10TH - NOTES OF LESSON - MARCH - WEEK 3

  நாள்                 :           14 -03-2022 முதல்  18 -03-2022          

மாதம்               :             மார்ச்          

வாரம்               :           மார்ச்-  மூன்றாம்   வாரம்                                        

வகுப்பு              :            பத்தாம் வகுப்பு  

 பாடம்               :           தமிழ்                                                     

பாடத்தலைப்பு     :    1. அணி - இலக்கணம்

கரு பொருள்:

Ø  அணியிலக்கணக் கூறுகளைச் செய்யுளுடன் தொடர்புபடுத்தி அதன் சுவையுணர்ந்து நயத்தல்

உட்பொருள்:

Ø  அணி என்பதன் பொருள் – அறிதல்

Ø  பாடப்பகுதியில் கொடுக்கப்பட்டுள்ள அணியின் வகைகளை தகுந்த உதாரணங்களுடன் அறிதல்

கற்றல் விளைவுகள் :

Ø  அணியிலக்கணக் கூறுகளைச் செய்யுளுடன் தொடர்புபடுத்தி அதன் சுவையுணர்ந்து நயத்தல்

பாட அறிமுகம்(ஆர்வமூட்டல்)

Ø     ஒருவர் தம்மை அழகுப்படுத்திக் கொள்ள எவற்றை எல்லாம் மேற்கொள்வார்?

போன்ற வினாக்கள் கேட்டு பாடப்பொருளை ஆர்வமூட்டல்.

கற்பித்தல் துணைக்கருவிகள்:

                              வலையொளிப்பதிவுகள், உயர்தொழில்நுட்ப ஆய்வகம், பாடநூல், சுண்ணக்கட்டி, கரும்பலகை,வரைபடத்தாள்.

முக்கியக் கருத்துகள் மற்றும் பாடப்பொருள் சுருக்கம்:

·        செய்யுளினை அழகு செய்வது அணி

·        தற்குறிப்பேற்ற அணி :

      • இயல்பாய் நிகழும் நிகழ்ச்சியின் மீது கவிஞன் தன் குறிப்பை ஏற்றிக் கூறுவது

o   தீவக அணி :

§  தீவகம் – விளக்கு

§  செய்யுளின் ஓர் இடத்தில் நின்ற ஒரு சொல் அச்செய்யுளின் பல இடங்களிலும் உள்ள சொற்களோடு சென்று பொருந்திப் பொருளை விளக்குவது.

o   நிரல் நிறை அணி :

§  நிரல் – வரிசை  நிறை – நிறுத்துதல்

§  சொல்லையும்,பொருளையும் வரிசையாக நிறுத்தி அவ்வரிசைப் படியே இணைத்துப் பொருள் கொள்வது.

o   தன்மை அணி :

§  இயற்கையில் அமைந்த அதன் உண்மையான இயல்புத் தன்மையினைக் கேட்பவர்களின் மனம் மகிழுமாறு கூறுவது.

§  பொருள் தன்மையணி

§  குணத் தன்மையணி

§  சாதித் தன்மையணி

§  தொழிற்தன்மையணி

ஆசிரியர் செயல்பாடு:

Ø    அணி – என்பதன் விளக்கம் கூறல்

Ø    அணியின் தன்மையினை விளக்குதல்

Ø    பாடப்பகுதியில் உள்ள அணியின் வகைகளை விளக்குதல்.

Ø    உரிய உதாரணங்களுடன் அணி பொருத்தத்தை விளக்குதல்

Ø    மாணவர்களுக்கு புரியும் வண்ணம் உதாரணங்களை கூறி விளக்குதல்

மாணவர் செயல்பாடு:

Ø    அணியைப் பற்றி அறிதல்

Ø    அணியின் தன்மையினை அறிதல்

Ø    தற்குறிப்பேற்ற அணியினை அறிதல்

Ø    தீவக அணியை அறிதல்

Ø    நிரல் நிறை அணியை அறிதல்

Ø    தன்மையணியை அறிதல்

கருத்துரு வரைபடம்

அணி இலக்கணம்



 

 

 

வலுவூட்டல்:

                                            விரைவுத்துலங்கல் குறியீட்டைப் பயன்படுத்தி கற்றலுக்கு வலுவூட்டல்.

குறைதீர் கற்றல்:

                                              மீத்திற மாணவர்களைக் கொண்டு மெல்லக் கற்கும் மாணவர்களுக்கு பாடக் கருத்துகளை கூறி குறைத் தீர் கற்றலை

மேற்கொள்ளல்.

மெல்லக் கற்போர் செயல்பாடு:

Ø  அணியை பற்றி அறிதல்

Ø  மெல்லக் கற்போர் வழிகாட்டியினை பயன்படுத்தி அணியினை எளிமையாக புரிந்துக் கொள்ளுதல்

Ø  அணியின் விளக்கதை உதாரணங்களுடன் அறிதல்

Ø  ஒரு மதிப்பெண் வினாக்களை படித்தல்

மதிப்பீடு:

Ø  அணி என்பது யாது?

Ø  தன்மையின் வகைகள் யாவை?

Ø  தீவக அணியை விளக்குக.

Ø  அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது – இக்குறளில் பயின்று வரும் அணியை விளக்குக,

தொடர்பணி:

·       பாடப்பகுதியில் உள்ள மதிப்பீட்டு வினாக்களுக்கான விடைகளை  எழுதிவரச்செய்தல்.

____________________@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@------------------

நன்றி, வணக்கம் – தமிழ்விதை

Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post