காணொளி - பணித்தாள் - இணைய வழித் தேர்வு - PDF FORMAT
ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அனைவருக்கும் வணக்கம். கல்வித் தொலைக்காட்சியில் ஒளிபரப்படும் பாடங்கள் இந்த தளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறது. அதோடு அல்லாமல் அந்த பாடத்திற்குரிய ஒரு மதிப்பெண் வினாக்கள் மாணவர்கள் பயிற்சி பெறுவதற்கு வழங்கப்பட்டுள்ளது. காணொலியில் பாடங்களை கற்றபின் வினாக்களுக்கு விடையளிக்க ஏதுவாக இணைய வழித் தேர்வு வழங்கப்பட்டுள்ளது. மாணவர்கள் அந்த இணையவழித் தேர்வினை எழுதி அதன் மதிப்பெண்ணை உங்களின் தமிழாசிரியர்க்கு பகிரும் படி கேட்டுக் கொள்கிறோம். இணைய வசதி இல்லாத மாணவர்கள் இந்த வினாக்களின் PDF வடிவத்தை பதிவிறக்கம் செய்து அதனை நிறைவு செய்து தங்கள் ஆசிரியர்களிடம் சமர்ப்பிக்கவும். இணைய வழித் தேர்வின் கீழ்த் தோன்றும் DOWNLOAD என்பதனை அழுத்தினால் இணையவழித் தேர்வின் வினாக்கள் நீங்கள் PDF கோப்பாக பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம். ஆசிரியர்கள் இந்த இணைய இணைப்பை தங்கள் வகுப்பு மாணவர்களுக்கு பகிரும் படி அன்புடன் வேண்டுகிறோம்.
நன்றி, வணக்கம்
கல்வித் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட பாடங்கள்
நாள் : 12 - 01- 2022
வகுப்பு : எட்டாம் வகுப்பு
பாடம் : தமிழ்
பாடத்தலைப்பு : இயல் -6 - மழைச்சோறு - 1
காணொளி
பணித்தாள்
1. ஒரு நாட்டின் வளத்திற்கு அடிப்படையாக விளங்குவது _________________
அ. பணம் ஆ. காடு இ. மழை ஈ. நெருப்பு
2. வாளியிலே - வாசலெல்லாம் - இதில் காணப்படும் நயம் ____________
அ. எதுகை ஆ. மோனை ஈ. முரண் ஈ. இயைபு
3. கோலம் கரைய வில்லை
கொள்ளை மழை பேயவில்லை - இதில் வரும் இயைபு சொற்கள் எவை?
அ. கோலம் - கொள்ளை ஆ. கோலம் - மழை இ. கொள்ளை - பேயவில்லை
ஈ. கரைய வில்லை - பேயவில்லை
4. மழை பெய்யாமல் ஊரில் பஞ்சம் ஏற்படும் காலங்களில்,சிற்றூர் மக்கள் ஒவ்வொரு வீடாக சென்று வாங்குவது _______________
அ. உப்பில்லாச் சோறு ஆ. கூலி வேலை இ .பணம் ஈ. விருந்து
5. மழைச்சோறு என்ற பாடலின் பதிப்பாசிரியர் __________________
அ. சண்முகம் ஆ. அமுதன் இ. அ. கெளரன் ஈ. விநாயகம்
6. கமகமன்னு மணக்கலையே - இவ்வடியில் கமகம என்பதன் இலக்கணக் குறிப்பு _____________
அ. இரட்டைக் கிளவி ஆ. அடுக்குத்தொடர் இ. பண்புத்தொகை ஈ. சிலேடை
7. கனத்த மழை என்னும் சொல்லின் பொருள் _________________
அ. பெருமழை ஆ. சிறு மழை இ. எடை மிகுந்த மழை ஈ. எடை குறைந்த மழை
8. ' வாசலெல்லாம் ' - என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது?
அ. வாசல் + எல்லாம் ஆ. வாசல் + எலாம் இ. வாசம் + எல்லாம் ஈ. வாசு + எல்லாம்
9. ' பெற்றெடுத்தோம்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது___________
அ. பெறு + எடுத்தோம் ஆ. பேறு + எடுத்தோம் இ. பெற்ற + எடுத்தோம் ஈ. பெற்று + எடுத்தோம்
10. கால் + இறங்கி என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் _______________
அ. கால்லிறங்கி ஆ. காலிறங்கி இ. கால் இறங்கி ஈ. கால்றங்கி
இணையவழித் தேர்வு
பணித்தாள் - PDF