
அ) மன + மில்லை ஆ) மனமி + இல்லை இ) மனம் + மில்லை ஈ) மனம் + இல்லை
5. நேற்று + இரவு என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் _____.
அ) நேற்றுஇரவு ஆ) நேற்றிரவு இ) நேற்றுரவு ஈ) நேற்இரவு
இ) குறுவினா
1. நாவல் மரம் எத்தனை தலை முறைகளாக அங்கு நின்றிருந்தது?
இரண்டு தலைமுறைகளாக நின்றிருந்தது
2. சிறுவர்களுக்கு நாவற்பழம் கிடைக்க உதவியோர் யாவர்?
காக்கை, குருவி,மைனா, பெயர் அறியா பறவைகள், காற்று
ஈ) சிறுவினா
1. நாவல் மரம் பற்றிய நினைவுகளாகக் கவிஞர் கூறுவன யாவை?
ஊரின் வடகோடியில் இருந்த நாவற்பழமரம்கவிஞரின் ஐந்து வயதில் எப்படியிருந்ததோ அப்படியேதான் அவருடைய ஐம்பது வயதைத் தாண்டியும் இருந்தது. கவிஞருடைய தாத்தாவின் தாத்தா காலத்தில் நடப்பட்ட மரம் என்று கவிஞர், தன் அப்பா சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறார்.
உ) சிந்தனை வினா
1. பெருங்காற்றில் வீழ்ந்த மரத்தைக் கவிஞர் ஏன் பார்க்க விரும்பவில்லை?
கவிஞரின் மன ஓட்டங்களின் நடுவே அந்த மரம் பற்றிய நினைவுகள் உயர்ந்து நிற்கின்றது. அந்த மரம் அவரைப் பொருத்த அளவில் விழவில்லை . எனவே அந்த வீழ்ந்த மரத்தைச் சென்று பார்க்க விரும்பவில்லை.
விலங்குகள் உலகம்
அ) சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. ஆசிய யானைகளில் ஆண் - பெண் யானைகளை வேறுபடுத்துவது ____.
அ) காது ஆ) தந்தம் இ) கண் ஈ) கால்நகம்
2. தமிழகத்தில் புலிகள் காப்பகம் அமைந்துள்ள இடம் _______.
அ) வேடந்தாங்கல் ஆ) கோடியக்கரை இ) முண்டந்துறை ஈ) கூந்தன்குளம்
3. ‘காட்டாறு’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _______.
அ) காடு + ஆறு ஆ) காட்டு + ஆறு இ) காட் + ஆறு ஈ) காட் + டாறு
4. ‘அனைத்துண்ணி’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _____.
அ) அனைத்து + துண்ணி ஆ) அனை + உண்ணி இ) அனைத் + துண்ணி
ஈ) அனைத்து + உண்ணி
5. ‘நேரம் + ஆகி’ என்பதனை ச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ______.
அ) நேரமாகி ஆ) நேராகி இ) நேரம்ஆகி ஈ) நேர்ஆகி
6. ‘வேட்டை + ஆடிய’ என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ______.
அ) வேட்டைஆடிய ஆ) வேட்டையாடிய இ) வேட்டா டிய ஈ) வேடாடிய
ஆ கோடிட்ட இடத்தை நிரப்புக.
1. ‘காட்டின் வளத்தைக் குறிக்கும் குறியீடு’ - என்று அழைக்கப்படும் விலங்கு புலி
2. யானைக் கூட்டத்திற்கு ஒரு பெண் யானைதான் தலைமை தாங்கும்.
3. கரடிகளைத் தேனீக்களிடமிருந்து காப்பது அதன் பெண்.
இ) குறுவினா:-
1. காடு – வரையறுக்க .
வளம் நிறைந்த நிலம், அடர்ந்த மரம், செடி கொடிகள், நன்னீர், நறுங்காற்று என் அனைத்தும் நிரம்பியது காடாகும். இது பறவைகள், விலங்குகள், தாவரங்கள் போன்ற
பல்லுயிர்களின் வாழ்விடமாகும்.பல்லுயிர்களின் வாழ்விடமாகும்.
2. யானைகள் மனிதர்களை ஏன் தாக்குகின்றன?
யானையின் வழித்தடங்களில் குறுக்கிடும் போது தான் மனிதர்களைத் தாக்குகின்றன.
3. கரடி ‘அனைத்துண்ணி’ என அழைக்கப்படுவது ஏன்?
பழங்கள், தேன், உதிர்ந்த மலர்கள், காய்கள், கனிகள், புற்றீசல், கரையான் போன்ற வற்றை உணவாக உள்கொள்வதால் கரடி அனைத்துண்ணி என அழைக்கப்படுகின்றன.
4. மானின் வகைகள் சிலவற்றின் பெயர்களை எழுதுக.
சருகுமான், மிளாமான், வெளிமான், புள்ளி மான்
உ) சிறுவினா:-
1. புலிகள் குறித்து நீங்கள் அறிந்துகொண்ட செய்திகளைத் தொகுத்து எழுதுக.
Ø புலிகள் தனித்து வாழும் இயல்பு உடையவை. ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் ஒரு புலி
மட்டுமே வாழும். மற்ற புலிகள் அந்த எல்லைக்குள் செல்லாது.
Ø புலியானது 90 நாட்களில் இரண்டு அல்லது மூன்று குட்டிகள் ஈனும். அந்தக் குட்டிகளை இரண்டு ஆண்டுகள் வரை வளர்த்து ஆளாக்கும்.
Ø அப்புலிக்குட்டிகள் வேட்டையாடக் கற்றவுடன் அவற்றுக்கான எல்லைகளையும் பிரித்துத் தனியாக அனுப்பிவிடும். புலிதான் ஒரு காட்டின் வளத்தைக் குறிக்கும் குறியீடு.
Ø புலி தனக்கான உணவை வேட்டையாடிய பின்பு வேறு எந்த விலங்கையும்
வேட்டையாடுவதில்லை. எனவே இதனைப் பண்புள்ள விலங்கு என்று கூறுவர்.
ஊ) சிந்தனை வினா:-
1. காடுகளை அழிப்பதால் ஏற்படும் விளைவுகளைப் பட்டியலிடுக
Ø மரங்களை அழிப்பதால் கார்பன்-டை- ஆக்ஸைடு வாயுவின் அளவு அதிகரிக்கின்றது.
Ø காடுகளை அழிப்பதன் விளைவாக மழை அளவு குறைகிறது
Ø புவி வெப்பமடைதல் நடைபெறுகிறது.
Ø காடுகளை அழிப்பதால் காட்டில் வாழும் காட்டு விலங்கினங்கள் நாட்டுக்குள் புகுந்து பயிர்களை அழிக்கின்றன.
நால்வகை குறுக்கங்கள்
அ) சரியான விடையைத் தேர்ந்தெடுக்க
1. 'வேட்கை' என்னும் சொல்லில் ஐகாரக் குறுக்க ம் பெறும் மாத்திரை அளவு _____
அ) அரை ஆ) ஒன்று இ) ஒன்றரை ஈ) இரண்டு
2. மகரக் குறுக்கம் இடம்பெறாத சொல் ________.
அ) போன்ம் ஆ) மருண்ம் இ) பழம் விழுந்தது ஈ) பணம் கிடைத்தது
3. சொல்லின் முதலில் மட்டுமே இடம் பெறுவது _______.
அ) ஐகாரக் குறுக்கம் ஆ) ஔகாரக் குறுக்கம் இ) மகரக் குறுக்கம்
ஈ) ஆய்தக் குறுக்கம்
ஆ) குறு வினா:-
1. ஔகாரம் எப்பொழுது முழுமையாக ஒலிக்கும்?
ஔ, வெள என ஔகார எழுத்து, தனித்து வரும் இடங்களில் தனக்குரிய இரண்டு மாத்திரை அளவில் முழுமையாக ஒலிக்கிறது
2. சொல்லின் முதல், இடை, இறுதி ஆகிய இடங்களில் ஐகாரக்குறுக்கம் பெறும் மாத்திரை அளவு யாது?
Ø ஐகாரம் சொல்லின் முதலில் வரும்போது ஒன்றரை மாத்திரை அளவில் ஒலிக்கும்.
Ø ஐகாரம் சொல்லின் இடையிலும் இறுதியிலும் வரும்போது ஒரு மாத்திரை அளவில் ஒலிக்கும்.
3. மகரக்குறுக்கத்துக்கு இரண்டு எடுத்துக்காட்டுகள் தருக.
Ø மகர மெய் அரை மாத்திரை அளவிலிருந்து கால் மாத்திரை அளவு ஒலிக்கும்
Ø மருண்ம், போனம், தரும் வளவன், பெரும் வள்ளல்
மொழியை ஆள்வோம்
அ) எதிர்ப்பாலுக்குரிய பெயர்களை எழுதுக.
1. மகளிர் X ஆடவர்
2. அரசன் X அரசி
3. பெண் X ஆண்
4. மாணவன் X மாணவி
5. சிறுவன் X சிறுமி
6. தோழி X தோழன்
ஆ). படத்திற்குப் பொருத்தமான பாலை எழுதுக.
ஒன்றன் பால்
ஆண்பால்
ஒன்றன் பால்
பலர் பால்
பலவின் பால்
இ) பிழையைத் திருத்திச் சரியாக எழுதுக.
(எ.கா.)
கண்ணகி சிலம்பு அணிந்தான் . – கண்ணகி சிலம்பு அணிந்தாள்.
1. கோவலன்
சிலம்பு விற்கப் போனாள்.
கோவலன் சிலம்பு விற்கப்
போனான்
2. அரசர்கள்
நல்லாட்சி செய்தார்
அரசர்கள்
நல்லாட்சி செய்தனர்.
3. பசு
கன்றை ஈன்றன.
பசு கன்றை ஈன்றது.
4. மேகங்கள்
சூழ்ந்து கொண்டது.
மேகங்கள் சூழ்ந்து கொண்டன.
5. குழலி
நடனம் ஆடியது.
குழலி நடனம் ஆடினாள்
ஈ)
கடிதம் எழுதுக.
நீங்கள்
சென்று வந்த சுற்றுலா குறித்து உங்கள் நண்பனுக்குக் கடிதம் எழுதுக.
சுற்றுலா குறித்து நண்பனுக்குக் கடிதம்
12,முகில்
நகர்,
திருநெல்வேலி-1,
20-06-2022.
அன்புள்ள நண்பா,
நலம் நலமறிய ஆவல்.சென்ற வாரம் நான் சென்று வந்த ஏற்காடு மலை சுற்றுலாவில்
நான் பெற்ற மகிழ்ச்சியான அனுபவங்களை உன்னுடன் பகிர்ந்துகொள்ள இக்கடிதத்தை
எழுதுகிறேன்.
ஏற்காடு மலைகளின் அரசி உங்களை அன்போடு வரவேற்கிறது என்னும்
அறிவிப்பு மகிழ்ச்சியாக இருந்தது. ஏற்காட்டில் லேடீஸ் சீட், ஜென்ஸ் சீட்,
சேர்வாரயன் மலை, பூங்கா, படகு இல்லம், சுற்றுச்சூழல் பூங்கா என அனைத்து இடங்களும்
மகிழ்ச்சியாகவும், குளிர்ச்சியாகவும் இருந்தது, நீயும் நேரம் கிடைத்தால் சென்று
வரவும்
இப்படிக்கு,
உனது அன்பு நண்பன்
த.இளமாறன்.
உறைமேல்
முகவரி:
சு.கவியரசு,
4,கம்பர் தெரு,
ஈரோடு
மொழியோடு விளையாடு
அ) வட்டத்திலுள்ள எழுத்துகளைப்
பயன்படுத்திச் சொற்களை அமைக்க..
1. கல்
2. புதையல்
3. இலை
4. இழை
5. புல்
6. கயல்
7. கதை
8. புதை
9. புயல்
10. கலை
11. இல்லை
12. கடல்
ஆ) சொற்களை இணைத்துப் புதிய சொற்கள் அமைக்க.
1. வாழைப்பழம்
2. கொய்யாப் பழம்
3. குருவிக்கூடு
4. அவரைக்காய்
5. விளையாட்டுத் திடல்
6. தயிர்ச்சோறு
7. பறவைக்கூடு
8. பாட்டுப்போட்டி
இ ) விடுகதைகளுக்கு
விடை எழுதுக.
1. மரம்
விட்டு மரம் தாவுவேன்; குரங்கு அல்ல. வளைந்த வாலுண்டு;
புலி அல்ல. கொட்டைகளைக் கொறிப்பேன்; கிளி
அல்ல. முதுகில் மூன்று கோடுகளை உடையவன். நான் யார்?
விடை : அணில்.
2. என்
பெயர் மூன்று எழுத்துகளைக் கொண்டது. முதலெழுத்தை நீக்கினால் மறைப்பேன். இரண்டாம்
எழுத்தை நீக்கினால் குரைப்பேன். மூன்றாம் எழுத்தை நீக்கினால் குதிப்பேன். நான்
யார்? ___________.
விடை : குதிரை
3. வெள்ளையாய்
இருப்பேன்; பால் அல்ல. மீன் பிடிப்பேன்; தூண்டில் அல்ல தவமிருப்பேன்; முனிவரல்ல நான் யார்?
___________
விடை : கொக்கு
ஈ) கலைச்சொல் அறிவோம்.
தீவு – Island
உவமை - Parable
இயற்கை வளம் -
Natural
Resource
காடு - Jungle
வன விலங்குகள்
- Wild
Animals
வனவியல் - Forestry
வனப்
பாதுகாவலர் - Forest Conservator
பல்லுயிர் மண்டலம் - Bio
Diversity
CLICK HERE TO GET PDF