10TH - KALVI TV - 25-01-2022 - TAMIL - ALAGIDUTHAL
byதமிழ்விதை-
0
காணொளி - பணித்தாள் - இணைய வழித் தேர்வு - PDF FORMAT
ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அனைவருக்கும் வணக்கம். கல்வித் தொலைக்காட்சியில் ஒளிபரப்படும் பாடங்கள் இந்த தளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறது. அதோடு அல்லாமல் அந்த பாடத்திற்குரிய ஒரு மதிப்பெண் வினாக்கள் மாணவர்கள் பயிற்சி பெறுவதற்கு வழங்கப்பட்டுள்ளது. காணொலியில் பாடங்களை கற்றபின் வினாக்களுக்கு விடையளிக்க ஏதுவாக இணைய வழித் தேர்வு வழங்கப்பட்டுள்ளது. மாணவர்கள் அந்த இணையவழித் தேர்வினை எழுதி அதன் மதிப்பெண்ணை உங்களின் தமிழாசிரியர்க்கு பகிரும் படி கேட்டுக் கொள்கிறோம். இணைய வசதி இல்லாத மாணவர்கள் இந்த வினாக்களின் PDF வடிவத்தை பதிவிறக்கம் செய்து அதனை நிறைவு செய்து தங்கள் ஆசிரியர்களிடம் சமர்ப்பிக்கவும். இணைய வழித் தேர்வின் கீழ்த் தோன்றும் DOWNLOAD என்பதனை அழுத்தினால் இணையவழித் தேர்வின் வினாக்கள் நீங்கள் PDF கோப்பாக பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம். ஆசிரியர்கள் இந்த இணைய இணைப்பை தங்கள் வகுப்பு மாணவர்களுக்கு பகிரும் படி அன்புடன் வேண்டுகிறோம்.
நன்றி, வணக்கம்
கல்வித் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட பாடங்கள்
நாள் : 25 - 01- 2022
வகுப்பு: பத்தாம் வகுப்பு
பாடம் : தமிழ்
பாடத்தலைப்பு : இயல் -8- பா வகை அலகிடுதல்
காணொளி
தமிழ்விதை - வலைதளம் மூலம் நடத்தப்பட்ட இணைய வழி வகுப்பு
காணொளி - அலகிடுதல்
இணைய வழித் தேர்வு எழுத
அலகிட்டு வாய்பாடு எழுதுதல் -ONLINE QUIZ
அலகிட்டு வாய்பாடு எழுதுதல் -ONLINE QUIZ
தயாரிப்பு:வெ.க.வாசு,தமிழாசிரியர்,அரசினர் உயர்நிலைப் பள்ளி,தணிகைப்போளூர்,இராணிப்பேட்டை மாவட்டம்
சரியான விடையைத் தேர்ந்தெடுக்க.
செய்யுள் உறுப்புகள் மொத்தம்-----
4
5
6
7
அலகிடுதலில் உள்ள எழுத்து வகை
முதல்,சார்பு,ஒற்று
குறில்,நெடில்,ஒற்று
வல்லினம்,மெல்லினம்,இடையினம்
உயிர்,மெய்
ஒற்று எழுத்துகளின் எண்ணிக்கை
6
12
18
30
உயிர்மெய் நெடில் எழுத்துகளின் ஓசை.........
உயிர் குறில்களை ஒத்தது
உயிர் நெடில்களை ஒத்தது
உயிர்மெய் குறில்களை ஒத்தது
வல்லின எழுத்துகளை ஒத்தது
அலகிடுதலில் ஆய்த எழுத்து.....
உயிரெழுத்தாகக் கருதப்படும்
குறிலாகக் கருதப்படும்
நெடிலாகக் கருதப்படும்
ஒற்றாகக் கருதப்படும்
அசைத்தல் என்ற சொல்லின் பொருள்
நகர்த்துதல்
சொல்லுதல்
திருடுதல்
ஆடுதல்
அசையின் வகைகள்
நேர்,நிரை
ஏறு,இறங்கு
குறுக்கு,நெடுக்கு
மேல்,கீழ்
குறில் ஒற்றுடன் வருதல்.....அசை
நிரை
நேர்
மேல்
கீழ்
வாள் என்ற சொல்லில் வரும் அசை
நிரை
மேல்
கீழ்
நேர்
நெடில் தனித்து வருதலுக்கு உரிய சான்றினைத் தேர்க
கேள்
கல்வி
வா
கல்
இலான் என்பதில் வரும் அசை
மேல்
நேர்
நிரை
கீழ்
சீர் எதன் அடிப்படையில் வகைப்படுத்தப் படும்?
எழுத்து
அசை
தளை
அடி
சீர் வகைகள்
2
3
4
6
நேர்பு என்பது........
நிரையசை
ஈரசைச்சீர்
மூவசைச்சீர்
ஓரசைச்சீர்
நிரைபு எனும் வாய்பாட்டில் அமைந்த ஓரசைச் சீரைக் கண்டறிக