🏫 ஆறாம் வகுப்பு – தமிழ் திறன் – 2025
📘 வகுப்புநிலைத் திறன்கள் – பகுதி 2
✨ திணை, பால், எண், இடம், காலம்
🟩 2.1. சரியான விடையை டிக் (✔) செய்க
உயர்திணை ஒருமைச் சொற்கள் அமைந்த தொடர்கள்
| எண் | வாக்கியம் | ✔ / ✖ |
|---|---|---|
| 1 | குழந்தைகள் விளையாடி மகிழ்ந்தனர். | ✖ |
| 2 | நிலவன் விடுகதை கூறினான். | ✔ |
| 3 | இனியா பொம்மை வாங்கித் தந்தாள். | ✔ |
அஃறிணை பன்மைச் சொற்கள் அமைந்த தொடர்கள்
| எண் | வாக்கியம் | ✔ / ✖ |
|---|---|---|
| 1 | கணினியில் ஓவியங்கள் வரையலாம். | ✔ |
| 2 | பொற்சுவை பரிசுகள் பெற்றாள். | ✖ |
| 3 | சிப்பிகள் சேர்த்துத் தோரணம் செய்தேன். | ✔ |
🟦 2.2. உரிய சொற்களைத் தேர்ந்தெடுத்துப் படக்கதையை நிரப்புக
( நாங்கள் / நான் / நீ / அவை / அது )
| எண் | வாக்கியம் | பதில் |
|---|---|---|
| 1 | __________________________ சாமந்திப்பூ கொண்டு வருகிறேன். | நான் |
| 2 | __________________________ சாமந்திப்பூ கொண்டு வா. | நீ |
| 3 | __________________________ நார் எடுத்து வருகிறோம். | நாங்கள் |
| 4 | வாத்து வருகிறது. __________________ அல்லிப்பூ கொண்டு வருகிறது. | அது |
| 5 | குரங்குகள் வருகின்றன. __________________ பனை ஓலைகளை எடுத்து வருகின்றன. | அவை |
| 6 | ஐ! அழகான பூங்கொத்து! | – |
📥 PDF பதிவிறக்கம் செய்ய
🕒 10 விநாடிகளில் PDF தானாக பதிவிறக்கம் ஆகும்!
🔔 சிறப்பு குறிப்பு:
📚 இத்தகைய திறன் செயல்பாடுகள் மற்றும் பயிற்சிப் புத்தகங்கள் தினசரி பெற 👉
www.kalvivithaigal.com – ஐப் பார்வையிடுங்கள்!
