10ம் வகுப்பு தமிழ் அக்டோபர் மாதத் தேர்வு 2025 – முழு விடைக்குறிப்பு PDF 💠 (PDF Link Below 👇)


 

சேலம் – அக்டோபர் மாதத் தேர்வு 2025 | பத்தாம் வகுப்பு தமிழ் – உத்தேச விடைக் குறிப்பு

சேலம் – அக்டோபர் மாதத் தேர்வு -2025

பத்தாம் வகுப்பு / மொழிப்பாடம் – தமிழ் — உத்தேச விடைக் குறிப்பு

நேரம் : 1.30 மணி    |    மதிப்பெண் : 50
அட்டவணை: பகுதி வாரியாக விடைகள்
வினா எண் விடை / விடைக் குறிப்பு மதிப்பெண்
பகுதி – 1 (மதிப்பெண்கள் - 6)
1இ) பழுப்பு1
2ஈ) கூற்று 1 மற்றும் 2 சரி1
3ஈ) இளவேனில்1
4இ) குறிஞ்சி, மருதம், நெய்தல் நிலங்கள்1
5அ) தனிச்சொற்றொடர்1
6இ) சா. கந்தசாமி1
பகுதி – 2
7விடைக்கேற்ற வினா பொருத்தமாக இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்.2
8மகரந்தம் சிந்தும் சோலைகள்
மரம் செறிந்த செண்பகக் காடுகள்
அரும்புகள் அவிழ்ந்து மலரும் பொய்கைகள்
புதுமணல் தடாகங்கள்
கமுகுந்தோட்டங்கள்
நெல்வயல்கள்
2
9உழவர்கள் வயலில் உழுதனர்.
தாழைப் பூச்செடியைப் பார்த்தவாறே பரதவர் கடலுக்குச் சென்றனர்.
2
10கலைஞரை பேராசிரியர் அன்பழகனார், பழுமரக்கனிப் பயன் கொள்ளும் பேச்சாளர் என்றும், படித்தவரைக் கவரும் ஆற்றல் கொண்ட எழுத்தாளர் என்றும் பாராட்டியுள்ளார்.2
11அ) கதை சொல்லி    ஆ) திரைக்கதை2
12கரப்பிடும்பை இல்லார் – தன்னிடம் உள்ள பொருளை மறைத்து வைத்துக் கொண்டு இல்லை எனக் கூறாதவர்.2
13பசும் புல்வெளிகளில், மஞ்சள்2
14செயற்கை அறிந்தக் கடைத்தும் உலகத்
தியற்கை அறிந்து செயல்
2
பகுதி – 3 (3×3=9)
15சோலைகளில் மயில்கள் ஆடுகின்றன.
விரிந்த தாமரை மலர்கள் விளக்குகள் போல் தோன்றுகின்றன.
மேகங்கள் மத்தள ஒலியாய் எழுகின்றன.
குவளை மலர்கள் கண்கள் விழித்துப் பார்ப்பது போல் காணப்படுகின்றன.
அலைகள் திரைச்சீலைகளாய் விரிகின்றன.
வண்டுகள் மகர யாழின் தேனிசைப் போல ரீங்காரம் பாடுகின்றன.
3
16கல்வித்துறையை பள்ளிக்கல்வி, உயர்கல்வி என இரண்டாகப் பிரித்தார்.
“தமிழ் வளர்ச்சித் துறை“ எனப் புதியதாக ஒரு துறையை உருவாக்கினார்.
தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடலை அனைத்து அரசு விழாக்களிலும் தொடக்கப் பாடலாக பாடச் செய்தார்.
2010 இல் கோவையில் “உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டை“ நடத்தி தமிழின் பெருமையை உலகறியச் செய்தார்.
3
17காட்சிக்கு பொருத்தமான கவிதை எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்.3
18செய்யுளில் முன்னர் வந்த சொல் ஒரே ஒரு பொருளில் பின்னரும் பலமுறை வருவது சொற்பொருள் பின்வருநிலை அணி ஆகும்.
அணிப் பொருத்தம்:
‘இன்மை‘ என்னும் சொல் வறுமை என்னும் ஒரே பொருளில் பின்னரும் பலமுறை வருவதால் இக்குறளில் சொற்பொருள் பின்வருநிலை பயின்று வந்துள்ளது.
3
19தண்டலை மயில்கள் ஆடத் தாமரை விளக்கம் தாங்கக்
கொண்டல்கள் முழவின் ஏங்கக் குவளையின் விழித்துநோக்கத்
தெண்டிரை எழினி காட்டத் தேம்பிழி மகர யாழின்
வண்டுகள் இனிது பாட மருதம்வீற் றிருக்கும் மாதோ.
3
பகுதி – 4 (2×4=8)
20அதொழில் செய்வதற்குத் தேவையான கருவி, அதற்கு ஏற்ற காலம், செயலின் தன்மை, செய்யும் முறை ஆகியவற்றை அறிந்து செயல்பட வேண்டும் என கூறியிருப்பது நமக்கும் பொருத்தமாக அமைகிறது.
மனவலிமை, குடிகளைக் காத்தல், ஆட்சி முறைகளைக் கற்றல், நூல்களைக் கற்றல், விடாமுயற்சி போன்றவை நமக்கும் சிறப்பாக அமைய வேண்டும்.
இயற்கையான நுண்ணறிவும், நூலறிவும் உடையவர்களிடம் எந்த சூழ்ச்சியும் நடைபெறாது.
ஒரு செயலைச் செய்வதற்குரிய முறைகளை நூல் வழியாக அறிந்திருப்பினும் உலகியல் நடைமுறைகளை அறிந்து தான் நாம் செயல்பட வேண்டும்.
4
20ஆகடற்கரைகளில் ஓய்வு விடுதிகள் பெருகி உள்ளன. எனினும் மீன் பிடித்தல், உப்பு காய்ச்சுதல் போன்ற தொழில்கள் நடைபெறுகின்றன.
மலைப்பகுதிகளில் ஓய்வு இல்லங்கள் கட்டப்பட்டுள்ளன. எனினும் காபி, தேயிலைத் தோட்டங்கள் அமைக்கப் பெற்றுள்ளன.
நிலப்பகுதிகளில் வீடுகள், தொழிற்சாலைகள் பெருகி உள்ளன. எனினும் உழவுத் தொழில் நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது.
4
21அகலைஞர் கருணாநிதி தமிழ் இலக்கியத்திற்கு தனது பங்களிப்பிற்காக அறியப்பட்டவர். அவரது பங்களிப்புகள் பரந்த அளவில் உள்ளன; கவிதைகள், கடிதங்கள், திரைக்கதைகள், நாவல்கள், சுயசரிதைகள், வரலாற்று நாவல்கள், மேடை நாடகங்கள், உரையாடல்கள் மற்றும் திரைப்படப் பாடல்கள்.
திருக்குறளுக்கு குறளோவியம், தொல்காப்பியப் பூங்கா, பூம்புகார், கவிதைகள், கட்டுரைகள், நூல்கள் எனப் பல நூல்களை எழுதியுள்ளார்.
இலக்கியம் மட்டுமின்றி கலை மற்றும் கட்டிடக்கலை மூலமாகவும் கருணாநிதி தமிழ் மொழிக்கு பங்காற்றியுள்ளார்.
திருக்குறளைப் பற்றி கலைஞர் எழுதிய குறளோவியம் போல், வள்ளுவர் கோட்டம் கட்டியதன் மூலம் சென்னையில், திருவள்ளுவருக்கு கட்டிடக்கலையை அளித்தார்.
கன்னியாகுமரியில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலையை கருணாநிதி நிறுவி மரியாதை செய்துள்ளார்.
4
21ஆ1. என் துறையில் வல்லுநரானபின், அத்துறையினைப் பற்றிய நூல்களைத் தமிழாக்கம் செய்வேன்.
2. என் துறையில் இருக்கும் கலைச் சொற்களைத் தமிழில் மாற்றி மக்களின் பொதுப் பயன்பாட்டிற்குக் கொண்டு வருவேன்.
3. என் துறையில் உள்ளவற்றை இணையத்தில் தமிழில் வெளியிடுவேன்.
4. என் துறை கலைச்சொற்களை இணையத்தில் பதிவேற்றம் செய்து உலகம் அறியச் செய்வேன்.
5. தமிழ்மொழியை பெருமையை எனது துறையில் வெளிபடுத்துவேன்.
6. என் துறை சார்ந்த நூல்களை தமிழ் மொழியில் எழுதுவேன்.
4
22அபோராட்டக் கலைஞர்:
• பள்ளி வயதிலேயே போராடியவர் கலைஞர்.
• இந்தி திணிப்பை எதிர்த்து போராட மாணவர்களைத் திரட்டி திருவாரூர் வீதிகளில் போராடியவர்.

பேச்சுக் கலைஞர்:
• மேடைப் பேச்சில் பெருவிருப்பம் கொண்டவர் கலைஞர். “நட்பு“ என்னும் தலைப்பில் கலைஞர் ஆற்றிய சொற்பொழிவை பலரும் பாராட்டினர்.

நாடகக் கலைஞர்:
• 1944 இல் “பழநியப்பன்“ என்னும் முதல் நாடகத்தை எழுதி அரங்கேற்றினார்.
• தூக்குமேடை நாடகத்தில் மாணவராக நடித்து “கலைஞர்“ என்னும் சிறப்பு பட்டம் பெற்றார்.
4
22ஆ• “கல்வியில் பெரியவர் கம்பர்“, “கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும்“ போன்ற முதுமொழிக்கு உரியவர்.
• சோழநாட்டுத் திருவழுந்தூரைச் சார்ந்தவர்.
• திருவெண்ணெய்நல்லுர் சடையப்ப வள்ளலால் ஆதரிக்கப் பெற்றவர்.
• “விருத்தம் என்னும் ஒண்பாவிற்கு உயர் கம்பன்“ எனப் புகழப்படுபவர்.
• சரசுவதி அந்தாதி, சடகோபர் அந்தாதி, திருக்கை வழக்கம், ஏரெழுபது, சிலை எழுபது நூல்களை இயற்றியுள்ளார்.
4
பகுதி – 5 (1×7=7)
23அகுறிப்புச்சட்டம்
முன்னுரை
அனுமார்
அனுமாரி நெருப்பாட்டம்
அழகுவின் உதவி
அழகுவின் ஆட்டம்
அனுமார் மகிழ்ச்சி
முடிவுரை

இது போன்று குறிப்புச்சட்டம் இட்டு விரிவான விடை எழுதி இருந்தால் மதிப்பெண் வழங்கலாம்.
7
23ஆகுறிப்புச்சட்டம்
முன்னுரை
அறிவிப்பு
அமைப்பு
கரகாட்டம், காவடியாட்டம்
பொய்க்கால் குதிரையாட்டம்
கூத்துகள் அரங்கு
சிற்ப அரங்கு
முடிவுரை

இது போன்று குறிப்புச்சட்டம் இட்டு விரிவான விடை எழுதி இருந்தால் மதிப்பெண் வழங்கலாம்.
7
விடைக்குறிப்பு தயாரிப்பு: வெ. ராமகிருஷ்ணன், தமிழாசிரியர், அரசு உயர்நிலைப்பள்ளி, வளைய செட்டிப்பட்டி
www.tamilvithai.com    www.kalvivithaigal.com
© 2025 தமிழ்விதை & கல்விவிதைகள்
PDF Download – 20 விநாடிகளில் தானாக பதிவிறக்கம்

📘 PDF பதிவிறக்கம் – 20 விநாடிகளில் தானாக தொடங்கும்

கீழே காட்டப்பட்டுள்ள நேரம் முடிந்தவுடன் PDF தானாக பதிவிறக்கம் ஆகும். சில உலாவிகளில் auto-download தடைபட்டால், பட்டனை அழுத்தி பதிவிறக்கம் செய்யலாம்.

⏳ பதிவிறக்கம் தொடங்க Countdown:
20
💡 குறிப்பு: PDF கோப்பு பதிவிறக்கம் ஆக சில விநாடிகள் எடுக்கலாம். தயவுசெய்து காத்திருக்கவும்.
© 2025 தமிழ்விதை | www.tamilvithai.com

Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post