www.tamilvithai.com www.kalvivithaigal.com
பருவம் : மூன்றாம்
மாதம் :
ஜனவரி
வாரம் : நான்காம் வாரம்
வகுப்பு : ஆறாம் வகுப்பு
பாடம் : தமிழ்
பாடத்தலைப்பு : சுட்டு எழுத்துகள், வினா எழுத்துகள்
அறிமுகம் :
Ø முன்னர்
கற்ற இலக்கணப் பகுதியிலிருந்து வினாக்கள் கேட்டு அறிமுகம் செய்தல்
கற்பித்தல் துணைக்கருவிகள் :
Ø காணொலிக்
காட்சிகள், ஒளிப்பட வீழ்த்தி, ஒலிப்பெருக்கி, மடிக்கணினி, வரைபடத்தாள்
நோக்கம் :
Ø சுட்டு
எழுத்துகள், வினா எழுத்துகளை அறிந்துப் பொருத்தமாகப் பயன்படுத்துதல்
ஆசிரியர் குறிப்பு :
Ø பாடப்பகுதியினை
ஆர்வமூட்டல்
Ø சுட்டு
எழுத்துகள் பற்றிக் கூறல்
Ø அகச்சுட்டு,
புறச்சுட்டு பற்றிக் கூறல்
Ø அண்மைச்சுட்டு,
சேய்மைச் சுட்டு பற்றிக் கூறல்
Ø சுட்டுத்
திரிபுகளைப் பற்றிக் கூறல்
Ø வினா எழுத்துகளில்
அக வினா, புற வினா பற்றிக் கூறல்
கருத்துரு வரைபடம் :
சுட்டு எழுத்துகள், வினா எழுத்துகள்
விளக்கம் :
சுட்டு எழுத்துகள்,
வினா எழுத்துகள்,
Ø ஒன்றைச்
சுட்டிக் காட்ட வரும் எழுத்துக்களுக்கு சுட்டு எழுத்துகள் என்று பெயர்.
அகச்சுட்டு
:
சொல்லின் உள்ளேயே இருந்து சுட்டுப் பொருளைத் தருவது.
எ.கா : அவன்
புறச்சுட்டு
சொல்லின் உள்ளேயே
இருந்து சுட்டுப் பொருளைத் தருவது.
எ.கா : அம்மலை
அண்மைச்
சுட்டு
அருகில் உள்ளவற்றை சுட்டுவது. - இவன்
சேய்மைச்
சுட்டு
தொலைவில் உள்ளவற்றைச் சுட்டுவது - அவள்
சுட்டுத்
திரிபு
சுட்டு எழுத்துகளில் மாற்றம் பெற்று வருவது – அம்மரம்
– அந்த மரம்
வினா
எழுத்துகள்
வினாப்
பொருளைத் தரும் எழுத்துகளுக்கு வினா எழுத்துகள் என்று பெயர்
யா,ஆ,எ,ஓ,ஏ
– ஐந்தும் வினா எழுத்துகள்
மொழிக்கு
முதலில் வருபவை – எ,யா
மொழிக்கு
இறுதியில் வருபவை – ஆ, ஓ
மொழிக்கு
இடையிலும், இறுதியிலும் வருபவை - ஏ
அக
வினா :
அகத்தே இருந்து வினாப் பொருளைத் தருவது – எது? யார்?
புற
வினா :
புறத்தே
இருந்து வினாப் பொருளை தருவது – அவனா?
மாணவர் செயல்பாடு :
Ø
பாடப்பகுதியினை வாசித்தல்
Ø
புதிய வார்த்தைகளை அடிக்கோடிடல்
Ø
புதிய வார்த்தைகளுக்கான பொருளை அகராதிக் கொண்டு அறிதல்
Ø
சுட்டு எழுத்துகள் பற்றி அறிதல்
Ø
சுட்டு எழுத்துகளில் அகச்சுட்டு, புறச்சுட்டு, அண்மைச் சுட்டு, சேய்மைச் சுட்டு,
சுட்டுத் திரிபு பற்றி அறிதல்
Ø
வினா எழுத்துகளில் அக வினா, புற வினா
பற்றி அறிதல்
மதிப்பீடு :
LOT :
Ø சுட்டு
எழுத்துகள் என்பது யாது?
MOT
:
Ø அந்த
வீடு யாருடையது? உன்னுடன் வந்தவன் அவனா? -இத்தொடர்களில் காணப்படும் சுட்டுச்சொற்கள்
மற்றும் வினாச் சொற்கள் யாவை?
HOT
Ø அகச்சுட்டு,அகவினா,புறச்சுட்டு,புறவினா
என்று பெயரிட்ட காரணத்தை எழுதுக.
கற்றல் விளைவுகள் :
சுட்டு எழுத்துகள், வினா எழுத்துகள்
Ø T T816 மொழி பற்றிய நுட்பங்களை அறிந்து அவற்றை தம் மொழியில் எழுதும் போது பயன்படுத்துதல்.
தொடர் பணி :
Ø பாடநூல் வினாக்களுக்கு விடை எழுதி வருதல்
Ø வினாச் சொற்களைக் கொண்டு தொடர் அமைத்து வருக
______________________________________
நன்றி, வணக்கம் – தமிழ்விதை
