DHARMAPURI-10TH-TLM-2ND MID TERM - ANSWER KEY - 2024

 

 தர்மபுரி - இரண்டாம் இடைத் தேர்வு  -2024

பத்தாம் வகுப்பு / மொழிப்பாடம் – தமிழ்

உத்தேச விடைக் குறிப்பு

நேரம் :  1.30 மணி                                                                              மதிப்பெண் : 50

பகுதி – 1   மதிப்பெண்கள் - 7

வினா.எண்

விடைக் குறிப்பு

மதிப்பெண்

1.

ஈ.சிலப்பதிகாரம்

1

2.

இ.உழவு,ஏர்,மண்,மாடு

1

3.

ஆ.12

1

4.

இ. இடையறாது அறப்பணி செய்தலை

1

5.

ஈ.செப்பலோசை

1

6.

அ.இகழ்ந்தால் என்மனம் இறந்துவிடாது

1

7

அ.கைம்மாறு கருதாமல் அறம் செய்வது

1

பகுதி - 2

8.

அ. எம்.எஸ்.சுப்புலட்சுமி எந்த ஆண்டில் தாமரையணி விருது பெற்றார்?

ஆ. உப்பளத் தொழிலாளர்களைப் பற்றிய புதினம் எது?

1

1

9.

அரசர்கள் தங்கள் வரலாறும் பெருமையும் காலம் கடந்தும் நிலைத்து நிற்க கல்லிலும் செப்பேட்டிலும் மெய்க்கீர்த்தி எழுதினார்கள்.

2

10.

·         பழைய புத்தகக் கடையில் புத்தகம் வாங்குதல்.

·         உணவுக்கானப்  பணத்தில் புத்தகம் வாங்குதல்.

2

11

Ø  அறம் கூறும் மன்றங்கள்.

Ø  துலாக்கோல் போல் நடுநிலையானது.

Ø  மதுரையில் மதுரைக்காஞ்சி அவையம்.

2

12

வயது முதிர்ந்து உடலும் உடல் உறுப்புகளும் வலுவிழந்தாலும் அறப்பணியைத் தொடர்ந்து செய்கிறார்.

2

பகுதி – 3

13

அ. காப்புரிமை                ஆ. மெய்யியலாளர்

2

14

அ.மயிலை                      ஆ. திருச்சி

2

15.

அ. லாட்டரி சீட்டு வாங்கியவுடன் கோடீஸ்வரன் ஆகிவிடலாம் என மனக்கோட்டைக் கட்டினான் கபிலன்,

ஆ. தேர்வுக்கு அகிலா கண்ணும் கருத்துமாகப் படித்தாள்.

2

16.

அ. தொழில்       ஆ. கொடுத்தப் பொருளில்  உடனே பாடும் பாட்டு

2

17.

மயங்குபகுதி     இ(ன்)இறந்த கால இடைநிலை;

ன்’-புணர்ந்து கெட்டது.   ய்உடம்படு மெய்     பெயரெச்சவிகுதி

2

பகுதி – 4

18.

இடம்: மாநகரத் தந்தை செங்கல்வராயன் தலைமைமாநகராட்சி சிறப்புக் கூட்டம்

பொருள் : மொழி வாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது ஆந்திராவின் தலைநகராக சென்னை இருக்க வேண்டும் என்ற நீதிபதி வாஞ்சு தலைமையிலான ஒருநபர் ஆணையத்தை எதிர்த்து முழங்கிய முழக்கம் இது.

விளக்கம் : இதன் பொருட்டு ம.பொ.சி. சென்னையை மீட்க தலைக்கொடுத்தேனும் தலைநகர் காப்போம் என முழங்கினார்.

3

19

Ø  வணிக நோக்கமின்றி அறம் செய்ய வேண்டும். அதை விளம்பரப்படுத்தக்கூடாது.

Ø  நீர்நிலை பெருக்கி ,நிலவளம் கண்டு,உணவுப் பெருக்கம் காணவேண்டும் என்று கூறுவது இன்றைய அரசியல் தலைவர்களுக்குப் பொருந்தும்.

3

20.

தூசும் துகிரும் ஆரமும் அகிலும்

மாசுஅறு முத்தும் மணியும் பொன்னும்

அருங்கல வெறுக்கையோடு அளந்துகடை அறியா

வளம்தலை மயங்கிய நனந்தலை மறுகும்;

பால்வகை தெரிந்த பகுதிப் பண்டமொடு

கூலம் குவித்த கூல வீதியும்;

3

பகுதி – 5

21

Ø  அகவல் ஓசை பெற்று வரும்.

Ø  ஈரசைச்சீர் குறைவாக காய்ச்சீர் மிகுதியாக வரும்.

Ø  ஆசிரியத்தளை மிகுதியாக வரும்.

Ø  வெண்டளை,கலித்தளை விரவி வரும்.

Ø  மூன்றடி முதல் எழுதுபவர் மனநிலைக்கு ஏற்ப முடியும்.

Ø  ஏகாரத்தில் முடிவது சிறப்பு

3

22

v  அவந்தி நாட்டு மன்னன் மண்ணாசை காரணமாக வஞ்சிப் பூவைச் சூடிப் போருக்குச் செல்கிறான்வஞ்சித்திணை.

v  அவந்தி நாட்டு மன்னனை மருத நாட்டு மன்னன் காஞ்சிப் பூவைச் சூடி எதிர்த்துப் போரிடுகிறான் காஞ்சித்திணை.

3

23.

வீட்டின் சுவர், சன்னல் போன்றவற்றில் அழுக்குப்படிந்தும், சன்னல்களில் கரையான் படிவதைத் தடுக்கவாளித் தண்ணீரைக் கொண்டு சுவரையும் சன்னலையும் நன்கு கழுவ வேண்டும். பின் கந்தை துணியால் துடைத்து, சாயக் குவளையில் கட்டைத் தூரிகைக் கொண்டு வண்ணமடிக்க வேண்டும்.

3

பகுதி – 6

24.

மருவூர்ப்பாக்க வணிக வீதி

இக்கால வணிக வளாகங்கள்

தானியக் கடைத் தெருக்கள்

தனித்தனி அங்காடிகள்

நேரடி வணிகம்

இடைத் தரகர்கள் அதிகம்

இலாப நோக்கமற்றது

இலாபம் மட்டுமே முக்கியம்

கலப்படம் இல்லாதது

கலப்படம் கலந்துள்ளது

தரம் உண்டு.விலை குறைவு

தரம் குறைவு,விலை அதிகம்

4

25.

ஏடு எடுத்தேன் கவி ஒன்று எழுத     

என்னை எழுது என்று

சொன்னது இந்தக் காட்சி

அர்த்தமுள்ள காட்சி

ஏர் என் பயனைப் பற்றி எழுது என்றது

உழவர் என் உழைப்பைப் பற்றி எழுது என்றார்

நான் எழுதுகிறேன் உழவே தலை என்று

4

26

அனுப்புநர்

அ அ அ அ அ,

100,பாரதி தெரு,

சக்தி நகர்,

சேலம் – 636006.

பெறுநர்

மின்வாரிய அலுவலர் அவர்கள்,

மின்வாரிய அலுவலகம்,

சேலம் – 636001.

ஐயா,

பொருள்: மின்விளக்கு சரி செய்ய வேண்டுதல்சார்பு

வணக்கம். எங்கள் தெருவில் 100 குடும்பங்கள் உள்ளன. எங்கள் தெருவில் மின்விளக்குகள் பழுதடைந்துள்ளன. இதனால் இரவில் சாலையில் நடந்து செல்வோருக்கு பல்வேறு இடையூறுகள் ஏற்படுகின்றன. எனவே பழுதடைந்த மின்விளக்குகளைச் சரி செய்து கொடுக்க வேண்டுமாய்த் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

நன்றி.

இடம் : சேலம்                                                                                   இப்படிக்கு,

நாள் : 04-03-2024                                                          தங்கள் உண்மையுள்ள,                                                                                                     அ அ அ அ அ.

உறை மேல் முகவரி:

பெறுநர்

மின்வாரிய அலுவலர் அவர்கள்,

மின்வாரிய அலுவலகம்,

சேலம் – 636001.

4

27

அறங்கள்

நன்மைகள்

1. குறளை பேசாதிருத்தல்.

1. தேவையற்றச் சண்டைகள் நீங்கும்.

2. பழிவாங்கும் எண்ணத்தை கைவிடல்.

2. மன அமைதி பெறலாம்.

3. உண்மை பேசுதல்.

3. நம் வாழ்வை உயர்த்தும், அச்சமின்றி வாழலாம்

4. உதவி செய்தல்.

4. மன மகிழ்ச்சி கிடைக்கும்

5. அன்பாய் இருத்தல்.

5. அனைவரும் நண்பராகிவிடுவர்

 

பகுதி-7

28.அ

குறிப்புச்சட்டம்

முன்னுரை

நாட்டுவிழாக்கள்

விடுதலைப் போராட்ட வரலாறு

நாட்டின் முன்னேற்றத்தில் மாணவர் பங்கு

முடிவுரை

8

28 ஆ

இராமானுசர் நாடகத்தின் மையக் கருத்து மாறாமல் தொகுத்து வழங்கி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

8

விடைக்குறிப்பு தயாரிப்பு :

வெ.ராமகிருஷ்ணன்,       தமிழாசிரியர்,

அரசு உயர்நிலைப்பள்ளி, வளையசெட்டிப் பட்டி

 

www.tamilvithai.com                                                                      www.kalvivithaigal.com

 

CLICK HERE TO PDF

Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post