9TH-TAMIL-NOTES OF LESSON - UNIT 3 - THODAR ELAKKANAM,AAGUPEYAR

 

 

www.tamilvithai.com                                                www.kalvivithaigal.com


மாதம்               :       ஆகஸ்ட்

வகுப்பு             :       ஒன்பதாம் வகுப்பு    

 பாடம்              :       தமிழ்  - இயல் - 3

தலைப்பு           :       தொடர் இலக்கணம், ஆகுபெயர்


அறிமுகம்            :

Ø  தமிழ் எழுத்துகளின் வகை தொகைகளை கேட்டறிந்து சொற்களை அறிமுகப்படுத்தி பாடப்பொருளை ஆர்வமூட்டல்.

Ø  தமிழரசி வள்ளுவரை ஓவியமாக வரைந்தாள்

      தமிழரசி வள்ளுவரைப் பார்த்தாள் – இரண்டுத் தொடர்களின் பொருள் வேறுபாட்டினைக் கேட்டு அறிமுகம் செய்தல்

கற்பித்தல் துணைக்கருவிகள்   :

Ø  ஒளிப்பட வீழ்த்தி, காணொலிக் காட்சி, வலையொளி பதிவுகள், ஒலிப்பெருக்கி, மடிக்கணினி, கைப்பேசி, எழுத்து அட்டைகள்

நோக்கம்                          :

Ø தொடர்களின் அமைப்புகளை அறிந்து பயன்படுத்துதல்.

Ø மொழிப் பயன்பாட்டில் ஆகுபெயர் எவ்விதம் வெளிப்படுத்தப்படுகிறது என்பதனைக் கண்டறிதல்

ஆசிரியர் குறிப்பு            :

(ஆசிரியர் செயல்பாடு )

Ø பாடப்பொருளை ஆர்வமூட்டல்

Ø மாணவர்களை பிழையின்றி வாசிக்க வைத்தல்

Ø தொடரின் தன்மைகளைக் கூறல்

Ø எழுவாய், செயபடுபொருள்,பயனிலை பற்றிக் கூறல்

Ø வினையின் வகைகளைக் கூறல்

Ø  ஆகுபெயர் பற்றிக் கூறல்

Ø  ஆகுபெயர்களின் வகைகளை விளக்குதல்

Ø  தகுந்த சான்றுகளுடன் ஆகுபெயர் வகைகளை விளக்குதல்

கருத்து  வரைபடம்         :                             தொடர் இலக்கணம்



ஆகுபெயர்


விளக்கம்    :                                    தொடர் இலக்கணம்

·         தொடர் என்பது குறித்து  அறிதல்

·         பயனிலை, பெயரடை,வினையடை குறித்து அறிதல்

·         செய்வினை,செயபாட்டு வினை, தன்வினை,பிற வினை குறித்து அறிதல்

ஆகுபெயர்

·         ஒன்றன் இயற்பெயர் அதனோடு தொடர்புடைய மற்றொன்றிற்கு ஆகி வருவது ஆகுபெயர்.

·         ஆகுபெயர் – 16 வகை

·         முதலாகு பெயர், இடவாகு பெயர், காலவாகு பெயர், சினையாகு பெயர்

·         பண்பாகு பெயர், தொழிலாகு பெயர், கருவியாகு பெயர், காரியவாகு பெயர்

·         கருத்தவாகு பெயர்,எண்ணலளவை ஆகுபெயர், எடுத்தலளவை ஆகுபெயர், முகத்தலளவை ஆகுபெயர்.நீட்டலளவை ஆகுபெயர்

காணொளிகள்               :

·       விரைவுத் துலங்கல் குறியீடு காணொலிகள்

·       கல்வித்தொலைக்காட்சி காணொலிகள்

·       வலையொளி காணொலிகள்

மாணவர் செயல்பாடு                  :

Ø தொடர் என்பதனை அறிதல்

Ø எழுவாய்,பயனிலை,செயபடுபொருள் பற்றி அறிதல்

Ø வினையின் வகைகள் அறிந்து அன்றாட வாழ்வில் பயன்படுத்துதல்.

Ø  ஆகுபெயர் பற்றி அறிதல்.

Ø  ஆகுபெயர்களின் வகைகளை அறிதல்

Ø  ஆகுபெயர்களுக்குரிய சான்றுகளை அறிதல்

Ø    ஆகுபெயர்களை இன்றைய வாழ்வியலோடு ஒப்பிடல்.

மதிப்பீடு               :

LOT :

Ø இளவரசி எழுதினாள் இதில் எழுவாய் எது?

Ø ஆகுபெயர் என்பது யாது?

MOT:

Ø நம் முன்னோர் இயற்கையோடு இயைந்த வாழ்வு நடத்தினர்.

( வினாத் தொடராக மாற்றுக )

Ø காலவாகு பெயருக்கு சான்று தந்து விளக்குக

HOT:.

Ø  சொற்றொடர் வகைகளை அறிந்து, அவை எவ்வாறு பேசுவதற்கும் எழுதுவதற்கும் பயன்படுகின்றன என்பதனை பதிவு செய்க.

Ø  பட்டப்பெயர்கள் ஆகுபெயர்கள் ஆகுமா?

கற்றல் விளைவுகள்                   :

தொடர் இலக்கணம், ஆகுபெயர்

Ø  T904 மொழியின் தொடர் அமைப்பினை அறிந்து பேசுதல், கடிதம்,கட்டுரைஉரையாடல்களைக் கட்டமைத்து முறையாக எழுதுதல்.

Ø  T937 மொழிப்பயன்பாட்டில் ஆகுபெயர் எவ்விதம் வெளிப்படுத்தப்படுகிறது என்பதனை அறிந்து கையாளுதல்.

குறைதீர் கற்றல்     :

                          மதிப்பீட்டின் அடிப்படையில் கடினப் பகுதியைக் கண்டறிந்து எளிமைப்படுத்தி தகுந்த துணைக்கருவி உதவியுடன் குறைதீர் கற்றலை மேற்கொள்ளல்.

வலுவூட்டல்   :

                    பாடப்பகுதியினை மீண்டும் ஒரு முறை கற்பித்து பாடப் பொருளை மாணவர்களுக்கு வலுவூட்டுதல்.

தொடர் பணி          :

Ø  புத்தக மதிப்பீட்டு வினாக்களுக்கு விடை எழுதி வருமாறுக் கூறல்

________________________________________

நன்றி, வணக்கம் – தமிழ்விதை

 


Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post